நோட்டா பட்டனை பற்றிய சில கருத்துக்கள்:நோட்டா (None of the Above - NOTA; புதிதாக வாக்கு) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். தான் எந்த ஒரு வேட்பாளருக்கும்வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன் வாக்குஎந்திரத்தில் பொருத்தப்படுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதில் நாங்கள் தேடிய வரை உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை..(சின்னங்களில் அதிக வாக்குகள் பெற்றவரே ஜெயித்தவராக அறிவிகபடுவார் என்பதை தவிர)நோட்டா என்பது வாக்களிக்காமலும், யாருமே சரியில்லை எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்குச் சாவடி பக்கமே வராதவர்களை, வாக்குச் சாவடிக்கு வரவழைக்கும் ஒரு முயற்சி. இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று எண்ணுகின்றேன்.அரசியலில் பங்குபெறக்கூடாது, தனக்கு மட்டும் பாதுகாப்பான வேலை வேண்டும் என்று அனைவரும் ஒதுங்கிக்கொள்ளும் நிலை மாறவேண்டும். அது இல்லாதவரை நேர்மையில்லாதவர்கள்தான் அதிகமாக அரசியலில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. நோட்டோ வெற்றிபெற்றுவிட்டது என்று ஒத்துக்கொண்டால்ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லைஎன்றும் பொருள்படுகிறது.அது மிகவும் மோசமான நிலை.அதுமட்டுமல்ல ஒரு நிலையான ஆட்சி கூட இழுபறியாய் குதிரை பேரங்களை போல் நடந்து விட கூடும்...நோட்டோவினால் தோற்கடிக்கப்பட்டால் சில வழி முறைகள் எங்கயோ படித்த நியாபகம் எவரேனும் தெரிந்தால் தயவு செய்து பகிரவும்..இதில் எங்கள் ஆசை கீழ்வருமாறு...இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக நோட்டோகளை விட குறைந்த வாக்குகள் பெற்றவர் மற்றும் அவரின் ரத்த சம்பந்தங்கள்.. அவரின் தொடர்பில் உள்ள மக்கள் மற்றும் அவரது நிறுவனங்களின்/துணை நிறுவனங்களின் ஊழியர், மேலும் அவருடன் வரவு செலவு பாக்கி , பத்திரங்கள் தொடர்பு வைத்தவர் அனைவருக்கும் தேர்தல்களில் தடையை கொண்டு வரலாம்..அல்லது அவர்களை ஜெயிலில் போட்டுவிட்டு அதற்கு பிறகான இத்தனை சதவீத மக்களின் ஆதரவுக்கடிதங்கள் நேரில் சமர்பிக்க பட்டிருந்தால் இருந்தால் நீங்கள் ஜெயிலை விட்டு வரலாம் என்று உத்தரவு போடலாம்... (இதில் விளம்பர சுயேட்சைகளின் அடாவடியும் அடங்கும்..)அல்லது நோட்டோவால் தோற்க்கடிப்படுபவர்களை ஐயாயிரம் மரங்களை பொதுவில் நட்டு பத்து வருடங்கள் வளர்க்க சொல்லலாம்.. அதுவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம்..தேர்தலில் பிரச்சார உதவி செய்யும் நிறுவனங்களை, பொது நிறுவனங்களாக்கலாம்...அல்லது நோட்டோவை விட்டுவிட்டு நடந்த ஆட்சியை முதலில் மக்களிடம் மதிப்பீடு செய்ய வைத்து பின்பு தேர்தல் நடத்தலாம்.. குறைவாக மதிப்பீடை பெற்றவர்களுக்கு/கட்சியை சேர்ந்தவர்களுக்குவாழ்நாள் தடைவிதிக்கலாம்..எந்தவொரு கட்சியில் சேருபவர்களைஅரசு நிறுவனங்கள் மூலம் ரிகார்ட் செய்து (ஜாதி மற்றும் வருமான சான்றிதழ்களை போல ) அவர்களையும் அந்த கட்சியை சேர்ந்தவர்களாக கருதி தேர்தல் தடை விதிக்கலாம்...இன்னும் உங்கள் யோசனைகளை இங்கே பதிவு செய்ய ஆசைப்படும் உங்கள் க.மை. லா..
No comments:
Post a Comment