மத்திய திட்டக் கமிஷன், உள்துறை அமைச்சகம் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் ஏப்ரல் முதல், ஆதார் பணி முழு வீச்சில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், "ஆதார் அடையாள அட்டை' வழங்குவதற்கான பதிவுப் பணிகளை, இந்திய தபால் துறை மேற்கொண்டுள்ளது.
இந்த அட்டை பதிவு செய்யும் பணியை, தமிழக தபால் வட்டம், கடந்தாண்டு அக்., 25ல் துவங்கியது. யு.ஐ.டி.ஏ.ஐ., பிறப்பித்த உத்தரவை அடுத்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும், "ஆதார்' பதிவு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
உள்துறை - திட்டக் கமிஷன் மோதல்
இந்நிலையில், "ஆதார்' அட்டை வழங்கும் பணியால், தேசப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்' எனக் கூறி, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய மக்கள் தொகை பதிவகம் மூலம் (என்.பி.ஆர்.,), தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணியை துவக்கியது. இதற்கு மத்திய திட்டக் கமிஷன் ஆட்சேபம் தெரிவித்ததோடு, விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு விவரங்களுடன் கூடிய, அங்க அடையாள விவரத்தை, இரண்டு அமைப்புகள் சேகரிப்பதால், கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறியது. இதனால், மத்திய திட்டக் கமிஷனுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே மோதல் எழுந்தது. இப்பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என, முடிவானது.
"இரு முறை தேவையில்லை'
என்.பி.ஆர்., தேசிய அடையாள அட்டைக்காக ஒரு குறிப்பிட்ட நபரை அணுகும் போது, தான் ஏற்கனவே, "ஆதார்' அடையாள அட்டைக்காக பதிவு செய்துள்ளதாக அவர் கூறினால், அந்த நபரின் அங்க அடையாளம் பதிவு செய்யப்பட மாட்டாது. அவரின் ஆதார் எண்ணைப் பெற்று, அதிலிருந்து அவரைப் பற்றிய தகவல்களை, தேசிய மக்கள் தொகை பதிவகம் எடுத்துக் கொள்ளும். ஆனால், இரு அமைப்புகளிடமும் தரும் அடிப்படை தகவல்களில் முரண்பாடு காணப்பட்டால், என்.பி.ஆர்., தகவல்களே சரியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் "ஆதார்'
தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், "ஆதார்' பதிவு செய்யும் பணி நடந்து வந்தது. தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவங்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி "ஆதார்' பதிவை விரைவுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே துவக்கப்பட்ட மையங்களில் நாளொன்றுக்கு, 100 வரை, "ஆதார்' அட்டைக்கான பதிவு நடந்து வருகிறது.

புதிய மென்பொருள்
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் அட்டைக்கான பதிவுப் பணி, வரும் பிப்., 15ம் தேதி முதல், முற்றிலும் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், 71 ஆயிரத்து, 533 பேர் பதிவு செய்துள்ளனர். "ஆதார்' பதிவுக்கு ஏற்கனவே பயன்படுத்தி வந்த மென்பொருளுக்கு பதிலாக, கூடுதல் பாதுகாப்பு நிறைந்த புதிய மென்பொருளை வடிவமைக்க, ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில், பொதுமக்களிடம் இருந்து திரட்டும் தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க, தேசிய தகவல் மையத்தை அமைப்பதற்கான முயற்சியையும், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் எடுத்து வருகிறது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஏப்ரல் முதல்
மத்திய அரசின் 2012-13 நிதி நிலை அறிக்கை மார்ச் மாதம் வெளியானதற்கு பின், பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இது பெறப்பட்ட பின், அடுத்த கட்ட பணிகளை துவங்க முடியும்.
இதனால், ஏப்ரல் முதல் முழு வீச்சில், "ஆதார்' பணிகள் தமிழகத்தில் மீண்டும் நடக்கும் என, அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அட்டை அச்சடிப்பு கூடுதலாக 4 மையம்
தற்போது, கோல்கட்டாவில் மட்டும், "ஆதார்' அடையாள அட்டை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. "ஆதார்' அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு, மத்திய அரசு கூடுதலாக 5,791 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான பணி, ஏப்ரல் முதல் முழு வீச்சில் நடைபெற உள்ளதால், பதிவுக்கு ஏற்ப அட்டைகளை விரைந்து அச்சடித்து வழங்க; மணிப்பால், டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் அச்சடிக்கும் மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளொன்றுக்கு ஒரு மையத்தில் ஐந்து லட்சம் கார்டுகள் வீதம், ஐந்து மையங்களில், 25 லட்சம் கார்டுகள் அச்சடித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment