Monday, May 21, 2012

பாரம்பரிய வேளாண்மை :: இந்தியாவின் விவசாய பாரம்பரியம்

alman2
முன்னுரை

இந்தியாவில் விவசாயம் புதியதாக தற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 - 6500 கி.மு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன் , காட்டு பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியினால் பெற்ற முறைகளை, அடுத்த தலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பழைய காலத்தில் விவசாயிகள் கலப்பு பண்ணை, கலப்பு பயிர்கள், பயிர் சுழற்சி போன்ற இயற்கைக்கு தீங்கு சேர்க்காத விவசாய முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர். இந்தியாவில் பழங்கால விவசாயிகளின் ஆழ்ந்த அறிவினால் பழைய இந்தியா வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அவர்களின் அனுபவங்களை, தற்போதைய புதிய தலைமுறையினர், அதன் பலன்களை அறிந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பழைய காலத்து விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்ட விவசாய முறைகள் தற்சமயம் அங்கக வேளாண்மை என்ற புதிய முறையாக பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.

விவசாயமானது, நல்ல மண் கொண்ட மலையடிவாரப் பகுதியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதியில், நீரை கட்டுப்படுத்த, நிறைய ஆற்றலும், புதிய தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் அங்கு ஆரம்பம் ஆகவில்லை.
வேதகால விவசாயிகள், மண்வளம், விதை தேர்வு, விதைப்பு பருவம், அறுவடை, உரமிடுதல் போன்ற வேலைகளில் சிறிதளவு தெரிந்து கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள், பயிர் சுழற்சியினால், மண் வளத்தை மேம்படுத்த முடியும் எனவும் அறிவர்.
அவர்கள் 3 ஆண்டு பயிர் சுழற்சி முறையில், ஆழ் வேர் செடிகள், குறைந்த வேர் செடிகள் மற்றும் பயறு வகை பயிர்கள் இடம் பெற்று இருந்தன. கோதுமை-பட்டாணி, கரும்பு - பசுந்தாள் உரச் செடி, கோதுமை - துவரை, சோளம் போன்ற பயிர்கள் பயிர் சுழற்சியில் இடம் பெற்று வந்தன. கலப்பு பண்ணையில் பயிருடன் கால்நடை வளர்ப்பு செய்து வந்தனர். கலப்பு பயிர் முறையானது, பலதரப்பட்ட பயிர்களை கலந்து செய்வது அனுமதிக்கப்பட்டது. கோதுமையுடன் பட்டாணி மற்றும் இதர பயறு வகைகளை கலந்து பயிர் செய்தால், கோதுமையின் தழைச்சத்து தேவையை பயறு வகையினால் நிரப்பப்படுகிறது. சோளம்+துவரை+தட்டைப்பயறு, உளுந்து/பாசிப்பயிறு + Sorgham/ கம்பு  துமை + பட்டாணி கோதுமை + பேய் எள் போன்ற பயிர் கலப்புகள் செய்யப்பட்டு பயிரிடப்பட்டு வந்தனர். ஆனால், பொதுவாக, தனி பயிர் முறை அங்கீகரிக்கப்படவில்லை.

விவசாய சாகுபடி முறைகள்

cultivation

பருவம் : ரிக் வேத காலத்தில், 6 பருவங்களாக பிரிக்கப்பட்டது.
கிரிஷ்மா
மே - ஜீன்
வர்சா
ஜீலை - ஆகஸ்ட்
ஹேமான்ட்
செப்டம்பர் - அக்டோபர்
சார்டு
நவம்பர் - டிசம்பர்
சிசர்
ஜனவரி - பிப்ரவரி
வசந்தகாலம்
மார்ச் - ஏப்ரல்
மேலும் குளிர் பிரதேசத்தில் 4 பருவங்களாக பிரிக்கப்பட்டது.
குளிர்காலம்
ஜனவரி - மார்ச்
வசந்தகாலம்
ஏப்ரல் - ன்
கோடைகாலம்
லை – செப்டம்பர்
மழைகாலம்
அக்டோபர் - டிசம்பர்
மண்:
பயிர் சாகுபடி செய்ய, மண்ணானது நல்லதாக இருக்க வேண்டும். அது பாறைகள் கற்கள் இல்லாத, களிப்பு மண் வகையுடன் சிவப்பு மற்றும் கருமண்ணாகவும், நீர்ப்பிடிப்பு தன்மையுடன், அதிக ஆழமில்லாததாகவும், குறைந்த ஆழம் கொண்டதாகவும் இல்லாமல் இருந்தால், காற்றானது நன்கு முளைத்து விடும். விரைவாக நீரை உறிஞ்சக்கூடியதாகவும், மண்புழு போன்ற உயிரினம் வாழக்கூடியதாகவும், நல்ல அங்ககப் பொருட்கள் கொண்டதாகவும் இருந்தால் நல்லமண் என காசியப்பா கூறியுள்ளார்.

விவசாய கருவிகள்
நிலத்தை அளக்க குறிப்பிட்ட நீளம் கொண்ட மூங்கில் கழிகள் பயன்படுத்தப்பட்டன. வேதகாலத்தில் விதை விதைப்பான், டிஸ்க் கலப்பை, ‘பிளேட் ஷேரோ’, நடவு கருவி, கதிர் அறுப்பான், ‘சுபா’ துற்றி போன்ற பல கருவிகள்/இயந்திரங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன என நூல்கள் கூறுகின்றன. பழங்காலத்தில் இரட்டை மாட்டு கலப்பை பெரிதும் உழவுக்கு பயன்படுத்தப்பட்டது. கலப்பையானது முக்கியமான முதன்மையான விவசாய கருவியாக பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்பட்ட கலப்பை ‘டேசி’ கலப்பையே பல்வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

விதை சேகரிப்பு மற்றும் பாதுகாத்தல்
‘மகா’ (பிப்ரவரி) மற்றும் ‘பால்குனா’ (மார்ச்) மாதத்தில் எல்லா வகை விதைகளையும் சேகரித்து, அதை விதைப்புக்கு பயன்படுத்துவதற்குமுன் சூரிய வெப்பத்தால் காய வைத்து பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான விதையை சேகரிக்க, பயிரிலேயே, நல்ல செடியை பார்த்து, அதிலுள்ள கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து சேகரித்து கொள்ளலாம். விதைகளை கலந்து சேமித்தால் அதிக நஷ்டம் ஏற்படும். நல்ல ஒரே மாதிரியான விதைகளால், நல்ல மகசூல் பெறலாம்.
விதைகளை நன்கு சூரிய ஒளியில் காய வைத்தல் பல்தரப்பட்ட கலன்களின் சேமித்தல், விதைகளை மழை மற்றும் ஈரத்திலிருந்து காத்தல் மற்றும் எலி, பூனை மற்றும் முயல் தொல்லைகளிலிருந்து விதையைக் காத்தல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் காசியப்பா விளக்கமாகக் கூறியுள்ளார்.

பயிர்கள்
தானியங்கள், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கார் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ வகைகள் என பல்வேறு வகை பயிர்கள் இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்தனர்.

பயிர் தேர்வு
நெல் மற்றும் மற்ற தானியங்கள் முதல் தேர்வாகவும், பயிறு வகை மற்றும் இதர சிறு தானியங்கள் இரண்டாவது தேர்வாகவும், காய்கறி (பழம் உட்பட) வகை மூன்றாவது தேர்வாகவும் மற்றும் கொடி வகைகள் மற்றும் பூக்கள் நான்காவது தேர்வாகவும் பயிரிட்டனர்.

பாசுமதி அரிசி:
‘பாசுமதி’ என்ற வார்த்தையானது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. ‘வாஸ்’ என்றால் வாசனை/மணம் மற்றும் ‘மேட் அப்’ என்றால் சுத்திகரிப்பு என்று அர்த்தம். எனவே வாஸ்மதி என்றால் வடஇந்தியாவில், நல்ல மணமுள்ள சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்றனர். ‘வா’ என்பது அடிக்கடி ‘பா’ என்று உச்சரிக்கப்பட்டு அதுவே பாசுமதி எனப்பட்டது. நல்ல மணமுள்ள அரிசி வகையை பாசுமதி அரிசி என்று அழைத்தனர்.

கோல்டன் அரிசி:
‘பீட்வர்னா கிரிஹி’ (மஞ்சள் அரிசி) எனப்படும் அரிசி செரிமானத்தை மேம்படுத்தும் எனவும் சமபா இரகம் ஹேமா (கோல்டன் அரிசி) எனவும் அழைக்கப்பட்டதாக காசியப்பா கூறியுள்ளார்.

நிலம் தயாரிப்பு:
ரிக் வேதகால விவசாயிகள் விதை விதைப்பிற்கு முன்பு, நிலத்தை மறுபடி மறுபடி நன்கு உழவு செய்தனர். அவ்வாறு செய்வதால், களைகளை அகற்றவும், மண்ணை பொலபொலப்பு ஆக்கவும் மற்றும் வேண்டிய அளவு கட்டிகளை உடைக்கவும் முடியும்.
ஆழ உழவு அல்லது மேல் உழவு, விதைப்பு தேவைக்கு ஏற்ப உழவு செய்தனர். உழவு செய்வதற்கு உகந்த நட்சத்திரங்களான சுவாதி, உத்திராஷ்தா, உத்திரபர்குடபதா, உத்திரபால்குனி, ரோகிணி, மிருகஷிரிசா, மூலா, பூணர்வசு, பூஜ்யா, ஷரவனா மற்றும் ஹாஸ்டா ‘சாஜ் பரஸரா’ ‘Sage Parasara’ சொல்கிறது. திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் உழவு செய்தால், நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும் என்றனர். மாதத்தின் 2,3,5,7,10,11 மற்றும 13 ஆம் நாள் உழவுக்கு உகந்தது. உழவானது ரிஷபம் (ஏப்ரல் 21), மீனம் (பிப்ரவரி 20), கன்னி (ஆகஸ்ட் 22), மிதுனம் (மே 21), தனுசு (நவம்பர் 23), விருச்சகம் (அக்டோபர் 23) போன்ற இராசிகளில் ஆரம்பிக்கலாம்.
ஒற்றை சால், வெற்றிக்கும், மூன்று சால் வளம் மற்றும் ஐந்து சால் அதிக மகசூலுக்கு ஏற்றது என்பர். கரிஷி - பரசராவில், பயிருக்கான உழவு நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
உழவு ஆரம்பம்
-
பயிர்
பிப்ரவரி 20
-
கரும்பு
ஏப்ரல் 21
-
நெல் - (நடவுமுறை)
மே 21
-
நெல் (நேரடி விதைப்பு), மற்றும் பருத்தி, எள்
அக்டோபர் 23
-
கோதுமை, பார்லி + கடுகு
நவம்பர் 23
-
கரும்பு, மற்றும் கால்நடை தீவனப்புல் முதலியன் நெல் அறுப்புக்குப் பின்
மழை பெருகுவதற்கான மேகத்துடன் இருந்தால் உழவு ஆரம்பிக்கலாம். பரம்பு அடிக்க, வயலானது நீரால் நிரப்பப்பட்டிருந்தால் செய்யலாம்.
நடவு காலம்:
பல நாடுகளில், மழைக்காலத்தில் ஆரம்பத்தில், பயிர் நடவு ஆரம்பிக்கப்பட்டது. நீர் இருந்தால், கோடைக் காலத்திலும் பயிர் செய்யலாம் என காசியப்பா கூறியுள்ளார்.

பயிர் முறை:
பருவம்

பயிர்
முதல் பருவம் (பூர்வவபாத்)
:
நெல், குதிரைவாலி, எள்
இரண்டாம் பருவம் (மத்திய வபாத்)
:
உளுந்து, மாசா, சைவ்யா
கடைசி பருவம்
:
கோதுமை, பார்லி, கடுகு, பேய் எள், பயறு, குசும்பா, (Saflower), கலயா, குலுத்தா
விதை மற்றும் விதைப்பு:
பழங்கால விவசாயிகளுக்கு, நல்ல விதையின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். அதனால், நல்ல பழுத்த பழத்திலிருந்து, நல்ல விதையை தேர்வு செய்து, நல்ல முறையில் சேமித்து, அதை விதை நேர்த்தி செய்தோ செய்யாமலோ, விதைக்க பயன்படுத்தினர்.
விதைப்போ, நடவோ செவ்வாய் (எலி தொல்லை இருக்கும்) மற்றும் சனி (பூச்சி தாக்குதல் இருக்கும்) கிழமைகளில் செய்யமாட்டார்கள். விதைப்பை 4,9 மற்றும 14 நாட்களாள தேய்பிறை நாட்களில் செய்யக்கூடாது. சூரியன் கடகராசியில் விதைகளை 45 செ.மீ அதாவது ஒரு கை இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். சூரியன் சிம்ம ராசியில் இருக்கும்போது 3/4  அடி விட்டு விதைக்க வேண்டும். இது கன்னி இராசியில் இருக்கும் போது 4 விரல் இடை வெளி விட்டு (10.2 மீ) விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன்  உழவு, சமன்படுத்துதல், சால் அமைத்தல் அல்லது குழி எடுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
மோரில் ஊற வைத்த விதைகள் நன்கு முளைக்கும் விதைகளை, அரிசி, உளுந்து, எள் மாவுக் கொண்டு மூலாம் பூசி பின் மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் செய்தால், விதை நன்கு முளைக்கும் என்று வாரகமிகிரார் சொல்கிறார். சுரபாலா என்பவர் செடி கொடி மற்றும மர வகை இலைகளை மூலாம் பூசப் பயன்படுத்தலாம் என்கிறார்.
விதை விதைக்க, மூங்கில் விதைப்பான் பயன்படுத்தப்பட்டது. பயிருக்கு பயிர், பாருக்கு பார் உள்ள இடைவெளியானது, விதைக்கும் காலத்தைப் பொறுத்து மாற்றம் செய்து செய்யலாம். அதாவது, தாமத விதைப்பு எனில் அதிக விதையை பயன்படுத்த வேண்டும். விதை விதைத்த பின், ஒரே மாதிரி சீராக முளைத்து வர, மரக்கட்டையைப் பயன்படுத்தி, விதைத்த பின் நிலத்தில் இழக்க வேண்டும்.
சிறுவிதைகளனான நெல்லை, குறைந்த இடத்தில் விதைப்பு செய்து பின் அந்த நாற்றை நடவு செய்யும் முறை பழங்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நெல் நடவு முறை கி.பி 100 ஆம் ஆண்டில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் செய்யப்பட்டது.
புளிய விதைப் போன்ற கடின விதை உறையுள்ள விதைகளின் மீது, அரிசி, உளுந்து மற்றும் எள் மாவை தெளித்து, கோதுமை துகளுடன் அழகிய கறி சேர்த்தும், மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் செய்தும் முளைப்பைப் பெறலாம். இந்த நேர்த்தியை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.
பருத்தி விதையை, சிவப்பு அரக்கு சாற்றை சிறப்பான முறையில் விதை நேர்த்தி செய்வதால், சிவப்பு கலர் பஞ்சைப் பெறலாம். மேலும் பருத்தி விதையை சாணியுடன் நேர்த்தி செய்வதால் இலகுவாக விதைக்கவும், விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
வராகமிகிரார், ‘ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரு துண்டு தண்டை வெட்டி, அதை இன்னொரு தண்டில் நுழைந்து, அப்பகுதியை களிமண், சாணிக் கொண்டு மூடி, காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்றி வந்தால், புதிய தளிர் கட்டப்பட்ட பகுதிக்கு மேலேயும், வேர் கட்டிய பகுதியில் தோன்றும், பின் அதை வெட்டி தனியாக கூட பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. ஒட்டு கட்டுதலானது, பிப்ரவரி - மார்ச் மாதத்தில், கிளை உருவாகும் செடியிலும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில், பெரிய கிளை உருவாகும் செடிகளிலும் செய்ய வேண்டும். இந்த முறையானது பலா, அசோகா, ரோஜா, ஆப்பிள், எலுமிச்சை, மாதுளை, திராட்சை மற்றம் மல்லிகைப் போன்ற பயிர்களில் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
கிளைகள் மற்றும் களை எடுப்பு:
நம்முடைய மூதாதையர்கள், களைகளினால் மகசூல் குறையும் என நன்கு அறிந்திருந்தனர். ‘பாஷரா’ என்பவர் நெல்லுக்கு புது முறைகளை  எடுப்பு தேவைப்படுகிறது என்கிறார். சங்க காலத்து நூல்கள், களையெடுப்பு  ஓரு முக்கியமான செயல் என்கிறார். ‘பரஷா’ விதைகளை களையில்லா விதைகளாக தேர்வு செய்ய வேண்டும் என்பது பரிந்துரைக்கின்றார்.

ஊட்டச்சத்து மேலாண்மை:
வேத காலத்து பிராமிணர்கள், பசுவின் ஐந்து பொருட்களான  பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவற்றை பயிர் மீது தெளித்தல் (பஞ்சகாவ்யா) அல்லது சுத்தமான நீரை நிலத்தின் மீது தெளித்தல் (வளி மண்டலத்தை சுத்தப்படுத்துவதற்காகவே) போன்ற துறைகளை பற்றி காசியப்பா கூறியுள்ளார்.

நீர் மேலாண்மை:
ஆறு, பெரிய ஏரி, ஆறுகளினால் நிரப்பப்படும் தொட்டி, மலை நீரோடைகளிலிருந்து நீர் சேகரிக்கும் கால்வாய் மூலம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் பெறலாம் என காசியப்பா கூறியுள்ளார். மேலும் கிணறு வெட்டி, நீரை பாசனத்திற்கு பெற்றனர். கிணறு வெட்ட ஏற்ற நேரம் மழை காலம் முடிந்த பின்பே நிலத்தடி நீர் இருப்பை, மரம் அங்கு நன்கு வளர்ந்திருப்பதைக் கொண்டு அறியலாம் என்றார். கிணற்றிலிருந்து நீர் இறைக்க ஈட்டி இயந்திரம் எனப்படும் கருவி கொண்டு, மாடு, யானை மற்றும் மனித ஆற்றலின் உதவியுடன் செய்ய முடியும் என்றார். மழைநீர் சேகரிப்பு பற்றியும் கூறியுள்ளார்.

வளர்ச்சி ஊக்கிகள்
பனி, காற்று மற்றும அதிக சூரிய ஒளி இவற்றால் மரங்களின் நோய் தாக்குதல் ஏற்படுவதாக வராகமிகிரர் கூறியுள்ளார். அந்த பாதித்த பகுதியில் ‘ விடங்கா’, நெய் மற்றும் வண்டல் மண் கொண்டு பசையாக்கி, பூசலாம்.
மரங்களில் பிஞ்சுக்காய்கள் உதிர்ந்தால், கொள்ளு, உளுந்து, பாசி பயிறு, எள் மற்றும் பார்லி முதலியவற்றை பாலுடன் கொதிக்க வைத்து, அது ஆறியவுடன், மரத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம். அதன்பின், மரமானது அதிகமாக பூக்கவும் காய்க்கவும் செய்யும். தூளாக்கப்பட்ட வெள்ளாட்டு எரு மற்றும் செம்பறியாட்டு எரு, எள் தூள் கோதுமை துகள்கள், மாட்டுக்கறி இவற்றை நீரில் கலந்து ஏழு இரவு வைத்திருந்து பின் தெளித்தால், மரங்கள், கொடிகள், குத்துச்செடிகளில் பூப்பதும் காய்ப்பதும் அதிகமாகும்.
எள், பசு சாணம், பார்லி மாவு, மீன் மற்றும் நீர் இவற்றை சரியான அளவு கலந்து, நல்ல உரமாக பயன்படுத்தலாம் வராகமிகிரர் கூற்றுப்படி, எள்ளை விதைத்து, பூக்கும் பருவத்தில் மண்ணில் மடக்கி உழுதால், மண் வளம் பெறும்.
பசுஞ்சாணம், எருமை சாணம், வெள்ளாட்டு எரு, செம்மறியாட்டு எரு, வெண்ணெய், எள், தேன், கொள்ளு, உளுந்து, பச்சை பயிறு, பார்லி சில செடிகளின் வேர்கள், சாம்பல், அழுகிய கறி,மாட்டுக் கறி, மற்றும் பன்றி எலும்புடைய ஊளைச்சதை போன்றவைகள் நல்ல உரமாக பயன்படுத்தலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:
விதைகளை விதைப்பதற்கு முன்பு, பால், நெய் மற்றும் சாணி இவற்றில் நேர்த்தி / கலந்து பின் விலங்குகளின் கறி அல்லது மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் காட்டினால் நல்லது என வராகமிகிரார் கூறுகிறார். மேலும் விதை மீது தானியங்கள், பயறு வகைகள், எள், கறி கலவையை தெளித்தால் நல்லது என்கிறார்.
தானியங்களை சேமிக்கும் போது, வரும் பூச்சித் தொல்லையை தடுக்க வேப்பிலை போன்ற தாவரப்பூச்சிக் கொல்லி பண்புள்ளவைகைளப் பயன்படுத்தலாம். அதுபோல் விதைகளை சாம்பல் கொண்டு நேர்த்தி செய்து சேமித்தால், பூச்சி சேதாரம் தடுக்கப்படும். பழங்காலத்திலிருந்தே துவரை நன்கு காயவைத்து, ஈரத்தை குறைத்து சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சில பூச்சி மற்றும் பூஞ்சாணங்களின் சேதாரத்திலிருந்து வெட்டப்பட்ட நடவுக்குச்சிகளை காக்க சாணி, பூண்டு பைன் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ரோமன் எழுத்தாளர் ‘பல்லடியஸ்’ (1973) ல் புழுக்களை பூண்டை எரித்து விரட்டமுடியும் என்று கூறியுள்ளார். பழங்கால நூல்களில் மாதுளையில் விரிசல் ஏற்படுவதை தடுக்க ‘ரெசின்’ பசையை வேர்களுக்கு இடலாம் என பரிந்துரைத்துள்ளது.
ஆப்பிள் மரத்தில் பூச்சி நோய் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்க, செம்மறியாடு, பன்றி கழுதை மற்றும் மனித கழிவுகளை இடலாம்.

வெள்ளை கடுகு, கரு மிளகு, பெருங்காயம், விடங்கா, இஞ்சி, துவரை, பில்லாடா மாவு, எருமை கறி, கொம்பு இரத்த கழிவு நீர் கொண்டு புகை மூட்டம் காட்டினால், மரங்களை சேதப்படுத்தும் பூச்சிகள் நீங்கும். கொடி வகைகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எண்ணெய் பிண்ணாக்குகளை நீரில் கலந்து தெளிக்கலாம். இலை உண்ணும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பசுமாட்டு எரு சாம்பல், செங்கல் சூளை துளை இடலாம்.
மரங்களுக்கு, சில நாட்கள், குளிர்ந்த நீர் கொண்டு நீர் பாசனம் செய்தால், வேர் மற்றும் கிளைகளில் உள்ள பூச்சிகளை நீக்கலாம். பூச்சிகளினால் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த பாலுடன் விடங்கா, எள், கோமியம், நெல், கடுகு கலந்த கலவையை தெளிக்கலாம்.
தேன், கடுகு மற்றும் லிக்ாரைஸ் முதலியன நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையுள்ளவை. சாணம், கோமியத்துடன் கலந்தால் காயங்களை குணப்படுத்தும் தன்மையை பெறுகிறது. சாணமானது, உயிரியல் கட்டுப்பாடு காரணியாகவும் செயல்படுகிறது. பாலானது நல்ல பசைப்பொருளாகவும், பூஞ்சாணக் கட்டப்பாட்டு உயிரிபொருளாகவும் செயல்படும் தன்மையுள்ளது. இந்திய விவசாயிகள் சாணத்தை பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வேளாண் விஞ்ஞானிகள் அதை உரமாக பயன்படுத்துவதை தவிர மற்றவற்றை தவிர்த்து விடுகிறார்கள்.

கடுகு கரைசல் அல்லது பசை, பூஞ்சாணம், சிலந்தி நூற்புழு மற்றும் பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது. வெற்றிலைச்சுற்றி கடுகை முளைக்க வைத்தால், அதிலிருந்து ஏற்படும் வாயு, பூஞ்சாணத்திற்கு எதிர்ப்பாக இருக்கும். கால்நடை கழிவுகளை உரமாக, அதிகம் பயன்படுத்தலாம். கால்நடைகளின் சாணத்தை துவரைக்கு இட்டால் பனியினால் ஏற்படும் சேதாரம் குறையும். எருக்களையை இரண்டு முறை நிலத்தில் இடுவதால் நிலத்தின் உப்புத்தன்மை மாறும் வெற்றிலைத் தோட்டத்தில், சுத்தமாகவும், எல்லா விழும் வெற்றிலை இலைகளை அகற்றினால் நோய் பரவுவது தடுக்கப்படும் வெங்காயத்தின் சாற்றை சாணத்துடன் கலந்து வெற்றிலை தோட்டத்தில் இடுவதால், நோய் தாக்குதல் குறையும்.

அறுவடை, கதிர் அடிப்பு மற்றும் சேமிப்பு
கிருத்திகை, சித்திரை, பூஜா, ஹஸ்டா, சுவாதி, ஆர்டா, உத்திரசதா, உத்திரபடரபடா, உத்திர பல்குனி, மூலம் மற்றும் சுவர்ண நட்சத்திரங்கள் அறுவடைக்கு உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறுவடையானது செடிகளை தரையோடு வெட்டுவதாலும் கதிர்களை மட்டும் தனியாக அறுப்பதாகவும் நடந்தது. கதிர் அடிப்பானது கதிர் அடிக்கும் காலத்தில் நடக்கும். தூற்றுவதற்கு ‘சுபா’ என்னும் கருவி பயன்படுத்தப்பட்டது. சுத்தமான தானியங்கள் மட்டும் சேமிப்பு கலனில் சேமிக்கப்பட்டு மற்றவை எரிக்கப்பட்டது.
கத்தி மற்றும் கொடுவாள் போன்ற கருவிகள், தானியங்களின் கதிர்களை அறுக்க பயன்படுத்தப்பட்டது. கதிர் அடிக்க மனித ஆற்றல் அல்லது எருமை மாடுகள் பயன்படுத்தப்பட்டன. உளுந்து பயிரானது குச்சிக் கொண்டு அடித்து பிரிக்கப்பட்டது. பெண்களே, கதிர் அடிப்புக்கும் சுத்தம் செய்வதற்கும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
அறுவடையானது 4, 9, 14 ஆம் நாட்களான தேய் பிறை நாட்களில் செய்யக்கூடாது.
தானியங்களை எப்போது இடபுறத்திலிருந்து வலப்புறமாக அளக்க வேண்டும். அதாவது இடப்புறத்தில் அளந்தால் சந்தோஷமும், மகசூலும் அதிகமாகும் எனவும் வலப்புறத்தில் அளந்தால் செலவு அதிகமாகும் எனவும் கருதப்பட்டது.  3, 5 கிலோ நெல் பிடிக்கக்கூடிய அதக்கா எனக்கூடிய மரக்காலத்தில் அளக்கப்பட்டது. என ‘பரஷரா’ சொல்கிறார். கரையான், எலி மற்றும் இதர பூச்சிகளுக்கு பாதுகாப்பாக விதைகள், தானியங்கள் சேமிக்கப்பட்டது. மீனம் லக்னம், தானியங்கள் சேமிக்க நன்கு ஏற்ற நாளாக கருதப்பட்டது. ஹஸ்பா, சுவர்ணா, தனிஷ்தா, ‘சடபிசிடா’, பூஜா, பரணி, உத்திரசாதா, உத்திரபரபடா, உத்திரபல்குனி, மூலம் மற்றும் மகா நட்சத்திரங்களும் சேமிக்க உகந்த நாட்களாகும். திங்கள், வியாழன் சனி நாட்களில் சேமிக்கக்கூடாது.
அறுவடைக்கு பின்சார் பூச்சி மேலாண்மை
மக்காச்சோளம், நெல் போன்றவைகளை பெரும்பாலான விவசாயிகள் தாங்களாகவே செய்தனர். வேப்பிலை, உப்பு, சாம்பல், சூடம் போன்றவற்றை தனியாகவோ அல்லது  பூச்சிக் கலவையாகவோ தாக்குதல் வராமலிருக்க பயன்படுத்தினர். மண்ணெண்ணெய்  + சாம்பலுடன் வெங்காயம் கலந்து விதைகளை சேமிப்பது பலராலும் செய்யப்பட்டது. எலியை கட்டுப்படுத்த, நாய் மற்றும் பூனை எலி பிடிக்கவும், சாம்பல், கண்ணாடி துண்டு, முடி போன்றவற்றை வலையில் இட்டு, பூசுவதும் மலைவாழ் மக்கள் மற்றும் இதர மக்களாலும் பின்பற்றப்பட்டது.

பயிர் சாகுபடி முறை:
இந்தியாவில், ஒரு இடத்திலிருந்து மாற்றி மறு இடத்திற்கு விவசாயம் செய்யும் முறையில் கலப்பு பயிர் முறையை நிரந்தரமாக செய்யப்பட்டது. தற்போதய சூழ்நிலையில்,உலக உணவு உற்பத்தியை பெருக்குவதே. அதற்கு அறிஞர்களின் அறிவுரையும் கலப்பு விவசாயமே. அதாவது 8-35 பயிர்களை 2-2.5 ஹெக்டர் நிலத்தில் ஒரே சமயத்தில் விதைத்து, தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். இதன் மூலம், சத்து குறைத்தல் தவிர்க்கப்படுகிறது. இருக்கின்ற வளங்கள், பயிர் கழிவு மறுசுழற்சி மூலம் பாதுகாக்கப்பட்டு,மண்ணும் வளம் பேணப்படுகிறது. ‘ஜபோ’ முறை சாகுபடியில் விவசாயம், வனவியல், கால்நடை, மீன் மற்றும் நீர் இருப்பை காத்தல் கால்நடை, மீன் மற்றும் நீர் இருப்பை காத்தல் செய்யப்படுகிறது. இம்முறை நாகலாந்து பின்பற்றப்படுகிறது. ‘ஜபோ’ என்றால், நிறுத்தப்பட்ட நீர் என பொருள்படுகிறது.

விலங்குகளின் எருவானது முக்கிய உரமாக பயன்படுத்தப்பட்டது. குளத்திலிருந்து, மழை இல்லாத பருவத்தில் வண்டலானது அள்ளப்பட்டு, நிலத்தில் இடப்படுகிறது. வண்டலா அடங்கி இருக்கி. விவசாயிகள், இலைகள் மற்றும் கிளைகளை நிலத்தில் இட்டு மட்க வைத்து விவசாயம் செய்கிறார்கள். அதனால், மணம் வளம் மற்றும் நலம் காக்கப்படுகிறது. பாரம்பரிய விவசாயம், நிலம், நீர் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் முறைக்கு நல்ல உதாரணம். இடம் மாறும் விவசாயம் முறையினால் மண் மற்றும் சத்து குறைபாடு/நீக்கம் ஏற்படுகிறது. ஆனால் ’ஜபோ’ விவசாயத்தில், இயற்கை வளங்கள் காக்கப்பட்டு, மண் அரிப்பு மிகவும் குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாகவும் அமைகிறது. எந்த ஒரு விவசாயியும், கால்நடைகளின் நிலத்தின் அக்கறை செலுத்தி, அவர்களின் நிலத்தை பார்வையிட்டு, பருவநிலை பற்றி தினசரி நிகழ்வுகளை அறிந்து செய்தால், எந்த ஒரு விவசாயமும் அவர்களுக்கு பரிசாக அறுவடையில் கிடைக்கும் இல்லையெனில் நிலம் சுவர்களை விட்டு போகும். அந்த கால விவசாயத்தில் வேளாண் பயிர்களுடன், காய்கறி தோட்டம், பூ சாகுபடி, மருந்து செடி, வாசனை பயிர்கள், பழங்கள் மற்றும் வன மரங்கள் அனைத்தும் இடம் பெற்றதோடு கால்நடை வளர்ப்பு நடைபெற்றது.

தன்னிறைவு விவசாயம்:
தற்சமயத்தில், மனிதன் மற்றும் விலங்குகளின் நலமும், இதர பயன்பாடுகளின் கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை நோக்கி முன்னேறியுள்ளோம். அதன்படி தாவரபூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர பாதுகாப்பான பொருள்களை பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். இந்த முறையானது நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவர்களின் அறிவும், அனுபவங்கள் வாழ்ந்த நல்ல சுற்றுச் சூழலும் நமக்கு அவர்களில் தீங்கில்லா விவசாய முறையை எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய நவீன காலத்தில் இந்திய விவசாயத்தில் பழங்கால விவசாய அறிவை பயன்படுத்தி, தீங்கிலைக்காத, பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளை உருவாக்கி பயன்படுத்துவதன்மூலம் பாதுகாப்பான மனித சமுதாயத்தை உருவாக்க முடியும்.

பஞ்சாங்கம் 

என்பது இந்துக்களின் சோதிட காலண்டர், இந்தியர்களின் பழங்கால வானியியலை alman1அடிப்படையாகக் கொண்டு, முக்கிய சோதிடத் தகவல்களை அட்டவணை வடிவத்தில் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பஞ்சாங்கமானது, படித்த ஆசிரியர்கள், சமூகத்தினர், கல்வியாளர் மற்றும் பல்கலைக்கழகத்தினரால் வெளியிடப்படுகிறது. அவைகள் பல்வேறுபட்டவர்களால் வெளியிடப்பட்டாலும், ஒரு சில சிறிய வேறுபாடுகளே காணப்படும். அவைகள் அனைத்தும், சூரிய கிராணம், வானிலை தகவல் போன்றவற்றை முன்கூட்டியே வெளியிடுகிறது. நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையை வைத்து, அதனால் மனிதர்கள் மற்றும் செயல்பாடுகளில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறியவும். விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையான செயல்களும் உதவவும் பஞ்சாங்கம் பயன்படுகிறது.
பஞ்சாங்கத்தின் தோற்றமானது பாபிலோனியர்களின் சோதிடத்திலேயே ஆரம்பமாகியது எனலாம்.
விவசாயி பஞ்சாங்கம் என்பது, நெடுநாள் முன்னறிவிப்பான வானிலை அறிவிப்புடன் வீடு, தோட்டம், சோதிடம், இயற்கை நிகழ்வுகள் மற்றும் சமையல்களைக் குறித்த தகவல்களை வழங்குகிறது. விவசாயி பஞ்சாங்கம் என்றி நூலானது, அமெரிக்க விவசாயிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானது, இது விவசாயிகளுக்கு , ஒவ்வொரு நாள் நிகழ்வுகளான விவசாயம், காலநிலை, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் ஆலோசனை வழங்குகிறது.

கிரிஷி பஞ்சாங்கம்

கிரிஷி பஞ்சாங்கம் அல்லது உழவு - பஞ்சாங்கமானது அடிப்படை  சோதிட விவசாய ஆலோசனை புத்தகம் / காலண்டர் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நூலில், விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த செயல்களின் வேறுபட்ட செயல் குறித்து வழங்கும் அட்டவணை தொகுப்பே, இது, மண்டலம் வாரியாகவும், காலநிலை வாரியாகவும், பயிர் வாரியாகவும் தகவல்களை வழங்குகிறது. சோதிட காலநிலையை அறிந்து பயிர்களின் செய்யக்கூடிய முறைகளை அந்த நேரத்தில் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என அறிவிக்கிறது. மேலும் மதம்சார்ந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள், விழாக்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சில சோதிடம் சாராத நிகழ்வுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் மற்றும் சில சோதிடம் சாராத நிகழ்வுகள் குறித்தும் விவசாயிகளுக்கும் விவசாய மேம்பாட்டாளர்களுக்கும பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
கிரிஷி பஞ்சாங்கமானது, முக்கியமாக விவசாயிகளின் விவசாய உபயோகத்திற்கான தகவல்களை முதன்மையாக வழங்குவதோடு, அடிப்படை தகவல்களான, ஆண்டு தின காலாண்டு, விடுமுறை நாட்கள், முக்கிய நாட்கள் வரும் ஆண்டுகளில் நடக்கும், விவசாயிகளும் உபயோகமான சில நிகழ்வுகள் குறித்தும் அளிக்கிறது. இதில் வழங்கும் நிகழ்வுகளினை இரண்டு வகையாக பிரித்து வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டு மாறும் தகவல்கள்
  • ஆண்டு நாட்கள் மற்றும் விடுமுறை நாள் விவரங்கள்
  • ஒரு ஆண்டு முழுவதற்குமான, மாத வாரியான நாள் குறிப்புகள்
  • மாத வாரியான நட்சத்திர பலாபலன்கள்
  • ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான, தினசரி/மாதாந்தர/ஆண்டு வானிலை முன்னறிவுப்புகள்
  • கோள்களின் நிலைவைத்து அவ்வாண்டிற்றகான பயிர் முறைகள்
  • முன்னறிவிப்பு செய்யப்பட்ட வானிலையை அடிப்படையாக கொண்டு பயிர் பருவ நிலைகள்.
எந்த ஆண்டிலும் மாறாத தகவல்கள்
  • விவசாயம் மற்றும் காலநிலை முன்னறிவுப்புகள் தொடர்பான விதிகள்.
  • விவசாயம் மற்றும அதை சார்ந்த செயல்களின் நடக்கக்கூடிய நிகழ்வுகள்.
  • பொதுவான விவசாய ஆலோசனைகள்.
ராஷ்டீரிய பஞ்சாங்கம்

ராஷ்டீரிய பஞ்சாங்கமானது 1879 சக ஆண்டிலிருந்து (1957 - 58), சோதிட நிலை மையத்திலிருந்து வெளியிடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது, நாட்டின் பல்வேறு பகுதிகளால் வேறுபட்ட செயல்பாடுகள் கொண்ட காலண்டர் முறைகளை ஒழுங்குபடுத்துதலுடன், பஞ்சாங்க கணக்குகளை அறிவியல் ரீதியாக செய்ய ஊக்கப்படுத்துவதும் ஆகும். இது இந்திய மொழிகளான ஹிந்தி மற்றும் ஆங்கிலம் நீங்கலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி,கன்னடம்,மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகள் வெளியிடப்படுகிறது.
இந்தியாவிலுள்ள 24 நிலையத்திலிருந்து சூரிய உதயம், சூரியன் மறைவு, சந்திரன் உதயம் மற்றும் சந்திரன் மறைவு, திதிகள், நட்சத்திரங்கள், யோகங்கள் மற்றும் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கிள்ன சுழற்சிகள் குறித்து, துல்லியமாக கணினி கொண்டும், அடிப்படை அறிவியல் விதிகளைக் கொண்டும் கணக்கிடப்படுகிறது. பயனாளிகளின் நலனுக்காக, முக்கிய தகவல்களின் கணக்கீட்டை விவரித்தும் வழங்குகிறது. ஜ¤லியன் நாள், காளி அகர்கனா, சந்திரனின் வயது, மற்றும் நிலைகள் குறித்து ஒவ்வொரு நாள்களுக்கும் மற்றும் முக்கிய விழாக்கள், ஆண்டுகள் குறித்து தகவல்களை அளிக்கிறது. இது ஒரு தரமான பஞ்சாங்க தகவல்கள் நாட்டிற்கு வழங்குவதோடு, காலண்டர் தகவல்களை வழங்கும் நூலாகும். இதன் வெளியீட்டு புத்தகங்களை, அரசின் பல்வேறு நிலையங்களில் பெறலாம்.
தமிழ் பஞ்சாங்கம்
தமிழ் பஞ்சாங்கம் என்பது அறிவியல் ரீதியான இந்து காலண்டர். இது பழைய வேத கால சோதிட கலையாக கணக்கிடப்பட்டு, அது நல்ல நாட்கள், நேரம் அறிய உதவியது. தமிழ் பஞ்சாங்கம் ‘பஞ்ச்’ மற்றும் ‘ஆங்’ என்ற tamil panchangamவார்த்தைகளிலிருந்து தோன்றியது. கோள்கள் மற்றும் கடவுளை ஏழு நாட்கள் கொண்ட நான்கு வாரங்களாக அறியப்பட்டது. அதனால், இது ஐந்து வகைகளான - வாரம் அல்லது சூரிய நாள், திதி/சந்திர நாள், நட்சத்திரா யோகம் மற்றும் கரண் உள்ளடக்கியது.
இது புதிய முறைகளை விட, மிகவும் துல்லியமாக செயல்முறைக்கு ஏற்ற பயணம், அன்பு/உறவு, விருந்து, இடமாற்றம், நேர்காணல், தொழிலுக்கு செய்யக்கூடிய நல்ல நாட்கள் நேரத்தை அறிய உதவுகிறது. அமிர்தம், சித்தம் மற்றும் சுபம் என்ற அழைக்கப்படும் நேரங்களில் எந்த வேலையை புதியதாகத் தொடங்க வேண்டும். தமிழ் பஞ்சாங்கம் எப்போது, கடவுள் மற்றும் மதம் சார்ந்து வாழ்க்கை கொண்டு செல்வதை விவரிக்கிறது.
இந்திய சோதிடர்கள், ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளை சிறிய கணிதமும் மூலம் கோள்களின் நிலை அறிந்து கணிக்கின்றனர். பொது மனிதன், சோதிடர் அளவில் தமிழ் பஞ்சாங்கத்தை புரிந்துக் கொள்ள தேவையில்லை ஆனால் வாழ்க்கை நல்லபடி நடத்திச் செல்ல, ‘பலிடா’ - வை கணக்கிட அளித்து இருக்க வேண்டும். ‘பலிடா’ வை அறிந்து கொள்ள உதவபவையே ஐந்து உடல்களே இவை.பஞ்சாங்கத்தின் ஐந்து உடல்களான, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் வாரங்கள் ஆகும்.tamil panchangam2

திதி : வெளிச்ச பாதியில் 15 ஆவது நாள்  பூர்ணிமா, பெளர்ணிமா அல்லது பெளர்ணம்சாசி என்றழைக்கப்படுகிறது. இருண்ட பாதியில் 15 ஆவது நாள் அமாவாசை என்றழைக்கப்படுகிறது.‘கோகு’ என்பதில் நிலா இராது ‘சினிவாலி’ என்பதில் நிலா பாதி இராது. இது பொதுவாக தேய்பிறை என்றழைக்கப்படுகிறது. 4,9 மற்றும 14 ஆம் நாள் ‘ரிக்டா’ என்றழைக்கப்படுகிறது. இந்த நாள்களில் எந்த புதிய வேலையும் தொடங்கக்கூடாது.

வாரம்: ஏழு முக்கிய கோள்களை கொண்டு, வாரத்தின் நாட்களாக்கப்பட்டது. அதாவது சூரியன், பூமி, வியாழன், புதன், செவ்வாய், வெள்ளி மற்றும் சனி, என்ற கோள்களின் பெயருடன் விவரிக்கப்படுகிறது. மேலும் பொதுவான, அந்தந்த கோள்களின் தன்மையைப் பொறுத்து அந்த வாரங்கள் அமைவதாக நம்பப்படுகிறது.

ராசி: சூரியனின் வளிமண்டலத்தின் 12 கற்பனை பாதைகளைக் கொண்டு 12 இராசிகளாக அறியப்படுகிறது. அதை மேஷம், சிம்மம் போன்ற 12 சூரியனானது ஒரு இராசியை ஒரு இராசியைக் கடக்க சுமாராக ஒரு மாதத்தை எடுத்துக் கொள்கிறது.
நட்சத்திரம்: கோள்களின் நிலையை வைத்து நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. சந்திரனின் பாதையில் 27/28  நட்சத்திரங்கள் நிலையான வரிசையில் வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 9 தொடர்ச்சியான நட்சத்திர பாதங்கள் ஒரு இராசியின் கீழ் வருகிறது.
இந்துக்களின் கணக்குப்படி, 365 1/4 நாட்கள் பூமியானது சூரியனை வலம் வர எடுத்துக் கொள்கிறது. மேலும் சூரிய காலண்டரை தொடர்புபடுத்தி பார்க்கும் போது, சந்திரனானது ஒரு ஆண்டில் 7 நாட்கள் பூமியைச் சுற்றிவருகிறது.
தமிழ் பஞ்சாங்கத்தில், சந்திர காலண்டரை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆண்டில் 12 மாதங்கள், ‘ஆயான்’ நிலைக்கு வருகிறது. அல்லது சூரிய கணக்கீட்டின்படி, ஒரு மாதம் மூன்று ஆண்டு ஒரு முறை அதிகமாக வருகிறது. இரண்டு அடுத்தடுத்து, சூரியன் உதிக்கும் நாட்களுக்கு இடைப்பட்ட சூரிய நாள் அல்லது டின் எனப்படுகிறது. மேலும் இரண்டு அடுத்தடுத்து சந்திரன் உதிக்கும் நாட்களுக்கு இடைப்பட்ட நேரத்தை சந்திர நாள் அல்லது திதி எனப்படுகிறது.
‘சுகலாபாக்சா’ - என்றழைக்கப்படும் முதல் பாதி 15 நாட்களான பெளர்ணமியையும், ‘கிருஷ்ணபாக்சா’  என்று முதல் பாதி 15 நாட்களான இருண்ட நாட்களான அமாவாசையையும் கருதப்படுகிறது.

விவசாய பஞ்சாங்கம்:
விவசாய பஞ்சாங்கமானது, ஆசார்யா என்.ஜி.ரங்கா விவசாய பல்கழைக்கழகத்தினால், தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநிலத்தின் முதல்வரால், தெலுங்கு ஆண்டு பிறப்பில் வெளியிடப்படுகிறது.Vyavasaya
இதில், விவசாய பயிர்கள், மானாவாரி விவசாயம், நீர், மண், நீர் மற்றும் மண்  ஆய்வு முறைகள், ‘பிளாஷ்டிக்’ விவசாய பயன்பாடுகள், புதிய விவசாய கருவிகள், உலக வணிக அமைப்பின் விவசாய நிலை, உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாடு, பட்டுப்புழு வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மண்புழு உரம், மண் திறம்படுத்துதல், கரையான் மற்றும் அதை கட்டுப்படுத்துதல், காலநிலை கொண்டு விவசாய ஆலோசனை முறை, பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகள் மற்றும் உரங்களின் செயல்பாடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் மற்றும் இறால் வளர்ப்பு, கால்நடை தீவனப்பயிர்கள் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மனையியல் தகவல்கள், குழந்தை கல்வி, குறைந்த விலையான ஆற்றல் சேமிப்பு முறைகள், இயற்கை சாயங்கள், நுண்ணீர்ப் பாசனம், துணிகளில் உள்ள கறைகளை நீக்குதல் போன்றவைகள் குறித்து அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் புதிய மேம்பாட்டுகளினை திருத்தி வெளியிடுகிறது. இதில் முக்கியமாக, விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளின் தொழில்நுட்பங்களை அறிவியல் ரீதியாக முழுவதுமாக வழங்குகிறது.

ஆராய்ச்சிகள்/ஆய்வுகள்
வேளாண் வானிலையியல் துறை
இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஞானிகளால் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுடன் வழங்குவதே பஞ்சாங்கம். இந்த அறிவானது, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை வழி நடப்பவர்களுக்கு பொதுவாக்கப்பட்டு, பரப்பப்பட்டது தற்சமயம் பஞ்சாங்கமானது, சோதிடர்களால் வடிவமைக்கப்படுகிறது. பஞ்சாங்கம் என்ற வார்த்தையானது சமஸ்கிருத வார்த்தைகளான ‘பஞ்ச்’ (ஐந்து) மற்றும் ‘ஆங்’ (உடல்) என்றதிலிருந்து உருவாக்கப்பட்டது. நாள் மற்றும் மாதங்கள் காலண்டர் அடங்கியது பஞ்சாங்கம். பல்வேறு வகையான கோள்களின் நிலைகளால், இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு, அவை, மனித செயல்களில் மாறுதல்களை உருவாக்குகிறது.
அதன் அடிப்படையில், வாரந்திர அடிப்டையில் மழையளவு அளவானது கணக்கிடப்பட்டது. ஆண்டு வாரியாகவும், மாத வாரியாகவும் மழையளவு கணக்கிடப்பட்டது. வசந்தகாலம் 33.77% கோடைக்காலம் 21.6% மழைக்காலம் 57.33% என அறியப்பட்டது. பஞ்சாங்கத்தைக் கொண்டு மழையளவு கணக்கிடுதல் எப்போதும் அளவு உயர்ந்ததாகவே அமைந்துள்ளது. அதன்படி, மேம்பாட்டு பணிகளுக்கு, பஞ்சாங்கத்தின் உபயோகம் அதிகமாகவே உள்ளது.

தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக்கழகம்:
விவசாயிகள் காலநிலை பற்றிய பராம்பரிய அறிவு மற்றும் நம்பிக்கைகள், எப்போதும் மிகவும் சரியானதாகவே வானிலை முன்னறிவிப்பில் உள்ளது. பஞ்சாங்கம் ஒரு மதிப்பு மிக்க, வானிலை முன்னறிவிப்பு தகவல்களை தருகிறது. மேலும் அநேக விவசாயிகள் நம்பிக்கையும் வைத்துள்ளனர். பூமத்திய ரேகையிலிருந்து சூரியனின் இருப்பிடத்தையும் பூமியை சுற்றி வரும் சந்திரனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. அறிவியல் பூர்வமான, தொடர்புகளை மேல்நோக்கு நாள் மற்றும் கீழ்நோக்கு நாள் அனைத்திலும், அனைத்து மாதங்களிலும் மழையானது கிடைக்கப்பெற்றது ஆனால் பிப்பரவரி மற்றும் மார்ச் மாத மேல்நோக்கு நாள் மழை கிடைக்கவில்லை. மேலும் ஏப்ரல்,மே,ஜ¤ன் மற்றும் அக்டோபர் மாதங்களில் கீழ்நோக்கு நாளில் அதிக அளவு மழையும், அதே மாதங்களில் மேல்நோக்கு நாளில் குறைந்த அளவு மழையே கிடைக்கப்பெற்றது.

சந்திரன் - பயிர் சாகுபடி செயல்கள்
 moon

சந்திரன் - சூரியன் எதிர் எதிரான நிலையில்
பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இவை மூன்றும் 29.5 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது சந்திரனும் சூரியன் ஒன்றுக்கொன்று எதிரான திசையில், பூமி நடுவிலும் வரும் அப்படிப்பட்ட நாட்களில், பயிரான சந்திரன் மற்றும் சூரியனின் பிடியிலேயே இருந்து, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறனை பெறும். மேலும் அந்நாட்களில், விதைப்பு, நடவு, ஒட்டு கட்டுதல், பதியம் இடுதல், தெளிப்பு, உரம் இடுதல், அறுவடை செய்தல் மற்றும் கவாத்து வெட்டுதல் போன்றவைகளை செய்யலாம்.

சந்திரனின் நிலைகள்

பெளர்ணமி
இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அந்த நாட்களில் சந்திரனானது, சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை முழுவதுமாக பிரகாசிக்கும். அச்சமயம் விதைப்பு - குளிர் காலத்தில் செய்ய  விதை நன்கு முளைக்கும், தெளிப்பு - உரத்தெளிப்பு, பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லி தெளிப்புகளை செய்யலாம்.

அமாவாசை:
இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அச்சமயம், நாம் சந்திரனை பார்க்க முடியாது. ஏனெனில் சந்திரனின் இருண்ட பகுதியே  பூமியைநோக்கி இருக்கும். அந்த சமயத்தில் விதை விதைப்பு கோடைகாலத்தில் செய்தால் நல்ல முளைப்புத்திறனுடன் வலிப்பான வளர்ச்சி கிடைக்கும், நாற்று நடவுச்செய்தல், மண்ணில் தொழுஉரம், பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் வேர் பகுதியை (root cups) அறுவடை செய்யலாம்.

சந்திரன் வளர் பருவம்
சந்திரனானது வானத்தில் உயரமான இடத்திலும் அதிக நேரமும் இருக்கும். உதயமாகும் சந்திரன் கிழக்கிலிருந்து நகர்ந்து வடகிழக்குமாக 13 - 14 நாட்கள் வரை இருக்கும் சமயமே சந்திரன் வளர்பிறைநாள். அச்சமயம் விதை விதைப்பு, தெளிப்பு (உரம், பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள்) அறுவடை செய்யலாம்.

சந்திரன் தேய் பருவம்:
வானில் சந்திரனானது கீழாகவும், குறைந்த நேரத்திற்கு மட்டுமே தெரியும். அச்சமயம் சந்திரனானது வடகிழக்கு திசையிலிருந்து தென்கிழக்காக  13 - 14 நாட்கள் நகரும் அச்சமயம் நாற்று நடவு செய்தல், நடவு துண்டுகளை நடவு செய்தல், கவாத்து செய்தல், அறுவடை செய்தல் (பயன்தரும் வேர் செடிகள்) தொழு உரம் தயாரித்தல் மட்டும் இடுதல், தெளிப்பு, உரத்தெளிப்பு, உரம் தயாரிக்க கொம்புகளை புதைத்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.

முடிச்சு நாள்
நிலநடுக்கோட்டு பகுதியில், சந்திரனானது, சூரியனின் பாதையை கடக்கும் போது எந்த விவசாய வேலையையும் செய்யக்கூடாது.

அப்போஜி
சந்திரன் பூமியைச் சுற்றி வரும் நீள்வட்ட பாதையில், பூமியிலிருந்து தொலைவில் இருக்கும்போது, அமாவாசை அன்று செய்யக்கூடிய எல்லா விவசாய வேலைகளையும் செய்யலாம். அச்சமயம் உருளைக் கிழங்கு நடவு செய்ய மிகவும் ஏற்றது.

பொரிஜி
பூமியைச் சுற்றி வரும் நீள் வட்ட பாதையில், சந்திரனானது, பூமிக்கு அருகில் வரும் அந்த நாள்களே அச்சமயம் பெளர்ணமி அன்று செய்யக்கூடிய வேலைகளை செய்யலாம்.

விதை/பழநாள்
சந்திரனானது தன் சுற்றுப்பாதையில் ‘நெருப்பு’ போன்ற பொருட்களில் தாக்குதல் விளைவினால், பூமியின் மீது முழுவதுமாக தன் பெற்றதை பிரதிபலிக்கிறது. அச்சமயம் விதை மற்றும் பழம் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் அந்த நாட்களில் விதை மற்றும் பழம் உற்பத்திக்கான விதைப்பு மற்றும் நடவுகளைச் செய்யலாம்.

வேர்நாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையின் பூமியின் பாதிப்பு அதிகமாக நாட்களே இவை. இவை பூமியின் மீது முழுவதுமாக பிரதிபலிக்கிறது. இந்த நாட்கள், எந்த தாவரத்தின் வேர்பகுதி உருவாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே அந்த நாள்கள் விதைப்பு மற்றும் நடவுக்களை வேர் பயனுள்ள தாவரங்களைச் செய்யலாம்.

பூநாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையில் காற்று அல்லது ஒளியின் தாக்குதல் காணப்படும். அவை பூமியின் மேலே முழுவதுமாக பிரதிபலிக்கிறது. இவை, எந்த செடியின் பூ உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்போது, பூ பயன்தரும் செடிகளை விதைப்பு அல்லது நடவுச் செய்யலாம்.

இலைநாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையில் நீரின் தாக்குதல் காணப்பட்டு, அவை பூமியின் மேலே முழுவதுமாக பிரதிபலிக்கப்படுகிறது. அந்நாட்களில், இலைப்பகுதியான உருவாகவும் வளரவும் உதவுகிறது. எனவே, அந்த நாள்களில், இலை பயன்தரும் செடிகளை விதைப்போ அல்லது நடவோ செய்யலாம்.

சூரியனின் சுற்றுப்பாதை
சூரியனின் சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தாக்குதலினால், குறிப்பிட்ட பகுதிகள் செடிகளில் வளர உதவுகிறது.

சரியான நேரத்தில் பயிரில் செய்யக்கூடியவை:
  1. அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம்.
  2. பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தரைக்கு கீழே பயன்தரக்கூடிய இரு பருவப் பயிரை நடலாம்.
  3. சந்திரன் முதல் கால் பாகத்தில், தரைக்கு மேலே பலன் தரக்கூடிய,  இலைச் செடிகளையும், பழத்திற்கு வெளியே விதை தரக்கூடிய செடிகளான, அஸ்பராகஸ் ப்ரோகோலி, முட்டைகோசு, காலிப்பிளவர், மக்காச்சோளம், லிட்டுஸ், வெங்காயம் மற்றும் கீரை வகைகளை நடலாம்.
  4. சந்திரன் இரண்டாம் கால் வளாகத்தில் இருக்கும் போது ஒரு பருவத் தாவரமான  தரைக்கு மேல் பலன் தரக்கூடிய கொடி வகைகளையும், பழத்தின் உள்விதை இருக்கும் செடிகளான பீன்ஸ், கத்திரி, பட்டாணி, மிளகு, தக்காளி மற்றும் தர்பூசணி போன்ற செடிகளை நடலாம்.
  5. சந்திரன் மூன்றாம் கால் பாகத்தில் இருக்கும் போது இரு பருவச் செடிகள், பல்லாண்டு தாவரங்கள், தண்டு மற்றும் வேர் பலன்தரக்கூடிய தாவரங்கள் போன்ற, பீட்åட், பூண்டு, கேரட், வெங்காயம் விதை, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பெரிஸ், டர்னிப், கோதுமை மற்றும திராட்சை போன்ற செடிகளைப் பயிரிடலாம்.
  6. சந்திரனின் நான்காம் கால் பாகத்தில், எதுவும் நடவு செய்ய கூடாது, அச்சமயம் களை எடுப்பு, பூச்சிக் கட்டுப்பாடு போன்ற விவசாய வேலைகளைச் செய்யலாம்.

பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத்தேவை, கஷ்டங்களை நன்கு களைய அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குதல்.

பழங்கால செயல் வகைகள்

செய்தி
  • மரங்கள் மற்றும் செடிகள் ஒன்றாக நன்கு வளரக்கூடியது.
  • அறிகுறிகளைக் காண்பிக்கும் செடிகள் (மண் உப்புத்தன்மை அல்லது மழை வருவதை பூத்தல் காட்டும் செடிகள்)
செயல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்
  • விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு முறைகள்
  • விதை - விதைப்பு முறைகள்
  • நோய் நிவர்த்தி முறைகள்
நம்பிக்கைகள்
  • நம்பிக்கைகள், மனித உயிர் உள்ளவர்களாக நடமாட அடிப்படைப் பங்காகவும், அவர்கள் நோயில்லாமலும், சுற்றுப்புறத்தை நன்கு வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  • வனங்கள் சில மத காரணங்களுக்காகப் பாதுகாக்கப்படுவதால், அவைகள் பெரிய நீர் வளங்களை வழங்க முடிகிறது.
  • மத விழாக்களே குறைவாக உணவு உண்ணும் நல்ல உணவுக்குக் காரணமாகிறது.
சிறிய கருவிகள்
  • நடவுக்கும் அறுவடைக்கு பயன்படுத்தும் கருவிகள்
  • உணவு சமைக்கும் பாண்டங்கள் மற்றும் சாதனங்கள்
பொருள்கள்
  • வீடு கட்டப் பயன்படும் பொருள்கள்
  • கூடைகள் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் தயாரிக்க உதவும் பொருட்கள்
உயிர் மூலங்கள்

கால்நடை
  • அருகில் கிடைக்கும் தாவரங்கள் மற்றும் மரவகைகள்
மனித மூலங்கள்
  • வைத்தியர்கள் மற்றும் பொற்கொல்லர்கள்
  • கிராமப்புற மக்கள் குழுக்கள் - முதியவர்கள் குழு, இளைஞர் குழு - தொழிலாளர்களை தங்களுக்குள் பகிர்ந்தும் கருத்து பரிமாறிக் கொள்ளும் குழு.
கல்வி
  • பழங்கால கல்வி முறைகள்
  • வேலைக்கு முன் வழங்கப்படும் பயிற்சிகள்
  • கவனிப்பதால்
 பயிர்ப்பாதுகாப்பு
  • மக்காச்சோளத்தை 10-12 மணி நேரம், விதைப்பிற்கு முன்பு கோமியத்தில் ஊற வைத்து பின் விதைத்தால், பூச்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு கிடைக்கும்.
  • நெல்லில் 4 லிட்டர் கோமியம், 10 கிராம் பெருங்காயம் இவற்றை 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும்.
  • மா மரத்தில் தண்டு துளைப்பான் மற்றும் மரப்பட்டை உண்ணும் பூச்சிகளை துளை உண்டாக்கி இருந்தால், அந்த துளையில் சிறிது வெல்லம் வைத்தால் பூச்சி உண்ணும் பூச்சிகளை கவர்ந்து, அவைகள் துளையிலுள்ள பூச்சிகளையும் சேர்த்து உண்டுவிடும்.
  • கரும்பு கட்டை முளைக்க ஆரம்பிக்கும்போது, வாய்க்காலில் எருக்கலை கிளைகளை  போட்டால், அதன் மூலம், கரையான், கூன் வண்டு மற்றும் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
  • எருக்கிளைகளை 100-125 கிலோ கரும்புக்குள் ஏதும் வேலை செய்யும் போது போட்டால், கரையான் தொல்லையை இலகுவாக கட்டுப்படுத்தும்.

வேளாண் பயிர்கள்
தானியங்கள்
சிறு தானியங்கள்
பயிறு வகை
எண்ணெய் வித்துக்கள்
பணப்பயிர்கள்
 
 
 
 
 
 
 
 
 
தோட்டக்கலைப் பயிர்கள்
பழவகைகள்
காய்கறிப் பயிர்கள்
பூப்பயிர்கள்
வாசனை மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள்
பானங்கள் மற்றும் போதைப் பயிர்கள்
சம்பங்கி
வனப்பயிர்கள் / மர வகைகள்
Agro forestry
யூகலிப்டஸ்

நெல்
  • நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும்.
  • கதிர் விடும் சமயத்தில் நெல் வயலில் ‘சைகஸ் சிர்சினாலிஸ்’ செடிமண் பூக்களை ஏக்கர் 4 இடங்களில் வைத்தால், அதிலிருந்து வரும் வாடை, கதிர் நாவாய் பூச்சியை விரட்டும்.
  • 30 கிலோ புளி விதையை ஒரு ஏக்கருக்கு நடவு நட்ட ஒரு நாள் பின்பு இட்டால் பயிர் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும்.
  • நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும்.
  • நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துங்ரோ மற்றும் நெல் குட்டை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.
  • ‘I’ வடிவ மூங்கில் கழிகளை நெல் வயலில் பல இடங்களில் வைத்தால், பறவைகள் உட்கார்ந்து, நெல்லில்தாக்கும் பூச்சிகளின் புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.
  • ஆடிப் பெருக்கு அன்று விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • நடவு வயலை 4 முதல் 6 தடவை உழவுச் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடவு செய்தால் - மகசூல் குறையும்.
  • காற்று திசையில் நடவு செய்தால், பயிர் நன்றாக செழிப்புடன் வளரும்.
  • சம்பா நடவு நெருங்கி நடு, நாவரை நடவு தள்ளி நடு.
  • ஆட்டுக்கிடை கோடையில் பொடு, அதிக மகசூல் பெறு.
  • ஆட்டுக்கிடை முதல் பருவம், பசுந்தாள் உரம் இரண்டாம் பருவம் இட அதிக மகசூல் கிடைக்கும்.
  • 100 கிலோ / ஏக்கர் பன்றி எரு இட்டால் 10 நாள் நடவு கழித்து இட்டால் அதிக மகசூல் பெறும்.
  • வேப்பம் புண்ணாக்குக்குப் பதில் வேப்பங்கொட்டை தூளை ஏக்கருக்கு இட்டால் நல்ல மகசூல் பெறலாம்.
  • களைகளைக்கட்டுப்படுத்த, விதைப்பிற்கு முன்போ அல்லது நடவுக்கு முன்போ, நீர்கட்டி களைகள் எல்லாம் முளைத்து வந்தவுடன், உழவுசெய்து, மண்ணில் மட்கச் செய்யவேண்டும்.
  • கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த, தக்கைப்பூண்டு செடியை பயிரிடலாம்.
  • நாற்றாங்காலில், இலைப்பேனை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தழை உரமாக இடவேண்டும்.
  • நெல்லில் இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம்புண்ணாக்கு சாற்றை தெளிக்கவேண்டும்.
  • இலை மடக்குப்புழு தாக்கிய வயலில், நாட்டு இலந்தை அல்லது அயிலை தாவர கிளையை புதைக்கவேண்டும்.
  • நெல்லில் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, நீருடன் வேப்பெண்ணெய் 30 மிலி / லி என்ற விகிதத்தில் கலந்து  தெளிக்கலாம்.
  • தண்டு துளைப்பான் மற்றும் கதிர் காவாய் பூச்சியை கட்டுப்படுத்த செங்கல் சூளை சாம்பலை காலை வேளையில் இடலாம்.
  • கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த, 10 கிலோ பசுமாட்டு சாணி சாம்பலுடன் 2 கிலோ சுண்ணாம்பு தூள் மற்றும் 1 கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவவேண்டும்.
  • கதிர் நாவாய் பூச்சியின் சேதாரத்தை கட்டுப்படுத்த, 100 மிலி கருவேல் இலை சாற்றுடன் 10 கிலோ சாணியுடன் 10 லி தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, எருக்களைச் செடியை 12 அடி இடைவெளியில் நெல் வயலின் எல்லாப்புறமும் வளர்க்கவோ, நடவோ செய்யலாம்.
  • வேர் அழுகல் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு உப்புடன் 15 கிலோ மணல் கலந்து இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த, விதை நெல்லை 20 % புதினா இலைக்கரைசலில் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
  • நெல் ‘துங்ரோ’ நோயைக் கட்டுப்படுத்த, ஆடாதொடை இலை சாற்றை தெளிக்கலாம்.
  • பனை ஓலையைக் குச்சியில் கட்டி, வயல் ஓரத்தில் நட்டால், ஓலைக் காற்றில் ஆடும்போது ஏற்படும் ஓசையாக நெல்மணிகளை உண்ண வரும் வாத்து, குருவியிலிருந்து நெல்மணியைக் காக்கலாம்.
  • ஒரு நெல் கதிரில் 100 நெல்மணிகள் இருந்தால் 20-22 குவிண்டால் / ஏக்கர் மகசூல் கிடைக்கும்.
  • 120 நெல்மணிகள் ஒரு கதிரில் இருப்பின், அதுவே முழு மகசூலாகும்.
  • 6 அடிக்கு அதிக உயரமுள்ள பெரியமண் குதிரில் அதிக நாள் வரை நெல்லைச் சேமிக்கலாம்.
  • சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் இலைகளைப் போட்டால் தானிய சேமிப்பு கிடங்கில் ஏற்படும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • நெல்மணிகள், சேமிப்பதற்கு முன்பு, நெல்மணியுடன் புங்கம், நொச்சி மற்றும் வேம்பு இலைகளைக் கலந்தால் பூச்சித் தாக்கலை தடுக்கலாம்.
மக்காச்சோளம்
  • மக்காச்சோளத்தை கதிரின் மேல் உறையை உரிக்காமல் இருந்தால் மூன்று மாதத்திற்கு மேல் சேமிக்கலாம்.
  • மக்காச்சோள விதையை கோமியத்தில் 12 மணி நேரம் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
  • விதைப்பிற்கு முன்பு, வெந்நீரில் 3-6 மணி ஊறவைத்து, பின்பு நிழலில் உலர வைத்து விதைத்தால், நல்ல முளைப்புத் திறனுடன், குருத்து துளைப்பானையும் கட்டுப்படுத்த முடியும்.
  • தக்காளிக்கு பின்பு நடும் போது, அதை மேட்டுப்பாத்தியில் விதைத்தால். நிலம் தயார் செய்யும் செலவு குறையும்.
  • மக்காச்சோளம் கதிர் நன்கு முதிர்ந்து காய்ந்ததை அறிய சில சோளத்தை வாயில் போட்டு குடித்தால் உலோக ஓசை வரும்.
  • கல் படுக்கை மீது, காய வைத்த மக்காச்சோளத் தட்டையை அடுக்கி அதன் மீது நெல் வைக்கோலால் மூடி வைத்தால், அதை கால்நடைத்தீவனமாக ஒரு வருடத்திற்கு மேலாக சேமித்து பயன்படுத்தலாம்.
கம்பு
  • பறவையை விரட்ட, காக்கா போன்ற மாதிரி செய்து, அதை நீண்ட கம்பில் கட்டி நடு வயலில் வைக்கவேண்டும்.
  • நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • கம்பு விதையை உப்பு கரைசலில் ( 1 கிலோ  10லி / நீரில்) போட்டால், மிதக்கும் நோய் தாக்கப்பட்ட விதையை நீக்கி நல்ல விதையைப் பெறலாம்.
  • விதைப்பிற்கு முன்பு நீரில் இரவு முழுவதும் ஊற வைத்தப்பின் விதைத்தால் விரைவாக முளைக்கும்.
  • மேட்டுப்பாத்தி அமைத்து, நாற்றாங்கால் செய்து பின் விதைப்பின் நல்ல நாற்றுக்களைப் பெறமுடியும்.
  • நடவுக்கு முன்பு, நாற்றுக்களின் நுனியை கிள்ளி நட்டால், பூச்சியின் முட்டை, வெள்ளை ஈக்களை அப்புறப்படுத்துவதோடு, நுனி கருகல் நோயையும் கட்டுப்படுத்தலாம்.
  • இலைகளின் உட்பக்கத்தில் உட்காரும் பச்சை தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, செங்கல் சூளை சாம்பலை தூவவேண்டும்.
  • இலைச்சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த, தட்டைப்பயிரை ஊடுப்பயிராக கம்புடன் செய்யவேண்டும்.
சோளம்
  • சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து, கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
  • மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு திறனைப் பெற சோள விதைகளை சாதாரண உப்பு கரைசலில் ஊற வைத்து, விதைக்கவேண்டும்.
  • சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம்.
  • விரைவாக முளைக்கவும் தண்டு ஈ தாக்குதலை தடுக்க, போதிய அளவு சுடுநீரில் வைத்து, அதை திறந்த வெளியில் இரவு முழுவதும் ஆறும்படியாக வைத்திருக்கவேண்டும். அடுத்த நாள் விதைப்பிற்கு முன்பு, சோள விதைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்தால் நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம்.
  • இனப்பயிரின் ஊடே நாட்டுக் கலப்பையை ஓடவிட்டால், சராசரி செடி எண்ணிக்கை இருக்கும்படி செய்யலாம்.
  • வைகாசி - ஆனி (மே - ஜீன்) மாதத்தில் விதைத்தால், தண்டு ஈ மற்றும் துளைப்பான் தாக்குதலை தடுக்கலாம்.
  • சோளத்துடன், தட்டைப்பயிரை ஊடும்பயிர் செய்தால், தட்டைப்பயிரின் நெடி, தண்டு தாக்குதலை தடுக்கலாம்.
  • அவரையை ஊடுப்பயிர் செய்தாலும் தண்டு துளைப்பான் தாக்கம் குறையும்.
  • வேப்பம் புண்ணாக்கு கரைசலைச் சொட்டுச் சொட்டாக தண்டில் ஊற்றினால் குருத்து துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தாக்குதலிலுள்ள இலைகளின் மீது, சாம்பலைத் தூவினால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் சாம்பல் தூவுவதால் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • கொத்தமல்லியை சோளத்துடன் கலப்பு பயிராக பயிர் செய்தால் ‘ஸ்ரைகா’ எனப்படும் தொத்துக் களையை கட்டுப்படுத்த முடியும்.
  • கறுப்பு துணியை நீளமான பூச்சிகள் கட்டி, நடுவயலில் வைத்தால் காக்காவை விரட்டும்.
  • தானிய சேமிப்பு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, சோளத்துடன் சாம்பலை கலந்து வைக்கலாம்.
ராகி
  • அறுவடை சமயத்தில் மழைக்காலத்தில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமெனில் நீண்ட நாள் இரகங்களை மானாவாரியாக பயிரிடவேண்டும்.
  • 1:10 என்ற விகிதத்தில் கோமியம், தண்ணீர் கலந்து கரைசலில் ராகி விதையை ஊற வைத்தால், முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
துவரை
  • புகையிலை கழிவு கரைசல் சாற்றை தெளிப்பதால், சாறு உறிஞ்சும் பூச்சியையும் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • துவரை பயிருடன் செம்மண் கலவை கலந்து, காயவைத்து, சேமித்தால் சேமிப்பு கிடங்கு பூச்சி தாக்குதல் தடுக்கலாம்.
  • ஆமணக்கு விதையை வறுத்து, தூளாக்கி அதைத் துவரைப் பயிறுடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம்.
  • துவரைப் பயிருடன் ‘அக்கோரஸ் கலாமஸ்’ தாவர இலைத்தூளுடன் (50 கிலோ 1 கிலோ என்ற விகிதத்தில்) கலந்து சேமித்தால் ஒரு வருடம் வரை சேமிக்க முடியும்.
  • நன்கு காயவைத்த துவரைப் பயிரை கோணி சாக்குப்பையில் சேமிக்கும் முன்பாக காய்ந்த நாய் துளசி இலைகளை அடியில் இட்டு பின் சேமித்தால், காய் துளைப்பான் தாக்கத்தைத் தடுக்கலாம்.
  • துவரை சேமிக்கப்பட்ட கலன்களில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால், வண்டு தாக்குதலை தடுக்கலாம்.
உளுந்து
  • மரக்கட்டைக் கொண்டு, காய வைத்து உளுந்து பயிரின் மீது அழுத்தினால் பயிரானது இரண்டாக உடைந்தால் அதுவே போதிய காய்ச்சலுக்கு அறிகுறி.
  • உளுந்து பயிரை தனியாக பிரிக்க, காயவைத்து தளத்தின் மீது, மாடு கட்டி. கல் உருளையை இழுக்கவேண்டும்.
  • செப்டம்பர் மாதத்தில் பின் 15 நாட்களில் விதைத்தால், அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பஎண்ணெயை தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • உளுந்து பயிருடன் சாம்பல் கலந்து, மண்கலத்தில் சேமித்தாலும் அதிக நாள் சேமிக்கலாம்.
  • உளுந்து பயிருடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் அதிகரிக்கும்.
  • இரண்டாக உடைந்த உளுந்தை சேமித்தால், கூண்வண்டு தாக்குதிலிருந்து தப்பலாம்..
கொண்டைக்கடலை
  • அதிக பனி பெய்யும் மாதங்களில் (ஜனவரி), கொண்டைக்கடலை போட்டால், பயிர் வளர்ச்சி பாதித்து, குறைந்த மகசூல் கிடைக்கும்.
தட்டைப்பயிறு
  • மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, கடைத்தெடுத்த மோரைத் தெளிக்கலாம்.
  • நல்ல பாதுகாப்பாக சேமிக்க வேண்டுமெனில், மண் கலத்தில் 5ல் 4 பங்கு தட்டைப்பயிரை இட்டு அதன் மேல் மீதமுள்ள பகுதியில் சாம்பலைக் கொண்டு நிரப்பவேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு மேலாக சேமிக்க வேண்டுமெனில், தட்டைப்பயிற்றை செம்மண் கலவையில் கலந்த, காய வைத்து எடுத்து வைக்கவேண்டும்.
அவரை - மொச்சை
  • உரிக்காத காய்களை அப்படியே வைத்திருந்தால், நீண்ட நாட்கள் சேமிக்க முடியும்.
நிலக்கடலை
  • நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
  • உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
  • மணல் கலந்த மண்ணோ நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில், அங்கு குறைந்த அளவே பருப்புகளை கடலை உருவாகும்.
  • மணல் கலந்த மண்ணே  நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில்  அங்கு குறைந்த  அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
  • வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
  • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
  • சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
  • கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
  • 10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள்  20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
  • இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
எள்
  • எள் விதை விதைக்கும் போது மணலுடன் கலந்து விதைப்பதால். ஒரே சீராக விதைக்க முடியும். மற்ற பயிரைக்காட்டிலும் எள்ளுக்கு அதிக உரம் தேவைப்படும்.
  • எள் எண்ணெய் எடுக்கும்போது, பனை வெல்லத்தைச் சேர்ப்பதால் அதிக எண்ணெயை பிழிந்தெடுக்க முடியும்.
  • எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) மண் கலத்தில் சேமித்தால், ஒரு வருடத்திற்கு மேலாக கெடாமல் சேமிக்க முடியும்.
  • சிறுதுண்டு பனை வெல்லத்தை நல்லெண்ணெயில் இடுவதால், அதிக நாள் கெடாமல் வைக்கமுடியும்.
சூரியகாந்தி
  • அதிக மகசூல் பெற, இரண்டு செடி பூக்களை ஒன்றோடு ஒன்று உரச வேண்டும்.
  • விதைப்புக்கு முன்பு, சாணத்தை நிரத்தில் இட்டால், (head) பெருகி வரும்.
ஆமணக்கு
  • ஆமணக்கு வயலைச்சுற்றி 1 கிலோ வெள்ளைச் சோளத்தை இட்டால், அதை உண்ண வரும் பறவைகள் ஆமணக்கு புழுவை உண்ணும்.
  • 2 கிலோ வேப்பிலையை 2-3 லி வெள்ளாடு கோமியத்தில் ஊறவைத்து அதை நீர்க்கவேண்டும் 500 மிலி நீர்த்த கரைசலில் 15 லி நீர் கலந்து தெளித்தால் ஆமணக்கு புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • விதைப்பதற்கு முன்பு விதையை 20 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைத்தால் விதை விரைவாக முளைக்கும்.
  • வேப்பஎண்ணெய் 20 மிலியை தூளை கோணிப்பையில் கட்டி தண்ணீரில் 8 மணி நேரம் பையை வைத்திருந்து பின் அக்கரைசலுடன் சோப் கரைசலை கலந்து தெளித்தால் ஆமணக்குப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • 5 கி வேப்பங்கொட்டை தூளை கோணிப் பையில் கட்டி, தண்ணீரில் ஊறவைத்துப்பின் அக்கரைசலை தெளித்தால் சாறு உறிஞ்சி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஆமணக்கு விதையை ஒரு வருடம் வரை சேமித்து வைத்தாலும் அவை சாகாது.
பருத்தி
  • விதையின் மேல் உள்ளபஞ்சை நீக்குவதற்கு, ஈர மாட்டு சாணத்துடன் விதையை கலந்து, 30 நிமிடம் காய வைத்து பின் கல் தரை மீது மெதுவாக உரசினால் பஞ்சு நீங்கிவிடும் பின் தூய்மைப்படுத்த வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதையை செம்மண் பூச்சு பூசி, வெயிலில் உலர்த்தி உபயோகித்தால் விதை நன்கு முளைப்பதோடு, விதைப்பிற்கும் ஏதுவாகும்.
  • பருத்தி விதையை ஒரு கிலோவிற்கு 200மிலி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து, பசும்மாட்டு சாணத்தை தடவி பின் இரவு முழுவதும் காய வைத்து விதைத்தால், பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கடலைப் புண்ணாக்கை 3 முறை பயிர் காலத்தில் இடுவதால், பயிர் வளர்ச்சி துரிதப்படுத்துவதோடு, காய் பிடிப்பதும் அதிகரிக்கும்.
  • ஆமணக்குச் செடியை ஊடுபயிராகவோ, வரப்புப் பயிராகவோ பருத்தியுடன் நட்டால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும்.
  • மக்காச்சோளம், வெண்டையை ஊடுபயிராக நட்டால் காய்புழு தாக்குதலை குறைக்கலாம்.
  • மீன் கழிவை வெல்லத்துடன் 2:1 என்ற விகிதத்தில் வயலில் அங்கு இட்டால், கொக்கு மற்றும் புல்புல் வகைப் பறவைகளை அவை கவரும் இதன் மூலம் புகையிலை வெட்டுப்புழுவை உண்ணப்பட்டு தாக்குதல் குறையும்.
  • 5 கிலோ வேப்பங்கொட்டையைத் தூளாக்கி, 100 லிட்டர், தண்ணீரில் இட்டு ஒரு நாள் ஊறவிட்டு பின் வடிகட்டி நீர் சேர்த்து, சோப் கரைசல் கலந்து, பருத்திக்கு தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை 10 துண்டுகளாக வெட்டி, அதை மஞ்சள் தூள் ஊறவைத்துப் பின் காயவைக்கவும். பின் அதை மீண்டும் ஆமணக்கு எண்ணெய் மூழ்கவைத்து. வயலில் பல்வேறு இடங்களில் கட்டவேண்டும். அதன் கீழே சிம்னி விளக்கை வைத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
  • அரளி விதையை தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படும்.
  • 600 கிராம் புகையிலையை தண்ணீரில் 2 முதல் 3 நாட்கள் வரை ஊறவைத்து பின் வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சர்க்கரை கரைசலுடன் வேப்ப எண்ணெய் கலந்து அதை நீரில் கலக்கி பருத்தி செடி மீது தெளித்தால், மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சாம்பலை பருத்தி இலை மீது தூவினால், அசுவின், இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.
  • சோளம் அல்லது கம்பு பயிரை பருத்தி பயிரைச் சுற்றி சாகுபடி செய்தால் வெள்ளை ஈ மற்றும்  இலைப்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • வேப்பங்கொட்டையை வசம்புடன் சேர்த்து தூளாக்கி, இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, பின் வடிகட்டி, பயிருக்கு மறுநாள் தெளித்தால் எல்லாவித பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தி பஞ்சை காலை வேளையில் மட்டும் எடுத்தால் தூசிபடுவது தவிர்க்கலாம்.
  • பருத்தியில் பூக்களும், இளங்காய்களும் விழுகாமல் இருக்க 50 மிலி ஆமணக்கு எண்ணெய்யை ஒவ்வொரு செடிக்கும் பயன்படுத்துவதால், செடி அருகே வெப்பம் குறைந்து, உதிர்வது  தடுக்கப்படும்.
  • ‘மகா’ என்று அழைக்கப்படும் பருவத்தில், பெய்யும் மழைநீரைச்சேமித்து, பயிருக்கு பின் பயன்படுத்தினால் அது வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
  • பருத்தியில் நல்ல அதிக உரம், மழைப் பெறப்பட்ட பகுதியில் உள்ள நன்கு உயரமாக வளரும். அதை அப்படியே விடாமல் அதன் நுனியைக் கிள்ளிவிட்டால் அதிகமாக காய் பிடிக்கும் (குஜராத்).
  • பருத்தி  செடியை பனியின் பாதிப்பிலிருந்து காக்க, பருத்தி சேடி வயலிற்கு அருகில் சாணி எரு, புல் கழிவு, வீணான எஞ்சின் ஆயிலைப் பயன்படுத்தி புகை மூட்டம் செய்தும், நீர்ப்பாய்ச்சியும் காக்லாம். சில விவசாயிகள் உயரமான செடியை பருத்தி வயலைச் சுற்றி அமைத்து, பனியிலிருந்து பருத்திச் செடியைக் காக்கலாம் (குஜராத்).
  • பருத்தியில், அசுவினி தாக்குதலைத் தடுக்க எருக்கலை இலையை நீர்ப்பாய்ச்சின வாய்க்காலில் இடவேண்டும்.
  • கடுகு செடியில் அசுவனி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பிலை மற்றும் அதன் சிறிய தண்டுகளை  எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலை ‘பாலிடால்’ தூளுடன் கலந்து தூவலாம்.
  • பயறு வகைப் பயிர்களில் அசுவினித் தாக்குதலைக் கட்டுப்படுத்த புகையிலை வடிநீருடன் சோப் கரைசல் சேர்த்து தெளிக்கலாம்.
  •  ‘குதிரை மசால்’ என்ற தீவனப்பயிரில் ஏற்படும் அசுவினியைக் கட்டுப்படுத்த, எருக்கலை கிளையை வெட்டியவுடன் உடனே நீர்ப்பாசன வாய்க்காலில் போட்டு வைக்கலாம்.
  • பருத்தியில் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு பாசன நீருடன் கலந்து விடலாம்.
  • குதிரை மசால் பயிரில் அசுவினியைக் கட்டுப்படுத்த, அடுப்பு சாம்பலையோ அல்லது சாணி எரு சாம்பலையோ தூவலாம்.
  • பருத்தியால் அசுவினி மற்றும் புள்ளிக்காய்ப்புழு கூட்டுத் தாக்குதலைக்கட்டுப்படுத்த காய்ந்த புகையிலை இலை 250 கிராம் கிரகாசி 300 கிராமுடன் சிட்ரிக் அமிலம் கலந்து பின் 12 லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் 250 மிலி மருந்து 15 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து ஒரு தெளிப்பானுக்கு என்னும் அளவில் 4 தெளிப்பான் அளவு அடித்தால் பூச்சிக் கட்டுப்படுத்துவதோடு, பருத்திச் செடியில் நன்கு வளரும் (குஜராத்).
  • பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த, 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு, ஒரு மரக்கட்டைக்கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும் (குஜராத்).
  • பருத்தி, கனகாம்பரம் மற்றும் இதர அழகு பூச்செடிகளுக்கு ‘அகேல்’ வெட்டிக்கோட்டை வேம்பு, புங்கம் புண்ணாக்கும், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக இடித்து, அதைக் கோமியத்தில் ஊறவைத்து, பின் வடிகட்டி அத்துடன் 1:8 பங்கு நீர் சேர்த்து தெளித்தால், பூச்சி நோய்கள் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
பருத்தியைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
  • கைவினை முறை சாணி கொண்டு பூஞ்ச நீக்கம் செய்து, பூச்சியினால் சேதாரம் அடைந்த விதைகளை நீக்குதல், செடியில் புழுக்களை கையில் சேகரித்தல் அழித்தல், சேதாரம் அடைந்த பயிர் பாகத்தை நீக்குதல்.
  • பயிர்சுழற்சி முறை வயலில் களைகளை நீக்கி எப்போது சுத்தாக வைத்தல், ஊடுபயிர்  / கலப்பு பயிராக சோளம், மக்காச்சோளம், பச்சைப்பயிறு, உளுந்து போன்றவற்றை வளர்த்தல். முக்கிய பூச்சிகளுக்கு எதிரியாக உள்ள பூச்சிகளை பாதுகாத்தல்.
  • தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பிலைசாறு, வேப்பங்கொட்டை சாறு தெளித்தல்.
  • செருப்பு தைப்பவர்கள். தோல் ஊற வைத்திருக்கும் சாம்பல் நீரை சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளித்தல் அல்லது நன்கு புளித்த மோரையோ அல்லது நொதித்த கோமியத்துடன் வேப்பங்கொட்டை சாறு கலந்தோ அல்லது மண்ணென்ணெயை தெளித்தால் பூச்சிகளின் கூட்டு சேதாரத்தைக் கட்டுப்படுத்தலாம் (மத்தியப்பிரதேசம்).
  • பருத்தியில் ஏற்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகள் அல்லாத பிற முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை 25 சதவீதம் குறைப்பதோடு அதிக லாபத்தையும் ஈட்ட, கோடையில் ஆழ் உழவு செய்தல்  ஒளி பொறி வைத்தல், நுனிக் கிள்ளுகதால் புள்ளி காய்ப்புழுவின் முட்டை, புழுக்களை அகற்றுதல். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புள்ள இரகங்களை தேர்வு செய்து நடுதல், 5 சதவீதம் வேப்பங்கொட்டை பருப்பு சாறு அடித்தல், புகையிலை சாறு தெளித்தல், மிளகாய் - பூண்டு கரைசல் தெளித்தல். சாணி மற்றும் கேமியம் கரைசல் தெளித்தல், பறவைகள் பூச்சி புழுக்களை பிடிக்க வகைச்செய்தல், பூச்சித் தாக்கிய காய்களை சேகரித்து ஆழித்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
  • பருத்தி வெள்ளை ஈயைக்கட்டுப்படுத்த பேப்பர் கழிவுகளை ஆமணக்கு எண்ணெய் அ்லது ‘கிரீஸ்’ பெடரோல் கழிவு எண்ணெயில் தோய்த்து, வயலில் இடவேண்டும். பின் தெளிப்பான், கொண்டு செடி மீது காற்றை தெளித்தால், செடியின்  சாற்றைப் பூச்சியான வெள்ளை ஈ, செடியிலிருந்து விடுபட்டு, எண்ணெய் பேப்பர் கழிவின் மேல் ஒட்டிவிடும்.  இவ்வாறு செய்தால்  90 சதவீதம் வெள்ளை ஈயை வெற்றிகரமாக குறைக்கலாம் (பாண்டிச்சேரி).
  • பருத்தியில்,  தாய் பூச்சிகளைக் கவர்ந்து, அழிக்க, 500 கிராம், சர்க்கரையை சமையல் எண்ணெய் கலந்து நொதிக்க வைத்து, அந்தக் கலனில்  சமையல் எண்ணெய் சிலதுளி சேர்த்து, வயல்களில் பருத்தி வரிசைக்கு ஊடே வைத்தால், அக்கரைசலில் வாடாமல் பூச்சி கவரப்பட்டு அதில் விழுந்து அழிந்துவிடும்.
  • பருத்தியைப் பாதிக்கும் புழுக்களை எருக்கலை பாலைத் தண்ணீருடன் 1:15 விகிதத்தில் கலந்து தெளித்தால், 3 நாட்களில் திறம்பட கட்டுப்படுத்தும்  இத்தெளிப்புக்கு பின்பு வரும்  தளிர்களில் புழுத்தொல்லை இராது (குஜராத்).
  • பருத்தியில் பச்சைக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, 250-300 கிராம் ஊமத்தை இலையுடன் கூடிய தண்டினை 1 லிட்டர் சூடான நீரில் போட்டு வைத்து, பின் அந்தத்தண்ணீர் குளிர்ந்தவுடன்ள நீரை எடுத்து அதில் 15 லிட்ட் தண்ணீர் சேர்த்து தெளித்தால் 6-7 மணி நேரத்திற்கு பூச்சித் தாக்குதல் குறையும். இவ்வாறு ஒரு மாதம் ஆனசெடிக்கு செய்தால் நல்ல கட்டுப்பாட்டைத் தரும் (குஜராத்).
  • பருத்தியில் சிவப்புப் புள்ளி நோயைக் கட்டுப்படத்த, அது ள தோன்றும் போதோ அல்லது முன் தடுப்பாகவோ நீர்த்த மோரை, பயிர் மீது தெளித்தால், போதும் (குஜராத்).
  • பருத்தியில் வெள்ளை ஈக்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 30 கிராம் / 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துக் கலவைக்கு என்ற அளவில் புகையிலைத் தூளைக் கலந்து அடிக்கலாம் (குஜராத்).
  • பருத்தி வயலைச்சுற்றி 2-3 வரிசை வெண்டைப் பயிரை நட்டால், பருத்தி தாக்கும் புள்ளிக் காய்ப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி முதலில் வெண்டையைத் தாக்கும் எனவே அந்த வெண்டையைப் பிடுங்கி  அழிப்பதால் பருத்தியை பூச்சித் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
  • பருத்தி காய்ப்புழு, கொண்டைக்கடலை மற்றும் துவரை காய்த் துளைப்பானைக் கட்டுபடுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிக்கலாம்.
  • பருத்தியை புழுக்களை அழிக்க, மண்ணெண்ணெயை அரவில் பருத்தி  வயலில் அடிப்பதால் , இரவில் ளஉண்ணும் புழுக்களை அழிக்க முடியும். மேலும் அவை பகலில் நிலத்தில் அடிக்கு  போகிறது, மண்ணெண்ணெய் கலனை நீர்ப்பாசனம் செய்யும்போது, அந்த வாய்க்காலின மீது இருக்கும்படி அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தெளிப்பதைக் காட்டிலும் ள அதிகமாக புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் நன்மை செய்யும் சில நிலத்தில்  வாழும் ள புழுக்களையும் அழித்துவிடுகிறது (குஜராத்).
  • அரளி விதையை / காய்களை இடித்து, இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தண்ணீர் சேர்த்து பருத்தி வயலில் தெளிப்பதால் 70 சதவீதம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தியில், 1 கிலோ சர்க்கரையை 12 லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி (கனமாக பருத்தி துணிக்கொண்டு), தெளித்தால், சிறிய பூச்சியான வெள்ளை ஈ, அதன் முட்டைமீது ஒட்டிக்கொண்டு விடுவதால், அவை கொல்லப்படுகின்றது. ஏக்கருக்கு 56 லிட்டர் கரைசல் தேவைப்படுகிறது. அம்முறை ஒரே ஒரு மறை மட்டுமே நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செய்யப்படுகிறது. ஏனெனில் அக்கரைசல்  ‘மதியா’  நோய் ஏற்பட காரணமாகிறது.
  • புகையிலை இலை / விதை, வேப்பங்கொட்டை / வேப்பிலையை தண்ணீர் ள போட்டு கொதிக்க வைத்து, தெளித்தால் பருத்தியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • 20-25 கிலோ சாதாரண உப்பை, இயற்கை உரம் 10 வண்டியோடு கலந்து, பருத்தி சால்களில் இட்டால், செடிகளுக்கு பூச்சி எதிர்ப்புச் சக்தி உருவாக்கி, மகசூல் 3ல் ஒரு பங்கு அதிகரிக்கும் (குஜராத்).
  • விவசாயிகள், பசுமாட்டு சாணத்தை வீட்டில்  வளர்க்கும் மாடுகளிலிருந்து பெற்று உரமாக பயன்படுத்தகிறார்கள். அவ்வாற மாட்டு கொட்டிலுக்கு உள்ளேயும், வெளியேயும் சேகரிக்கும் சாணத்தை தாழ்ந்த பகுதிகளில் வீட்டிற்கு வெளியே மொத்தமாகவோ , உயர்ந்த பகுதி ஏனில். நேரடியாக வயலிலும்  குவியலாக சேமிக்கலாம். அதை மணல் சாந்துகொண்டு மூடிவைத்தால் காற்றினால் அவை பறக்காமல் இருக்கும். பின்பு வயலுக்கு மூங்கில் கூடைகளில் அள்ளி மனிதர்களோ, குதிரைகளைக் கொண்டு வயலில் சேர்க்கும். அப்படிப்போக ஏக்கருக்கு  125-250 குவிண்டால் எரு தேவைப்படும். விவசாயிகள் ஆட்டு எருவை விட  மாட்டு எருவையே அதிகம்  இடுகிறார்கள். ஏனென்றால் ஆட்டு எரு, அதிக அளவு தழை (3 %),மணி (1 %), சாம்பல் (2 %), சத்துக்களை கொண்டதால் அதிகம் இட்டால் பயிர்களை எரித்துவிடும் / காயவைத்து விடும் (இமாச்சலபிரதேசம்).
  • பருத்தி விதைக்கு உள்ள பஞ்சை நீக்க விதைப்புக்கு ஒரு நாள் முன்பு, தகுந்த அளவு எடுத்து, கரைத்து / சேர்த்து, அதை விதை மீது தெளிக்கவேண்டும். பின்  அவ்விதைகளை தேய்த்தால் நன்றாக கலவை ஒட்டிக் கொள்ளும். பின அதை நிழலில் உலரவைத்து, முளைக்க பயன்படுத்தினால் சுலபமாக விதைக்க முடிவதோடு அல்லாமல் நல்ல முளைப்பு திறனுடனும் 10 சதவீதம் கூடதல் மகசூலையும் தரும் (மகாராஷ்டிரா).
  • காரிப் பருவத்தில் மகாராஷ்டிராவில் பருத்தியும், கம்பும் பயிரிட்டு வந்தனர். பின் பருத்தி பயிரிடும் பரப்பு அதிகமானதால், உணவுக்கும் தீவனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் காரீப் பருத்திக்கு ள பின் ஜனவரி மாதத்தில் ள அதிக அளவு (இரண்டு மடங்கு) கம்பு விதையை பயன்படுத்தி, சாகுபடி செய்ததில் அதிக மகசூலும், பூச்சி நோய்த் தாக்காத தரம் வாய்ந்த கம்பும் தீவன தட்டையும் கிடைத்தது.
  • பருத்தியை, மழை வரும் காலத்திற்கு ( 8-10 நாட்களுக்கு) முன்பே, விதைத்தால், போதியளவு  மழைக் கிடைத்தவுடன் முளைக்கத் தொடங்கி 10 சதவீதம் மகசூலை தரும், போதிய அளவு மழைக் கிடைக்காவிடில் திரும்ப விதைக்க வேண்டி வரும். இதைப்போல், நெல், துவரை, வறட்டு விதைப்பு செய்யலாம்  (மகாராஷ்டிரா).
  • விவசாயிகள் போதியளவு நீர்ப்பாசன வசதி இருந்தால், 3-4 ளபருத்தி பஞ்சு எடுத்தபின், மறுதாம்பு பயிராக விட்டு, உரமிட்டு, 2-3 நீர்க்கட்டியினால், எக்டருக்கு 10-15 குவிண்டால், அதிகமான விளைச்சல் கிடைக்கும் (மகாராஷ்டிரா).
  • ஆழமான கருமண்ணில் புன்செய்ப் பயிராக மழைக்காலத்தில் பயிரிடும் பருத்தி நவம்பர் மாதங்கள் வரை மகசூல் தருகிறது. ஆனால் தற்சமயம் மழையானது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பெய்வதால், புதிய தளிர்கள், கிளைகள், பூக்கள், காய்கள் விடுகிறது, எனவே களையெடுப்பு மட்டும் செய்தால், பூக்கும் பூக்கள் 2 மாதங்களில் காயாக வெடித்து மட்டும் செய்தால், பூக்கும் ஒரு எக்டருக்கு  கிடைக்க வாய்ப்புண்டு.
  • பருத்தி பயிருடன் சோளமும் கலந்து கலப்புப் பயிராக விதைத்தால், சோளப் பயிரை உண்ண வரும் பறவைகள், பருத்தி செடியில் உட்காரும் பூச்சிகளைச் சேர்த்து  தின்றுவிடும் (மகாராஷ்டிரா).
  •  பிளாஸ்டிக் கலனில் மாவை 200 லிட்டரில் கலந்து, அப்படியே உரக்குவியலுக்கு அடியில் 8 நாட்கள் வைத்திருந்தால் நன்கு புளித்துவிடும். அதை பயிருக்கு பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  •  பூண்டினை இடித்து தண்ணீரில் போட்டு, அதை வடிகட்டி அத்துடன் மானோகுரோட்டாபாஸ் கலந்து தெளித்தால் பருத்தி காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
  • பருத்தி செடிக்கு சிறிதளவு சர்க்கரைப் போட்டால், எறும்புகள் அதிகமாக வரும். பருத்தியைச் சேதப்படுத்தும்  அசுவினி, காய்ப்புழுக்களை அதிக அளவு செலவில்லாமல் எந்த தொழில்நுட்ப வேலையும் இல்லாமல் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  •  புகையிலையை இரவு முழுவதும்  நீரில் ஊறவைத்து வடிகட்டி தெளித்தால் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  • 500 கிராம் பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் அரைத்து சாறு எடுத்து அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, 200 கிராம் சோப்பு  சேர்ந்து, தெளித்தால் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளுடன் மற்ற  பூச்சிகளும் கட்டுப்படுத்தலாம்.
  •  பருத்தி, மிளகாய், வெங்காயம் இவற்றில் காய்ப்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 5 கிலோ வேப்பங்கொட்டையை வெயிலில்  காய வைத்து, தூளாக்கி 10 லிட்டர் தண்ணீரில்  இரவு முழுவதும் ஊறவைத்து 90 லிட்டர் தண்ணீரும் 500 கிராம் சோப்பை ஒட்டுத் திரவமாக சேர்த்து தெளிக்கலாம்.
  • பருத்தி மற்றும் காய்கறிப் பயிர்களில் அசுவின், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, சாம்பலை தூவலாம். பின் பசுமாட்டு கோமியம் மண்ணெண்ணெயை, சோப்பு தூளாக்கி கலந்து தெளித்து மேற்கண்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
  •  உணவுத் தானியங்களைச் சேமிக்க, மூங்கில், பருத்தி குச்சியிலான கலன்களைத் தயாரித்து, அதில் இட்டு பின் காற்று புகாதவாறு மண், சரணி சாந்தைப் பூசி சேமித்தால், அதிக நாள் கெடாமல் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கும். கலனில் வேப்பிலையைத் தானியத்துடன் கலந்தும் வைக்கலாம் (மகாராஷ்டிரா).
  • விதைகள் மீது சாணி, மண் இவற்றை சம அளவுக் கொண்ட சாந்தைத் தெளித்து பின் விதைகள் மீது சாந்து நன்றாக படும்படி தரையில் தேய்த்து, விதைகளை காய வைத்து விதைக்கப் பயன்படுத்தலாம். சுலபமாக ள விதைக்க மூடியும், அத்துடன் விதைகள் நன்கு முளைத்து அதிக மகசூல் தரும் (மகாராஷ்டிரா).
  •  பல்வேறுபட்ட பயிர் இனங்களைக் கலந்து பழங்காலத்திலிருந்து விதைத்து வருகிறார்கள். அதனால் பூச்சி நோய்களுக்கு  குறைகிறது. மக்காச்சோளம், செண்டுமல்லி - நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. தக்காளி, சணக்கு - தக்காளி மகசூல் கூடுகிறது. நெல், பூண்டு, மக்காச்சோளம், தக்காளி - நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. நெல், புகையிலை, நெல் - வேர் முடிச்சு நூற்புழு கட்டுப்படும். சூரியகாந்தி + பருத்தி - இலை தத்துப்பூச்சி சேதாரம் குறையும். சோளம் + தட்டைப்பயிறு (1:1) -  சோளம் தண்டு துளைப்பான் கோதுமை + கொண்டைக்கடலை (1:1) - காய்  துளைப்பான் தாக்குதல் குறையும் ஆமணக்கு + தட்டைப்பயிறு -  அசுவினி தாக்குதல் குறையும்.
  • பருத்தி விதையை ராகி, கம்பு பயிருக்குமுன் உழவு செய்யாமல், நேரடியாக  தண்ணீர் விட்டவுடன் கையினாலே விதைக்கலாம். (கோயமுத்தூர்).
  • பச்சை புகையிலை 1-5 - 2.0 கிலோ எடுத்து 5-6 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, நல்ல அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அதில் 4-5 லிட்டர் வடிகட்டிய நீருடன் 70-80 லிட்டர் நீர் சேர்த்து சோயாபீன்ஸ் ள (ப்சை காய் புழு தாக்கப்பட்ட பயிரில்) தெளித்தால் கட்டுப்படுத்தலாம். இதுபோல் 5-6 நாட்கள் இடைவெளி விட்டு செய்யவேண்டும்.
  • அசுவினி தாக்கப்பட்ட பயிர்களில் வேப்பங்கொட்டை சாறு அல்லது பூச்சிக்  கொல்லும் இலைகளின்சாற்றை தெளிக்கலாம் (உத்திராஞ்சல்).
  • பருத்தியுடன் சுற்றி ஏக்கருக்கு 100 ஆமணக்கு விதையை ஊன்றி வளர்த்தால், படைப்புழுவானது அகன்ற இலையான ஆமணக்கு இலையில் முட்டையிட்டும் பின் அந்தப் புழுக்கள், ஆமணக்கு இலையை சேதப்படுத்தும் / உண்ணும் ள அத்தகைய இலைகளை பிடுங்கி அழிப்பதில்  பருத்தி செடி பாதுகாக்கப்படுகிறது (ஆந்திரப்பிரதேசம்).
  • பருத்தியில் பூச்சித் தாக்குதலுக்கு, 500 கிராம் வேப்பங்கொட்டை, 100 கிராம் புகையீலை, 100 கிராம், 250 கிராம் பெருங்காயம்  50 கிராம்  விதைகளை  இடித்து சாறு எடுத்து ஒரு ஏக்கருக்கு தெளித்தால் பருத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்ததலாம் (தமிழ்நாடு).
  • கோமியம் மற்றும் பசுமாட்டு சாணம் இவற்றை தண்ணீர் கரைத்து, சில நாட்கள் வைத்திருந்து வடிகட்டி, தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சகளும், இலைவெட்டி  பூச்சியும் கட்டுப்பட்டு, பயிர் நன்கு  வளரும் (சாணி - சத்துக்கள் கொடுக்கவும்) கோமியம் - பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது (கர்நாடகா).
  • பருத்தி, மிளகாய், எலுமிச்சையில் ஏற்படும் பூஞ்சாணங்களைக் கட்டுப்படுத்த, பஞ்சகாவ்யாவை தயாரித்து (5:2:1/2:2: 1/2 - பால், தயிர், நெய், கோமியம், சாணி என்ற விகிதத்தில் 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 7 நாட்கள் வைத்திருந்து தெளிக்கப்பயன்படுத்துதல்) தெளிக்கலாம். இதனால் மேலும் இலை உதிர்வதும் தடுக்கப்படுகிறது. பூக்கள் நன்றாக காய் பிடிக்க செய்கிறது (தமிழ்நாடு).
  •  பெரிய கும்முட்டிகாய், பிரண்டை கொடி, மஞ்சள் அரளி விதை, வேப்பங்கொட்டை இவற்றை அரைத்து, விழுது தயாரித்து அப்படியே 10 நாட்கள் வைத்திருக்கவேண்டும். அத்துடன் 10 நாள் ஆன தக்கைப் பூண்டு அதைதத விழுதையும் சேர்த்து, மெல்லிய துணியினால் வடிகட்டி, அதில் தண்ணீர் சேர்த்து  தெளித்தால் பருத்தியை தாக்கும் வெட்டுப்புழுவை திறம்பட எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்தலாம் (தமிழ்நாடு).
கரும்பு
  • அதிக மகசூல் கரும்பில் பெற, நடவுக்கு முன் குளத்து மண்ணை இடுதல்.
  • ஆட்டு கிடை வைப்பது அல்லது ஆட்டு புழுக்கயையை உரமாக இடுவதால் சர்க்கரை அளவு கூடும்.
  • கரும்பு சோகை உரிப்பதால் செதில் பூச்சி மற்றும் மாவு பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • அடிக்கடி நீர் கட்டுவதால், கரையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • செங்கல் சூளைச் சாம்பலை 2-3 மாதம் ஆன கரும்புப் பயிரில் இடுவதால், இளந்தண்டு துளைப்பான் தாக்குதல் கட்டுப்படும்.
  • வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கை தூளாக்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வடிகட்டி, பயிர் மீது தெளித்தால் இளந் தண்டு துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • 200 கிலோ / எக்டருக்கு காய்ந்த வேப்பம் பழத்தை தூளாக்கி, இட்டால் தண்டு துளைப்பான் மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது, கரும்பு சாற்றை வாயகன்ற இரும்பு கொப்பரையில் ஊற்றி 1 மணி நேரம் கொதிக்க வைக்கவேண்டும். பின் சமையல் சோடா உப்பை இட்டு தூசிகளை நீக்கி, பின் கலர் பவுடரை போட்டு திரும்ப 1 மணி நேரம் தொடர்ச்சியாக கொதிக்க வைக்கவேண்டும். அப்போது அது மாவு பதம் வந்தவுடன் அச்சிலோ அல்லது கையினாலோ வெல்லம் பிடித்து தயாரிக்கலாம்.
வாழை
  • பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
  • விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
  • இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
  • 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
  • அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
  • கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
  • கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
  • வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
  • செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
  •  சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
  • வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்.
மா
  • வேப்ப எண்ணெயைத் தத்துப்பூச்சி கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • மாந்தோப்பிற்குள் சூரியகாந்தியை பயிர் செய்தால், தேனீக்களை கவர்ந்து, அதிக மகரந்தசேர்க்கை நடந்து, மா மகசூல் அதிகரிக்கும்.
  • ஆவாரம் குலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மா காய்களை இட்டுபின் ஆவாரம் குலையைப் பரப்பினால், விரைவாக மா பழம் பழுக்கும்.
திராட்சை
  • பழுப்பு நிறமுள்ள 1/2 நிறமுள்ள நல்ல மொட்டு உள்ள தண்டுப் பகுதியை நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.
  • கடலை புண்ணாக்கை ஊறவைத்து, கரைத்து, அக்கரைசலை 1 வாளி ஒரு குழிக்கு ஊற்றினால் நல்ல தரமான திராட்சையையும் அதிக மகசூலையும் பெறலாம்.
  • 10 அடி இடைவெளியில் நடவுக்கு 3 மாதத்திற்கு முன்பு குழித் தோண்டி, அதில் கொழிஞ்சி, அகேவ், எருக்களைக் போன்ற பசுந்தாள் இலைகளை இடு மண் கொண்டு மூடினால், அவை மட்கி விடும். பின் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  •  ஒவ்வொரு திராட்சைக் கொடியைச் சுற்றி மழைக்காலத்திற்கு முன்பு வட்ட வடிவ குழித்தோண்டி அதில் பசுந்தாள் உரச்செடி மற்றும் தொழு உரத்தை 3:1 விகிதத்தில் இட்டு, மண் கொண்டு மூடினால், நல்ல மகசூல் பெறலாம்.
கொய்யா
  • அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்களை இலையை 3 கி வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
எலுமிச்சை
  • இறந்த நாயை, வேர்ப்பகுதியில் புதைத்தால் எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஒரு வாளி / மரம் என்ற அளவில் பன்றி எருவை இட்டால், பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
  • வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • 500 கிராம் காய்ந்த வேப்பம்பழத் தூளை ஒரு மரத்திற்கு இட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
சாத்துக்குடி
  • தண்டு துளைப்பான் தாக்கிய மரத்திலுள்ள ஓட்டைகளை கழுவி சுத்தம் செய்து, சுண்ணாம்பு கரைசலில் தோய்த்த பஞ்சை அதில் அடைத்து விடலாம் அல்லது லெமன் கிராஸ் புல்லை ஓட்டையை சுற்றி இடவேண்டும்.
  • சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் மரத்தைச் சுற்றி 2 அடி அகலத்திற்கு பச்சை சோற்று கற்றாழை செடித் துண்டுகளை இடலாம்.
  • எறும்புத் தொல்லையை தடுக்க, விதையுடன் சாம்பல் கலந்து வைக்கலாம்.
மலை வாழைப்பழம்
  • கற்பூரவள்ளி பழம் சின்னதாக, சாம்பல் பூசியபடி இருந்தால் அதிக நீர்ச்சத்துடன் சுவை குறைவாக இருப்பதோடு குறைந்த விலைக்கே போகும்.
  • விவசாயிகள் பயிரிடும் செவ்வாழையை மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.
  • மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம்.
  • புதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும்.
  • ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால் வாழையில் கரும்புள்ளி நோய் நிழலினால் ஏற்படும். மேலும் காற்றினால் மரங்கள் சாயவும் வாய்ப்பு உண்டு.
  • ஒவ்வொரு கிலோ வேப்பம் புண்ணாக்குத் தூள் மற்றும் புகையிலைக் கழிவை தனித்தனியாக 5 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி பின் அவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வாழைக்கட்டையை நனைத்து நட்டால், நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம்.
  • வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட வாழையை வெட்டி எரித்துவிடவேண்டும். மேலும் அக்குழியால் 1-2 கிலோ சுண்ணாம்பு தூளை இடவேண்டும்.
  • விரைவாக விழாக் காலங்களில் பழுக்கவைக்க, வாழைக் குலைகளை பெரிய மண்பாண்டங்களில் வைத்து, அதில் நல்ல வாசனையுள்ள ஊதுப்பத்தியைக் கொளுத்தி வைத்து, அதன் வாய்ப்பகுதியை துணியினால் கட்டி வைக்கவேண்டும்.
பிளம்ஸ்
  • பிளம்ஸ் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைக்கும்போது, அதில் ‘பேன்’ வகை இலைகளை (இடைவேளை) போட்டால், பழம் பழுப்பது தாமதப்படும். ஏனெனில் மெதுவாகவே காயும்.
பலாப்பழம்
  • பலாப்பழத்தை பழுக்க வைக்க, காம்புப் பகுதியில் சிறிது துளைப்போட்டு, சின்ன குச்சியை சொருகி 3-5 நாட்கள் அப்படியே வைத்தால் பழுத்துவிடும்.
தக்காளி
  • சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
  • 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
  • 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
  • பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
  • பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
  • காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
  • அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
  • சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.
கத்தரி
  • கத்தரிப்பழ அழுகலைத் தடுக்க, 8 சோற்றுக் கற்றாழை இலையை நசுக்கி 1 லிட்டர் தண்ணீரில் தெளிக்கவேண்டும்.
  • காய் துளைப்பானை கட்டுப்படுத்த, கனகாம்பரம் செடியை வரம்பு செடியாக பயிரிடவேண்டும்.
  • கோழி எருவை கத்தரி வயலில் இட்டால், அதிக மகசூல் கிடைக்கும்.
  • 40 கிலோ வேப்பங்கொட்டையை தூளாக்கி, நடவு செய்த 35 நாள் கழித்து இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • கத்தரி தோட்டத்தில் ஆமணக்கு செடியை வரப்பு பயிராக நட்டால் அதுவே பூச்சிகளைக் கவரும் செடியாக இருந்து, பூச்சித்தாக்குதலை தடுக்கும்.
  • கத்தரியுடன் வெங்காயத்தை ஊடுபயிராக போட்டால், அநேக பூச்சிகளை (காய் துளைப்பான் உட்பட) கட்டுப்படுத்தலாம்.
  • இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கு மற்றும் சோற்றுக் கற்றாழையை இரண்டையும் நன்கு இடித்துத் தூளாக்கி அதை 10 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து, தெளித்தால் போதும்.
  • சாம்பலையும், மஞ்சள் தூளையும் சம அளவில் கலந்து, அதை செடிகளின் மீது தூவினால் அசுவினி தொல்லைக் கட்டுப்படும்.
  • சுண்ணாம்புத் தூளைத் தூவினால், மாவுப்பூச்சி தாக்குதல் தடுக்கலாம்.
  • அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த, கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால், செஞ்சிலந்தி மற்றும் புள்ளி வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மிளகாய்
  • மிளகாய் விதையை சாண எரிவாயு கலன் கழிவில் ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தல் விதை வீரியமாக முளைத்து நன்கு வளர்வதோடு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குகிறது.
  • ஆட்டுக்கிடை அமர்த்தினால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • கடலை புண்ணாக்கு இடுவதால், பூ உதிர்வது தடுக்கப்படுவதோடு மகசூல் அதிகரிக்கும்.
  • அதிக பூக்கள் பெறவும், பூ உதிர்வதை குறைப்பதற்கு, பெருங்காயத்தை ஏக்கருக்கு 1 கிலோ வீதம் எடுத்து, துணியில் கட்டி வாய்க்காலில் வைக்கவேண்டும்.
  • ஆமணக்குப் பயிரை வரப்பு பயிராக பயிர்ச் செய்தால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும்.
  • 5 மிளகாய் வரிசைக்கு 2 வரிசை மக்காச்சோளம் அல்லது சோளம் நடவு செய்தால் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • முள் செடி இலைச்சாற்றை இரண்டு மாதம் ஆன செடியில் தெளித்தால் இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய் அழுகலை கட்டுப்படுத்தலாம்.
  • வேம்பு, அரளி, நொச்சி, துளசி மற்றும் எருக்களை இலைகளை இடித்து அதை வடிகட்டி அந்தச் சாற்றை தெளிப்பதால் இலைச்சுருள் நோய், வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்துவதோடு, நன்றாகசெடி வளரும்.
  • வில்வம் இலைச்சாற்றை தெளிப்பதால் அடி அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம்.
முருங்கை
  • முருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை கிள்ளிவிட்டால் அதிக கிளைகள் உண்டாகும்.
  • முருங்கை கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த மண்ணில் வேர் அருகில் விரல் வடிவ பெருங்காயத்தை வைத்தால் போதும்.
  • இலை கழிவு மற்றும் இதர கழிவுகளை மரத்தின் அடிப்பாகத்தில் போட்டு எரித்தால், கம்பளிப்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செடி முருங்கையில் 3 தடவை மறுதாம்பு பயிர் விடலாம்.
வெள்ளரி
  • 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை இரவு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை செடிக்கு 200 மிலி வீதம் ஊற்றினால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • அசுவினி மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த சாம்பலை தூவலாம்.
  • நன்கு முற்றிய பழுத்த பழங்களில் விதைகளை எடுத்து அதை தண்ணீரில் கழுவி, சாம்பல் கலந்து காயவைத்து சேமித்தால், ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.
புடலை
  • விதைகளை சாணிப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தால், விதைகள் விரைவாக முளைப்பதோடு வறட்சி காலத்தைத் தாங்கி வளரும்.
  • பூ உதிர்தலைத் தடுக்க 25 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் நீர் என்ற விகிதத்தில் கலந்து கட்டுப்படுத்தலாம்.
  • புடலை அறுவடை முடிந்தவுடன், மீதமுள்ள இலைத்தழைகளை மண்ணில் மடக்கி உழுதால் அது உரமாக மாறும்.
பீர்க்கை
  • பீர்க்கை காய்மீது உள்ள வரிகளை வைத்து அவை இனிப்பாக அல்லது கசப்பாக இருக்கும் என கண்டுபிடிக்கலாம். இரட்டைப்படையில் இருந்தால் இனிக்கும் அவை ஒற்றைப் படையில் இருந்தால் கசக்கும்.
பாகற்காய்
  • பாகல் விதையை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு பாலில் ஊறவைத்து விதைத்தால் விதை வேகமாக முளைத்து நன்றாக வளரும்.
காலிப்பிளவர்
  • வேப்ப எண்ணெயை நீரில் (30 மிலி / லிட்டர்) கலந்து, தெளித்தால் காலிப்பிளவரில் தோன்றும் ‘டைமண்ட்’ பூச்சியை (Diamond back meth) கட்டுப்படுத்தலாம்.
பீன்ஸ்
  • நாட்டு கலப்பைக்குப் பின்னால் விதை விதைப்பு, மானாவாரி பீன்ஸ் சாகுபடிக்குபின் செய்தல்.
  • பயிர் வளர்ச்சியின் போது பூச்சித்தாக்குதல் வராமல் இருக்கவேண்டும் என்றால் விதையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துப்பின் செம்மண் மற்றும சாம்பல் கலவைகளில் கலந்து, வெயிலில் காயவைத்து விதைக்கப் பயன்படுத்துதல்.
  • பூச்சித் தாக்கப்பட்ட பயிர்களின் புதிய அடுப்புச் சாம்பலைத் தெளித்தல்.
பூசணி
  • பூசணி விதைகளைக் காய்ந்த பூசணி காயையே சேமிப்பு கலமாக பயன்படுத்தலாம். ஆம், நன்கு  பழுத்த காய்ந்த பழத்திலுள்ள விதைகளை எடுத்து, அதை சாம்பலுடன் கலந்து பின் அந்தக் காயிலேயே வைத்துப்பின் அதன் சிறுதுளை மங்கும் காற்றோட்டத்திற்கு விட்டு ஈரமான செம்மண் வைத்து பூசி, சேமிப்பு சுலபமாக உபயோகிக்கலாம்.
சுரைக்காய்
  • நன்கு முறிந்த காய்ந்த காய்களை அப்படியே சூரியஒளியில் காய வைத்து பின் அப்படியே காய்ந்த பழத்தில் சேமிக்கலாம்.
  • விதைகளை தண்ணீரில் ஊறவைத்து பின் துணியில் கட்டி வைத்தால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
  • பக்க கிளைகளை கிள்ளி விடுவதால், அதிக சம்பு /கிளைவிட்டு நல்ல தரமான காய் கிடைக்கும்.
 முட்டைக்கோசு
  • அடிக்கடி நாற்றாங்காலிலும், வயலிலும் நன்றாக கோசுக்கொடி வரும்.
  • முட்டைக்கோசு நடவுச் செய்த வயலில், அடிக்கடி களைடயெடுப்பு செய்தால், முட்டைக்கோசு அறுவடைக்கு முன்பே வரும்.
  • கிலோ சுண்ணாம்பை 2-3 லிட்டர்  மோரில் கலந்து, ஒவ்வொரு வார இடைவெளியில் விளக்குமாறுக் கொண்டு தெளித்தல் முட்டைக்கோசு புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
முள்ளங்கி
  • உருளைக்கிழங்கு சாகுபடி செய்தபின் முள்ளங்கி நடவு செய்தால் செலவு குறையும்.
  • மானாவாரிப் பயிராக முள்ளங்கியை நடவுச் செய்தால், நிலத்தில் இருக்கும் ஈரத்தையே நன்கு எடுத்து பயிர் நன்கு வளரும்.
  • உருளைக்கிழங்கு சாகுபடிக்கு  பின் முள்ளங்கி நடவு செய்தால் எந்த உரமும் போடத் தேவையில்லை. நிலத்தில் உருளைக்கிழங்கு போட்ட உரமும் இதற்கு இருந்து உதவும்.
  • முள்ளங்கி அறுவடை செய்த பின் தண்ணீர் கழுவினால், நல்ல விலை கிடைக்கும்.
பீட்ரூட்
  • பீட்ரூட் கேரட் பயிருடன் ஊடுபயிராக செய்தால், சிறிதளவு பயிர் கவனப்பே போதும், ஏனெனில் கேரட் செய்யும் கவனிப்பே இதற்கு போதும்.
  • விதை உபயோகத்தில் நல்ல பெரிய காய்களைத் தேர்வு செய்யவேண்டும்.
  • நல்ல தரமான பீட்ரூட்டைப் பெற செய்யவேண்டும்.
கேரட்
  • கேரட் பயிரை உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை பயிர் மாற்றி பயிர் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஏனெனில் ஒரே பயிர் சாகுபடி செய்தால் விளைச்சல் குறையும்.
  • அருகிலுள்ள காடுகளை கிடைக்கும் சிகை மரத்தின் மெலிந்த கிளைகளை பாதுகாப்பு அரணாக அமைந்தால், மண்ணரிப்பு தடுக்கலாம்.
  • மண்ணரிப்பைக் கட்டுப்படுத்த கல்சுவர், சரிவுக்கு குறுக்காக அமைக்கவேண்டும்.
  • நன்கு கொத்தி, கட்டிகளை உடைத்தால் மேலே மண் கீழும், கீழ் மண் மேலும் வரும் வயலின் சேரட் நடவுக்கு பின்பு
  • சாம்பலையை கோமியத்துடன் கலந்து தெளிந்தால், இலைத்தத்துப்பூச்சியை கொல்லலாம்.
  • சில நேரம் செடியை பிடுங்கி, அது நன்கு முற்றி ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அறுவடையை ஆரம்பிக்கலாம்.
  • அறுவடை செய்தபின், தண்டு மற்றும் இலைகளை கால்நடை உணவாகவோ உரம் தயாரிக்க பயன்படுத்தி அடுத்த பயிருக்கு ள உரமாக இடலாம்.
உருளைக்கிழங்கு
  • உருளைக்கிழங்கு பயிருக்கு  பின்பு வேறு காய்கறிப்பயிர்களை நடவு செய்தால் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • உருளைக் கிழங்கை சாகுபடி செய்தால் மண் தரம் அதிகரிக்கும்.
  • உருளைக்கிழங்கு பயிரை செண்டுமல்லியுடன் கலந்து கலப்புப்பயிராக செய்தால் வேர் நூற்புழு கட்டுப்படும்.
  • பயிர் சுழற்சியாக உருளைக்கிழங்கை மாற்ற பயிருடன் செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்கம் குறையும்.
  • உருளைக்கிழங்கு பயிருடன் முட்டைக்கோசு / முள்ளங்கி / கொண்டைக்கடலை பயிருடன் பயிர் சுழற்சி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
  • உருளைக்கிழங்கு பயிரை மற்ற பயிருடன் பயிர் சுழற்சி செய்தால் நல்ல மகசூலும் வருமானமும் கிடைக்கும்.
  • நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில்  பயிர் சுழற்சி செய்தால் நல்ல மகசூலும்  வருமானமும் கிடைக்கும்.
  • உழவிற்கு முன்பு அதிக அளவு தொழுஉரம்  இட்டால் அதிக எண்ணிக்கையினால் கிழங்கைப் பெறலாம்.
  • மண்ணுக்கு இடும் இயற்கை பொருட்களுடன் (amendments) தொழுஉரம் இட்டால் முடிச்சு நூற்புழுவின் தாக்கம் குறையும்.
  • கைக்கொத்து வைத்து, நிலத்தைக் கொத்தினால், அடிமண்ணில் நன்கு சூரியஒளிபடும்.
  • தண்டுப் பகுதிகளில் மண் அணைப்பு செய்தால், பெரிய உருளைக்கிழங்கை பெறலாம்.
  • நடவு செய்த 90-100 நாட்களுக்கு பின்பு, உருளைக்கிழங்கின் இலைகள் மஞ்சள் / பிரவுன் நிறமாக மாறியபின் அறுவடை செய்யலாம்.
  • கிழங்குகளை அறுவடை செய்வதற்கு பின் தரைக்கு மேலுள்ள தண்டுப்பகுதியை வெட்டினால் கிழங்கு அறுவடை எளிதாக இருக்கும்.
  • ஐந்து பெரிய கிழங்குகளுக்குக் குறைவான கிழங்குகள் ஒரு செடியில் உருவாகி இருந்தால் அது குறைவான மகசூல் அந்தக் காலத்தில் கிடைத்தது எனலாம்.
  • 10 பெரிய கிழங்குகளுக்கு அதிகமாக ஒரு செடியில் கிடைத்தால் அது அதிக மகசூல் கிடைத்ததற்கு அறிகுறியாகும்.
  • உருளைக்கிழங்கின் கண்களை (சரிவுக்கு சமமாக) சரிவில் ள நடவுச் செய்தால், நீர் படிப்பை குறைத்து, நல்ல வடிகால் வசதியை மழைக்காலத்தில் கொடுக்கும்.
  • 8 அடிக்கு 4 அடி அகலத்தில் சிறிய குழிகளை கடைமடையில் ஏற்படுத்தினால் அதில் சேரும் வடிநீரானது பாசனத்திற்கு பயன்படும்.
மல்லிகை
  • நாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நாட்டு இரகம், பூ சிறியதாகவும், அதிக வாசனை உள்ளதாகவும் சிறிய காம்புள்ள மல்லிகைப்பூ வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும், தொழுஉரம் அல்லது ஆட்டை கிடை போடுவதால் மண்ணின் வளத்தை சேமிக்கலாம்.
  • அனைத்து விதமான பூச்சிகளை கட்டுப்படுத்த, மல்லிகைக்கு, 1 கிலோ அரளி பழத்தை ஒரு நாள் நீரில் ஊறவிட்டு பின் அதை கசக்கி, சாறு எடுத்து அதை தண்ணீருடன் 1க்கு 10 என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • 5 கிலோ ‘ஒடுவன்தலை’ இலை, கிளைகளை 2 லிட்டர் நீரில் கொதித்து வைத்து, அது ஒரு லிட்டர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து அதில் 50 மிலிக்கு 15 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மல்லிகைத்தோட்டத்திற்கு அடித்தால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
  •  நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு பவுடர் ஒவ்வொரு செடிக்கு இடவேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மல்லிகை செடியை கவாத்து செய்யும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினால், ஆடுகள் பழைய இலைகளை உண்டு விடும். இதனால் புதிய தளிர்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டாக்கும்.
ரோஜா
  • பூ மொட்டு உதிர்வதைத் தடுக்க, முட்டை ஓட்டை தூளாக்கி, செடிக்கு 100 கிராம் வீதம் இடவேண்டும்.
  • முட்டை ஓடு, கறிக்கடை கழிவுநீர், வெங்காயத் தோல் முதலியவற்றை ரோஜா செடிக்கு இட்டால் பூப் பூப்பதை விரைவுப்படுத்துவதோடு  அதிக பூ மகசூலும்  கிடைக்கும்.
  • அதிக நாட்கள் பூக்காத ரோஜா செடியைக்கூட, 15 நாட்கள் நொதிக்க வைத்த சாணிக் கரைசலை தெளிப்பதால் 10 நாட்களிலே பூக்க ஆரம்பிக்கும்.
  • செதில் பூச்சிலைக் கட்டுப்படுத்த, சாணிப்பாலில் தோய்த்த பழைய துணியை செதில் பூச்சி உள்ள இடங்களில் தேய்ப்பதாலும், காய்ந்த அதிகம் பாதித்த கிளைகளை அகற்றுவதாலும் பூச்சிகள் கட்டுப்படும்.
  • பூக்களின் பூ இதழ் உதிர்வதைத் தடுக்க, பூவின் நடுவில் ஒரு சொட்டுத் தேங்காய் எண்ணெய் வைப்பதால் ஒரு நாள் வரை பூ உதிராமல் இருக்கும்.
கனகாம்பரம்
  • கனகாம்பரத்தில் நூற்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த, காய்ந்த சிவப்பு அரளிப்பூவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நூற்புழு தாக்கம் கட்டுப்படும்.
செண்டுமல்லி
  • சித்திரை பட்டத்தில் செண்டுமல்லி சாகுபடி செய்தால் குறைந்த அடர் வளர்ச்சி கிடைப்பதால், அது சிறிய பூக்களே உருவாக்கும். ஆனாலும் அதிக மகசூல் கிடைப்பதோடு அதிக லாபமும் கிடைக்கும்.
  • கடலைப் புண்ணாக்கை தூளாக்கி இட்டால் அதிக மகசூல் கிடைப்பதோடு பெரிய பூ கிடைக்கும்.
  • நட்ட 2 மாதத்திற்கு பின்பு, நுனியைக் கிள்ளி விடுவதால் அதிக கிளை தோன்றும்.
  • பறித்த அன்று சந்தைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால், பூக்களை கோணி பையின் மேல்பரப்பி அதன் மீது நீர் தெளித்து வெள்ளை துணியை போர்த்தி வைத்தால், வாடாமல் இருக்கும்.
  • அதிக பூ மகசூல் பெற தொழுஉரத்தை ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இடவேண்டும்.
  • 5-6 மாதங்கள் ஆன செவ்வரளி செடியை 1-2 அடி உயரம் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால் 5-6 வருடங்கள் வரை புதிய கிளைகளும்  தோன்றி நல்ல மகசூல் கிடைக்கும். கவாத்து 4 வருட இடைவெளியில் இருமுறை செய்யலாம். அதன் செடியைப் பிடுங்கிவிட்டு, வேறு செடி நடவுச் செய்தல் நல்லது.
மிளகு
  • காட்டு மிளகு எனப்படும் இரகம், 2-3 வருடத்திற்கு ஒரு முறை மகசூலைத் தருவதோடு, அதிக காரத்தன்மையோடு இருக்கும். அது வனப்பகுதியில் மட்டுமே இந்த இரகம் இருக்கிறது.
  • ‘கரிமுண்டான்’ எனப்படும் நாட்டு இரகம், உயர்ந்த மலைப்பகுதிக்கு ஏற்றதும் குட்டையான பூ தண்டு கொண்டதும் ஆகும்.
  • மிளகு நன்கு காய்ந்துவிட்டதை அறிய, அதை பல்லில் கடித்தால் உலோக கடி ஓசை போல் உண்டாவதை கொண்டு அறியலாம்.
  • வெள்ளை மிளகு தயாரிக்க, மிளகு பழத்தை செடியிலேயே நன்கு பழுக்க வைத்து அதைப்பின் சேகரித்து, தொட்டியில் இட்டு, கால்களால் மிதித்தால் தோல் நீக்கிவிடும் பின் அதைக் கழுவினால் வெள்ளை மிளகாக இருக்கும். அது மருந்துக்கு பயன்படும்.
ஏலக்காய்
  • ‘வழுக்கை் இரக ஏலக்காய், அதிக மழை பெறும் இடங்களுக்கு ஏற்றது. அது நிமிராத சாயாத பூத்தண்டுடன் வரி இல்லா மொக்கை காய்களை கொடுக்கும்.
  • ஏலக்காய் விதைகளை அறுவடை செய்தவுடன் விதைத்தால் நல்ல முளைப்புத் திறன் கிடைக்கும்.
  • வேப்பம் புண்ணாக்கு மற்றும் புகையிலை கழிவு கலவையின் கரைசலை தெளிப்பதால் காய் துளைப்பான் மற்றும் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படும்.
  • அறுவடை செய்த ஏலக்காயை, சுத்திகரித்து அதாவது பச்சை கலர் மாறாமல் செய்து, பின் விற்றால் நல்ல விலைக்கு கிடைப்பதோடு தரமாகவும் இருக்கும்.
சுத்திகரித்தல் செய்வது என்பது புகைமூட்டி செய்வதே. ஒரு அறையில்  4 வரிசை என்ற  அளவில் 11 தட்டுக்களை  மணல் சலிக்கும் வலை மீது வைத்து செய்யவேண்டும். முதல் நாள் காலை 400C அளவு 1 மணி நேரம் வெப்பப்படுத்தி பின் 1 மணி நேரம் ஜன்னலைத் திறந்து வைக்கவேண்டும். இரண்டாம் முறையாக 600C  வெப்பநிலையில் 5 மணி நேரம் சூடுபடுத்தி 2-3 மணி நேரம் சன்னலைத் திறந்து வைக்கவேண்டும். பின் மூன்றாம் முறையாக இளஞ்சூடு  10 மணி நேரம் வைத்திருந்து இரண்டாம் நாள் மாலை வரை தட்டுக்களை அப்படியே வைத்திருக்கவேண்டும். மொத்தமாக 30-36 மணி நேரம் சுத்திகரிக்க ஆகும்.
பூண்டு
  • ‘சிங்கப்பூர் சிவப்பு’ எனப்படும் நாட்டு இரகம் ‘பெரும்பூண்டு’ என்று அழைக்கப்படுகிறது. அது 41/2 மாதம் வயதுடையது. அது சிவப்பு தோலுடன் கூடிய பெரிய பல் கொண்டதும் குறைந்த நீர்ச்சத்து உடையதும் அதிக நாள் இருப்பு வைக்கக்கூடிய இரகம்.
  • ‘மலைப்பூண்டு’ ஒரு நாட்டு இரகம். அது 4 மாதங்களில் வளரக்கூடிய பெரிய பல் கொண்டதும் அதிக காரத்தன்மை உடையதும் அதிக நீர்ச்சத்து கொண்டதும் ஆகும்.
  • ஆட்டுக்கிடை அமர்த்துவதால் அதிக மகசூல் தரும்.
  • வேர்ப்பூச்சியின் தாக்குதலை வேப்பம்புண்ணாக்கு 4 கிலோ ஒரு ஏக்கருக்கு  இடுவதால் குறைக்கலாம்.
  • சரியான நேரத்தில் அறுவடை செய்யவேண்டும். இல்லையெனில் பூண்டுபல் சேதாரம் எற்படும். எனவே இலைகள் இளம் பச்சையிலிருந்து மஞ்சளாகவும் மேலேயிருந்து காய ஆரம்பித்து, தழை தொங்கியவுடன் அறுவடை செய்யலாம்.
தென்னை
  • எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.
  • தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.
  • 5-6 இலைவிட்ட 6-8 மாதங்களான தென்னை நாற்றை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும்.
  • தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், புதிய வேர் விரைவாக விட ஏதுவாகும்.
  • அரை வட்டக் குழி எடுத்து மரத்தைச் சுற்றி, எருக்களை 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, 1 கிலோ பூதகள்ளி, 1 கிலோ மீன்கழிவு, 1 கிலோ, உப்பு 1 கிலோ இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • தேங்காய் மட்டையை, மரத்தைச் சுற்றில் மண்போர்வையாக இடுவதால் முண் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, களையை கட்டுப்படுத்தலாம்.
  • தென்னை தோட்டத்தில் தென்னைக்கு ஊடே உள்ள பகுதியை ஜீன் - ஜீலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதத்தில் உழவுசெய்தால் வேர் பகுதியில்  நல்ல காற்றோட்டம் கிடைப்பதோடு, களையைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்ப எண்ணெய் தெளிப்பதால் பூ உதிர்தலை குறைக்கலாம்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாதாரண உப்பை வளர் நுனிப்பகுதியில் மரத்திற்கு 2 கிலோ வீதம் மழைக்காலத்தில் இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாம்பலை இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்த, பூப்பதற்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி எடுத்து அதில் கொழிஞ்சி மற்றும் எருக்களையை இடலாம்.
  • பூச்சி மற்றும் எறும்பு தொல்லையை தடுக்க, நடவுக்கு முன்பு வேப்பம் புண்ணாக்கைக் குழிகளில் இடவேண்டும்.
  • தண்ணீர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த மண் பாண்டங்களை அங்காங்கு தென்னை தோப்பிற்குள் சிறிய குழிகளில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்குப் பின்பு, அதிலிருந்து கிளம்பும் வாடையினால் காண்டாமிருக வண்டு கவரப்பட்டு பானையில் விழுந்து இறந்து விடும்.
  • வேப்பம் புண்ணாக்குச் சாற்றை வளர் நுனியிலும், அதற்கடுத்த ஓலையிலும் கொட்டுவதால் காண்டமிருக  வண்டின் தாக்கதலைத் தடுக்கலாம்
  • தண்டு கூண் வண்டின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த துளை ஏற்பட்ட பகுதியில் சுத்தம் செய்து சாதாரண உப்பை நிரப்பி பின்பு மூடிவிடவேண்டும்.
  • தென்னை நாற்று நடும்போது 1-2 கிலோ உப்பை குழிகளில் கொட்டினால், கரையானைக் கட்டுப்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் காக்கலாம்.
  • தென்னை நடவு செய்யும்போது ஒரு ‘அகேல்’ இலைக் குழிகளில் நட்டால் ஈரப்பதம் காக்கப்படுவதோடு கரையான் தாக்குதலையும் தடுக்கலாம். தென்னைந்தோப்பில், நீரை அதிகம் தேக்கினால் கரையான் எல்லாம் நீரோடு அழிந்துவிடும்.
  • தென்னை மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 2-3 அடி வரை சுண்ணாம்பு பூசினால் கரையான் தாக்குதல் கட்டுப்படும்.
  • கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 500 கிராம் சாதாரண உப்பை 5 லி தண்ணீரில் கலந்து தண்டின் ஊற்றினால் போதும்.
  • கோழிகளை தென்னந்தோப்பில் வளர்ப்பதால், அவை கரையானை தின்றுவிடும்.
  • தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பசுந்தாள் உரச்செடியாக கொழிஞ்சி அல்லது தக்கைப்பூண்டு செடியை வளர்த்து, மடக்கி உழலாம் அல்லது வேப்பம் புண்ணாக்கை நன்கு மட்கிய தொழு உரம் இட்டபின் இட்டு விடலாம்.
  • தென்னை தண்டு செவ்வொழுகல் (stem bleeding) யைக் கட்டுப்படுத்த ஒழுகல் பகுதியில் வாயை சுரண்டி சுத்தம் செய்து அதன்பின் சுண்ணாம்பு கரைசலை ஊற்றவேண்டும்.
  • மரத்தின் மீது எலி மற்றும் அணில் ஏறுவதைத் தடுக்க மரத்தின் அடியிலிருந்து 2-3 அடி உயரத்தில் சீமைக் கருவேல் கிளையைவோ முள் கம்பிவேலி சுற்றி கட்டினால் போதும்.
  • சிறிது நாட்டுக் சக்கரையை தேங்காய் எண்ணெயில் இட்டால் தூசுக்கள் எல்லாம் தனியாகப் பிரிந்து, எண்ணெய் தெளிவாக இருக்கும்.
இஞ்சி
  • வரப்பு ஓரங்களில் உள்ள இஞ்சி கிழங்குகளை விதைக்கப் பயன்படுத்தல்.
  • விதைப்புக்கு முன்பு சுண்ணாம்பு தூளைப் போட்டால், பூச்சி தாக்காது.
  • பச்சை அல்லது காய்ந்த பசும் இலைகளை, இஞ்சி நடவு செய்ய வயலில் போட்டால், களை தொந்தரவு இல்லாதது மட்டுமல்லாமல் நிழலாக இருக்கும்.
பாக்கு
  • பெரிய விதைகளை 2:1 என்ற விகிதத்தில் மணல் மற்றும் மண் கலந்த சோக்கு ள பையில் வைத்து 2-3 வாரத்திற்கு தெளித்து வந்தால் 30 நாட்களில் முளைக்கும்.
  • அருகில் கிடைக்கும் மரக்கிளைகளையே, நிழல் வலையாக அமைத்தால் இளஞ்செடிகளை அதிக மழை, சூரிய ஒளி மற்றும் பணியிலிருந்து காக்கலாம்.
எலுமிச்சைப் புல் (Lemon Grass)
  • மண் அரிப்பை கட்டுப்படுத்த வரப்பு பயிராக செய்யலாம்.
  • அறுவடை செய்தவுடனே எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தவேண்டும்.
யூகலிப்டஸ் : தைலமரம்
  • விதை நாற்றாங்காலை இடும் சூரியஒளி, பனி, கனமழைகளிலிருந்து காக்க அருகில் கிடைக்கும் மரக்கிளைக்கு ளகொண்டு கூரைப் போடலாம்.
முள் முருங்கை
  • நடவு செய்த குச்சிகளின் மேல் மண் பூச்சு செய்தால், விரைவில் வேர் விட ஆரம்பிக்கும்.
புகையிலை
  • புகையிலை தோட்டத்தில் தோன்றும் ‘ஒரபாங்கி’ புல்லை கட்டுப்படுத்த, அது முளைக்கும் குருத்தின் மீது கடலை எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் ஒரு துளி வைத்தால் போதும்.
  • புகையிலை தேமல் நோயைத் தடுக்க, 5 லிட்டர் பாலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, நட்ட ஒரு மாதம் ஆன புகையிலை செடி மீது தெளிக்கவேண்டும்.
  • அகல இடைவெளியில் நடவு செய்தால், அதிக மகசூல் பெறலாம்.
  • அதிக மகசூல் பெற, ஆட்டுக்கிடை அமர்த்தவேண்டும்.
  • 8-10 இலைகள் விட்டவுடன், புகையிலையில் நுனிக் கிள்ளுதல் (இலையுடன் தோன்றும் பூவை) செய்யவேண்டும்.
  • புகையிலை வெட்டுப்புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாற்றை அடிக்கலாம்.
  • புகையிலை ‘ஒரபாங்க்கே’ களையை கட்டுப்படுத்த சோளம் அல்லது எள் செடியை கவர் பயிராக பயிரடலாம்.
  • புகையிலை தேமல் நோயைக் கட்டுப்படுத்த, 50 மிலி மோருக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம்.
காப்பி
  • அரை கிலோ சாணத்தை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, நாற்றாங்கால் மீது தெளித்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
  • காப்பியை வாழை - காப்பி, பலா - சாத்துக்குடி, காப்பி, சாத்துக்குடி - காப்பி - மிளகு  என்றதொரு அடுக்கு முறையில் பயிர் செய்யலாம்.
  • ஒவ்வொரு காப்பிச் செடியைச் சுற்றிலும் அரை வட்ட வடிவ குழி எடுத்தால், ஈரப்பதத்தை காக்கலாம்.
  • ஏப்ரல் - மே மாதங்களில், காப்பித் தண்டின் மீது தென்னை நார்க் கயிறுக் கொண்டு தேய்ப்பதால் தண்டு துளைப்பான் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • காப்பிக் கொட்டையை துளைப்பான் ஒரு காப்பித் தோட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு கோணி சாக்கு மூலமே பரவுகிறது. எனவே, கோணி சாக்கை வேப்பங்கொட்டை கரைசலில் மூழ்கவைத்து, நனைத்து நன்கு காய வைத்து பயன்படுத்தவேண்டும்.
  • வாடல் நோயை கட்டுப்படுத்த சுண்ணாம்புத்தூளை இடவேண்டும்.
  • நூற்புழு தாக்ககுதலுக்கு எதிர்ப்புள்ள இரகம் ‘ரோபஸ்டா’ இரகம்.
  • நோய் தாக்காத நல்ல வளர்ச்சி உள்ள காப்பிச் செடியிலிருந்து விதையைச் சேகரித்து, விதைக்க பயன்படுத்தலாம்.
  • நல்ல தரமான காப்பிக் கொட்டை, 3வது அல்லது 4வது அறுவடையின் போது கிடைப்பதே.
  • ஏக்கருக்கு 3 கிலோ புண்ணாக்கு, 6 கிலோ நாட்டு செண்டு மல்லியை தனித்தனியாக தண்ணீரில் 3 நாள் ஊறவைத்துப்பின், அதை கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து, 15 நாள் இடைவெளியில் 2 முறை அடித்தால் காப்பி கொட்டைத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.
தேயிலை
  • தேயிலை தோட்டத்தில் ஏதம் புல் வகையை வரப்புகளில் நட்டால்  மண்ணரிப்பைத் தடுக்கலாம்.
  • மிக உயரமான பகுதியில் தேயிலை நட்டால் நல்ல தரமான தேயிலையைப் பெறலாம்.
  • மிக உயரமான பகுதியில் தேயிலை நட்டால், குறைந்த மகசூல் தரும்.
  • தேயிலையுடன் ‘காவேரி’ இரக காப்பியை ஊடுப்பயிராக நட்டால் நன்றாக வளரும்.
  • தேயிலை விதைகளை ஒரு அடுக்கு மணல் படுக்கையில் நட்டுப்பின் அதன் பின் ஒரு அடுக்கு மணல் போட்டு, நீர் விட்டால் / தெளித்தால் 3 வாரத்தில் நல்ல முளைப்பைப் பெறலாம்.
வேளாண் காடுகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதியின் வறட்சியைத் தாக்கி, வளரக்கூடிய பழைய மரங்களான, பனை, ஓடை முள், புளி மற்றும் வேம்பு ஏற்றது.
  • கருமண் பகுதியில் 25 அடி இடைவெளியில் நடப்படும் புளி மரத்திற்கு இடையில் 2 வரிசை சவுக்கு நட்டு, புளி விளைச்சலுக்கு வரும் முன்பே சவுக்கை வெட்டி இலாபம் பெறலாம்.
  • ‘சீமைக்கருவேல்’ மர விதை விரைவாக முளைக்காது, ஆனால் ஆடு தின்று அதன் புழுக்கையிலிருந்து வரும் விதை விரைவாக முளைக்கும். எனவே அப்படிப்பட்ட விதையை முளைக்க / விதைக்க பயன்படுத்தலாம்.
  • மலைவேம்பு விதை துரிதமாக முளைக்க, அதை நீர்விட்ட பசுமாட்டுச்சாணத்தில் கலந்து ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தவேண்டும்.
  • தேக்கு விதையை இரவு முழுவதும் ஊறவைத்து பின் 12 மணி நேரம் நிழலில் உலர்த்தவேண்டும். இது போல் 7 நாட்கள் செய்த பின் கடைசியாக சாணக் கரைசலில் ஒரு நாள் ஊறவைத்து விதைக்கப் பயன்படுத்தினால், விரைவாக முளைக்கும்.
  • குச்சி நடவு செய்யும்போது, வேர்ப்பகுதியில் கரையான் சேதாரம் ஏற்படாமல் தவிர்க்க, ராகியை நடவுக் குச்சியை சுற்றி இடவேண்டும்.
  • மரத்தில் கரையான் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மரத்தின் அடியில் சோற்று  கற்றாழை நடவேண்டும்.
  • இளம் மரங்களை ஆடுகள் மேயாமலிருக்க, சாணிக்கரைசலை இலைத்தழைகளின் மீது தெளிக்கவேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட வேப்பங்கன்றை ஆடுகள் கடிக்காமல் இருக்க வைக்கோல்  கயிறு கொண்டு சுற்றி பின் சீமைக்கரு வேல் வேலி போல் சுற்றி அதன் மீது சாணிக் கரைசலை தெளித்தால் போதும்.
  •  15 ஆண்டு ஆன வேப்ப மரந்தோப்பிலுள்ள மரத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் இலாபம் வரை வருமானம் ஈட்டலாம்.

Operationalwise

மண் மற்றும் நீர் மேலாண்மை
  •  தூத்துக்குடி மாவட்டத்தின் ‘தேரை’ பகுதியில் மண்ணை வளப்படுத்த 200 டன் குளத்து மண்ணை ஒரு ஏக்கருக்கு இடலாம். மேலும் பின் சில வருடங்களுக்கு 50 டன் குளத்து மண்ணை இட்டால்போதும்.
  • ஒரு ஏக்கருக்கு உரமாக தெளிக்க, 10 கிலோ வேப்பம் புண்ணாக்குயை 10 லிட்டர் கோமியத்தில் அரை கிலோ கழிவு பெருங்காயத்தோடு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உபயோகிக்கவேண்டும்.
  • புளிப்பொட்டை வயலில் இட்டால் கோரைப்புல் வராது.
  • 1 லிட்டர் வேப்ப எண்ணெயில், 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணியை 3 நாட்கள் ஈரம் காயாமல், ஈர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து, பின் 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல்  சேர்த்து, அதிகாலை வேளையில் தூவினால் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
  • பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.
  • கரையான் தாக்கப்பட்ட பகுதிகளின் எருக்களை இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.
  • வளமற்ற மண்ணாக இருந்தால் அப்பகுதி நிலங்களை எல்லாம் கூட்டாக செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
  • ஆறுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் குறைந்த மகசூலே கிடைக்கும்.
  • வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் நன்செய் நிலத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் வறண்ட நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • சரிவின் குறுக்கே வயல்களில் கல்தூண் அமைத்தால், மண் சரிவையும் ஈரப்பதத்தையும் காக்கலாம்.
  • ‘வெட்டிவேர்’ புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச்சுற்றி நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • வயல் வரப்புகளில் நிரந்தரமாக ஏதாவது தாவரங்களை வளர்த்து வந்தால் அதிக மண் அரிப்பைக் குறைக்கலாம்.
  • புதிய தோட்டாக்கால்கள் பழைய நிலம் அதிக மகசூல் கிடைக்கும்.
  • தோட்டக்காலப் பயிரைக்காட்டிலும் பயிருக்கு அதிகக் கவனம் தேவை.
  • தண்ணீர் தேங்கக்கூடிய வறண்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதல்ல.
  • மண் வகையே, சாகுபடி பயிரை தீர்மானம் செய்யும்.
  • செம்மண் தொடர்ந்து பயிர் செய்ய ஏற்றது.
  • செம்மண்ணை விட கரும்மண் அதிகமாக நீர் பிடித்து வைத்திருக்கும் திறன் உள்ளது.
  • மணல் கலந்து மண் அநேக பயிர்கள் சாகுபடி செய்ய உகந்ததல்ல.
  • அதிகமாக தொழு உரம் இட்டால் மண் நயம் கூடும்.
  • குளத்து மண் இட்டால் மண் நயம் கூடும்.
  • அங்கக உரம், அனங்கக உரம் இடுவது, மண் தன்மையைச் சார்ந்தது.
  • மழை பெய்தவுடன் களை அதிகமாக முளைத்தால், அது நல்ல மண் வளத்தைக் கொண்டு உள்ளதையே காட்டும்.
  • ஆடு தின்னாப்பாலை நிலத்தில் வளர்த்தால், அது குறைந்த மண் வளத்தையே காட்டும்.
  • செம்மண்ணை கரும்மண் நிலத்திலோ இல்லை மாற்றியோ இட்டால் மண் வளம் அதிகரிக்கும்.
  • கோடைக்காலத்தில் ஆடுகிடையோ, மாட்டுக்கிடையோ அமர்த்தினால் மண் வளம் கூடும்.
  • மழையில்லா வறண்ட பகுதிகளின் மண் வளத்தைக் காக்க, பயிறு வகைப் பயிர்களை கலப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும்.
  • மண் அரிப்பு தடுக்கவும் மண்வளத்தை மேம்படுத்தவும், மண் சரிவுப் பகுதியில் பழ மரங்களுக்கு இடையே கொழிஞ்சியை பயிரிடவேண்டும்.
  •  ‘நுணா’ மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம்.
  • கோடைக்காலத்தில், ஆழ உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.
  • மண்ணை நன்கு உழவு செய்து தூள் தூளாக்கினால், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
  • செம்மண் நிலத்தில் கரும்மண் குளத்து மண்ணை இட்டால் நீர்ப்பிடிப்பு தன்மையை செம்மண் பகுதியில் அதிகரிக்கலாம்.
  • சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடியைப் பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
  • எந்தவொரு நிலத்திற்கும், நாம் நடந்தால் நம் கால் தடம் பதியாமல் இருந்த அந்த சமயத்தில் நீர்ப்பாசனம் செய்தால் போதும்.
  • கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால், நீரானது ஆவியாக மாறி வீணாவது தடுக்கப்படும்.
  • நன்செய் நிலத்தில், ‘ஆரை’ கீரைக் கிளையும், தோட்டக்கால் நிலத்தில் ‘அருகு’ புல்லும் இருந்தால் நல்ல மகசூல் கொடுக்கும்.
  • செம்மண் நிலத்தில் ‘அருகு’, ‘கரும்மண்’ நிலத்தில் ‘கோரையும்’ இருந்தால் அந்நிலம் நல்ல நிலம்.
  • களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.
  • களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.
  • களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.
  • களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.
  • உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.
  • பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.
  • புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.
  • மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும்.
  •  கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.
  • அரை நெல்லிக்காய் கிளைகளை கிணற்றில் இட்டால் உப்புத் தன்மையான நீர் நல்ல நீராக மாறும்.
பருவநிலை
  • விதை நல்ல தரமானதாக இருந்தாலும் அதை சரியான பருவத்தில் விதைக்கவேண்டும்.
  • சரியான பருவத்தில் விதைத்தால் தான் தரம் குறைந்த நிலத்திலும் நல்ல மகசூல் தரும்.
  • ஆடிப்பெருக்கு அன்றோ, ஆடி அமாவாசை அன்றோ பயிர் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • அமாவாசை அன்றோ அல்லது அமாவாசைக்கு 48 மணி நேரத்திற்கு முன்போ விதைப்பதோ, நடுவதோ, மரம் வெட்டுவதோ நல்லது.
  • கீழ் நோக்கு நாளில், நிலத்திற்கு கீழே மகசூல் தரும் செடிகளை விதைப்பதோ, நடுவதோ, அறுவடை செய்வதோ நல்லது. மேலும் மட்கு உரம் தயாரிக்க ஆரம்பிப்பது, மட்கு உரம் நிலத்தில் இடுவது, மரத்தை கவாத்து மற்றும் வெட்டுவது, மரம் நடுவதும், நாற்று நடவு செய்வது நிலத்தை உழவு செய்வதும் போன்ற வேலைகளை கீழ் நோக்கு நாளில் செய்தால் நல்லது.
  • மேல்நோக்கி நாளில், மொட்டு கட்டுதல், பதியம் மற்றும் பூமிக்கு மேலே மகசூல் தரும் செடிகள் விதைப்பு / நடவு / அறுவடை செய்வது நல்லது.
  • பெளர்ணமிக்கு 48 மணி நேரம் முன்பாக விதைக்கும் விதைகள் விரைவாக முளைப்பதோடு வேகமாக வளரும்.
  • செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விதைப்பு செய்யலாம்.
  • பெளர்ணமி அன்று விதைக்கும் பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து தப்பும்.
  • பெளர்ணமிக்கு, அமாவாசைக்கு பின் வரும் அஸ்தமி (8 ஆம் நாள்) மற்றும் நவமி (9 ஆம் நாள்) விதைப்பு செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
  • புளி மகசூல் அதிகம் வந்தால் விவசாயத்திற்கு ஏற்ற பருவமும், மா மகசூல் அதிகம் வந்தால் விவசாயத்திற்கு ஏற்றதல்லதாகும்.
பயிர் சாகுபடிக்கு செய்யும் வேலைகள்
  • நிலத்தை நன்கு புழுதிபட உழவு செய்வது, உரம் இடுவதைவிட நல்லது.
  • அகல உழுவதைவிட ஆழ உழுதால் நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும்.
  • மேலோட்டமாக உழுவதைவிட ஆழ உழவு செய்தால் பயிர் நன்கு வளரும்.
  • தோட்டாக்கால் நிலத்தை 4 முறையும், மற்ற நிலத்தை 7 முறையும் உழவு செய்யவேண்டும்.
  • கோடை உழவு செய்தால் பின்பு நல்ல பயிர் கிடைக்கும்.
  • அகல பாத்தி மற்றும் குழி அமைக்கும்போது, நாட்டு கலப்பையில் வைக்கோலைச் சுற்றினால் அகலமான வாய்க்கால் கிடைக்கும்.
  • தோட்டக்கலை ஆழமாக உழவு செய்தால், நிறைய ஈரப்பதத்தை காக்கலாம்.
விதை மற்றும் விதைப்பு
  • விளைச்சலானது விதையின் தரத்தைப் பொறுத்தது.
  • நல்ல தரமான விதையாக இருந்தாலும், அதை காயவைத்து பயன்படுத்தவேண்டும். நல்ல காய்ந்த விதை, அதிக வாழ்நாளையும் அதிக தரத்துடன் இருக்கும்.
  • இரண்டு வருடத்திற்கு ஒரு முறையானது விதையை மாற்றவேண்டும்.
  • விதைப்பையோ நடவையோ மாலை வேளைகளில் செய்யவேண்டும்.
  • அதிக மகசூல் பெற விதைப்பை சனி மூலையிலிருந்து (வடகிழக்கு) ஆரம்பிக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் விதைத்த விதையை மூடுவதற்கு முள் கிளையை அப்படியே நிலத்தில் இழுக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் விதை விதைக்க வேண்டும் எனில் மணல் கலந்து விதைக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் மேல் விதைப்பு செய்யவேண்டும்.
  • 6 மாதப் பயிருக்கு 6 வார வயது வரை நாற்றாங்கால் இருந்தால் போதும்.
  • வேம்பு, புங்கம், நொச்சி, துளசி இலைகளோடு விதையை சேமித்து வைக்கவேண்டும்.
  • விதை மூளைத் திறனையும், வெளி சேதாரத்தையும் காக்க விதையின் மேற்புற கூட்டை தனியாக பிரிக்கக்கூடாது.
இயற்கை உரங்கள்
  • அங்கக உரங்கள் இடுவதால் எப்போதும் நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும்.
  • பொதுவாக, பயன்படுத்தும் பசுந்தாள் உர இலைத் தழைகள் கொழுஞ்சி, எருக்களை, நுணா, புங்கம், வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகும்.
  • பசுந்தாள் உரச்செடிகளாக சணப்பை, கொழுஞ்சி, தக்கைப்பூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து அதை அவைகள் பூப்பதற்கு முன் மட்கி மண்ணில் உழுதுவிடவேண்டும்.
  • துவரைப் பயிரை பசுந்தாள் உரமாக உபயோகித்தால், மண்வளம் மேம்படும்.
  • ஆகாய தாமரைச் செடியை அப்படியே மட்கு உரமாகவோ, அதை எரித்து சாம்பலாகவோ நிலத்தில் இட்டால், சாம்பல் சத்து நிலத்திற்கு கொடுக்கும்.
  • செம்மறி ஆட்டுக்கிடை அமர்த்தினால் பயிர் விளைச்சல் அதிகமாகும்.
  • வெள்ளாட்டு புழுக்கையை இட்டால், அந்தப் பருவத்தில் வளரும் பயிருக்கு நன்கு உதவும்.
  • வெள்ளாட்டு எரு அப்பருவத்திற்கும், மாட்டு எரு மற்றும் பசுந்தாள் உரம் அடுத்த பருவத்திற்கும் ஏற்றது.
  • பசுமாட்டு கோமியம், பசுமாட்டு எருவை விட அதிகச் சத்து கொண்டது.
  • கோழி எரு, பயிருக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக் கூடிய நல்ல எருவாகும்.
  • மண் வளத்தை அதிகப்படுத்த, பசுமாட்டு எரு, ஆட்டு எரு / கழிவுகளை விட பன்றி எரு உபயோகிக்கலாம்.
  • தோட்டக்கால் மற்றும் வறண்ட நிலத்தில் மாட்டு எருவையும், நன்செய் நிலத்தில் பசுந்தாள் உரத்தையும் இடவேண்டும்.
  • கரையான் புற்று நல்ல உரமாக செயல்படும்.
  • குளத்து மண்ணை ஒவ்வொரு வருடமும் வறண்ட நிலத்தில் இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • நீர்ப்பாசன வாய்க்கால் அருகில், ஒரு குழித்தோண்டி, அதில் பசுமாட்டுச்சாணம், எருக்களை தழை, வேப்பம் புண்ணாக்குத்தூள், கோமியத்தைச் ஊற்றி மட்க வைக்கவேண்டும், அதை பாசனத் தண்ணீருடன் கலந்து விட்டால், பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்கவும், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த செய்யும்.
  • எறும்பு புற்று மணலை வயலில் இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பெளர்ணமி அன்று, உரம் தெளித்தல் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
களை மேலாண்மை
  • களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
  • வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.
  • அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
  • அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
  • கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
  • ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
  • கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
  • கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
  • வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
  • 1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
  • பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
  • வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
  • இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
  • டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.
  • காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • விவசாயின் வீட்டின் நுழைவு வாயிலின் இருப்புறமும், சிறிய விளக்கை ஏற்றி வைத்தால், அது விளக்கும் பொறியாக செயல்பட்டு, அதிலிருந்து எந்த பூச்சியில் சேதாரம் தோன்றும் என்று அறியலாம்.
  • வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • தங்க அரளி மற்றும் செவ்வரளி செடியை வரப்புப் பயிராகப் பயிரிட்டால் அது கவர் செடியாக செயல்பட்டு அது பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.
  • திருநீற்றை செடியின் மீது தூவினால், அது பூச்சித் தாக்குதலைக் குறைக்கும்.
  • அடுப்புச் சாம்பலை இட்டால் அசுவினி கட்டுப்படும்.
  • 5 கிலோ புகையிலைத் தூளை 10 லிட்டர் கோமியத்தில் மற்றும் 10 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 5 நாட்கள் ஊறவைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீரையைக் கலந்து,  தெளித்தல் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • எருக்களை இலை மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை மண் கலத்தில் இட்டு, நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்துப்பூச்சிகள் அதன் வாடையால் கவரப்பட்டு மண் கலத்தில் விழுந்து இறக்கும்.
  • 10 லிட்டர் கோமியம், 5 லிட்டர் நீர் கலந்து கலவையில் 5 கிலோ எருக்களை இலையை 5 நாட்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி அத்துடன் 80 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் பயிரை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • சர்வோதய சோப் கட்டி கரைசலை தெளித்தால், மாசுப்பூச்சி கட்டுப்படும்.
  • நூற்புழுவைக் கட்டுப்படுத்த புங்கம் அல்லது இலுப்பை புண்ணாக்கை இடவேண்டும்.
  • நீர்ப்பாசன வாய்க்கால் அருகில் சாணி, கோமியம், எருக்களை இலை வேப்பம்புண்ணாக்கை குழிகளில் இட்டுபின் அவைகள் மட்கியவடன் தண்ணீருடன் கலந்து விடவேண்டும்.
  • ஊமத்தை காயோடு, எருக்களை இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊறவைத்துப்பின், வடிகட்டி தெளித்தால் அனைத்துவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • தும்பை, குப்பைமேனி, துளசி, ஊமத்தை, வேம்பு, நொச்சி இலைகளை ஒவ்வொன்றும் இரண்டு கைநிறைய எடுத்து, அதனுடன் 5 ஊமத்தை காய் ஒரு கை நிறைய வேப்பம் புண்ணாக்கு ஒரு கை நிறைய இலுப்பை புண்ணாக்கு  சேர்ந்து இடித்து, அதை மண் கலத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து 10 நாள் வைத்திருந்து, வடிகட்டி 100 மில்லி லிட்டருக்கு 1 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 100 மிலி சர்வோதய சோப் கரைசல் 100 மிலி வேப்பஎண்ணெய் சேர்த்து தெளித்தால்  எல்லாவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
  • துளசி இலை, செவ்வரளி விதை மற்றும் ஊமத்தைக் காய்களை சம அளவில் எடுத்து அதைத் தூளாக்கி கோமியத்தில் ஊறவைத்து 10 நாட்கள் கழித்து எடுத்து அதை வடிகட்டி, நீர்த்து (100 மிலி / லிட்டர்), 100 மிலி வேப்ப எண்ணெய் சேர்த்து தெளித்தால் எல்லாவிதமான பூச்சிகளும் கட்டுப்படும்.
  • வேப்பஎண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தும் அங்கக பூச்சிக்கொல்லி ஆகும்.
  • கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியன்று, பொதுவான இடத்தில் சொக்கப்பானை கொளுத்தும் விழாவின் போது அந்துப்பூச்சிகளை கவர்ந்து, தீயின் விழுந்து இறக்கும். அந்தச் சாம்பலை வயலில் தூவினால் அது சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்தும்.
  • பயிர் கழிவுகளையெல்லாம் எரித்து, அந்தச் சாம்பலை தூவினால் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக வயலில் இட்டால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, 1 கிலோ சீமைக்கருவில் இலைகளை இடித்து தண்ணீர் கலந்து தெளிக்க பயன்படுத்தலாம்.
  • அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த கோமியத்தைத் தெளிக்கலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளித்தால் அசுவினி கட்டுப்படும்.
  • பிரண்டையை வயல்சுற்றி நட்டால், கரையான் தொல்லை தடுக்கப்படும்.
  • கரையானைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு செடியை சாகுபடி செய்யலாம்.
  • நாற்றாங்கால் வேப்பிலையை பரப்பினால், கரையான் தொந்தரவு கட்டுப்படும்.
  • பாசன வாய்க்காலில், வேப்பம் புண்ணாக்கு நிரப்பப்பட்ட சாக்கு மூட்டையை வைத்தால், சிலந்திப்பேன் தொல்லை கட்டுப்படும்.
  • புல் நிலத்தில், நாற்றாங்காலில் கரையான் தாக்குதலினால் நாற்றுக்கள் அழியும். அதற்கு வேப்பிலையை நாற்றக்காலின் மீது பரப்புவதோடு, ஆட்டு முடி, மனித முடியைச் சேர்த்து போட்டால், அதைக் கரையான் தின்றால் சாகும்.
  • ராகி வேர் வடிநீரை வேர்ப்பகுதியில் ஊற்றினால், கரையான் தொல்லை இருக்காது.
  • மரம் நடவு செய்வதற்கு முன்பு, காய்ந்த இலைகள் மற்றும் தழைகளை குழிகளில் போட்டு எரித்தால், நடும் நாற்றில் கரையான் தாக்குதலிலிருந்து காக்கலாம்.
  • மரக் கன்றுகள் நடுவதற்கு முன்பு அந்தக்குழியில் சாம்பலைப் போட்டால் கரையான் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • 5 சதவீதம் கரைசலை மரத்தின் மீது தெளித்தால், கரையான் தாக்குதல்  குறையும்.
  • புகையிலை அறுவடை செய்தபின்பு, அதன் தண்டு மற்றும் வேர்களை நிலத்திலே மடக்கி உழவு செய்தால் கரையான் தொல்லைக் கட்டுப்படும்.
  • எறும்புப்புற்றின் மீது புகையிலை நீரை ஊற்றினால், எறும்பைக் கட்டுப்படுத்தலாம்.
  • தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த காலை வேளைகளில் எந்தவொரு தெளிப்பையும் செய்தல்வேண்டும்.
தானியக் கிடங்கு பூச்சிக் கட்டுப்பாடு
  • சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும்.
  • விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் இராது.
  • தானியங்கள், மரங்கள் ஆகியவற்றை பெளர்ணமி அன்று அறுவடைச் செய்தால், தானியக்கிடங்கு பூச்சி தாக்குதல் ஏற்படும்.
  • சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்கவேண்டும்.
  • விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும்.
  • விதைகளை புங்கம் இலைகள் கலந்து பின் சேமிக்கலாம்.
  • 1 கிலோ வசம்புத்தூளை 50 கிலோ தானியத்தோடு கலந்து சேமித்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
  • உணவுத்தானியங்களின் விதையை சேமிக்கும்போது, சேமிப்பு கலனில் முக்கால் பங்கு உயரத்திற்கு விதையை இட்டுப்பின் அதன் மீது சாதாரண துணியை பரப்பி பின் வேப்பிலை புங்கம் மற்றும் நொச்சி இலைகளின் மீது பங்குக்கு போட்டு, பின் அக்கலனில் வாய் வரை மணல் போடவேண்டும்.
  • 10 சதவீதம் உப்புக்கரைசலை சாக்குப் பையை நனைத்து பின் காயவைத்து அதில் பயறுவகைகள் மற்றும் உணவுத்தானியங்களை சேமித்தால் பூச்சி தாக்கலைக் கட்டுப்படுத்தலாம்.
  • பொதுவாக விதைகளை கொட்டை/தோலோடு சேமித்தால், தானியக் கிடங்கில் தாக்கும் பூச்சிகளிலிருந்து தப்பலாம்.














1 comment:

Anonymous said...

wow! Great message....

can you please provide more articles about tree cultivation...

thanks
babu
contactbabu@yahoo.com