Friday, March 9, 2012

மார்ச் 6


மார்ச் 6
1079 - ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1447 - ஐந்தாம் நிக்கலாஸ் பாப்பரசர் ஆனார்.
1479 - கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 - பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
... 1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1940 - குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1945 - ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.
1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953 - ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1954 - ராஜாஜி தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
1957 - ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.

No comments: