Friday, June 8, 2012

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் : கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கூட்டப் பெயர்கள்

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கூட்டப் பெயர்கள்:


கொங்கு நாட்டின் முதற்குடிமக்கள் கொங்கு வேளாளர்கள் . குடிவாழும் பண்பு விலங்குக்கும் பறவைகளுக்கும் உண்டு. எறும்புகளுக்கும் உண்டு. ஒரு குடிப்பிறந்த பல்லோர் கூட்டம் என்றனர். உற்றார் உறவினர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிப்படி சுற்றம் தழுவி வாழ்ந்தனர். கூட்டத்தையே குலப்பிரிவாக அமைத்தனர். கொங்கு வேளாளர் இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்தவர்கள். தங்களோடு இயைந்த பறவைகள் , தாவரங்கள், பூக்கள் , சிறப்புடைப் பெயர்கள் முன்னோர் வழிமுறைப் பெயர்களையே குழப்பெயர்களாக அமைத்தனர். பண்டைக்காலத்தில் அறுபது குடிப்பெயர்கள் மட்டுமே இருந்தன. சமுதாய மரபுகள் மாறும் போதும். கூட்டம் விரிவடையும் போதும் இந்த எண்ணிக்கையும் விரிவடைகின்றன. பிற்காலத்தில் பாடப்பட்ட அழகுமலைக் குறவஞ்சி ஒதாளர் பாடினார். அதில் 142 குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடி அமைப்பு குலக்காணியாக - குலதெய்வ வழிபாடாக மாறியது . கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலதெய்வங்கள் அக்கூட்டத்தின் முன்னோர் வழிபாடாக அமைந்திருப்பதை அறியலாம்.

"தென்புலத்தார் தெய்வம் , விருந்தொக்கல் , தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை " ( குறள் - 43 )
"இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை " ( குறள் - 42 )

"வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்"
தெய்வத்துள் வைக்கப்படும் " ( குறள் - 50 ) கொங்கு வெள்ளாளன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தான். வானுறையும் தெய்வத்துள் வைத்து குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
"அழகுமலைக் குறவஞ்சி கூறும் 142 குலப் பெயர்கள்
பொன்னர், சங்கர், பூசர், செம்பூதர்
அண்ணந்தருகாடர், ஆவன், சாத்தந்தை,
கோவர், குழாயர் , கோவேந்தர், செம்பர்,
பாவலர், பண்ணர், மாடை , நாடை, நச்சந்தை, ஆந்தை பொருளாந்தை, ஒழுக்கம்,
வாச்சர், கண்ணந்தை, மணியன், தூரன்
செங்கனி, படுகுன்னி, சேகர், செவ்வாயர்
செங்கண்ணர், வண்ணக்கர், சேரன், சிலம்பர்
புத்தன், பொடியன், பூந்தன் வேந்தன்,
முத்தன், காரி,முழ குலத்தான்
களிஞ்சி நீலன் கணவாளன், அழகன்
விளியன் வெளையன், வில்லி, செல்லன்
ஆடை, அழகன், ஆதி, அந்துவன்,
சேடன், பதரி, சேரலன், பிறழாந்தை, கடுந்துளி ,
வரிவிழி, பவளன், மாதங்க கோத்திரன்,
பனை பூந்தாரன், கோரக்கம், பாண்டியர், கணக்கர்,
குணியன், குண்டரி, கூரை, கீரை
நீலன், மேதி, நேரியன், சூரியன்
சூழ குலத்தான், சோதி, தேவேந்திரன்,
மீனவன் எண்ணை, வெண்டுவன், ஈஞ்சன்
வாணர், மாதுரி, பைதரி,
ஆதின, விரவுளன், அவுரியன், சவுரியன்
கொத்தனுகுயிலர், குங்கலி, கோத்திரத்தார்
பயிரன், பரமன், பஞ்சமன், பூதியன் .
உயர்மழு அழகர், உறுகுலவிரதர்
தோடை, துந்துமன், சோமன், தளிஞ்சி
காடன், உவணன், கவுரி, குலத்தான்
நாரை, நீருணி, நந்தர், கொட்டாரா,
கூறுபன், உழுவார், கூறு பனங்காடை,
சேவழ, புன்னை, தேமான், சுரபி,
மூவர் குலத்தான், மொய்ம்பன், கவளன்
பெருங்குடி, வேந்தன், பிரமன், இந்திரன்,
கருங்கண்ணன், வேணியன், கம்பகுலத்தான்
அச்சினி கோத்திரன், ஆடை, கொண்டிரங்கி
தக்கவர் குலத்தான், சாத்துவராயன்
பாலியன், நெய்தலி, பாம்பன், கட்செவி,
நீலவிலோசனன், நிறை தனவந்தன்
அனகன், சனகன், ஆதித்தேய, கும்பன்
முனைவீரன், கிள்ளியன், முக்கண்ணகுலத்தான்

 வெள்ளாளன் சிறப்பே சிறப்பு :

வேளாளன், மந்திரியும் ஆவான் வழிக்கும் துணை ஆவான் அந்த அரசே அரசு என்று அவ்வையார் சோழ அரசனுக்கு நல்ல அரசு வேளாளன் துணையாகத்தான் நடக்கும் என்றார். "ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு " என்கிறது குறள். "நல்லவர் எல்லாரும் ஆனாநாளையும் வல் உழவு அன்றி ஓர் வாழ்வு உண்டாகுமோ " என்கிறது வேளாளர் புராணம் மேலும் "மானமே குலம் கல்வி வண்மையே தானமே ஊக்குணர்தாண்மை ஆகிய ஆனநாரியர் மயலாம் சிறார் இவர் வானன் நீள் பெளத்திரர் உழவர்மைந்தர்கள் " என்று வேளாளர் இளைஞர்களைப் பற்றி அப்புராணம் கூறும். "அறம் தரும் உழவர்கள் ஆக்கும் தண்டுலம் மறந்தவர் இருமையும் மறந்த மாந்தரே " உழவுத்தொழில் செய்யும் வேளாளர் இம்மை மறுமைக்கான அறந்தருபவர்கள். ஏர் எழுபதில் கம்பர் வேளாளரின் சிறப்பையெல்லாம் தொகுத்துக் கூறியுள்ளார் . கொங்கு வேளாளக் கவுண்டர் சிறப்புரைக்க வேறுநூல் தேவையில்லை . உழுகின்ற வேளாளளின் எல்லா உயிர்க்கும் உயிராவான் . "கலையிட்ட மறைவேந்தர் கனல் வேள்வி வளர்ப்பதுவும் நிலையிட்ட வேளாளர் உலையிட்ட நீராலே " (ஏர் எழுபது 41 ) அரசனது மணிமகுடமும் ,வணிகர்தனமும் , நிலையான வேளாளர்தம் உலையிட்ட நீர் என்ற சிறப்பு பெருமைக்குரியது.

"அருள்பரவும் வேளாளர் பயிர்வளத்தால் நீதி
அந்தணர் வேள்வி வளரும்
அன்பினோடு இவர்கள் படைவாளேடுத்தால் @@@@
அரசர் படைவாள் எடுக்கும்
கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர்
கனகராசியெலாம் குவிப்பர்
காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்
கைத் தொழில் எல்லாம் நடக்கும்.
உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன்
உயரிக்கெல்லாம் படி அளப்பான்
ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று
உலகில் ஒரு பெருமையுண்டோ?"

பேரூர்பட்டீசர் புராணம் கூறும். இதற்கு மேல் யாரும் சொல்ல இயலாது . அறநெறிச்சாரம் அறக்கதிர் விளைவிப்பர். வெள்ளாளர் என்பதற்குச் சான்று கூறுகிறார்.
"இன்சொல் விளைநிலமாய் ஈதலேவித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டீ
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர்
பைங்கூர் சிறுகாலைச் செய் ".
எப்படி உழுதொழிலைச் செய்யவேண்டும் என்று கூறுகின்றார்.


அழகுமலைக் குரவஞ்சி ஒதாளார் பாடினார். இட்டும், தொட்டும் பாடிய பாடலாகும். 142 குடி பொருள்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கைப் பெயர் பூண்ட அறுபது குலக்காணியர்கள் தாம் பண்டைய கொங்கு வேளாளக் கவுண்டர்கள். அறுபது குலக்காணியர்கள் விரிவடைந்த மக்கள் தொகையால் விரிந்தும், பரந்தும் போயினர். கிளைத்துப் பல்கினர். 142 குலம் பற்றியும். விரிவான விளக்கமான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. கிடைத்தவரை சுருக்கமாக சிலர் எழுதினர். சிலர் விரித்தெழுதினர் . குடிபாட்டு வரலாறு . குலதெய்வ வழிபாட்டுடன் தனித்தனி நூல் வடிவில் வந்து கொண்டிருக்கின்றன. தனிநூல் செய்திகளை இத்தொகை நூலில் தர இயலாது. விரிக்கில் பெருகும். `சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல், ஆலமுடைமை` நூல் இலக்கணம் என்பதை நன்னூல் கூறும்.
60 குலக்காணியாளர்கள்
1 . அந்துவன் 31 . தூரன்
2 . ஆதி 32 . தோடை
3 .ஆந்தை 33 . நீருண்ணியர்
4 . ஆடர் 34 . பனங்காடை
5 . ஈஞ்சன் 35. பண்ணை
6 . ஓதளான் 36 . பதரியர்
7. கண்ணன் 37.பயிரன்
8.ஆவின் 38 .பதுமன்
9.கணவாளன் 39.பனையன்
10 .காடை 40.பாண்டியன்
11.காரி 41.பில்லன்
12 .கீரன் 42.பனுமன்
13.குயிலர் 43 .பூசன்
14 .குழையர் 44 .பூந்தந்தை
15 .கூறை 45 .பெரியன்
16 .கோவேந்தர் 46 .பெருங்குடி
17 .சாத்தந்தை 47 .பொன்னன்
18 .செங்கண்ணன் 48 .பொடியன்
19 .செம்மண் 49 .பொருள்தந்த
20 .செம்பூத்தன் 50 .மணியன்
21 .செல்வன் 51 .மயிலா
22 .செவ்வாயர் 52 .மாடை
23 .செவ்வந்தி 53 .முத்தன்
24 .சேரன் 54 .மூலன்
25 .சேடன் 55 .மேதி
26 .செங்கண்ணி 56 .வெளியன்
27 .சோழன் 57 .வெண்ணெய்
28 .சிலம்பன் 58 .வேந்தன்
29 .சேரலன் 59 .வெளையன்
30 .தனஞ்செயன் 60 .வில்லி

காடைக்குலம் :

கொங்கு நாட்டுப் பறவை காடை . பறவையின் பெயர்களை , குலப்பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ்,செடி , கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும் கொங்கின் குடி மக்களே . கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது. கொங்கு நாடு. எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை . இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார் என்பதும் தவறு . மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர். விஜயநகரப் பேரரசு காலத்தில்கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன. பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன நாதர் கோயில் பணியைச் செய்தார்கள்.
"காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன் "
மாடையும் தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச் சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய , சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.
பூந்துறை காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றார் . இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை பல செய்த சிறப்பால் நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர் கோயில் கலசம் குடமுழுக்கில் நீங்காதிருந்தது . இந்த நன்னா உடையார் வைத்தபின் நின்றதாம் . நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும் . நிலைக்கும் . மூவேந்தரும் நன்னா உடையார்க்கு , பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை வழங்கினர் . புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும் .சோழர் ஆட்சியில் இவர் குறுநில மன்னராக இருந்தார் . காங்கேய நாட்டுக் காடையூரை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு . கீரனூர் , பில்லூர், பெருந்துறை , கோனூர், ஆத்தூர்,பவுத்திரம் ஆகிய ஊர்களின் இவர்கள் காணிகளாம். பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப் பெயருடன் சேர்த்து கொள்கின்றனர். பூந்துறைக் காடை, மேலைசார் காடை,கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர் காடை,கீரனூர்க் காடை, அரசூர்க்காடை, பறற்பினிக்காடை , ப @@@@@ த்திரக்காடை,வையப்ப மலைக் காடை , கூடச் சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று 18 காடைக் குலத்தினர் உண்டு.

கணவாளன் குலம்:

கணம் என்பதற்குக் கூட்டம் என்றும், தொகுப்பு என்றும் பொருள் உண்டு . கணநாதர், தேவகணம்-கடவுள் கூட்டம் . ஆண் தன்மையுடன் நல்ல குணத்தைப் பெற்றவனே கணவன் ஆகிறான். ஆண் தன்மையின் தொகுப்பினன் கணவன். கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்ட கணவாளன் குலத்தினர் கொங்கெங்கும் பரவியுள்ளனர். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து ஊரின் பொதுக்காரியன்களைச் செய்வர் . இவர்களையே பல்லவக் கல்வெட்டு கணப்பெருமக்கள் என்கிறது . கணநாதன் ஆன கணபதி - விநாயகன் மூலக்கடவுள் . முதன்மையான கூட்டத்தினரானவர்கள் கணவாளர்கள் ஆயினர் .திருச்செங்கோட்டில் பரசேகரி, இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை ஒன்று பட்டுச் செய்யும் பணியாளர்களை , கணப்பெருமக்கள் என்றனர். கணவாளன் குலத்து நல்லயக் கவுண்டன் தீரத்தைச் சதகநூல் போற்றும் . குன்றத்தூர் கோயில் பணிகளை யெல்லாம் கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.

ஆவின் குலம் :

ஆவின் குலம், ஆவன் குலம் ஆனது . ஆ என்பதற்கு பசு என்று பெயர். ஆவினைப் பாதுகாபவர்கள் கொங்கு வேளாளர்கள் . இக்கூட்டத்தினர் காங்கேயத்தின் ஆநிரைகளை மிகுதியாக வளர்த்த பெருமையால் பெயர் பெற்றவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்களாம்.

கண்ணன் குலம்:

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு நாடதை விளக்கம் செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு நாட்டை நன்கு பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய வேறுபாடு இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும் மன்றாடிப் பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர். கண்ணிவாழ ,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல் காணி கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் . மோரூரில் காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .
இந்தவழி முறையில் வந்தவர் முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர் மூவரும் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன் என்றனர் .நாமக்கல் மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன் குலத்தினர் நல்ல புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள் கட்டினர் . நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர் வழிபடுகின்றனர் கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை, சித்தோடு , உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் , மணியனூர், மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர், நல்லிபாளையம், மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன் குலத்தினரின் காணியிடங்களாம்.

ஓதாலன் குலம்:

"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாலர்கள்.வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பொன்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40,௦௦௦ வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா ? சீதனம் கொடுக்க . வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர் . ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான். வெற்றிப்பெற்றான் . சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான் . வடுகநாதர் கோயில் , பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள் . சோழன் தோழன் பெருமாள் ஓதாலன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும் . கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி , பெருந்தொழவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாலர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.

ஈஞ்சன் குலம்:

கொங்கு நாட்டை வறண்ட பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில் ஈஞ்சி வளர்த்திருக்கும். மழை இல்லாத காலத்தில் கூட இது வளரும். அழியாமல் இருக்கும். எத்தகைய துன்பத்தையும் தாங்கி கொள்ளும் குடிமக்கள் ஈஞ்சன் குலத்தினர். ஈங்கூர் இவர்களின் முதன்மை இடம் . தம்பிரான்பட்டியம்மன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாம். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் பிற காணியிடங்களாம்.

ஆடர்குலம் :

"ஆடு ஆடு என்ப: என்கிறது புறம். ஆடு என்பதற்கு வெற்றி என்றே பொருள். வெற்றியே பெறுகின்ற ஆடர் குலத்தினர் கொங்கெங்கும் பரந்துள்ளனர். சென்னிமலையில் அதிகம் உள்ளனர்.

ஆதிக்குடி:

முதற்குடியினர் இவர்களே. அந்துவன், ஆதி இரண்டுமே பழமையானகுடிகளாகும். ஆதியும் அந்தமும், அந்தாதிதொடர்களை அறிக. ஆதி முதன்மையானக் குடியாகும். இதன் காணிகள் கீரனூர், வெள்ளக்கிணறு, கோவை, அவிநாசி, கோபி,பாவனி ஆகிய வட்டங்களில் உள்ளன.

அந்துவன் குலம் :

கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.

ஆந்தைக்குலம்:

வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தார்கள் என்பது கற்பனை . திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக் கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன் அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர் கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் , பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் , திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி, ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.
(ஆந்தை குலம் : நாம் குலத்தின் வேறு பெயர்கள்
பிரளாண்டை,முழுக்காதன்,
ஆந்தை குலத்தில் இரூந்து பிரளாண்டை குலமும்,
பிரளாண்டை குலத்தில் இரூந்து முழுக்காதன் குலம் பிரிந்து உள்ளது.
பிரளாண்டை- காணி கருமாபுரம்- குலதெய்வம்-செல்லாண்டி அம்மன்
முழுக்காதன்--காணி காடையூர்-குலதெய்வம்-வெள்ளை அம்மன்)


ஒதாளர் குலம்:

கொங்கு வேளாளர்களில் பெருமை பெற்ற பிரிவில் ஒதாளர் கூட்டம் ஒன்று . பரஞ்சேர்வழி ஒதாளர், கண்ண புரம் ஒதாளர், வெள்ளகோவில் ஒதாளர், குண்டடம் ஒதாளர், கொடுவாய் ஒதாளர், பெருந்தொளுவு ஒதாளர், முத்தணம்பாளையம் ஒதாளர், என்று பல ஊர் பிரிவினர் ஒதாளரில் உண்டு. 'கொலுசேனை மன்றாடி' என்ற பட்டம் தாங்கியவர்கள். மேற்கண்டவாறு பல்வேறு ஊர்களைக் காணியாகக் கொண்டமையால் 'உலகம் பாதி ஒதாளர் பாதி'
என்ற பழமொழி வழங்குகிறது. பரஞ்சேர்வழி,பெருந்தொளுவு, அலகுமலை, குண்டடம், வெள்ளகோவில், கண்ணபுரம், கண்டியன் கோவில், நிழலி, கொடுவாய், கொற்ற மங்கலம், சிற்றாம் பூண்டி, கொளா நல்லூர், வடசரை ஆத்தூர், திருவாச்சி போன்ற ஊர்களை உரிமையுடையதாக்குகிறது.

சாத்தந்தைக் குலம் :

புறத்தில் நான்கு பாடல்கள் சாத்தன் பற்றி கூறுகிறது . கொங்கு நாட்டுப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் கொங்குக்கவுண்டர் . அந்துவன் சாத்தன் என்ற அரசனைப் பற்றி புறம் - 71 கூறுகிறது. பெரும் பெயர் சாத்தன் என்கிறது புறம் - 173 . ஒல்லையூர் கிழான பெருஞ்சாத்தனை
புறம் 242 கூறுகிறது . வல்வேல் சாத்தன் என்கிறது அது . சாத்தன் + தந்தை என்பதே சாத்தந்தை ஆக்கும். சால் + தந்தை சாற்றந்தை என்றே ஆகும். இவ்வாறு பிரித்தல் தவறு. கொங்கு மண்டல சதகம் சாத்தந்தையார் முதற்காணி அத்திபநல்லூராகும். சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வமாகும் . சோழன் சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர் ஆகியவர்களைக் கைப்பற்றினான் சோழன் . "உலகுடைய மன்றாடிப் " பட்டம் நல்கினான் . வீரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக் குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான் கொடுங்கூர். கொடுமுடியாகும் . பூந்துறை வேட்டுவர்களை வென்றனர் . சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம் , தேவனாம்பாளையத்தையும் பெற்றனர் .சாத்தந்தைக் குலத்தில் கந்தான் காலிங்கராயன் ஊத்துக்குளி பாளையப்பாட்டின் முதல்வன் இவன். வெள்ளோட்டில் ஆட்சி நிறுவியவன். இவன் வீரபாண்டியனின் அமைச்சனாக இருந்தான். காலிங்கராயன் வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை வழமை செய்தான் . அது இன்றும் காலிங்கராயன் வாய்க்கால் என்றே அவன் புகழ் பாடி ஓடிக்கொண்டிருக்கிறது . வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர் கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் தந்தனர் . கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் சாத்தந்தைக் குலத்தவரே , வெள்ளோடு , நாகம்பள்ளி , கூகலூர், விஜயமங்கலம் , குன்றத்தூர் , அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம், இலவமலை , பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம் , ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாம்.

1 comment:

kongunaduthirumanathagavalinaipagam said...


"கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இளைய சமூதயத்தினரின் பெரிய கவலை திருமணம் அதற்க்கு ஒரே வழி பெற்றேர்களின் அனுபவமும் ஆதரிப்புமே நாமக்கல் சேலம் ஈரோடு கரூா் கோவை பகுதிகளில் உள்ள கொங்கு இளைங்கர்களின் திருமணத்திற்க்கு உதவிட இலவசமாக இருவீட்டாரின் நேரடி கலந்துரையாடல் செய்துகெள்ள நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு திருமண தகவல் இணைப்பகம் ஆரம்பிக்கப்பட்டு உதவி செய்து வருகின்றனர் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.