Monday, March 5, 2012

நடமாடும் பணம் நாட்டு கோழி

 நடமாடும் பணம் நாட்டு கோழி
நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரும் சுய தொழில் ஆகும். நாட்டுக்கோழிகளை அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம்.பெண்கள் பகுதி நேர தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பை செய்ய்லாம்.தற்போது புறக்கடை கோழிகள் எந்த வித நவீன தொழில்நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிற்து.அதனால் தேவையான் சத்துக்கள் கிடைக்காமல் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது.எனவே கீழே குறிப்பிட்டுள்ள சிறந்த தொழில்நுட்ப்முறைகளை நாட்டுக்கோழி வளர்ப்போர் பின் பற்றி அதிக் இலாபம் பெறாலாம்.

முட்டைகளை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்

பெரும்பாலும் கோழிகள் பகல் நேரங்களிலேயே முட்டையிடும்.பொதுவாக முட்டைகளை உணவுதானிய பானைகளில் வைத்துதான் பாதுகாக்கிறார்கள்.இப்படி பாதுகாத்து அடைக்கு வைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக உள்ளது.எனவே முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறனை அதிகரிக்க, ஒரு இரும்பு ச்ட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கை போட வேண்டும். முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி போட்டு மூடவேண்டும்.இவ்வாறு பாதுகாக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் 97 சதவிகிதகம் வரை இருக்கும்.

அடை வைத்தல்

சிறிய முட்டைகளையும் முதலில் இடும் முட்டைகளையும் அடைக்கு வைக்கும் போது குஞ்சு பொரிப்பு சதவிகிதம் குறைவாக இருப்பதால் இதனை அடைக்கு வைக்காமல் உணவுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.


கோழிகளுக்கு தகுந்தாற் போல் 10 முதல் 12 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும்.அடை வைக்கும் கூடையை அறையின் இருட்டான பகுதியில் வைக்க வேண்டும்

குஞ்சு பொரிப்பான் இயந்திரம் மூலம் அடைவைத்து ஆரோக்கியமான குஞ்சுகளை பெறலாம்.தற்போது 100 முட்டைகள் முதல் 500 முட்டைகள் வரை அடை வைக்கும் திறன் உடைய இயந்திரம் கிடைக்கின்றன.( இயந்திரம் தேவைபடுவோர் அனுக வேண்டிய மின்னாஞ்சல் முகவரி .vtjana07@gmail.com, K.Venkatesh venkat998877@gmail.com )

கருக்கூடிய முட்டைகளை கண்டறிதல்

பெரும்பாலும் அடை வைக்கும் எல்லா முட்டைகளும் பொரிப்பதில்லை அதனால் கருக்கூடா முட்டைகள் வீணாகின்றன. இதை தடுக்க அடை வைத்த ஏழாம் நாள் முட்டை கருக்கூடிவிட்டதா இல்லையா என்பதை கண்டறிந்து கருக்கூடாத முட்டைகளை உணவுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்கு,நோட்டு அட்டையில் முட்டை அளவுக்கு துவாரம் இடவேண்டும். நோட்டு அட்டையின் மேல் பகுதில் முட்டையை வைத்து கீழ் பகுதியில் ஒரு டார்ச் விளக்கு ஒளியை பாய்ச்ச வேண்டும். கருக்கூடிய முட்டையில் வெளிச்சம் பாயும் போது முட்டையின் கரு கருப்பாக இருப்பதுடன் அதிலிருந்து சிவப்பாக இரத்த கோடுகள் செல்வதை காண முடியும். கருக்கூடாத முட்டை மஞ்சள் நிறமாக இருக்கும்.

இளம் குஞ்சு பராமரிப்பு

குஞ்சு பொரித்தவுட்ன் முதல் ஒரு மாதம் மூங்கில் கூடையில் அடைத்து பாதுகாக்க வேண்டும். குஞ்சு பொரித்த பிறகு எஞ்சிய மஞ்சள் கரு கரைவதற்க்கு வெப்பம் தேவைப்படும். போதிய அளவு வெப்பம் கிடைக்கவில்லை என்றால் குஞ்சுகள் இறந்துவிடும்.இதனால் ஒரு மாதம் மூங்கில் கூடையில் அடைத்து 100 வாட் மூலம் வெப்பம் அளிக்க வேண்டும்.

தீவன பராமரிப்பு

கோழிகளுக்கு தினமும் மேய்ச்சலுடன் 50 கிராம் தீவனம் அளித்து வந்தால் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

சோளம் (அ) கம்பு 500 கிராம்
தவிடு 300 கிராம்
புண்ணாக்கு 150 கிராம்
தாது உப்பு 20 கிராம்

நோய் தடுப்பு
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.

வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும்.

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப்பழங்களில் கால்ஷியம் சத்துஅதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே,கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப்பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம்,அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.சிகிச்சைகள்கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது,அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy),பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம்50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

எளிய பொருட்களில் அரிய விஷயங்கள்!

ஒரு வயலின் கம்பியில் வடிவெடுத்தது முதல் டேப் ரிக்கார்டர். இரண்டு அடுப்புக் கரித் துண்டுகளில் உருவெடுத்தது முதல் மைக்ரோபோன். இவற்றையெல்லாம் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உலகின் எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளும் இப்படித்தான் உருவாகின.
எண்ணத்தைச் செயலாக்கும் திறன் விஞ்ஞானிக்கு இன்றியமையாததாகும். ஒருவன் அறிவில் சிறந்தவனாக இருக்கலாம். சிறப்புக்குரிய பல கருத்துகளைக் கொண்டவனாக இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்துகள் நடைமுறையில் செயல்படுத்தப்படாத வரையில் வெறும் யோசனைகளாகவே இருக்கும். கண்டுபிடிப்புகள் ஆவதில்லை.
நம்மிடம் விஞ்ஞான யோசனைகள் இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்த நிறையப் பணம் வேண்டும், பெரிய ஆய்வுக்கூடத்தை நிறுவ வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞான வரலாற்றைப் பார்க்கும்போது உலகில் தோன்றிய பல அரிய பெரிய கண்டுபிடிப்புகள் யாவும் சாதாரண விஷயங்களில் தோன்றியவையே என்பது விளங்கும். ஒருவருடைய திறமையும், சமயோசிதமுமே அவரது கருத்துக்கு உயிரூட்டும்.
கருத்துக்கு எளிதில் உருவளிக்கும் மதிநுட்பமே செயல்திறனாகும். டேப் ரிக்கார்டரின் கதை அத்தகையதே. டேப் ரிக்கார்டரின் தத்துவத்தை முதன்முதலில் கண்டவர் பால்சன் என்பவர். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. `உருக்குத் துண்டில் ஏற்றப்பட்ட காந்த சக்தி நிலையானதாக அமைகிறது. உருக்குத் துண்டை மின்சக்தி கொண்டு காந்தமாக ஆக்கலாம். அப்படியானால், ஏன் மாறுபடும் ஒலி மின்சாரத்தை (Voice currents) மாறுபடும் நிலைக்காந்தப் பகுதிகளாக ஓர் உருக்குக் கம்பியில் பதிக்கக் கூடாது? இதுதான் அவருடைய எண்ணம். ஆம்! ஒரு புதிய கருத்து.
கருத்தைச் செயல்படுத்த வேண்டாமா? அவரிடம் பெரிய சோதனைக்கூடம் இல்லை. அவர் பணக்காரரும் கிடையாது. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
அவரது வீட்டில் உருக்கால் ஆன வயலின் கம்பி ஒன்று, கேட்பாரற்று ஒரு மூலையில் கிடந்தது.
அதை எடுத்து, இரண்டு ஆணிகளுக்கு இடையில் இறுகக் கட்டினார். தேனிரும்பு ஆணி ஒன்றின் மேல் செப்புக் கம்பி சுற்றிய நிலை மின்காந்தத் தலை (Temporary Electromagnetic Head) ஒன்றையும் தயாரித்தார். அந்த மின்காந்தத்தை ஒரு மைக்ரோபோன் பேட்டரி சர்க்யூட்டில் இணைத்தார். மைக்கின் முன் பேசியபடியே கம்பிச்சுருள் சுற்றிய ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நகர்த்தினார்.
பின்னர் பேட்டரியையும், மைக்கையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஒரு பெல் ரிசீவரை பொருத்தினார். இப்போது ரிசீவரை தன் காதில் வைத்து திரும்பவும் ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இழுத்தார்.
என்ன ஆச்சரியம்! அவர் முதலில் பேசிய சொற்கள் ரிசீவரில் மெதுவாகக் கேட்டன. ஆம், கம்பியில் அவை நிலைக்காந்தப் பகுதிகளாகப் பதிந்துவிட்டன. பால்சனின் எண்ணம், செயல்முறையில் நிரூபணமானது. முதல் டேப் ரிக்கார்டரும் பிறந்தது.
அதே போல ஹயூ என்பவர் இரு கரித்துண்டுகளை ஒரு பலகையின் மேல் பதித்தார். கரித் துண்டுகளுக்கு இடையில் மற்றொரு கரித்துண்டை தளர்வாக இணைத்தார். அதை ஒரு பேட்டரி, ரிசீவர் சர்க்யூட்டில் இணைத்தார்.
நடுவில் இணைத்திருந்த கரித்துண்டுக்கு அசைவு ஏற்படும்போதெல்லாம் அது ஒலி அலையாக ரிசீவரில் பிரதிபலிப்பதைக் கண்டார். கரித்துண்டுகளுக்கு அருகில் ஒரு கடிகாரத்தை வைத்தார். `டிக்... டிக்...' என்று கடிகாரத்தின் ஓசை ரிசீவரில் துல்லியமாகக் கேட்டது. முதலாவது மைக்ரோபோனும் உருவானது.

Friday, March 2, 2012

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
குளுமை தரும் நுங்கு
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
துவர்ப்பு சுவை
பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
அம்மைநோய்
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
பதநீரும் நுங்கும்
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.
வேர்குரு போக்கும் நுங்கு
கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

மார்ச் 2


மார்ச் 2
1815 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1836 - டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1855 - இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான்.
1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.
... 1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1970 - ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
1972 - நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
1984 - கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அவராலேயே தொடங்கி வைக்கப்பட்டது.
1991 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார். 1992 - உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் இணைந்தன. 1995 - யாஹூ! தொடங்கப்பட்டது.
1998 - ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
2001 - ஆப்கானிஸ்தானில் பிரமாண்டமான இரண்டு புத்தர் சிலைகளை குண்டு வைத்துத் தகர்த்தனர் தலிபான் ஆட்சியாளர்கள்.
2002 - ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

மார்ச் 1


மார்ச் 1
1565 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1639 - 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரம் பிறந்தது. கூவம் நதிக் கரையில் கடற்கரையோரத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு பண்டகச் சாலையை நிறுவினர். அதைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டைதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
1873 - முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1864 - முதன் முதலில் மருத்துவப் பட்டம் பெற்றார் கறுப்பின பெண் Rebecca Lee
... 1896 - ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899 - இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.
1912 - முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
1936 - ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1953 - ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1975 - ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1977 - சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980 - சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
2002 - ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

Thursday, March 1, 2012

பொட்டுவைத்த முகம் அழகு…!

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.
நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களில் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்கரிக்கின்றன. நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். எனவே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

நீளமான பொட்டு
வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.
இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.
ஓவல் வடிவ முகம்
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.