Saturday, July 6, 2013

பசுமை குடில்களில் கத்தரி நாற்று: அதிக மகசூல் பெற வாய்ப்பு

பசுமை குடில்களில் கத்தரி நாற்று: அதிக மகசூல் பெற வாய்ப்பு

 பசுமை குடில்களில், குழிதட்டு முறையில் விளைவிக்கப்படும் நாற்றுக்களை பயன்படுத்தி, கத்தரி சாகுபடி செய்வதன் மூலம், சாதாரண மகசூலை விட மூன்று மடங்கு மகசூல் கிடைக்கும் என, கீழ்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயி
பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தோட்டக்கலை துறை அதிகாரிகள் வழங்கிய, சொட்டு நீர் பாசன முறையில், கத்தரி பயிரிட்டேன். இதற்காக, 75 சதவீத மானியத்தில், சொட்டு நீர் பாசன கருவிகளை பெற்றேன். எனது, 50 சென்ட் நிலத்தில், கத்தரி பயிரிட்டேன். 40 நாட்களில், காய்க்க தொடங்கி, 6 மாதங்களுக்கு காய்த்தது. இதன் மூலம், 1.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. தொடர்ந்து, இல்லீடு தேசிய வேளாண் நிறுவனம், 100 சதவீத மானியத்தில், 1.50 லட்சம் ரூபாய் செலவில், பசுமை குடில் அமைத்து கொடுத்தது. அதில், குழித்தட்டு முறையில், கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகளை விட்டு, அவற்றை நடவு செய்துள்ளேன். பசுமை குடில்களில், குழித்தட்டு முறையில் வளரும் நாற்றுகளில் அதிக வேர் இருக்கும். இதனால், செடி, செழிப்பாகவும், விரைந்தும் வளர்ந்து, சாதாரண முறையை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கும். இவ்வாறு, பாஸ்கர் கூறினார்.

No comments: