Monday, July 16, 2012

ஜுலை 17

ஜுலை 17
1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.
1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.
1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.
1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.
1955 - உலகின் மிக மகிழ்ச்சியான இடம் என்ற வருணனையோடு California - வில் திறப்பு விழா கண்டது Disneyland.
1967 - நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.
1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.
1973 - ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.
1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.
1976 - கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.
1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.
1979 - நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.
1992 - இந்தியாவின் துணை அதிபராக இருந்து சங்கர் தயாள் ஷர்மா இந்திய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது
1998 - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.
1998 - கடலடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் Papua New Guinea - யைச் சேர்ந்த ஒரு கிராமம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

No comments: