யானை
யானையின்
தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின்
இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும்
கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,
தும்பிக்கையை தந்த படி
நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக
இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.
யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் கைகள் !.
யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்
கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால்,
குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின்
தந்தமாகிவிடுகின்றது !
யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.
கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.
அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .
அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!
இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.
No comments:
Post a Comment