Friday, June 8, 2012

தேனீக்களை அழிக்கும் சின்ஜின்ட்டா!

தேனீக்களை அழிக்கும் சின்ஜின்ட்டா!

தேனீக்கள்தான்... மகரந்த சேர்க்கைக்கு மிகமுக்கிய காரணமாக இருக்கின்றன. அவற்றின் காரணமாகத்தான் இந்த பூவுலகில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கி, பிற உயிர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில், பூச்சிக்கொல்லிகளின் தாறுமாறான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்கவே தேனீக்களின் எண்ணிக்கை மிகமிக வேகமாக குறைந்து வருகிறது.

இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டுவிட்ட ஃபிரான்ஸ் நாட்டு அரசு, பிரபல ரசாயன பூச்சிக்கொல்லி நிறுவனமான சின்ஜின்ட்டாவின் தயாரிப்பான, 'க்ரூஷியர் ஓஎஸ்ஆர்' என்கிற பூச்சிக்கொல்லி பயன்பாடுதான் தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்பதைக் கண்டறிந்து, அந்தப் பூச்சிக்கொல்லிக்கு தடைவிதித்திருக்கிறது.

No comments: