முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல் |
உருண்டு
திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு
அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு
காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான
முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
*
பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல்
வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம்
முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
*
தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட்
போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு
உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக
செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக
செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.
*
முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில்
மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி'
கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது
அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
*
தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை
'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும்
அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான்
ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252
மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
*
வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய
வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர
உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
*
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள்
முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம்
வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை
சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள்
செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள்
உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
*
முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை
மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின்
பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.
No comments:
Post a Comment