Saturday, May 19, 2012

விவசாயமும் விலையும்

விவசாயமும் விலையும்


நண்பர்களே! 
என்னுடைய சமீபத்திய அனுபவம்:
பத்து வருடங்களிக்கு முன்பு ஒரு ஆணுக்குக் கூலி கொடுக்க சராசரியாக பதினைந்தில் இருந்து இருபது தேங்காய் தேவைப்பட்டது. 
பத்து வருடங்களுக்குப் பின்பு தற்போதைய நிலை ஐம்பது தேங்காயில் இருந்து எழுபது தேங்காய் வரை தேவைப்படுகிறது.
முன்பு ஒரு பெண்ணுக்குக் கூலி கொடுக்க சராசரி பத்து அல்லது பன்னிரண்டு கிலோ  தக்காளி தேவைப்பட்டது.
தற்போது சராசரியாக முப்பதில் இருந்து முப்பத்தியைந்து கிலோ தக்காளி தேவைப்படுகிறது.
இதேபோல்தான் மற்றவையும்.
இந்தப் பத்துவருடங்களில் விவசாய செலவினங்கள் மூன்று மடங்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது.
ஆனால் விளைபொருட்களுக்கு அதற்கு ஈடான விலை கிடைக்கவில்லை! 
எப்படி விவசாயி தாக்குப்பிடிப்பான்? 

No comments: