Wednesday, July 17, 2013

நெருஞ்சியின் மருத்துவ பயன்கள்..!

நெருஞ்சியின் மருத்துவ பயன்கள்..!

சிறிய தாவரமாக இருந்தாலும் அறிய மருத்துவ குணங்கள் கொண்ட நெருஞ்சியை பற்றி இங்கே பார்ப்போம்.

நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து 1/2 லிட்டர் நீரிலிட்டு பகுதியாக காய்ச்சி 60மில்லி அளவு உட்கொண்டுவர பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேரு ஏற்படும்.

நெருஞ்சி வேரையும், காயையும் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டிய கஞ்சியுடன் சர்க்கரை சேர்த்து குடித்துவர நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், உடல் சூடு ஆகியவை தணியும்.

நெருஞ்சி முள்ளைமட்டும் சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.

சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி சமூலத்துடன் (முழுச்செடி) நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.

நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூபடையாத பெண்கள் பூபெய்துவர்.

நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.

முழு நெருஞ்சிச்செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை இவை மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கல் அடைப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. நெருஞ்சி முள் ஆண்மையை பெருக்கும் சக்தி கொண்டது. இதன் இலை சிறுநீரை பெருகச்செய்வதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்.

Vitamin Clear Soup

Vitamin Clear Soup:
I am the mom who dislikes forcing kids to eat what I want them to eat. ..even when times they remain untouched with vegetables on the plate. As a basic Food and Nutrition blog writer, and a student in Nutritional science I created blending three different types of vegetables to make a Vitamin soup with Asian-Indian spices.  

Ingredients:

2 Cups Beetroot Cubes
2 Cups Carrot Cubes
2 Cups Tomato Cubes
3 Thai green Chillies (optional)
2 Tbsp Tamarind Pulp (history of allergic reactions to tamarind pulp can substitute to Cranberries or lemon juice)
Salt to taste
1 Tsp Red chilly powder (optional)
1/2 tsp Asafoetida
1 Tsp Coriander powder
1 Tsp Cumin powder
2 tsp Rasam powder
2 Tsp Oil or 2 tsp Ghee

Seasoning/Thadka
1 1/2 tsp Mustard seeds
1 1/2 tsp Cumin seeds
2 Dry Red chillies (Optional)
4 mashed Garlic Cloves
4 sprigs of Curry leaves

Method:
1. Blend beetroot, carrot, tomato and green chillies.
2. Heat 2 Tsp of oil in a heavy bottom pan.
3. Add seasoning /tadka let it splutter.
4. Add the blended vegetable puree to the seasoning with ten cups of water.
5. Add chilly powder, coriander powder, cumin powder, Rasam powder, and tamarind pulp ( history of allergic reactions to tamarind pulp substitute with cranberries; blend cranberries with beetroot, carrot, tomatoes and chillies).
6. Stir and let it boil for 10-15 minutes and add coriander leaves (optional).
7. I adopted the first word that caught my eye: jussulent, meaning “full of broth or soup”.
8. Enjoy as a soup or with Quinoa or Brown rice.

Health Benefits:
1. Beets are very rich in Fiber, Vitamins and Minerals
2. Carrots are rich in carotenoids.
3. Lycopene in Tomato is linked to lower the stroke.
4. Garlic cloves contain phyto -nutrients

MANGO AND AVOCADO SALSA

MANGO AND AVOCADO SALSA
"Let's Eat Summer Series"

Vibrant, light & healthy. Perfect with fish. Of course I've been known to get a small bowl of it to snack on!

Ingredients

1 avocado
half a mango
about half a small cucumber
half a red chilli, finely chopped
3 spring onions
small handful fresh coriander leaves, chopped
juice of 1 lime
tiny pinch of salt

Method

1. Chop the avocado, mango and cucumber to small similarly sized cubes (about half an inch/1 cm).

2. Chop the spring onions to about the same size.

3. Put all the ingredients in a bowl and mix thoroughly.

4. Serve immediately.

Healthy Cucumber and Feta Salad

Healthy Cucumber and Feta Salad

Try this simple, delicious and healthy summer recipe that I made last night.

Ingredients:
1 cucumber
1 head romaine lettuce
1/2 cup feta cheese
1/4 cup extra virgin olive oil
1/8 cup red wine vinegar
8 cherry tomatoes
Salt and pepper to taste

Instructions:
1. Thinly slice the cucumbers and romaine lettuce.
2. Stack cucumbers on top of lettuce and top with olive oil, vinegar, salt, pepper, feta, and tomatoes.
3. Enjoy!

Tuesday, July 16, 2013

பச்சைப் பயறு

முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.பச்சைப் பயறு

என்ன சத்து?
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

என்ன பலன்கள்?

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை

ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.

முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.


Thanks : Dinesh Kumar Aslan

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு :

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும். இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்
கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம்
இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.

விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.
பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.பின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.காலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும். டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.
இவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும். டன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.

இதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.
இவ்வாறு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராமமூர்த்தி மற்றும் பேராசிரியர் அன்புமணி தெரிவித்தார்.


நன்றி: தினமணி

Natural World - Collection