Saturday, June 29, 2013

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு  புது எண்ணெயுமேஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.இந்தக்  குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
எண்ணெய் என்பது கொழுப்பு... கொழுப்பு ஏன் தேவை?
உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்
பாதுகாப்பதற்கு...
புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள்  என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய்வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள்  போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என  கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு  நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு  படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை  அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப
நிலையில்
கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.
பெயர்               கொழுப்பின் அளவு (100 கிராமில்)    ஆற்றல்    மினரல்ஸ்
வெண்ணெய் நெய்    81 கிராம்    729 கிலோ கலோரிகள்    2.5 கிராம்
பாமாயில்
                  100 கிராம்    900 கிலோ கலோரிகள்    800 ணுரீ அல்லது னீநீரீ பீட்டா கேரட்டின் (வைட்டமின் )
வனஸ்பதி
மற்றும்
இதர
சமையல்
எண்ணெய்கள்    100 கிராம்    900 கிலோ கலோரிகள்    இல்லை எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?
பாமாயில்
1 கிராம் பாமாயிலில், 800 ணுரீ அல்லது னீநீரீ  பீட்டா கேரட்டின் (வைட்டமின் ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட்  கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.
சூரியகாந்தி எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.
கடலை எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில்  அளவுக்குக் கெடுதலானது அல்ல.
தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.
நல்லெண்ணெய்
இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை  கொண்டது.
ஆலிவ் ஆயில்
இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
கடுகு எண்ணெய்
ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லதுகடுமையான வாசம் காரணமாக, நம்மூர்  மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும்  அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்  நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய்வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.
உபயோகித்த  எண்ணெயா..? உஷார்!
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால்,  ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால்கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம்பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக்  கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!
எப்படி உபயோகிக்க வேண்டும்?
நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லதுமாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை.
உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால்  எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.
எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.
தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை  ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

குரும்பை உதிர்வு

குரும்பை உதிர்வு

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க 
தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.
காரணங்கள்:
குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் நிர்வாகக் குறைபாடு போன்ற காரணங்களைக்குறிப்பிடலாம்.
மண்ணின் குணம் :
மண்ணின் கார, அமிலத் தன்மை 5 சதத்துக்கு குறைவாகவோ அல்லது 8 சதத்துக்கு அதிகமாகவோ இருக்கும்போது, குரும்பைகள் கொட்டுவது இயல்பாகும்.
ஆகையால், அமிலத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து இட்டும், காரத்தன்மை அதிகமிருக்கும் மண்ணில் ஜிப்சம் இட்டும் உவர், களர் தன்மையச் சரிசெய்யலாம்.
கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்: யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும்.
மேலும், தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட் செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்கச் செய்யும்.
தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்ணூட்டக்கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.
தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்னூட்டக் கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.
நீர் நிர்வாகக் குறைபாடு:
மார்ச் ஏப்ரல் மாதங்களில் அதிகமாகக் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது. கடுமையான வறட்சி மழை பெய்த பின்பும் அல்லது நீண்ட காலமாக நீர் பாய்ச்சாமல் பராமரிப்பின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் குரும்பை பிடிப்பு அதிகம் இல்லாமலும், மட்டைகள் துவண்டு தொங்குவதும் காணப்படும்.
தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதற்கு போதுமான வடிகால் வசதி செய்தல் அவசியமாகிறது. இல்லாவிடில், இளம் கன்றுகள் வளர்ச்சி குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. மேலும் வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதற்கான வாய்ப்பு உருவாகிறது. நவம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை தொடர் நீர்ப்பாசனம் மற்றும் நல்ல வடிகால் வசதியும் செய்தால், 6 முதல் 9 ஆண்டுகள் வரை நல்ல நிலையான மகசூல் கிடைக்கும்.
மகரந்த சேர்க்கை குறைபாடு :
தென்னையில் அயல் மகரந்த சேர்க்கையில் கருவுறுதல் ஏற்பாடு, குரும்பைகள் காய்களாக வளர்ச்சி பெறுகின்றன. காற்றினாலும், தேனீக்கள் போன்ற பூச்சிகளாலும் தென்னையில் அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்கிறது.
அதிக மழை பொழிவால் மகரந்தச் சேர்க்கையின்மை மற்றும் மகரந்த சேக்கை ஏற்படுத்தும் காரணயின்மையினாலும் குரும்பைகள் உதிர்கின்றன.
பயிர்வினை ஊக்கிகளின் குறை மற்றும் தேவை:
குரும்பைகள் வளர்ச்சிக்கு பயிர் வினை ஊக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி தேவையான அளவுக்கு இல்லாத போது குரும்பைகள் உதிர்வதுண்டு.
பயிர் வளர்ச்சி ஊக்கியான நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து அரை மில்லி அளவை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிப்பதன் மூலம் தடுக்கலாம்.
பூச்சிகள் மற்றும் நோய்கள்:
பாளைகள் வெடித்து குரும்பைகள் கருவுறும்போது, சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பூசணத்தினால் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
பொதுவாக, கொலிடோடிரைகம் பூசணத்தினால் குரும்பைகளின் திசுக்களில் பசை வடிவத்தில் ஏற்பட்டு உதிர்வு ஏற்படுகிறது.
மேலும், அஸ்பொஜில்லஸ் பென்சிலியம், பைட்டோப்தோரா, ப்யுஸோரியம், பெஸ்டலேசியா போன்ற பூசணங்களினாலும் குரும்பைகள் உதிர்வு ஏற்படுகிறது.
இந்தக் காரணங்களை கண்டறிந்து தேவையான மருந்துகளை அளவுடன் உபயோகிப்பதன் மூலம் குரும்பைகள் உதிர்வதை தடுக்கலாம்.
போரான் குறைபாடு:
போரான் என்ற நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் தென்னை இலைகள் சிறுத்து, விரிவடையாமல் காணப்படும். இது கொண்டை வளைதல் அல்லது இலை பிரியாமை என்று அழைக்கப்படுகிறது.
சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்று பின்னிக் கொண்டு வெளி வர இயலாத நிலையில் காணப்படும்.
சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
மேலும், வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும். குறைபாடு முற்றிய நிலையில் குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.
இதைத் தவிர்க்க, மண்ணில் 250 கிராம் போராக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தனியே வைத்து (மற்ற உரங்களுடன் கலக்காமல்) இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக இட வேண்டும். ( அல்லது ) வேர் மூலம் 25 மில்லி அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குரும்பை உதிர்வதின் காரணங்களைக் கண்டறிந்து உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டு நல்ல மகசூல் பெறலாம்.
தகவல்: எம்.பெருமாள், வேளாண்மை இணை இயக்குநர், புதுக்கோட்டை, [தினமணி நாளிதழ், நாள்:14-06-2012]
தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

நாவல் பழம்!

நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழமரத்தை பார்த்தே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். கிராமங்களில்  சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (eugenia jambos)ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இந்தியாவில் வறண்ட பகுதிகள் தவிர நாவல் மரம் அனைத்து இடங்களிலும் வளரும். இதன் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மை கொண்டது இந்த மரம். இந்த மரத்தைக் கொண்டு விவசாய கருவிகள் செய்யலாம். பெரும்பாலும் ஒட்டுச் செடிகள் மூலமும், விதைகள் மூலமும் செடிகள் உண்டாக்கப்படுகின்றன. நாவல் பழங்கள் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மரத்தில் பழுத்து கிடைக்கின்றன. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.

பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும். 

ஆனால் பழம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பழங்களை அளவுடன் உண்ண தர வேண்டும்.

சிலருக்கு இந்த பழங்களை உண்ணும் போது தொண்டைக்கட்டும் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.

விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.

இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச்கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும்.

வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் த்ரும்.

நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0
பாஸ்பரஸ் 15
இரும்பு 1.2
தயமின் 0.03
நியாசின் 0.2
வைட்டமின் சி 18
மெக்னீசியம் 35
சோடியம் 26.2
பொட்டாசியம் 55
தாமிரம் 0.23
கந்தகம் 13
குளோரின் 8
ஆக்சாலிக் அமிலம் 89
பைட்டின் பாஸ்பரஸ் 2
கோலின் 7
கரோட்டின் 48
இந்த சத்துக்கள் எல்லாம் பொதுவாக உடலில் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இந்த சத்துக்களை தெரிந்து கொண்டால் தான் ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் இந்த சத்துக்களின் அளவை வைத்து நமக்கு எந்த சத்துள்ள பழம் அதிகம் உண்ணத்தகுந்தது என்று தெரிந்து கொள்ள முடியும்.

Friday, June 28, 2013

Artificial groundwater recharge helps to overcome water shortage

Artificial groundwater recharge helps to overcome water shortage

Gujarat state India is characterized by arid/semi-arid climate with hot and dry pre-monsoon summer months (March-May) followed by well-experienced monsoon (June-September). The annual rainfall pattern is quite varying i.e. about 1480 millimeter in south Gujarat, 700-800 millimeter in central Gujarat and 250-350 millimeter in North Gujarat and Kutch region. The state experiences drought during the crop growth period and at times crop failure occurs mainly due to limited availability of irrigation water.  The total groundwater recharge of Bharuch and adjoining districts has been estimated at 499 million cubic meters per year, of which 100 million cubic meters per year is utilized for domestic and industrial use, resulting in about 399 million cubic meters per year utilizable groundwater recharge. 
The Karnal (Haryana) based Central Soil Salinity Research Institute (CSSRI), with its Regional Research Station (RRS) at Bharuch, Gujarat has designed artificial groundwater recharge structures for better harnessing rainwater in Bharuch and Narmada districts mainly for cultivation purposes. CSSRI works under the aegis of Indian Council of Agricultural Research (ICAR), New Delhi. 
Dr. G. Gururaja Rao, Head, CSSRI, RRS, Bharuch along with Dr. D.K. Sharma, Director, CSSRI, Karnal and Dr. S.K. Kamra, Head, Division of Drainage and Irrigation Division, CSSRI, Karnal and other scientific team at Bharuch indicated that surface water is inadequate to meet the demands, farmers have to depend on groundwater. So the groundwater recharging through recharge wells in rainfed areas can be a boon for the farmers by enabling them to take crops during moisture stress periods and improve their socio-economic condition. They can also go for remunerative crops due to availability of good quality water resulting from the groundwater recharging.

The CSSRI, RRS, Bharuch has installed 15 artificial rainwater recharge wells at farmers’ fields in Bharuch and Narmada districts of Gujarat through the financial assistance from the Ministry of Water Resources, Government of India under the project entitled “Farmers’ Participatory Research on Enhancing Groundwater Recharge and Water Productivity in North-Western India (FPARP)”.
“Excavation of artificial rainwater recharge wells of 400 mm bore, lowering of 110 mm outside of PVC pipes, two blank and three strainers and filling with aggregates 8-20 mm, followed by compressor to a depth of 100 ft showed rise in water-table levels with significant improvement in the water quality” said the team of scientists at Bharuch.
The technology is cost effective and easy to install in the fields and is more suitable for regions falling in arid and semi-arid climate having moderate to heavy textured soils of Gujarat.
A case study
Growing crops using ground water used to be a difficult experience for Shri Kaushikbhai Patel, a farmer from Borebhata village, Bharuch district, Gujarat. He had Banana and Papaya in about 11.5 acres and vegetables in 1.2 acres of land. He had one tube well for the groundwater irrigation which is rich in salts (EC about 1.9 dS/m; TDS 1219 ppm) prior to monsoon (June 2008) and not enough to provide irrigation throughout the cropping season.
The artificial rainwater recharge well constructed at his farm under the guidance and support of CSSRI, RRS, Bharuch brought cheers to the farmer as he could succeed in harnessing the rain water runoff from his farm during the monsoon.  The groundwater recharging during the years 2008 and 2009 monsoon had resulted in reduction in salinity (EC) to 0.3 dS/m (TDS 192) and (0.4 dS/m (TDS 256), respectively, thus indicating the improvement in groundwater quality of his tube well.
Shri Patel’s average income from banana from seven acre was Rs. 80000/- per acre prior to the installation of recharge well. Since the installation of recharge well, the income has increased by Rs. 30000/- per acre i.e. 37.5 per cent high. “Prolonged groundwater availability as well as improved water quality has resulted in increased farm income” said Shri Patel. Similarly, income from Papaya has increased from Rs. 140000/- per acre to Rs. 160000/- per acre with an increase of 14.3 per cent. Vegetables, however, are grown to meet the domestic needs and to fetch additional revenue to meet the domestic expenses.
The farm which had been under drip irrigation has also not encountered the frequent clogging of emitters and thus there is a saving on the cleaning of the drip system. The farmer is of the opinion that the groundwater recharging work taken up by CSSRI RRS has helped him in overcoming the water shortage and the water quality problems such as salinity.
(Source: NAIP-Mass Media Project, DKMA with inputs from CSSRI-RRS, Bharuch and the consortium partner DMAPR, Anand)

Monday, June 24, 2013

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.
இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகாக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.
அரச இலை:- ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.
பூவரசு:- நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.

செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது

செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது

  Thanks : சி. ஜெயபாரதன்
Water flow in Mars -1
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் [Mars Science Laboratory] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு நிச்சய சான்றைக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள்தான் [Sedimentary Conglomerates] மற்றோர் அண்டக்கோளில் முதன் முறை கண்டுபிடிக்கப் பட்ட உறுதிப்பாடு.
ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]
நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை பூதளவியல் நிபுணர் நீரோட்டத்தின் கொள்ளளவையும், நீரின் ஆழத்தையும்,  ஓடும் வேகத்தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட நீரோட்டச் சான்றின் வேகம் : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3மைல்]
ரிபெக்கா வில்லியம்ஸ்
செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.
ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]
“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”
டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)
“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.
ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)
Pebbles in Mars
தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.
ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)
(2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.
ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)
Martian water

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o   [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]
“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.
“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”
பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.
“ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”
ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.
“ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”
ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பலகலைக் கழகம்

“பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது. ‘
ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]
Water flow in Mars -2
செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 
கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார்.
ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.   அதாவது செந்நிறக் கோளில் நிகழும் "தூசிப் புயல்களே " [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன.
நாசாவின் செவ்வாய்த் தளவுளவி "கியூரியாசிட்டி" செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !
fig-1b-maven-spacecraft-instruments
செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது !
பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் !
fig-1c-climate-orbiter-equipment
மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?
2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்
1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற்றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.
2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவுகளை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.
3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது.
4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.
மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்
செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங்களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்படும்.
நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.
புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.
மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்
மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.  மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :
1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.
2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.
3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.
4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.
5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.
6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)
7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.
8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.
9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.
10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).
fig-1g-climate-orbiter-details
முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !
பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கிலிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :
. . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.
. . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)
. . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)
. . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)
. . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.
fig-2-mars-earth-atmospheres
ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !
செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !
fig-5-mars-climate-orbiter-1-assembly
1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !
++++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts)
20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ·பீனிக்ஸ் தளவுளவி)
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)
26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]
27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)
28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)
29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)
30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)
31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)
33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)
34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)
35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)
37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]
38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)
39. http://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA's Land Probe -Curiosity [August 2012]
40. Daily galaxy : Mar's Methane Debate - A Sign of Life or a Mirage ? [September 11, 2012]
41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]
42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars' Missing Atmosphere [November 2, 2012]
43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/ [September 27, 2012]
44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]
45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]
46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]
47.  http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html  [June 4, 2013]
48.  http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars [June 6, 2013]