Thursday, September 12, 2013

இளம் தென்னைகளுக்கான உரப் பரிந்துரைகள்

90 வகையான தாவர வகையில் இருந்து 120 வகையான மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வின்பிளாஸ்டின், வின்கிரைஸ்டின், அஸ்பிரின், குர்க்குமின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வின்பிளாஸ்டின், வின்கிரைஸ்டின் போன்றவை விருதுநகர் மற்றும் திருநெல்வேய கல்யாணி மூலிகையில் இருந்து பெறப்படுவதாகும். இந்த மருந்துகளை செயற்கை முறையில் தயாரிக்க இயலாது.
இந்தியாவில் 15 வேறுபட்ட கால சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் காணப்படும் 45,000 தாவர வகைகளில் 15,000 தாவரங்கள் மூலிகைகள் ஆகும். இந்திய மருத்துவத்தில் 7,000 வகை மூலிகைகள் பயன்படுகின்றன. 960 மூலிகைகள் வணிக ரீதியாக அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது. அவற்றில் 178 மூலிகைகள் 100 டன்னுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் 14 பெரிய மற்றும் 86 மத்திய தர மூலிகை கம்பெனிகள் உள்ளன. மேலும் 8,000 சிறிய கம்பெனிகளும் உள்ளன. இது தவிர ஆயிரக்கணக்கான சித்த வைத்தியர்களும் மூலிகைகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மூலிகையின் மொத்த உற்பத்தி மதிப்பு 3,600 கோடி ஆகும்.
இந்தியாவில் 1,77,000 டன் மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் 56,500 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மூலிகை வியாபாரம் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் என 1997ல் கணக்கிடப்பட்டது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி இந்தியாவில் மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க தேசிய மூலிகை செடிகள் வாரியம் அமைக்கப்பட்டது. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டமும் மூலிகைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேசிய மூலிகை செடிகள் வாரியம் 32 வகையான மூலிகைகளின் சாகுபடியை ஊக்குவிக்கிறது.

மூலிகை சாகுபடி ஏன்?:
1. மூலிகை மருந்துக்கு மட்டுமின்றி வருமானமாகவும் பயன்படுகிறது.
2. காடுகளிலிருந்து பெறப்படும் மூலிகைகளின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் மூலிகைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
3. வேலை வாய்ப்பு பெருகும்.
4. இது ஒரு மாற்றுப்பயிர் விவசாயம் ஆகும்.
5. இந்தியாவின் தட்பவெப்ப நிலை அனைத்து மூலிகைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
6. மண் வளம் பெருகும்.
7. தோட்டக்கலைத்துறை மற்றும் தேசிய மூலிகை செடிகள் வாரியம் மானியம் தந்து உதவுகிறது.
8. இது ஒரு குறுகிய கால சாகுபடி ஆகும்.
9. தரிசு நிலங்கள், குறைந்த தண்ணீர் உடைய மானாவாரி நிலங்களில் பயிரிட முடியும்.
10. பூச்சித் தாக்குதல் அதிக அளவில் இல்லை என்பதால் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறையும். எனவே செலவும் குறைவு.
11. ஏராளமான மூலிகை கம்பெனிகள் ஒப்பந்த சாகுபடிக்கு தயாராக உள்ளன.

மூலிகை சாகுபடி எதிர்நோக்கும் சவால்கள்:

1. சாகுபடிக்கு தரமான விதைகளை தேர்வு செய்வது முக்கியமாகும். தரமான விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2. சரியான பருவத்தில் பயிரிடுதல் வேண்டும்.
3. அறுவடையானது சரியான பருவத்தில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள மருந்துப் பொருளின் அளவு குறையும் வாய்ப்பு உள்ளது. 
உதாரணமாக சேலம் பகுதிகளில் பயிரிடப்படும் கோலியஸ் என்ற மூலிகையில் கம்பெனிகள் எதிர்பார்க்கும் போர்ஸ்கோலின் அளவு 0.6%க்கு மேல், ஆனால் பருவம் தவறிய அறுவடையில் அது 0.32% என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் கம்பெனிகள் கொள்முதல் செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4. சரியான மூலிகை கம்பெனியோடு ஒப்பந்தம் செய்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
-என்.கணபதிசாமி, 
திருமங்கலம், மதுரை-625 706.

No comments: