வெள்ளாடு வளர்ப்பு - சில பயனுள்ள குறிப்புகள்
ஆட்டுப்பண்ணைகள் வைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான முறையான பயிற்சி பெற வேண்டும். அதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, அங்கே கிடைக்கும் பயிற்சியின் வாயிலாக நீங்கள் ஒரு சிறந்த வெள்ளாடு வளர்ப்பாளராக பரிமளிக்க முடியும்.
ஆட்டுப்பண்ணை வைக்க தற்போதைய சூழலில் 10 ஆடுகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.
வகைப்படுத்தப்பட்டு தனியாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகள். |
ஆடு வளர்ப்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான மேய்ச்சல் நிலம் மற்றும் தீவன வகைகளை பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பே தயார் செய்ய வேண்டும். ஆடுகளை வாங்குவதற்கு முன்பு அதற்குத் அடிப்படைத் தேவையான தீவனத்தை முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும். தீவன வகைகளை என்று எடுத்துக்கொண்டால் சுபா புல், அகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, வேம்பு என ஐந்து மரங்களாவது குறைந்த பட்சமாக இருக்கவேண்டும்.
தலைசேரி இன குட்டிகளுக்கென தனிப்பட்ட கொட்டகை.. |
இத்தீவன வகை மரங்களின் வளர்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள். வெள்ளாடுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டாம். அது பலசுவை விரும்பிகள், பல்வேறு புற்களையும், இலைதழைகளையும் தின்று வளர்பவை.. எனவே தொடர்ந்து ஒரே வகையான தீவனத்தை கொடுப்பதற்கு மாற்றாக சில வகைகளை தீவனங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் அதற்கும் வயிறு நிரம்பிய திருப்தி இருக்கும். எனவே முதலில் இதை நீங்கள் உங்கள் நிலத்தில் வளர்த்துக்கொண்டு பிறகு ஆடுகளையும், பண்ணையையும் தயார் செய்யலாம்.
தீவன வகைகள் |
தீவன வகைகள் |
ஆடு வளர்ப்பது என்று முடிவாகிவிட்டது. எப்படித் தொடங்குவது?
இதற்கு அரசும், அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள்.. ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை, நீங்கள் நான் முன்பே கூறியபடி உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.
இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.
மேலும் சில குறிப்புகள்: ஆடு வளர்ப்பில் முதலிடம் பெறுவது ஈரோடு மாவட்டம். இரண்டாம் திருநெல்வேலி. மூன்றாம் இடத்தில் சேலம் மாவட்டமும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் சிறப்பாக ஆடு வளர்ப்பு தொழில் நடந்துவருகிறது.
மேய்ச்சல் நிலங்கள் ரியல் எஸ்ட்டேட் போன்ற தொழில்களால் அருகி வருவதால் ஆடு வளர்ப்போர் , வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இதுபோன்றதொரு பண்ணை அமைத்து ஆடுவளர்ப்பதன் மூலம் தங்களின் தொழில்களைத் தொடரவும், வருவாயை இழக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பெரிய ஆட்டுச் சந்தைகள் : மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி
மேற்கண்ட இடங்கள் அனைத்தும் அதிகளவு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான ஆட்டுச் சந்தைகளாகும்.
நாமக்கல் மாவட்டத்திற்கான வேளாண்மை விரிவாக்க மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முகவரி:-
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் மையம்
கால்நடைக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம்
எஸ்.கரடு (அஞ்சல்)
நாமக்கல் – 637001
தமிழ்நாடு
போன் : 04286 – 266345 / 231626
ஃபேக்ஸ்: 04286 – 266345 / 266484
ஈமெயில் : namakkalkvk@hotmail.com
சேலம் மாவட்டத்திற்கான வேளான் அறிவியல் மையத்திற்கான முகவரி:-
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் மையம்
சந்தியூர் – 636204
சேலம் மாவட்டம்
தமிழ்நாடு
போன்: 0427 – 2422550
ஃபேக்ஸ் : 04268 – 2422269
மேலும் விபரம் வேண்டுவோர்.. உங்கள் அருகாமையில் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகுங்கள். நன்றி.!!
No comments:
Post a Comment