பனிக்கட்டிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்காகவே ஜப்பான், கனடா, நார்வே, சீனா போன்ற நாடுகளில், உறை பனிக் காலங்களில் சர்வதேச அளவிலான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அழகான வளைவுகள், தத்ரூபமான உருவங்கள், கண்களையும், மனதையும் கொள்ளையடிக்கும், பல்வேறு வண்ண ஒளி பாயும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பனிச் சிற்பங்களை, "ஜில்'லிடச் செய்யும் மைனஸ் டிகிரி செல்சியசில் பார்த்து, ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பல நாடுகளில், இந்த பனிச் சிற்ப திருவிழா நடந்தாலும், சீனாவின் குளிர் பிரதேசமான ஹார்பின் நகரில், கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த திருவிழா, மிக பிரமாண்டமாகவும், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
வழக்கம்போல் இந்தாண்டும், ஹார்பின் நகரில் இந்த திருவிழா துவங்கியுள்ளது. மைனஸ் 17 டிகிரி செல்சியசில், பரந்து விரிந்த, 150 ஏக்கர் பரப்பளவில், 95 கோடி ரூபாய் செலவில், கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக, 45க்கும் மேற்பட்ட பனிச் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலக அதிசயங்களாக கருதப்படும் பைசா நகரின் சாய்ந்த கோபுரம், தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் மன்னர் காலத்து அரண்மனைகள் ஆகியவை, பனிக் கட்டிகளால் பிரமாண்டமாகவும், எழில் கொஞ்சும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர். இந்தாண்டு நடக்கும் பனிச் சிற்ப திருவிழாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா? மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் பனிச் சிற்பம் தான்.
முழங்காலுக்கு மேல் காற்றில் பறக்கும் கவுனை, "அழகிய லைலா' போல், அழகாக கைகளால் இறுக்கிப் பிடித்தபடி தோன்றும் மர்லின் மன்றோவின் புகைப்படம், <உலகப் பிரசித்தம். இந்த புகைப்படத்தை முன் மாதிரியாக வைத்து, இதே போன்ற பனிச் சிற்பத்தை, தற்போது சீனாவில் உருவாக்கியுள்ளனர்.
பல வண்ண மின் விளக்குகளின் ஒளி, அந்த சிற்பத்தில் பாயும்போது, வெள்ளை மலை பிரதேசத்திலிருந்து, மர்லின் மன்றோவே நேரில் இறங்கி வருவது போல், இந்த சிற்பம் இருப்பதாக, பார்வையாளர்கள் சிலிர்க்கின்றனர்.
ஆனாலும், காதலர்களை பொறுத்தவரை, "எவர் கிரீன்' பனிச் சிற்பமாக திகழ்வது, தாஜ்மகால் தான். இந்த சிற்பத்துக்கு முன், காதலர்கள் ஜோடி, ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்தாண்டு இங்கு நடந்த பனிச் சிற்ப திருவிழாவுக்கு, பத்து லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்தாண்டு அதை விட, 20 சதவீதம் கூடுதல் பார்வையாளர்கள் வரக் கூடும் என்றும், அதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும், சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment