ஏப்ரல் 4
1814 - நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்தான்.
1850 - இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின்
ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம்
லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.
1866 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தான்.
1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் வட அட்லாண்டிக்
ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து பிரேசிலை தலைமையகமாகக்
கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. நேட்டோ அமைப்பை உருவாக்கின.
1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.
1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது.
1975 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற
அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - இளவரசர் நொரொடோம் சிஹானூக் கம்போடியா தலைவர் பதவியில் இருந்த் விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள்
உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.
2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்
அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
No comments:
Post a Comment