அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் |
இணையத்திற்கு
இணைப்பு தரும் வழிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்றன. இணைப்பு தரும்
நிறுவனத்தின் சேவை கிளை மையத்தில் உள்ள சர்வரிலிருந்து, வயர் இழுத்து, நம்
இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு தரும்
பழக்கம் இன்னும் இருந்தாலும், வயர் இன்றி இணைப்பு தருவதே இன்றைய சிறப்பாக
இயங்கி வருகிறது. வை-பி, டேட்டா கார்ட், வை-மேக்ஸ் என இணைப்பின் தன்மைகள்
மாறி வருகின்றன. ஆனால், இணைப்பு எப்படிப்பட்டதாயினும், அது வேகமான தகவல்
பரிமாற்றம் தருவதையே மக்கள் விரும்புகின்றனர். மின்னல் வேக இணைய இணைப்பு
கிடைக்காதா என அனைவருமே விரும்புகின்றனர். கட்டமைப்பு செலவு, கட்டணம்
ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேகமான இணைய இணைப்பு கிடைக்கும். இந்தியா உட்பட
பல நாடுகளில், இணைய வேகம் இன்னும் மிக மிக மிதமான நிலையிலேயே உள்ளது.
சரி, அதி வேகமான இணைப்பில் முதல் இடம் பெறுவது எந்த நாடாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். அமெரிக்கா என்று உங்கள் எண்ணத்தில் பளிச்சிட்டால், அதனை மறுத்துவிடுங்கள். முதல் பத்து இடங்களில் கூட அமெரிக்கா இல்லை. அந்நாட்டின் விஸ்தீரணத் தினால், அதன் சராசரி இணைய இணைப்பு வேகம், அந்நாட்டிற்கு முதல் பத்து இடங்களில் கூட இடம் தரவில்லை. 14 ஆவது இடத்தில் உள்ளது. இங்கு உலக அளவில் அதி வேக இணைப்பு தரும் சில நாடுகளைப் பார்க்கலாம். இந்த வகையில் புளூம்பெர்க் (Bloomberg.com) தளத்தில் கிடைக்கும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஹாங்காங் :
நொடிக்கு
54.1. மெகா பிட்ஸ் வேகம். பன்னாட்டளவில் அதிகமான வேகத்தில் இணைய இணைப்பு
தரும் நாடு. மக்கள் பெருக்கம், இணையத்தைப் பயன்படுத்துவோர் அதிகம்,
இணையத்தில் எந்த பொருள் பற்றியும் பதிவதற்குத் தடையற்ற அரசின் ஆதரவு எனப்
பல காரணங்களை இதற்குக் கூறலாம். சாப்ட்வேர் பைரசி எனப்படும் திருட்டு நகல்
தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதிலும், இணையம் வழி வழங்குவதிலும்,
சிறுவர்கள் சார்ந்த பாலியல் தகவல்களைத் தருவதிலும் இங்குள்ள இணைய தளங்கள்
பயன்படுகின்றன. பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட இந்த நாடு, இவை
எதனையும் தடுப்பதில்லை. இணைய தளம் அமைத்து செயல்பட எந்த உரிமமும் பெற
வேண்டியதில்லை.
2. தென் கொரியா:
நொடிக்கு
48.8 மெகா பிட்ஸ். டிஜிட்டல் விளையாட்டுகளுக்கு உலக அளவில் பெயர் பெற்ற
நாடு. உலக அளவில் இணைய வழி விளையாட்டு போட்டியை அடிக்கடி நடத்தும் நாடு.
இந்நாட்டின் இணைய அலைக் கற்றையில் பெரும்பகுதி, விளையாட்டுகளை
நடத்துவதிலேயே செலவாகிறது. இணைய இணைப்பு கட்டணம் இங்கு மிக மிகக் குறைவு.
அரசின் கொள்கைகள், இணைய பயன்பாட்டைப் பெரிதும் ஊக்குவிப்பதாக உள்ளன. அனைத்து பெரிய நகரங்களிலும், வயர் இணைப்பற்ற இணைய தொடர்பு தரப்படுகிறது. இங்குள்ள உணவு விடுதிகள் அனைத்திலும் இலவச வை-பி இணைய இணைப்பு தரப்படுகிறது.

3. ஜப்பான்:
நொடிக்கு
42.2 மெகா பிட்ஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழில் பிரிவில், ஜப்பான் தன்
உயர்நிலையை விட்டுவிட்டாலும், தகவல் தொழில் நுட்பத்தில் இன்னும் முன்னணி
இடத்தைக் கொண்டுள்ளது. இணையத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருப்பதை,
ஜப்பான் தன் தேசியக் கொள்கையாகவும், இலக்காகவும் கொண்டுள்ளது. தகவல்
பரிமாற்றத்தை எடுத்துச் செல்ல, இணைய இணைப்பு தருவதில் அதிவேக ஆப்டிக் பைபர்
கேபிள்கள், நாடெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.
4. லத்வியா:
நொடிக்கு
37.5 மெகா பிட்ஸ்: தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகளை எண்ணுகையில்,
லத்வியா அதில் ஓர் இடம் பிடிக்கவில்லை. ஆனால், இணைய இணைப்பினைப் பொறுத்த
வரை, வேகமான தகவல் பரிமாற்றம் கூடிய இணைப்பினைத் தருவதில் முன்னணி இடம்
கொண்டுள்ளது.
5. ருமானியா:
நொடிக்கு
37.4 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் சில நகரங்கள், உலக அளவில் அதிவேக இணைய
இணைப்பு தருவதில் முதலிடங்களைப் பிடித்துள்ளன. தென் கொரியாவிற்கு அடுத்த
இரண்டாவது இடத்தில் சென்ற ஆண்டில் இடம் பெற்றிருந்தது.
6. பெல்ஜியம்:
நொடிக்கு
32.7 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தும்
இணைய இணைப்பில் டேட்டாவிற்கான அதிக பட்சத்தினை வரையறை செய்துள்ளனர்.
இணைப்பு தரும் வேகம் போதுமானதாக உள்ளது.
7. ஸ்விட்சர்லாந்து:
நொடிக்கு
32.4 மெகா பிட்ஸ். ஐரோப்பிய நாடுகளில், அதிக வேகத்தில் இணைப்பு தரும் நாடு
ஸ்விட்சர்லாந்து. நாட்டின் ஜனத்தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில்
இணையம் பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடாகவும் இது இடம் பெற்றுள்ளது.
8. பல்கேரியா:
நொடிக்கு
32.1 மெகா பிட்ஸ்: குறைந்த அளவிலான அரசு வரிகள், குறைவான செலவில்
கிடைக்கும் மனித உழைப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றதால், பல தகவல் தொழில்
நுட்ப நிறுவனங்கள் இங்கு தங்கள் நிறுவனப் பிரிவுகளைக் கொண்டுள்ளன.
இந்நாட்டில், பெரும்பாலான இணைய இணைப்புகள் லோக்கல் ஏரியா நெட்வொர்க்
அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. வேகம் மற்றும் சேவையில் உதவி
ஆகியவற்றால், மக்கள் அதனையே விரும்புகின்றனர்.
9. இஸ்ரேல்:
நொடிக்கு
30.9 மெகா பிட்ஸ். 2001 ஆம் ஆண்டில் தான், இஸ்ரேலில் மக்களுக்கு
இன்ட்ர்நெட் கிடைத்தது. அதன் பின்னர், மிக வேகமாக வளர்ந்து இந்த இடத்தைப்
பிடித்துள்ளது. தொலைபேசி மற்றும் கேபிள் கட்டமைப்பு மூலம், இங்கு
இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படுகிறது.
10. சிங்கப்பூர்:
நொடிக்கு
30.7 மெகா பிட்ஸ். தொழில் நுட்ப கூடு எனச் செல்லமாக அழைக்கப்படும் நாடு.
99 சதவீத மக்கள் இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில்,
""அதிபுத்திசாலியான நாடு'' எனப் பெயர் எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு
சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக, இணைய இணைப்பின்
வேகம் அதிகரித்து வருகிறது. அதிவேக பைபர் நெட்வொர்க் அமைக்கப்பட்டு இணைப்பு
தரப்படுகிறது. நேஷன் வைட் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் ஒன்றை மிக வேகமாக
சிங்கப்பூர் அரசு அமைத்து வருகிறது.
மேலே தரப்பட்டுள்ள பட்டியல், இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகும். அந்நாட்டின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையம் பயன் படுத்தும் மக்கள், குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.
மேலே தரப்பட்டுள்ள பட்டியல், இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகும். அந்நாட்டின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையம் பயன் படுத்தும் மக்கள், குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.
No comments:
Post a Comment