Wednesday, June 6, 2012

ரோஜா’வும் மருந்தாகும்!


`ரோஜா’வும் மருந்தாகும்!

எல்லோரையும் கவரும் பூ, ரோஜா. தோன்றியது வெளிநாடாக இருந்தாலும், நம் நாட்டில் எங்கும் நிறைந்துவிட்டது ரோஜா.
ரோஜா தனது வண்ணம், அழகால் நமëமைக் கவர்வதைப் போல, மருத்துவக் குணம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது.
ரோஜாப் பூவை சீனக் கல்கண்டுடன் சம எடையாக எடுத்து, தேன் சேர்த்து, அன்றாடம் சூரிய ஒளியில் வைத்து, காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். அது உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாச உணர்வையும் தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு ரோஜா மலரின் துவர்ப்புச் சக்தி மருந்தாகி, குணமாக்குகிறது.
அஜீரணமா? வயிற்று வலியா? ரோஜா மலரைத் துவையலாக்கி உண்டால் போதும். அவையெல்லாம் பறந்தோடும். சாப்பிட்டுப் பார்த்தவர்கள் இதை உண்மையென்று கூறுவார்கள். குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் இது செயல்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். இப்படி பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட ரோஜாதான் பன்னீராகி, நம்மையும், நமëமைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது.

No comments: