Friday, September 6, 2013

பாதி விலையில் நெல்லி ஒட்டுக் கன்றுகள்! - திருநெல்வேலி மாவட்டத்தில்...

தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு ஒட்டுப்பழ மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.















இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல்லியில் வைட்டமின் -சி சத்து மிக அதிகமாக உள்ளது. உலரவைத்தாலும், உப்பிலிட்டு ஊறுகாய் ஆக்கினாலும் இதிலுள்ள வைட்டமின்- சி குறைவதில்லை என்பது இதன் சிறப்பம்சம். உடலைக் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலின்றியும் வைத்திருக்க நெல்லி உதவுகிறது. சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கவும், கூந்தல் தைலம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் நெல்லி பயன்படுகிறது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்: இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரிய பழங்களைத் தரக்கூடிய அதிக மகசூல் தரவல்ல வீரிய பெருநெல்லி ஒட்டுக்கன்றுகள் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், சேரன்மகாதேவி வட்டாரத்தில் 50 சத மானியத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனவே நெல்லி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பாதி விலையில் நெல்லி ஒட்டுக் கன்றுகளை பெற்றுப் பயனடையலாம் என்றார் அவர்.

No comments: