Wednesday, August 21, 2013

வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்!

வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடிக்கு இது மிகவும் ஏற்ற தருணம். எனவே, விவசாயிகள் வெண்டை சாகுபடி முறைகளைத் தெரிந்து பயிர் செய்தால் அதிக விளைச்சல் பெறலாம்.

வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா,பார்பானி கிராந்தி, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்கள் மற்றும் யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை.
வெண்டையை அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார,அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி- மார்ச் மாதங்கள் ஏற்றவை.
விதையைப் பொருத்தவரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும் தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் : வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாள்களுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்துவிட வேண்டும்.
விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது உன்னதமானது.
ஒருங்கிணைந்த உர நிர்வாகம் : அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இலைவழி உரமளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30-ம் நாள் முதல் பத்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சத கரைசலை விதைத்த 30, 45 மற்றும் 60 -ம் நாள்களில் என மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம்: காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸ் என்ற உயிர்ப் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்கலாம்.
ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டைப் பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். சாம்பல் நிற வண்டுகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.
நூற்புழு தாக்குதல் மண் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக, பிற உரங்களுடன் கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போபியூரான் அல்லது 10 சத போரேட் குருணை மருந்து இடலாம்.
அசுவிணியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மிதைல் ஓ டெமட்டான் அல்லது 2 மி.லி. டைமிதியேட் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது வெள்ளை ஈ எனும் பூச்சியால் வெண்டையில் பரவக்கூடிய ஒரு நச்சுயிரி (வைரஸ்) நோய். எனவே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை வயலில் அமைக்கலாம்.
கோடைக் காலங்களில் இந்நோய் மிக அதிக அளவில் தாக்குமாதலால் இந் நோயைத் தாங்கி வளரக்கூடிய அர்கா அனாமிகா, யு.எஸ்.9ஏ, ஏ.யு.எஸ்.7902 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
சாம்பல் நோய்: நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை: விதைத்த 45-ம் நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம். எனவே, வெண்டை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளைக் கடைப்பிடித்து நிறைவான மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.

தென்னை குருத்தழுகல் நோய்

ஒரு வகைப் பூசணத்தால் வரும் குருத்தழுகல் நோய் தமிழ் நாட்டில் உள்ள தென்னை மரங்களைத் தாக்கும் கொடிய நோய் ஆகும். இன்று தமிழக தோப்புகளில்பல பண்ணைகளில் நீர் குறைந்தாலும் காண்டாமிருக வண்டுகள் தாக்குதலாலும், குருத்தழுகல் நோயாலும் அழிந்துவருகின்றன. பல விவ சாயிகள் இந்நோய் தாக்கிய மரங்களைப் பராமரிப்பதை நிறுத்திவிடுகின்றனர்.
இளம் வயது மரங்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. முதலில் இந்தப்பூசணம் தென்னையின் குருத்துப்பகுதியைத் தாக்குகிறது. பூசணத்தின் விதைகள் போன்ற ஸ்போர்கள் குருத்துப்பகுதியில் விழுந்ததும், முளைத்து பூசண இலைகளை வளரச்செய்து குருத்தில் பரவுகிறது. இதன் இழைகளும் விதைகளும் தாக்கப்பட்ட பகுதிகளில் பல மாதங்கள் வரை உயிருடன் இருக்கும்.
இந்த விதைகளும் இழைகளும் பலவித பூச்சிகள் மூலம் தென்னை மரங்களுக்கும் பரவும். தாக்கப்பட்ட மரங்களில் முதலில் ஒருசில இளம் ஓலைகள், அதுவும் நடுப்பகுதியில் உள்ளவை மஞ்சள் நிறம் அடையும். இலைகளின் அடிமட்டைகள் எளிதில் அழுகி வலுவிழக்கும். கையால் பிடித்து இழுத்தால் பிரிந்து வந்துவிடும்.
பின் சுற்றியுள்ள இலைகளுக்கும் நோய் பரவிவிடும். இந்த இலைகளில் சிறு பள்ளங்கள் கொண்ட புள்ளிகள் தோன்றும். குருத்து அழுகியதும் ஒருவித துர்வாசனை தோன்றம். ஒரு வாரத்தில் குருத்தை அழுகச் செய்துவிடும். குருத்து தோன்றும் வளர்ச்சிப்பகுதி அழிக்கப்பட்டு, மரமே வாடிவிடும்.
வெப்பம் குறைந்த காலங்களிலும் மழைக்காலங்களிலும் இந்நோய் அதிகம் தாக்குகிறது. இதனைத் தவிர்க்க எந்த மரத்திலாவது இளம் இலைகள் மஞ்சளாகத் தொடங்கியதுமே குருத்து அழுகல் நோய் வந்துள்ளதா என மரத்தில் ஏறி நின்று பார்க்க வேண்டும். அப்படி ஆரம்பித்திருந்தால் "அழுகிய பகுதியை' நீக்கிவிட்டு நீக்கிய பகுதியில் திமில் போர்ட்டோ பசையைத் தடவ வேண்டும். பாதிக்கப்பட்ட இலை களை பிரித்து எடுத்துவிட்டு, இலைகள் ஒட்டியிருந்த பகுதியிலும் போர்ட்டோ பசையைத் தடவ வேண்டும்.
மற்ற இலைகள் நன்கு நனையும்படி போர்ட்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். பண்ணையில் உள்ள இதர மரங்களுக்கும் போர்ட்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். போர்ட்டோ கலவை தயாரிக்க முடியாவிட்டால் காப்பர் ஆக்சி குளோரைடு (புளூ காப்பர் பைடொவான் போன்றவை) மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மருந்து என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தை ஈரமாக்கி பச்சையாகவும் போர்ட்டோ கலவைக்குப் பதிலாக குருத்திலும் இலை பிரிந்த இடத்திலும் தடவலாம்.
மரத்தில் ஏறி மருந்தைத் தடவ முடியாத நிலை இருந்தால் வேர் மூலம் மருந்தைச் செலுத்தி ஓரளவு கட்டுப்படுத்தலாம். நோய் ஆரம்ப நிலையில் இருக்கும் மரங்களிலும் நோய் இன்னும் பரவாமல் இருக்கும் மரங்களிலும் இதைப்பயன்படுத்தி நோய் வருமுன் காப்பதையும் செய்யலாம்.
தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் மண்ணை வெட்டி, நல்ல ஆரோக்கியமான பழுப்பு நிறமுள்ள பென்சில் தடிமனுள்ள ஒரு வேரைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வேரை கீழ்ப்பகுதியில் வெட்ட வேண்டும். பின் மரத்துடன் இணைந்திருக்கும் வேரை மருந்து கலந்த நீரில் நுழைத்து வைக்க வேண்டும். இதற்கு ஒரு பாலிதீன் பையில் 25 மி.லி. தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 15 கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைடிமார் 15 மி.லி. என்ற அளவு நோய் மருந்தில் ஒன்றை கரைத்துக் கொள்ள வேண்டும்.
 

பாலிதீன் பைக்குள் அந்த வேரை நுழைத்து வேரின் வெட்டிய முனை மருந்துக் கலவையின் அடிப்பகுதியை தொடும்படி வைத்து கட்டிவிட வேண்டும். பாலிதீன் பையின் வாய்வழியாக மருந்துக்கலவை கொட்டாமல் இருக்கும்படி இணைத்துக் கட்டிவிடவேண்டும். அதன்பின் அந்த மருந்துப்பையோடு வேரை மண்ணிற்குள் வைத்து மண் போட்டு மூடிவிட வேண்டும். மருந்து வைத்த 24 மணி நேரத்திற்குப் பின் மண்ணைத் தோண்டி அந்த மருந்து முழுவதும் வேரால் உறிஞ்சப்பட்டுவிட்டதா எனப் பார்க்க வேண்டும். 
உறிஞ்சப்படாமல் இருந்தால் வேறு ஒரு நல்ல வேரைத் தேர்ந்தெடுத்து மீண்டும் மருந்துக் கலவையைக் கட்ட வேண்டும். 10 அல்லது 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை வேர் மூலம் மேலே கூறிய மருந்துகளில் ஒன்றை மாற்றி மற்றொன்றைக் கொடுக்க வேண் டும். குருத்தழுகல் நோய் சரிவரக் கட்டுப்படாவிட்டால், விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை வளர்ச்சி வாரிய நிபுணர்களைக் கலந்து, அதற்கேற்றபடி அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.

Monday, August 19, 2013

Small Transporter























பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

பனையை வெட்டினால்....
நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

Photo: பனையை வெட்டினால்....
நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். 

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். 

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... 

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி...!

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்
ரெட்லேடி பப்பாளி...!

கரும்பு, மஞ்சள், வாழைஞ் என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்துஞ் சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.

தினமும் வருமானம்!

எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.


விற்பனைக்கு பிரச்னை இல்லை!

திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.

இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும்.

நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து" விடை கொடுத்தார்.

-25.6.13 பசுமை விகடன் இதழிலிருந்து...

Saturday, August 17, 2013

பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள்

பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள்

  Thanks : சி. ஜெயபாரதன்
What we can do
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது !
பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
பூச்சரித்துக் xcகந்தை ஆனது !
மூச்சடைத்து விழி பிதுக்க
சூட்டு யுகப்போர் மூளுது !
நோய் தொத்தும் பூமியைக்
குணமாக்க மருத்துவம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்து பூமி காக்க
வருவீ ர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிமலைகள்
உருகி, உருகி
உப்பு நீர்க் கடல்தான் உயரும்!
பருவக் கால நிலை சீறி
தாளம் தடுமாறி
வேளை தவறிக் கால  மாறாட்டம்,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர்காலம் குறுகிப் பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !
நிலப்பகுதி நீர்மய மாகும் !
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோசமாகி
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம் !
+++++++++++++++++++++++++
பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.
ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]
Global ocean mean temperature
2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று - ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே "பிளியோசீன்" காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !
ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder's Institute of Arctic and Alpine Research]  
அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.
ஜேம்ஸ் ஒயிட்.
World sharing of gas emiissions
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]
Arctic Ice Retreat
Antarctica
"கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்."
ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]
"கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன."
கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]
Pollution groups
"55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் "சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்" (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது."
ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]
"மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது."
டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்
Global Warming Effects
"உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்."
அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]
Impacts of Global Warming
What Global Warming does
பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் "குளோரோ புளோரோ கார்பன்ஸ்" [Chloro Fluro Carbons (CFC)]
சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்
Global warming family tree
பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?
பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற "புதைவு எருக்கள்" [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.
Deaths due to Natural Disasters
Fig 3 Gore's Presentation
சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !
பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !
1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.
2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.
3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
Green gas Emissions
Impacts
3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.
1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.
2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.
3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.
Earth'a Axis wobbles
Earth's Axis Wobbles
4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.
5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.
6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.
சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !
Save the Earth

தகவல்:
1.  Time Article - The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)
2.  An Inconvenient Truth "The Planet Emergency of Global Warming & What We can Do about it"   By Al Core (2006)
2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)
3.  BBC News "China Unveils Climate Change Plan" [June 4, 2007)
4.  BBC News "China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
5.  BBC News "Humans Blamed for Climate Change." (June 1, 2007)
6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)
9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]
10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]
11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]
12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]
13.  http://www.answers.com/topic/global-warming
14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]
++++++++++++++++++++

Thursday, August 15, 2013

15 August 1947 this was the pictures of India!!!


காற்றிலிருந்து நீர் உற்பத்தி !

காற்றிலிருந்து நீர் உற்பத்தி !

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மையான போர்வெல்களில் தண்ணீர் இல்லை. அரசு போர்வெல்களிலும் அதே நிலை. இதை சமாளிக்கும் விதத்தில் மதுரை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகபடுத்த உள்ளது.

அதாவது காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றும் ‘வாட்டர் மேக்கர்’ என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸிதிரேலியா, அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி காற்றிலிருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், குஜராத், கொல்கத்தா, திரிபுரா மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் வைகை ஆறு பொய்த்து போன நிலையில், இந்த ஆண்டு போதுமான மழையும் கிடைக்காததாலும், வார்டுகளில் இருக்கும் போர்வெல்லில் தண்ணீர் குறைந்ததாலும் இந்த திட்டம் மதுரை மாநகராட்சி மூலம் தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைக்கு வர உள்ளது.

செயல்படும் விதம் அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில், ‘வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு, அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை, 25 டிகிரி செல்ஷியல் முதல், 32 டிகிரி செல்ஷியசிலும், ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில், திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும். 120ல் துவங்கி, 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
"முதலில், குடிநீர் பற்றாக்குறையான பகுதிகளில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து, குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் பலனைப் பொறுத்து, அனைத்து பகுதிகளிலும் ‘வாட்டர் மேக்கர்’ முறையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்று தெரிவிக்கிறார் மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா.

Thursday, August 8, 2013

How to plant a flower bulb

Follow these general rules when planting bulbs:

How to plant a bulb

 

  • Choose a site that has well-drained soil, but which is moist during the growing and flowering season.
  • Plant bulbs generally one to two seasons before they flower (ie Autum-Winter for spring flowering).
  • Under deciduous trees is an ideal spot for many species, including Daffodils, Bluebells and Crocus, as this can be nicely moist and light during the spring, but dry and shady when the bulbs are dormant over the summer.
  • Planting depth: Plant two to three times the bulb height i.e. the tip of a 5 cm (2in) high bulb should be 10-15 cm (4-6in) below soil level.  (In other words, the bigger the bulb the deeper it should be).
  • Loosen the soil slightly in the planting hole so that the roots can penetrate the soil as they grow.
  • Firm them in gently but firmly to avoid them being discovered by birds, squirrels, rats etc
  • Make sure that it is the right way up (roots down, generally the wider end; and shoot on top, generally the narrower end).
  • Allow foliage to die back fully before cutting back or removing, as this allows the plant to gather food and nutrients for blooming the following year.
  • For 'naturalised' bulbs (ie plants growing in seemingly natural drifts) throw them up in the air and plant them in clumps where they land!
  • When planting daffodils to naturalise in grass, plant them in small groups of 4-5 bulbs a few inches apart. It may be easier to remove a sod if doing this into grass.

Who owns what?


சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது

சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது

சூரியன் வெப்பம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது என்பது தெரியவந்துள்ளது. மேலும், சூரியன் வெப்பத்தால் கடல் நீரையும் வற்றி உயிர்கள் படிப்படியாக அழிந்துவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமிக்கு மிக ஆழமான நீர் ஊற்றுகளில் வாழும் நுண்ணுயிர்கள் மட்டுமே உயிர் வாழும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இயற்கை மாறுதல்களால் நீர் வற்றிவிடும், கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிடும்.
கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிட்டால் அதை சுவாசிக்கும் தாவரங்கள் அழிந்துவிடும். தாவரங்கள் அழிந்துவிட்டால் உயிர்களின் அழிவும் தொடங்கிவிடும். இந்த மாறுதல்கள் ஏற்படும் போது பூமியில் இருந்து மனிதன் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களில் குடியேறும் வாய்ப்பும் உள்ளது. திடீர் இயற்கை மாறுதல்கள் அல்லது விண்கற்கள் தாக்குதல் அல்லது நீண்ட கால இயற்கை மாறுதல்கள் போன்ற காரணத்தினாலோ நடக்கலாம். ஆனால் கண்டிப்பாக அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் இருக்கப் போவதில்லை என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிந்துள்ளது.