இயற்கையின் கொடையான புல் பூண்டு, செடி, கொடி, மரம்,
அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. இவற்றில் பல
நோய் தீர்க்கும் குணம் கொண்டவை. சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பல
விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர். மேலும் உடலுக்கு நோய்
எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றிக்
கூறியுள்ளனர். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கும் முறை.
இந்த வகையில் கற்ப மூலிகைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.
இந்த இதழில் நத்தைச் சூரி என்னும் மூலிகை பற்றி அறிந்துகொள்வோம்.
இவை இந்தியா முழுவதும் காணப்படும் மூலிகையாகும்.
குறிப்பாக தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது. இது
பூண்டு வகையைச் சார்ந்தது.
நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த
காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி.
இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி,
தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
கூச்ட்டிடூ - Natthai Choori
Tamil - Natthai Choori
English - Shaggy button weed
Malayalam - Thartuvel
Telugu - Madana Ghettu
Sanskrit - Madanghanta
Botanical Name - Spermacoce hispida
இதன் வேர் மற்றும் விதை மருத்துவப் பயன் கொண்டவை.
வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது
விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக்
கொடுக்கும். சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.
உடல் தேற
நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற
நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில்
குழைத்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும்
வலுப்பெறும்.
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி
வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு
தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி,
சிறுநீரகக் கல்லலைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச்
சுத்தப்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக
உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.
நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு
கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால்
வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.
10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி
பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில்
கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக நாள்
ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம்
குறையும்.
நத்தச்சூரி தைலம்
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னிவேர்,
உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளாவேர், பாகல் வேர், வேப்பம்பட்டை,
கடுக்காய், மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்திவேர்
இவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி
வைத்துக்கொண்டு அடிக்கடி உடலில் தேய்த்து வந்தால் சரும பாதிப்பு
நீங்குவதுடன் உடல் சூடு தணியும். தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி
உதிர்வது குறையும்.
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
|
விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Saturday, March 24, 2012
நலம்தரும் நத்தைச்சூரி…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment