Monday, August 6, 2012

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!


உலகின் மிக நீளமான தொங்கு பாலம், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சிசோய் என்ற இடத்தில், போக்குவரத்துக்காக சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு மலைத் தொடர்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், தரையிலிருந்து, 1,102 அடி உயரமுடையது. இதன் நீளம், 3,858 அடி. கடந்த 2007ல், இந்த பாலம் அமைக்கும் பணி துவங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.
மலைத் தொடர்களில் சாலை வழிப் பயணம் என்பது, மிகவும் சிரமமானதாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் இருப்பதால், அதை எளிதாக்கும் வகையில், இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு, தனித் தனி வழித் தடங்கள் உள்ளன. நான்கு வழிச் சாலை வசதியுடையதாக இந்த பாலம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், இந்த பாலத்தில் காரில் பயணிக்க முடியும். பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனியாக நடைபாதையும் உள்ளது. பாலம் முழுவதும், 1,888 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் மின் ஒளியில், இரவில் இந்த பாலத்தை பார்ப்பது, உலக அதிசயத்தை பார்ப்பது போன்ற பிரமிப்பை தரும்.

No comments: