1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் தபால் வண்டி சேவை கண்டியில் ஆரம்பமாகியது.
1864 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
... 1884 - ஒக்ஸ்ஃபோர்ட் Oxford ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.
1893 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.
1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.
1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1976 - பிக்காசோவின் 119 ஓவியங்கள் பிரான்சில் களவு போயின.
2003 - அமெரிக்க விண்வெளிக் கலமான கொலம்பியா விண்வெளி வெடித்துச் சிதறியது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லாவும் அவர்களுள் ஒருவர்.
2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
No comments:
Post a Comment