Monday, July 2, 2012

பூசணி மசால்

பூசணி மசால்

 

ழக்கமான பொரியல், வறுவலைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமான துணைக் கறி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. உடல் இளைக்க வெள்ளைப் பூசணி சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இதை செய்து சாப்பிடலாம். செய்முறை இதோ:

தேவையானவை:

பூசணிக்காய் - 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்துள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணைய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயின் தோலை சீவி விட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது சீரகத்தை பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பை நிதானமாக எரிய விட்டு மூடி வைக்கவும். சீரகம் அரை ஸ்பூன் எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காய் வெந்ததும் அரிசி மாவை நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி, புதினாவுடன் சீரகத்தூளையும் தூவி அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது பூசணி மசால் ரெடி.

No comments: