Friday, April 6, 2012

ஏப்ரல் 3

ஏப்ரல் 3
கி.பி - 33 ஆம் ஆண்டில் தமது 33 வது வயதில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்த நாள் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

அனைத்துலக விலைமாதர் உரிமை நாள்
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.
1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933 - நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 - இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் ஜப்பானியப் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பீன்ஸ் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1948 - தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 - உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீஇளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோயேசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதூமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

No comments: