விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Wednesday, March 12, 2014
Tuesday, February 25, 2014
மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்
மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்
நீலிப்பெக்) மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பொறி வண்டுகள் உள்ளன.
கிரிப்டோலெமஸ் ஒருவகை, ஸ்கிம்னஸ் என இரண்டுவகை பொறி வண்டுகள் உள்ளன கிரிப்டோலெமஸ் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 250 வண்டுகள் வரை விடனும் அவற்றை பிரித்து முதலில் 125 வண்டுகள் ஒரு செடிக்கு 2-3 வண்டுகள் மாலை வேளையில் விடவேண்டும்
ஸ்கிம்னஸ் பொறிவண்டு என்றால் 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடனும் இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை தெளித்து கட்டுப்படுத்தலாம்
அல்லது இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி, அசிப்பேட் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடித்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

Tuesday, February 18, 2014
Boysenberries
Boysenberries
Never heard of them ? Well I hadn't until recently. Not something we have in Thailand, but pity as they look delicious and very healthy it seems.
A boysenberry is a cross between a European Raspberry, a Common Blackberry, an American Dewberry and a Loganberry. Its exact origins are not fully known but it seems to have be an American berry which appeared in California the 1920's.

Friday, February 14, 2014
Saturday, February 8, 2014
சம்பங்கி
இரகங்கள் :
ஓரடுக்கு : மெக்ஸிகன் சிங்கிள், ‚ங்கார், ப்ரஜ்வார்
இரண்டடுக்கு : பியர்ல்டபுள், சுவாளினி, வைபவ்
மண் மற்றும் தட்பவெப்பநிலை : சுமார் 6.5 முதல் 7.5 கார அமில நிலையுடன் நன்கு வடிகால் வசதியுடைய மண்ணில் நன்கு வளரும்.
இனவிருத்தி மற்றும் நடவு : ஜுன் - ஜுலை மாதங்களில் 25 முதல் 30 கிராம் எடையுள்ள கரணைகளை 45 x 20 செ.மீ இடைவெளியில் 25 செ.மீ ஆழத்தில் எக்டருக்கு 1,12,000 கரணைகள் தேவைப்படும். கரணைகளை அறுவடை செய்து 30 நாட்கள் வைத்திருத்தபின்பே பயன்படுத்தவேண்டும். நடவுக்கு முன் 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம் / லிட்டர்) மூழ்கச்செய்த பின்பு கரணைகளை நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :
தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:200:200 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் இடவேண்டும். (இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி) நிலையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உர அளவு.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
நூற்புழு : நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் கார்போஃப்யூரான் குறணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.
பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள் சிறந்த மேலாண்மை முறைகளைக் கையாண்டால் மேலும் ஒரு வருடத்திற்குப் பராமரிக்கலாம்.
அறுவடை : கரணைகள் முளைத்த பின்பு 80 முதல் 95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்கள் நாள்தோறும் அறுவடை செய்யப்படவேண்டும்.
மகசூல் : 14 முதல் 15 டன் மலர்கள் / எக்டர் , 8 முதல் 10 கிலோ கான்கிரீட் / எக்டர்

தேனீ வளர்ப்பு
• தேனீ வளர்ப்பு

• விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை,கையாளலாம்
• தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
• தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால்,தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.
• தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்
• தேனீ வளர்ப்பின் சிறப்பம்சங்கள்
• தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமேதேவைப்படும்
• தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது
• பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது
• தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்
• தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது
• உற்பத்தி முறை
• தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்
• தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்
• கூடு
• இது, ஒரு சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது.
• தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது.
• புகைப்பான்
• இது தேனீ வளர்ப்பில், இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும்.
• இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம்.
• இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.
• துணி
• கத்தி
• இறக்கை
• தேனீக்களின் வகைகள்
• இந்தியாவில்
மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா)
இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலணிக்கு 50-80கிலோ தேன் கிடைக்கும்.
• சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா)
· இவை ஓரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள்
• இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா)
· இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை.
· ஒரு வருடத்தில், தலா ஒரு காலணியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும்.
• கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்):
• இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது.
• மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள்.
• இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும்.
• தேன்கூடுகளை நிறுவும் முறை
• தேன் வளர்க்கும் இடமானது,
• நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும்,
• மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.
• சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு
• எறும்பு ஏருவதை தடுக்க வேண்டும்
• வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை அமைக்க வேண்டும்.
• தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள்,
• ஏனைய விலங்குகள் ,
• பரபரப்பான வீதிகள் மற்றும்
• தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.
• தேனீ காலனிகளை அமைக்கும் முறை
· தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.
· இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.
· முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
• அதிக நெரிசலை தவிர்க்கவும்
· சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.
• காலனி நிர்வாகம்
• தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.
• பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
• வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு,
• ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை,
• ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
• தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும்.
• மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.
• மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.
• மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
• தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
• தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
• ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
· ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
· எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம்.
• தேன்நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
· இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்து இருக்க வேண்டும்
·
· தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடேயே தகுந்த இடைவெளி அளிக்க வேண்டும்
· இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாரு செய்ய வேண்டும்,
·
· தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளை இடவும்
• காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்து செல்ல வேண்டும்.
• எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்ட அறைகள்,இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியே எடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
• எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டு இருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்
• தேன் அறுவடை
• எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாரோ, அந்த பகுதிகளுக்கு புகையை அடித்து,தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும்
· பொதுவாக, இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர்/நவம்பர் மற்றும்பிப்ரவரி - ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம்
• அறுவடைக்கு தயரான கூடுகள், வெளிர் நிறத்தில் தேன் நிரப்பப்பட்டு இருக்கும்.பாதிக்கும் மேல் அரைகள் மெழுகினால் மூடப்பட்டு இருக்கும்
Subscribe to:
Posts (Atom)