விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Monday, June 16, 2014
Saturday, April 19, 2014
NOTA ... None of the Above
நோட்டா பட்டனை பற்றிய சில கருத்துக்கள்:நோட்டா (None of the Above - NOTA; புதிதாக வாக்கு) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். தான் எந்த ஒரு வேட்பாளருக்கும்வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன் வாக்குஎந்திரத்தில் பொருத்தப்படுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதில் நாங்கள் தேடிய வரை உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை..(சின்னங்களில் அதிக வாக்குகள் பெற்றவரே ஜெயித்தவராக அறிவிகபடுவார் என்பதை தவிர)நோட்டா என்பது வாக்களிக்காமலும், யாருமே சரியில்லை எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்குச் சாவடி பக்கமே வராதவர்களை, வாக்குச் சாவடிக்கு வரவழைக்கும் ஒரு முயற்சி. இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று எண்ணுகின்றேன்.அரசியலில் பங்குபெறக்கூடாது, தனக்கு மட்டும் பாதுகாப்பான வேலை வேண்டும் என்று அனைவரும் ஒதுங்கிக்கொள்ளும் நிலை மாறவேண்டும். அது இல்லாதவரை நேர்மையில்லாதவர்கள்தான் அதிகமாக அரசியலில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. நோட்டோ வெற்றிபெற்றுவிட்டது என்று ஒத்துக்கொண்டால்ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லைஎன்றும் பொருள்படுகிறது.அது மிகவும் மோசமான நிலை.அதுமட்டுமல்ல ஒரு நிலையான ஆட்சி கூட இழுபறியாய் குதிரை பேரங்களை போல் நடந்து விட கூடும்...நோட்டோவினால் தோற்கடிக்கப்பட்டால் சில வழி முறைகள் எங்கயோ படித்த நியாபகம் எவரேனும் தெரிந்தால் தயவு செய்து பகிரவும்..இதில் எங்கள் ஆசை கீழ்வருமாறு...இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக நோட்டோகளை விட குறைந்த வாக்குகள் பெற்றவர் மற்றும் அவரின் ரத்த சம்பந்தங்கள்.. அவரின் தொடர்பில் உள்ள மக்கள் மற்றும் அவரது நிறுவனங்களின்/துணை நிறுவனங்களின் ஊழியர், மேலும் அவருடன் வரவு செலவு பாக்கி , பத்திரங்கள் தொடர்பு வைத்தவர் அனைவருக்கும் தேர்தல்களில் தடையை கொண்டு வரலாம்..அல்லது அவர்களை ஜெயிலில் போட்டுவிட்டு அதற்கு பிறகான இத்தனை சதவீத மக்களின் ஆதரவுக்கடிதங்கள் நேரில் சமர்பிக்க பட்டிருந்தால் இருந்தால் நீங்கள் ஜெயிலை விட்டு வரலாம் என்று உத்தரவு போடலாம்... (இதில் விளம்பர சுயேட்சைகளின் அடாவடியும் அடங்கும்..)அல்லது நோட்டோவால் தோற்க்கடிப்படுபவர்களை ஐயாயிரம் மரங்களை பொதுவில் நட்டு பத்து வருடங்கள் வளர்க்க சொல்லலாம்.. அதுவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம்..தேர்தலில் பிரச்சார உதவி செய்யும் நிறுவனங்களை, பொது நிறுவனங்களாக்கலாம்...அல்லது நோட்டோவை விட்டுவிட்டு நடந்த ஆட்சியை முதலில் மக்களிடம் மதிப்பீடு செய்ய வைத்து பின்பு தேர்தல் நடத்தலாம்.. குறைவாக மதிப்பீடை பெற்றவர்களுக்கு/கட்சியை சேர்ந்தவர்களுக்குவாழ்நாள் தடைவிதிக்கலாம்..எந்தவொரு கட்சியில் சேருபவர்களைஅரசு நிறுவனங்கள் மூலம் ரிகார்ட் செய்து (ஜாதி மற்றும் வருமான சான்றிதழ்களை போல ) அவர்களையும் அந்த கட்சியை சேர்ந்தவர்களாக கருதி தேர்தல் தடை விதிக்கலாம்...இன்னும் உங்கள் யோசனைகளை இங்கே பதிவு செய்ய ஆசைப்படும் உங்கள் க.மை. லா..
Wednesday, March 12, 2014
Tuesday, February 25, 2014
மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்
நீலிப்பெக்) மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பொறி வண்டுகள் உள்ளன.
கிரிப்டோலெமஸ் ஒருவகை, ஸ்கிம்னஸ் என இரண்டுவகை பொறி வண்டுகள் உள்ளன கிரிப்டோலெமஸ் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 250 வண்டுகள் வரை விடனும் அவற்றை பிரித்து முதலில் 125 வண்டுகள் ஒரு செடிக்கு 2-3 வண்டுகள் மாலை வேளையில் விடவேண்டும்
ஸ்கிம்னஸ் பொறிவண்டு என்றால் 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடனும் இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை தெளித்து கட்டுப்படுத்தலாம்
அல்லது இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி, அசிப்பேட் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடித்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.






Tuesday, February 18, 2014
Boysenberries
Never heard of them ? Well I hadn't until recently. Not something we have in Thailand, but pity as they look delicious and very healthy it seems.
A boysenberry is a cross between a European Raspberry, a Common Blackberry, an American Dewberry and a Loganberry. Its exact origins are not fully known but it seems to have be an American berry which appeared in California the 1920's.












