Thursday, October 9, 2014

சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள்

சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள்

1. கம்பு:
image
அடங்கியுள்ள சத்துக்கள் :
புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது. மருத்துவ பயன்கள்:
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்
02. சோளம்
 image
அடங்கியுள்ள சத்துக்கள்:
புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து
மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.
03. கேழ்வரகு
image
அடங்கியுள்ள சத்துக்கள்:
புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து முதலியன உள்ளன. மருத்துவ பயன்கள்:
சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது. தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

04. சாமை
image
அடங்கியுள்ள சத்துக்கள்:
புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. மருத்துவ பயன்கள்:
சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.
05. திணை
image
அடங்கியுள்ள சத்துக்கள்:
ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி‘, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது. மருத்துவ பயன்கள்:
இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
06. வரகு
image
அடங்கியுள்ள சத்துக்கள்:
தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. மருத்துவ பயன்கள்:
சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது. 

07. குதிரைவாலி
image

அடங்கியுள்ள சத்துக்கள்:

 நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மருத்துவ பயன்கள்:
உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது. தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்:
இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.

No comments: