Monday, April 2, 2012

ஏப்ரல் 1


ஏப்ரல் 1
அனைத்துலகச் சுகாதார நாள்
உலக விழிப்புணர்வு நாள்
உலகக் கோமாளிகள் நாள்
1578 - இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஹார்வி என்பவர் உடலின் ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தார்.
... 1760 - முட்டாள்கள் தினம். வரலாற்றுக் குறிப்பின்படி முதன் முதலில் சுமார் 240 ஆண்டுகளுக்கு முன்பு தான் முதன் முதலாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1891 - சிக்காகோவில் றிக்லி நிறுவனம் (Wrigley Company) ஆரம்பிக்கப்பட்டது.
1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.
1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937 - யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1939 - எசுபானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.
1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.
1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 - உலகை முதன் முதலில் நடந்தே கடந்தவர் என்ற பெருமையை பெற்றார் Steve Newman. நான்கு ஆண்டுகளில் அவர் நடந்தே கடந்த தூரம் 35,000 கிலோ மீட்டர்.
1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001 - நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

No comments: