Monday, July 16, 2012

மலர் பயிர்கள்

மலர் பயிர்கள்
இரகம்   விவரிப்பு விவரிப்பு
  1. பர்லேரியா  
கோ 1 (1984) இது உள்ளூர் வகையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம். கண்ணை கவரும் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் ஒரு செடிக்கு 2.11 கி பூக்கள் கிடைக்கும். இதில் பூக்கள் வெகு குறைந்த நாட்களில் பூக்கும் தன்மை கொண்டது.
  2. செவ்வந்தி  
கோ 1 (1985)
இது தர்மபுரி மாவட்டம், ஒசூர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம், பூக்கள் நடுத்தற அளவு கொண்டிருக்கும் (2.5 கிராம்) மற்றும் கண்ணை கவரும் நிறம் உடையது. இப்பூக்கள் பூமாலை செய்வதற்கும் மற்றும் மேடை அலங்காரத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது. மகசூல் 16.7 டன் / எக்டர்.
sddf

3. ஜெர்பரா  
ஏற்காடு 1 (1992)
ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள விதை கருவுலம் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகளை கலந்து பயிரிட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம். அடர் சிவப்பு நிற கொண்ட இரண்டு அடுக்கு மலர்களை கொண்டது. பூக்களின் 9.11 செ.மீ விட்டம் அளவு கொண்டது. ஆலங்காலத்திற்கு உபயோகபடுத்தும் போது காம்புகள் உடையாமல், இதழ்கள் வாடாமலும் அதிக நாள் தாங்கி நிற்கும். செடிகள் நட்ட 45 நாட்களில் பூக்கும் தண்மை கொண்டது மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு செடியில் இருந்து 60 பூக்கள் பூக்கும் தண்மை கொண்டது. ஏற்காடு 1 இரகமானது கொய் மவர்களுக்கும் தொட்டிகளில் வளர்ப்பதற்கும் ஏற்ற இரகம். இந்த பூக்களை மலை பகுதிகளில் மட்டுமே வளர கூடிய தன்மை கொண்டது.
hghjhj

4. கெலடியோலஸ  
கொடைக்காணல் 1 (1993)
கொடைக்காணல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்கன் பியூட்டி என்கின்ற இரகத்தை மேம்பட வளர செய்து அதிலிருந்து தேர்வு செய்த இரகம். இந்த இரகம் மலைப் பகுதியில் வளர கூடியது குறிப்பாக பழநி மலை, நீலகிரி மலை மற்றும் ஏற்காடு மலை பகுதி, சாகுபடி செய்யும் பருவம் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை பூக்களின் நிறமானது சிவப்பு நிறத்தில் பார்பதற்கு கண்ணை கவரும் இந்த இரகத்தின் வளரக்கூடிய உயரம் 116 செ.மீ பூக்களின் காம்பு முதல் பூவின் நுணி வரை 89.4 செ.மீ ஒவ்வொரு பூக்களின் எடை சுமார் 92.3 கிராம் எடை கொண்டது. முதல்அறுவடை செடிகள் நட்ட 90 நாட்களில் முதல் அறுவடை தயாராகும்.
thtgh
  5. செம்பருத்தி  

கோ 1 (திலகம்) (1981)


ஹைபிஸ்கஸ் ரோசா சைனென்சிஸ் சிற்றினத்தையும் மால்வா விஸ்கஸ் ஆர்போரியஸ் என்கின்ற சிற்றினத்தையும் சேர்த்து அதிலிருந்து உருவாக்கிய கலப்பினம். சிறுமரம் போன்று அமைப்பினை கொண்ட பல்லாண்டு தாவரம். இது ஒரு வருடத்திற்கு 3055 பூக்கள் பூக்கும்.
sdfg
  6. சாதிமல்லி  
கோ 1 (1980)
இந்த இரகம் சராசரியாக வருடத்திற்கு ஒரு எக்டருக்கு 10 டன் மகசூல் கிடைக்கும். மலர் மொட்டுக்கள் நீண்ட காம்புகள் உடன் இளஞ் சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். இது வாசனை எண்ணெய் எடுப்பதற்கு ஏற்ற இரகம். ஒரு எக்டருக்கு 29.42 கிலோ மகசூல் கிடைக்கும். ergerg
  7. சாமந்தி  
மதுரை 1 (1986) இந்த இரக சாமந்தி நடுத்தர உயரமும் சராசரி கிளைப்பு கொண்டது. இந்த இரகம் சராசரியாக 97 மலர்கள் பூக்கும் மற்றும் செடியின் எடை 561.40 கிராம் / செடி மகசூல் ஒரு எக்டருக்கு 41.54 டன் ஆரஞ்சு நிறங்களில் பூக்கள் காணப்படும்.
  8. முல்லை  
பாரிமுல்லை (1972) இந்த இரகமானது ஒரு வருடத்திற்கு மற்றும் ஒரு எக்டருக்கு 7800 கிலோ பூ மொட்டு பூக்கும் குணம் உடையது. பூ மொட்டுகள் வெள்ளையாகவும் நீளம் (1.25 செ.மீ) கொண்டது. rgrg

No comments: