Thursday, July 25, 2013

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

Health Mix 'many nutritional cereals that are available in stores. Can it be breakfast for children to attend school?
ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக்  கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன்
ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் கூடிய ஒரே பொருள் ஹெல்த்  மிக்ஸ்தான். கோதுமை, ராகி, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக  இருப்பார்கள்.
கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும்  கொடுக்கலாம். மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரோட்டீன் என எல்லாம்  கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு.
இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும். நல்ல தரமான மிக்ஸை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.  வீட்டில் நாமேகூட செய்து கொள்ளலாம்.
ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, வறுத்த கடலைப்பருப்பு, சிவப்பரிசி, கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம், கொள்ளு, மொச்சை, கம்பு,  உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, வறுத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடியாக்கிக் கலந்து வைத்து  பயன்படுத்தலாம்.

No comments: