Thursday, May 16, 2013

பொன் முட்டையிடும் வாத்து வளர்ப்பு!

1000 வாத்துகள்...
1,25,000 முட்டைகள்...
2,00,000 ரூபாய் லாபம்!
பொன் முட்டையிடும் வாத்து வளர்ப்பு!

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.....
கையில் நீளமான கம்புடன் ஹோய்..., ஏய்..., என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்க....
அந்த சத்தத்துக்கு எசப் பாட்டு படிப்பது போல ‘பக், பக்‘ என சத்தம் கொடுத்துக் கொண்டே ஒதுங்குகின்றன, பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.... தஞ்சைப் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் இது போன்ற காட்சிகள் தாராளமாகக் காணக் கிடைக்கும்.
வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லையென்றாலும், வாத்தின் முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால், முட்டைக்காக பட்டி போட்டு வாத்து வளர்க்கும் பழக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒரத்தநாடு அருகே உள்ள நத்தம் கிராமத்தில், பட்டி போட்டு வாத்து வளர்த்து வருகிறார், நடராஜன்.
பசுமை விகடன், 10-அக்டோபர் 2009.

No comments: