Monday, August 6, 2012

உலக அழிவு பற்றிய மாயன்களின் கூற்று மற்றும் மாயன்களின் நாகரிகம்..!

உலக அழிவு பற்றிய மாயன்களின் கூற்று மற்றும் மாயன்களின் நாகரிகம்..!


எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.

அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டிய

ை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது.சரி… இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)

அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
முதலாவதா மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்; இருக்கிறது.

எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப் பற்றியவையாம். எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம். அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.

யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்… என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. அடுத்து நொஸ்ராடாமஸ் சொன்னதை பார்த்தால் அவரின் கணிப்பின் படி ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம் ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம்.

மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார்.அவரின் கருத்துப்படி “3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும் இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்… 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்.”

இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.
அடுத்து… புவியியலாலர்களின் கருத்துப்படி
பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம்உறைபனிக்காலம்ஏற்படுமாம்.

இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம்.அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.அது 2012 இல் தான் ஏற்படுமென… ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அடுத்து சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்… என்றும் கருதுகின்றார்கள்.

சமீபத்தில் பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல் போன்றன ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது.

மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும் பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அப்படி 2012-ல் உலகம் அழியும் என்று அக்காலண்டரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள் (1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும் அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.

இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும் அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்றும் கூறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.

No comments: