பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
by சி. ஜெயபாரதன்
[வான்தூக்கு விளைவு]
சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q
https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded
https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded
பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
பொரி உருண்டை
பரமாணுக் களாகி, அணுவாகி
அணுக்கள் நர்த்தனம் ஆடி
மூலக்கூறாகி நேராகித்
சீரான நகர்ச்சியில் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து தொடரியக்கப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து, பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பிணைவு சக்தியாகிப்
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாச பந்த ஈர்ப்பில்
ஊசலாடி
அகில வெளியில்
மகத்தான தோரணமாய்
அம்மானை ஆடுகிறாள், என்
அன்னை !
பொரி உருண்டை
பரமாணுக் களாகி, அணுவாகி
அணுக்கள் நர்த்தனம் ஆடி
மூலக்கூறாகி நேராகித்
சீரான நகர்ச்சியில் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து தொடரியக்கப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து, பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பிணைவு சக்தியாகிப்
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாச பந்த ஈர்ப்பில்
ஊசலாடி
அகில வெளியில்
மகத்தான தோரணமாய்
அம்மானை ஆடுகிறாள், என்
அன்னை !
+++++++++++++
[வான்தூக்கு விளைவு]
தங்கம்,
பல்லேடியம் போன்ற உலோகங்கள் சில இரசாயன இயக்கங்களைத் தூண்டும் வினை
ஊக்கியாகப் [Catalyst] பயன்படுகின்றன. அணுக்கள் ஜோடியாய் ஆடும்போது,
பெரும்பான்மையான அணுக்கள் சுற்றி யுள்ள வாயுடன் சேராது, வினை ஊக்கும் தன்மை
பேரளவில் குறைகிறது. இந்தக் காரணத்துக்காக எமது குழுவினர் ஒரேவித
அணுக்கள் எப்படி ஒரு தளத்தில் கொத்துக்களாய் [Clusters] உருவாகின்றன
என்றும், எப்படி இயக்கங்களை முற்றிலும் தடுப்பது என்றும் ஆய்வுகள்
செய்கிறோம். பல ஆண்டுகளாக இந்த விளைவின் கோட்பாடைப் பற்றி உரையாடிக்
கொண்டு வருகிறோம். ஆனால் வியன்னா பொறித்துறைப் பல்கலைக் கழக ஆய்வு
நிபுணர்கள் அணுக்கள் கொத்தை நேரடியா நோக்கி வருகிறார். அதி உச்ச சூனியப்
பேழையில் மிகத் தூய இரும்பு ஆக்ஸைடு தளத்தில் பல்லேடியம் அணுக்களைச்
சோதிக்கப் பயன்படுத்தி வருகிறோம்.
பேராசிரியர் உல்ரிக் டைபோல்டு [Institute of Applied Physics, Vienna University of Technology]
அணுக்கள்
அதிரத் தொடங்கி தன்னைப் போல் ஒரே அதிர்வும், ஒரே திசைப் போக்கும், ஒரே
பண்பும் கொண்ட வேறோர் துணையைத் தேடிப் பிடித்து ஒன்றாகி ஒரு புழுபோல்
நேர்கோட்டில் நகர்கின்றன. ஒரு பளிங்குப் படிமத்தில் [Crystalline System]
பேரளவு எண்ணிக்கைப் புழுக்கள் ஒரு கால வரையறைக்குள் உற்பத்தி யாகும் போது,
நிலைகுழம்பி, ஓரினத்துவ உருக்கல் [Homogeneous Melting] துவங்கிறது."
பேராசிரியர் மோ லி [Professor Mo Li, Georgia Tech School of Materials Science and Engg]
படிமங்கள்
[Crystals] எந்த உள்ளமைப்பு கொண்டிருந்தாலும், அணுக்களும், மூலக்கூறுகளும்
இசைவான நகர்ச்சியைக் கொண்டுள்ளன என்னும் பொது உருக்கல் கோட்பாடை[General
Principle of Melting] நான் நம்புகிறேன். அணுக்களும், மூலக்கூறுகளும்
குறிப்பிட்ட ஒரு திசைப்போக்கில் உலவக் கட்டுப்பட்டு நகர்கின்றன. அதன்
விளைவாக அவை இரண்டும் ஜோடியாய் நடனமாட வேண்டியுள்ளது.
பேராசிரியர் மோ லி
"தனித்த
பல்லேடியம் அணுக்களை இணைக்கத் தூண்டி, கார்பன் மொனாக்ஸைடு வாயு
மூலக்கூறுகள் மேற்தளத்தில் உண்டாக்கும் விரைவான அணுக்கள் நடனத்தை ஆய்வுக்
குழுவினர் கண்டுபிடித்தார். இவ்வாறு ஏற்பட்ட உடனே பல்லேடிய அணுக்கள்
தளத்தை விட்டு, கார்பன் மொனாக்ஸைடு வாயுவால் மேல் எழும்பிச் சுதந்திரமாய்
உலவுகின்றன. இதுதான் வான்தூக்கு விளைவு [Skyhook Effect] என்று அறியப் படுகிறது."
ஸ்பிநெக் நோவாட்னி [Zbynek Novotny, Vienna Univesity of Technology]
மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் கண்டுபிடிப்பு
மேற்குச்
கலாச்சார ஆண் /பெண் ஆட்ட நடன மாளிகைகளில் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டும்
தனியாகச் சரிவர நடன ஆட்டங்கள் செய்ய முடியாது. அவருக்கு இணைந்த அசைவில்
கூட ஆடும் துணை கிடைத்த பிறகு அவரது கூட்டு நர்த்தனம் பொருந்தி
காணப்படுகிறது. இரும்பு ஆக்ஸைடு தளத்தில் அணுக்கள் அவ்வித நடனத்தில்
கார்பன் மொனாக்ஸைடுடன் கலந்து கொள்ளும்.
பொருத்தமான
நடனத் துணை அமைந்த பிறகு விரைவாக அணுக்களால் நர்த்தனம் செய்ய முடிகிறது.
வியன்னா பொறிநுணுக்க நிபுணர்கள் அவ்விதம் நடனமிடும் சில அணுக்கள் கார்பன்
மனாக்ஸைடு மூலக்கூறில் ஆடுவதைப் படிப்படியாய்ப் படமெடுத்துள்ளனர்.
அவர்கள் எடுத்த திரைப்படம் தனித்த அணுக்கள் கொத்துக்கள் ஆவதைக்
காட்டுகின்றன.
தங்கம்,
பல்லேடியம் போன்ற உலோகங்கள் சில இரசாயன இயக்கங்களைத் தூண்டும் வினை
ஊக்கியாகப் [Catalyst] பயன்படுகின்றன. அணுக்கள் ஜோடியாய் ஆடும்போது,
பெரும்பான்மையான அணுக்கள் சுற்றி யுள்ள வாயுடன் சேராது, வினை ஊக்கும் தன்மை
பேரளவில் குறைகிறது. இந்தக் காரணத்துக்காக எமது குழுவினர் ஒரேவித
அணுக்கள் எப்படி ஒரு தளத்தில் கொத்துக்களாய் [Clusters] உருவாகின்றன
என்றும், எப்படி இயக்கங்களை முற்றிலும் தடுப்பது என்றும் ஆய்வுகள்
செய்கிறோம். பல ஆண்டுகளாக இந்த விளைவின் கோட்பாடைப் பற்றி உரையாடிக்
கொண்டு வருகிறோம். ஆனால் வியன்னா பொறித்துறைப் பல்கலைக் கழக ஆய்வு
நிபுணர்கள் அணுக்கள் கொத்தை நேரடியா நோக்கி வருகிறார். அதி உச்ச சூனியப்
பேழையில் மிகத் தூய இரும்பு ஆக்ஸைடு தளத்தில் பல்லேடியம் அணுக்களைச்
சோதிக்கப் பயன்படுத்தி வருகிறோம், என்று பேராசிரியர் உல்ரிக் டைபோல்டு [Institute of Applied Physics, Vienna University of Technology] கூறுகிறார்.
(1885-1962)
"குவாண்ட
யந்திரவியல் கோட்பாடு பூர்வீகப் பௌதிகத்தின் ஏற்புடைய பொதுவிதி என்று
நீல்ஸ் போஹ்ர் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது விஞ்ஞானப்
பணி சிந்தனா முறையில் ஓர் உன்னத இன்னிசை வடிவம் என்பது என் எண்ணம்."
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
அணுவின் உள்ளமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர்
டேனிஷ்
விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr] என்பவர் பிரிட்டீஷ் விஞ்ஞான மேதைகளான
ஜே.ஜே. தாம்ஸன், ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆகியோருடன் விஞ்ஞான ஆய்வுகள்
செய்து, புதிய முறையில் அணுவின் உள்ளமைப்பைப் பற்றி எளிதாக, ஏற்றதாக,
ஏனையோர் ஒப்புக் கொள்ளும் படி அறிவித்தவர். 1913 ஆம் ஆண்டில் நீல்ஸ்
போஹ்ர் ரூதர்ஃபோர்டு விளக்கிய அணு மாடலையும், விஞ்ஞானி பிளான்க் குவாண்டம்
நியதியையும் [Planck's Quantum Theory] ஒருங்கிணைத்து, ஓர் ஒப்பற்ற அணு
உள்ளமைப்புக் கருத்தை முதன்முதல் தெளிவாக வெளியிட்டார்.
நீல்ஸ்
போஹ்ர்தான் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை இணைத்து அணுவின்
உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான விளக்கத்துக்கு
எடுத்தாண்டார். மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம் ஒவ்வொன்றும் தன்
அணுக்கருவில் கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element's Atomic Number
(Total Number of Protons in the Nucleus)] முக்கியத்துவத்தைக்
குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: "எந்த ஓர் அணுவும் தனிப்பட்ட நிலைகளில்
குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான் நிலவி வருகிறது." அவரது அரிய அந்த
அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission]
அடிகோலிப் பேரளவு அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு
நீல்ஸ் போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப்
பெற்றார்.
அணுவைப் பற்றி நாம் இதுவரை அறிந்தவை
பத்தொன்பதாம்
நூற்றாண்டில்தான் பொருட்களின் உள்ளே அணுக்களின் இருக்கையை இரசாயன
நிபுணர்கள் கோட்பாடு மூலமாக நிரூபித்துக் காட்டினார்கள். ஆனால் 1909 ஆம்
ஆண்டில் சோதனை மூலம் காட்டி முதன் முதலில் அணுக்களின் நுட்ப அளவை
மதிப்பிட்டவர் பிரெஞ்ச் விஞ்ஞானி ஜீன் பெர்ரின் [Jean Perrin (1870-1942)].
அவர் எக்ஸ்-ரே கதிர்களையும், எதிர்முனைக் கதிர்களையும் [Cathode Rays]
ஆராய்ச்சி செய்தவர். 1895 ஆம் ஆண்டில் பெர்ரின் எதிர்முனைக் கதிர்களில்
எதிர்மின் கொடையுள்ள துகள்கள் [Negatively Charged Corpuscles]
இருப்பதாகக் காட்டினார். அவையே பின்னால் எலெக்டிரான்கள் என அழைக்கப்
பட்டன. அவர்தான் அவொகேட்ரோ இலக்கத்தைப் [Avogadro's Number (6x10^23)]
பலமுறைகளில் கணித்துத் தெளிவு படுத்தியவர்.
இத்தாலிய விஞ்ஞானி அமெடியோ அவகேட்ரோ [Amedeo Avogadro] கணித்த கோட்பாடு சொல்வ தென்ன? "ஒரே உஷ்ணத்திலும், ஒரே அழுத்தத்திலும் நிலைத்துச் சமக் கொள்ளளவு கொண்ட வாயுக்கள் மூலக்கூறுகளின் [Molecules] ஒரே எண்ணக்கை அளவைக் கொண்டுள்ளன." ஆனால் அந்தக் கோட்பாடு தூய வாயுக்களுக்கு [Ideal Gases] மட்டுமே உடன்பாடானது.
இருபதாம்
நூற்றாண்டில் விஞ்ஞானிகளின் முக்கிய கண்ணோட்டம் அணுவின் உள்ளமைப்பை
அறிந்து கொள்ளக் குறிவைத்துத் திசை திரும்பியது. அந்த தேடல் பயணம் 1897 இல்
ஜே.ஜே. தாம்ஸன் (1856-1940) முதன்முதல் கண்டுபிடித்த எலெக்டிரான்
பரமாணுக்களுடன் துவங்கியது. எதிர்முனைக் கதிர்களில் பிரிக்க முடியாத
நுட்பத் துகள்கள் இருப்பதாகத் தாம்ஸன் கூறினார். பிறகு எலெக்டிரான்கள்
எதிர் மின்கொடை கொண்டவை என்றும் எலெக்டிரான் துகளின் நிறை இத்தனை
அளவென்றும் கணித்தவர்கள் இருவர்: ஜான் டௌன்செண்டு [John Townsend
(1868-1937)], ராபர்ட் மிக்கில்லிக்கன் [Robert Millikan (1868-1953)].
அணு யுகத்தின் பலகணியும் வாயிற் கதவும் திறந்தன !
1895
ஆம் ஆண்டில் ஜெர்மென் விஞ்ஞானி ராஞ்ஜென் [Wilhelm Roentgen (1845-1923)]
எக்ஸ்-ரே கதிர்களைக் கண்டுபிடித்து 1901 இல் நோபெல் பரிசு பெற்று
முதன்முதல் அணுவியல் யுகத்தின் பலகணியைத் திறந்து வைத்தார். அதற்குப் பின்
1896 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் விஞ்ஞானி ஹென்றி பெக்குவரல் [Henri Becquerel
(1852-1908)] யுரேனியத் தாது பிட்ச் பிளண்டியில் [Uranium Ore
Pitch-Blende] பொதிந்துள்ள கதிரியக்கத்தைக் [Radioactivity] கண்டுபிடித்து
அணுயுகத்தின் வாயிலைத் திறந்து வைத்தார். பெக்குவரலைப் பின்பற்றி (1898)
மேடம் கியூரி, அவரது கணவர் பியரி கியூரி இருவரும் [Madame Marie
(1867-1934) & Pierre Curie (1859-1906)] பிட்ச் பிளண்டியில்
யுரேனியத்தை போல், கதிரியக்கம் உள்ள ரேடியம், பொலோனியம் என்னும் புது
மூலங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
அணுக்கள்
உடைந்து கதிரியக்கம் வெளியாவதற்கு விளக்கம் அளித்த பெக்குவரல், மேரி &
பியரிக் கியூரி ஆகிய மூவருக்கும் ஒன்றாக 1903 இல் நோபெல் கிடைத்தது.
யுரேனியத் தாதுவில் வெளியான மூன்று வித நூதனக் கதிர்களுக்கு ஆல்ஃபா,
பீட்டா, காமா [Alpha, Beta & Gamma Rays] என்று பிரிட்டீஷ் விஞ்ஞானி
ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] முதன் முதல்
பெயரிட்டார். 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞானி பெக்குவரல் பீட்டா கதிர்கள்
எதிர்க்கொடை உள்ள "எலெக்டிரான்" [Negatively Charged Electron] என்பதைக்
கண்டார். 1903 இல் ரூதர்ஃபோர்டு யுரேனியம் போன்ற உலோகங்களில் கதிரியக்க
வெளியேற்றத் துக்குக் காரணம், அணு முறிவு தான் (அணுக்கருத் தேய்வு) என்று
விளக்கம் தந்தார். அடுத்து ஆல்ஃபா துகள் ஒரு ஹீலிய அணுக்கரு [Helium
Nuclei] வென்றும் அவரே முதலில் கண்டுபிடித்தார்.
1911
ஆம் ஆண்டில், ரூதர்ஃபோர்டு ஜெர்மென் விஞ்ஞானி ஹான்ஸ் கைகருடன் [Hans
Geiger (1882-1945] சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்து அணுவின் உள்ளமைப்பை
முதலில் விளக்கினார். அதாவது அணுக்கருவை எப்போதும் சுற்றிவரும்
எலெக்டிரான்கள் கொண்ட வடிவே அணுவின் உள்ளமைப்பு என்பது அவர் முதன்முதலில்
அறிவித்த மாடல். அதற்குப் பிறகு ரூதர்ஃபோர்டு 1914 இல் அணுக்கருவில்
நேர்கொடை யுள்ள புரோட்டான் [Positively Charged Proton] இருக்கையை
எடுத்துக் கூறினார். அடுத்து 1919 இல் ரூதர்ஃபோர்டு நைடிரஜன் மூலகத்தை
ஆஃல்பா துகளால் தாக்கி, முதன்முதல் செயற்கை அணுக்கருத் தேய்வை [Artificial
Atomic Disintegration] ஏற்படுத்திக் காட்டினார். அதே போல் பின்னால் மேரி
கியூரியின் மகள் ஐரீன் கியூரி, அவளது கணவர் ஃபிரெடெரிக் ஜோலியட் இருவரும்
செயற்கை மூலக மாற்றத்தைச் [Artificial Transmutation of Elements] செய்து
காட்டிப் புதியதோர் வரலாற்றை உருவாக்கினர். அணுயுகப் பொற்காலத்துக்குப்
பெக்குவரலும், கியூரி குடும்பத்தாரும், ரூதர்ஃபோர்டும் ஆரம்ப விழா
நடத்தியவர்கள் என்பதை 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால்
பொறிக்க வேண்டும்.
அணுவியல் அமைப்பில் நீல்ஸ் போஹ்ரின் புதிய ஆராய்ச்சிகள்
நீல்ஸ்
போஹ்ர்தான் முதன்முதலில் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை [Quantum Theory]
இணைத்து அணுவின் உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான
விளக்கத்துக்கு எடுத்தாண்டார். மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம்
ஒவ்வொன்றும் கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element's Atomic Number
(Total Number of Protons in the Nucleus)] முக்கியத்துவத்தைக்
குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: "எந்த ஓர் அணுவும் தனிப்பட்ட நிலைகளில்
குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான் நிலவி வருகிறது." அவரது அரிய அந்த
அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission]
அடிகோலிப் பேரளவு அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு
நீல்ஸ் போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப்
பெற்றார்.
நீல்ஸ்
போஹ்ர் 1885 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் ஒரு
செல்வாக்கான விஞ்ஞானக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் கிறிஸ்டியன்
போஹ்ர் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பேராசிரியர்
[Professor of Physiology]. தந்தையார் உயிரினச் சுவாசத்தின் பௌதிக, இரசாயன
பண்பாடுகளைப் [Physical & Chemical Aspects of Respiration] பற்றி
முதன்முதல் விளக்கியவர். தாயார் டேனிஷ் யூதச் செல்வந்த குடும்பத்தைச்
சேர்ந்தவர். நீல்ஸ் போஹ்ரின் இளைய சகோதரன் மாபெரும் கணித மேதை.
பல்கலைக்
கழகத்தில் நீல்ஸ் போஹ்ர் தனது இள வயதிலேயே அபார விஞ்ஞானத் திறமையைக்
காட்டினார். முதன்முதலாக "நீர்த்தள முறுக்கேற்றத்தைத்" [Surface Tension of
Water] தீர்மானிக்க, நீர்வீச்சுகளின் அதிர்வுகளைத் [Vibrations of Water
Jets] துள்ளியமாகச் சோதனை மூலம் கணித்து நியதி முறைகளில் பதிவு செய்து,
டேனிஷ் விஞ்ஞானக் கழகத்தின் [Royal Danish Academy of Sciences &
Letters] தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
அவரது
பட்டப் படைப்பாய்வு இதுதான்: அணுசார்ந்த நிலையில் பிண்டங்களின்
இயக்கத்தைப் பற்றிப் பூர்வீகப் பௌதிகம் விளக்க முடியாதைச் சொல்லும்,
உலோகங்களின் எலெக்டிரான் கோட்பாடு [Thesis on the Electron Theory of
Metals that stressed the inadequacies of Classical Physics for treating
the Behaviour of Matter at the Atomic Level] 1911 இல் தான் எழுதிய அந்த
ஆய்வுக் கருத்துரைக்கு டாக்டர் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு
இங்கிலாந்துக்குச் சென்று புகழ்பெற்ற விஞ்ஞானி ஜே.ஜே. தாம்ஸனிடம்
பணியாற்றித் தன் எலெக்டிரான் கோட்பாடு ஆய்வுகளை மேற்கொண்டு தொடர
ஆரம்பித்தார்.
உலோகத்தில்
எழுந்த எலெக்டிரான் மீதிருந்த ஆர்வத்திற்கு தாம்ஸன் ஊக்கம் அளிக்காததால்,
நீல்ஸ் போஹ்ர் 1912 ஆம் ஆண்டில் மான்செஸ்டரிலிருந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி
ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டை அணுகினார். அப்போது ரூதர்ஃபோர்டு குழுவினர்
அணுவின் உள்ளமைப்பு பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்தனர்.
ரூதர்ஃபோர்டு சமீபத்தில் நிர்மாணித்த அணு உள்ளமைப்பு மாடல் நியதிப்பாடை
விளக்கும் [Theoretical Implications] விஞ்ஞான முறைப் பாடுகளில் அவரும்
மூழ்கினார். அணுக்கருவின் புரோட்டான் எண்ணிக்கையைக் கூறும் அணு எண்ணின்
[Atomic Number] முக்கியத்தை உணர்ந்தவர்களில் நீல்ஸ் போஹ்ரும் ஒருவர்.
அதுவே
அணுக்கருவின் மின்கொடை [Electric Charge] எண்ணிக்கையும் ஆகும். பின்னாளில்
அமைக்கப்பட்ட மூலகங்களின் சீரணி அட்டவணை (Periodic Table of Elements)
புரோட்டான் எண்ணிக்கை கூறும் அணு எண்ணை வைத்தே உருவானது.
நீல்ஸ்
போஹ்ர் கூறியது: மூலங்களின் இரசாயனப் பௌதிகப் பண்பாடுகள் அணுக்கருவைச்
சுற்றிவரும் எலெக்டிரான்களைப் பொருத்தவை; அணுவின் திணிவு அல்லது நிறை
[Atomic Mass] அணுக்கருவின் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின்
நிறையைச் சார்ந்தது; மூலகத்தின் கதிரியக்கத்துக் காரணமும் அணுக்கரு தாங்க
முடியாமல் உள்ள ஏராளமான பரமாணுக்கள்தான். ரூதர்ஃபோர்டின் அணு உள்ளமைப்பு
மாடல் எந்திரவியல் முறைப்படியும், மின்காந்த முறைப்படியும் நிலையற்றது
[Mechanically & Electro-magnetically Unstable]. ஆனால் மாக்ஸ்
பிளான்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மற்ற விஞ்ஞானிகளும் விருத்தி செய்த
"குவாண்டம் நியதியை" நீல்ஸ் போஹ்ர் உட்புகுத்தி அணுக்கருவின் "நிலைப்பாடை"
வடித்துக் காண்பித்தார்.
பூர்வீகப்
பௌதிக [Classical Physics] விதிப்பாட்டிலிருந்து விலகி, நீல்ஸ் போஹ்ர் ஒரு
புதிய கோட்பாடை ஆக்கினார்: "எந்த ஓர் அணுவும் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை
கொண்டுதான், தனிப்பட்ட நிலைப் பாடுகளில் நிலவி வருகிறது." [Any atom could
exist only in a discrete set of stable or stationary states by a
definite value of its energy]. இதுவே போஹ்ர் அணு உள்ளமைப்பு மாடல்
என்றும் கூறப்படுவது. போஹ்ர் விளக்கிய அணுவின் குவாண்டம் நியதி இதுதான்.
ஹைடிரஜன் அணு வெளிவிடும் ஒளிப்பட்டைக் கோடுகளுக்கு [Series of Lines
observed in the Spectrum of Light emitted by Atomic Hydrogen] அந்த
நியதி விளக்கம் கூறியது. அந்த ஒளிப்பட்டைக் கோடுகளின் அதிர்வுகளை
[Frequencies] வெகு துல்லியமாக அந்த நியதி மூலம் கணித்துக் காட்டினார்.
அந்த அதிர்வுகளை அணுவின் எலெக்டிரான் மின்கொடை, திணிவு மூலமாகக் கணித்தார்
[In terms of the charge & mass of the Electron]. அவற்றை எடுத்துக்
காட்ட போஹ்ர் கூறியது: அணு தனது நிலைப் பாடில் உள்ளபோது எலெக்டிரான்
கதிர்வீச்சு வெளியாக்கு வதில்லை. எலெக்டிரான் பரமாணு ஒரு நிலைப்பாடி
லிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போதுதான், கதிர்வீச்சை உமிழ்கிறது.
+++++++
தகவல்:
1. The World of Science, The Paragon Publishing, UK (2006)
2. The Biographical Dictionary of Scientists By: David Abbott. Ph.D. (1984)
3. Encyclopaedia of Britannica (1978)
4. Britannica Concise Encyclopedia (2003)
5. Wikipedia – Niels Bohr (February 24, 2011)
6. http://www.cosmosmagazine.com/news/quantum-atoms-dance-chaos/ [August 12, 2012]
7. http://science.energy.gov/bes/highlights/2012/bes-2012-10-c/ [Oct 2012]
8. http://m.phys.org/news/2013-06-atoms.html [The Dance of Atoms] June 10, 2013
10. http://www.nature.com/nmat/journal/vaop/ncurrent/full/nmat3667.html [Provided by Vienna University of Technology]
11. http://www.theverge.com/2013/5/1/4287044/ibm-a-boy-and-his-atom-stop-motion-film
12 http://www.nature.com/nmat/journal/vaop/ncurrent/full/nmat3667.html [Dec 12, 2012]
13 http://www.spacedaily.com/reports/The_Dance_of_the_Atoms_999.html [June 13, 2013]
+++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2013)] (Revised R-2)
No comments:
Post a Comment