Monday, July 8, 2013

இயற்கை அழகு கொஞ்சும் வென்னீர் ஊற்றுகள்!

இயற்கை அழகு கொஞ்சும் வென்னீர் ஊற்றுகள்!

E_1372414412E_1372414418
இயற்கை, எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்ற நாடு. ஆனால், அங்கும் ஒரு சில இடங்களில், வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸ் என்ற இடத்தில், ஏராளமான வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸிலிருந்து, 45 நிமிட நேரத்தில் தமினா கார்ஜ்ஜை என்ற இடத்தை அடையலாம். இங்கு, 300 ஆண்டுகளாக ஸ்பாக்கள் இயங்குகின்றன. முதல் ஸ்பா...1700ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இயங்க ஆரம்பித்தது.
உடலில் கைகள், கால்கள் செயல் இழந்து போனவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் மற்றும் உடல் சார்ந்த பல வலிகளுக்கு வென்னீர் சிகிச்சை அருமருந்தாக உள்ளது.
அதனால், மேற்கண்ட நோயாளிகளை நகரும் சேரில் உட்கார வைத்து, இந்த வென்னீர் ஊற்றுகளில், பல நாட்கள் குளிக்கச் செய்கின்றனர் மருத்துவர்கள்.
தமினா தெர்மே என்ற இடத்தில், நான்கு நீச்சல் குளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், வெவ்வேறு சீதோஷ்ண நிலை கொண்டவை. தேவைக்கு ஏற்ப, அந்தந்த நீச்சல்குளத்தில் இறங்கி குளிக்கலாம். இங்கு, சராசரி வெப்பம் 36 டிகிரி செல்சியஸ். கைகால் இயங்காமல் இருப்பவர்கள், படுத்து அனுபவித்து குளிக்க ஏதுவாய், தனித்தனி டப் வைத்து பைப் மூலம் அதில் வெந்நீர், ஊற்றுநீர் விழும்படி செய்துள்ளனர். இரண்டு மலைகளின் குறுகிய பாதை வழியே தண்ணீர் வருவதால், மூலிகை குணங்களுக்கும் பஞ்சமில்லை. நம் நாட்டு பிரபல தொழிலதிபர்களின் மனைவியர், இங்கு அடிக்கடி வந்து தங்கி குளிப்பதுண்டு. முகேஷ் அம்பானியின் அம்மா, டென்னீஸ் வீரர் பெடரர் உட்பட பலர், இங்கு மாமுலாக வந்து குளித்துச் செல்கின்றனர்.

No comments: