Friday, March 9, 2012

மார்ச் 10


மார்ச் 10
1629 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804 - லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
... 1814 - பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1876 - தொலைபேசிக்கான காப்புரிமத்தை Alexander GrahamBell பெற்ற பிறகு இன்று முதன் முதலில் பயன்படுத்தினார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து "வாட்சன் இங்கு வா" என்றார். அவை தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள்.
1893 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது. .
1902 - அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.
1906 - வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1911 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952 - கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
1959 - திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை சீன இராணுவத்தினரால் செய்யப்பட்டனர்.
1970 - வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில்1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.
1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

No comments: