Friday, December 27, 2013

ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:



ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது" .ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது" .

Natural MOSQUITO Killers

ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION

ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION

Varun, an IT professional , was finding himself with an upset stomach every night. While normal medical checks revealed nothing wrong in him, deeper probes revealed the reason – his stomach was collecting significant amounts of wax. And doctors identified the villian – the ordinary disposable paper cups he used for drinking his tea at his office pantry.

Disposable paper cups have become quite popular in office pantries due to the convenience it offers. What many overlook is the fact that these paper cups are coated with a tiny layer of wax, which is essential to prevent water from seeping into the paper. When very hot liquids are pour over this cup, the paper cups wax may disintegrate and a little may come off, which will promptly be sent along with the drink into our stomachs! While our body can discard minor amounts, over the long-term, it does become a problem.
So what can be done about it? You can try to bring your own glass cups. Glass is one of the least reactive materials in the world (remember acids are stored in glass vessels, blood samples are collected in glass plates – these are for a good reason). But glass does have the problem of breaking easily, so it requires good care. Ceramic cups are probably the best bet. Of course, you can also use your ordinary stainless steel glass, but never use plastic ones – they are harmful, and its dangers are even worse than wax !



Share if you care . .



Wednesday, December 18, 2013

நோபல் பரிசு – 2013

1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 
ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும். 
ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும். 
நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும் வழங்கப்படலாம் என்பது பொதுவிதி! ஒருவருக்கு மேல் வழங்கப்படும்போது, தேர்வுக் குழு நிர்ணயிக்கும் விகிதப்படிப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். 
மருத்துவம்: அமெரிக்காவின் "யேல்’ பல்கலைக்கழக "ஜேம்ஸ் ஈ ரோத்மன்’ (62 வயது), ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழக "தர்மஸ் சி சுடோஃப்’ ஆகிய மூவருக்கும்
வழங்கப்படுகின்றன. மனித உடலினுள் நடைபெறும் ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் முக்கிய கெமிகல்களின் இடமாற்றம், அதாவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வெசில்ஸ் எனப்படும் நுண்ணிய குமிழிகளின் தடை பற்றிய மூவரின் தனித்தனியான ஆய்வுகளுக்காகப் பரிசுத்தொகை 1.2 மில்லியன் டாலர் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
அந்தப் போக்குவரத்து முறை, மூன்று பொருட்களையும் சரியான இடத்துக்கு, சரியான நேரத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கிறது எனக் கண்ட அவர்கள், அது பாதிக்கப்படும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைவு போன்றவை ஏற்படும் என்பது மூவரின் ஆராய்ச்சி முடிவாகும். 
"செல்களுக்கு உள்ளேயும் வெளியில் பிற செல்களுக்கு இடையேயுமான அந்தப் போக்குவரத்து இல்லாமல் அல்லது தடைப்பட்டுப் போனால் தாறுமாறாக பாதிப்புகளை அடையும் செல்களால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிடும் பரிசுத் தேர்வுக்குழு, "அந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்க மூவரின் ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும் என்பதால் பரிசு அளிக்கப்படுவதாக’ குறிப்பிட்டுள்ளது. 
இயற்பியல்: ஸ்காட்லாந்தின் 84 வயது "பீட்டர் ஹிக்ஸ்’ மற்றும் மெல்ஜியத்தின் 80 வயது ஃப்ரான்கோய்ஸ் எங்வெர்ட் ஆகிய இருவருக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற திடப் பொருள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படைச் சக்தியாக விளங்குவது இப்பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள அணுவைவிடச் சிறிய நுண்ணிய பார்டிகிள் எனப்படும் துகள்களே ஆகும் என்ற கண்பிடிப்பிற்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை சமமாகப் பங்கிட்டு அளிக்கப்படும். அத்துகள்கள் "ஹிக்ஸ்’ என்ற அந்த இருவரில் ஒருவர் பெயரால் "ஹிக்ஸ் போசோம்’ எனப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் சகலத்துக்கும் மூலசக்தியாக அத்துகள் விளங்குவதால் அதைக் கடவுள் துகள் என்கின்றனர் சமீபத்தில் நடத்தப்பட்ட லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர் எனப்பட்ட செயற்கை பிக்பங்க் மோதலுக்குப் பிறகு 2012 ஜூலை 4ல் தான் இக்கொள்கை வெளியிடப்பட்டது. எனினும் அவ்விருவரும் 1964 முதலே இது பற்றி ஆய்வு செய்து வந்துள்ளனர். 
என்றாலும் "போசோம்’ அணுக்கள் கண்டுபிடிப்பின் பெருமை ஒரு இந்தியரையே சாரும். 1920லேயே அதுப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்புப் பெற்றிருந்த சந்யேந்திரநாத் போஸ்தான் அதனைக் கண்டுபிடித்தவர். அதனாலேயே பால்டிரக் என்ற இயற்பியலாளர் அதற்க அவர் பெயரையே அதாவது போசோன் என்று பெயரிட்டார். அதையொட்டிய ஆய்வுக்கே இவ்வாண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. என்றபோதிலும் அப்போது சத்தியேந்திர நாத் போஸ் நோபல் பரிசினைப் பெறவில்லை. அதன்பிறகு ஹிக்ஸ் போசேன் போன்று நிறையவகை துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். 
வேதியியல்: வேதியியல் பரிசினை மூவர் பெறுகின்றனர். அவர்கள் ஆஸ்திரிய-அமெரிக்கர் மார்டின் கர்ப்பளஸ், அமெரிக்க இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் குடியுரிமை பெற்ற மிகெய்ல் லீவிட் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கர் அரீஹ் வார்ஷல் ஆகியோராவர். இவர்களின் கண்டுபிடிப்பு வேதியியல் சோதனைகளை சைபர் ஸ்பேசுக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகாதமிச் செயலாளர் ஸ்டாஃபன் நார்மார்க். சிக்கலான மூலப்பொருளைத் தூண்டக்கூடிய கணினி மென்பொருள் மாதிரியை உருவாக்கியதற்காக இப்பரிசு! இனி விஞ்ஞானிகள் சோதனைக் குழாய்க்குப் பதிலாகக் கணினியைப் பயன்படுத்தலாம். ரசாயன மாற்றங்கள் நிகழும் விதத்தைக் கணினி மூலம் அறியலாம். இனி வேதியியலாளர்கள் பிளாஸ்டிக் உருண்டைகள் மற்றும் குச்சிகளுக்குப் பதிலாக கணினியில் அதைச் செய்துவிட முடியும். புதிய மருந்துகள் தயாரிக்கவும். சூரிய செல்கள் உருவாக்கவும் இவர்கள் கண்டுபிடித்த ஆய்வறிவு பெரிதும் பயன்படும். புரொட்டின் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் உருவாக்கிய வழிமுறை புரிய வைக்கிறது என்கிறார் வார்ஷல். மனித உடலின் சரியான அமைப்பைக் காணவும், அது செயல்பட வேண்டியதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை அறியவும் இக்கணினி முறை உதவும். 
பொருளாதாரம்: பொருளாதாரப் பரிசு மூன்று பேர் பெறுகின்றனர். அவர்கள் ஏல், பல்கலையின் ராபர்ட் ஷில்லர், சிகாகோ பல்கலையின் யூகின் ஃபாமா, மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் ஆகியோர் ஆவர். சொத்தின் மதிப்பை நீண்டகால அடிப்படையில் கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அவர்களது ஆய்வுக்குத்தான் இந்தப் பரிசு. அதைத் தினம் அல்லது வாரங்களுக்குள் கணிக்க முடியாது. மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என்ற நீண்டகால அளவில் ஆராய்வது அதிகப் பலனைத் தரும் என்கின்றனர். மேலும், திரும்பக் கிடைப்பதில், சிக்கலில்லாத நிலையில் முதலீடு செய்வது சிறந்தது என்ற அவர்களின் ஆய்வு, விரும்பும்போது திரும்பக் கிடைப்பதை வலியுறுத்துகிறது. தவறான விலை நிர்ணயம் மற்றும் முதலீடு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம் எனும் அவர்கள், அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுச் சந்தை மதிப்பின் வீழ்ச்சி எவ்வாறு அந்த நாட்டுப் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது என்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். எனவே, கடந்துவிட்ட பல தவறுகளையும், சரியற்ற நிதி நிலையையும், சமீபத்திய பொருளாதார நெருக்கடி வெளிப்படத்துகிறதல்லவா? அதை எப்படி சரிசெய்வது என்பது ஷில்லரின் ஆய்வு! 
குறுகிய கால முன் கணிப்பு கடினமானது என்பதை ஆய்வு செய்த ஃபாமா புதிய தகவல் மற்றும் வழிமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். மூன்றாமவரான ஹேன்சன் புள்ளிவிவர முறை ஒன்றை வகுத்தார். அது சொத்தின் மதிப்பைக் கணக்கிடப் பெரிதும் பயன் படக்கூடியதாகும் என்பது அவரது கணிப்பாகும். 
கொள்கை மற்றும் செயலளவில் சொத்து மதிப்பு நிர்ணயத்துக்கு மூவரின் ஆய்வுகளும் பயன் அளிக்கக்கூடியவை என்பதால் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
இலக்கியம்: இலக்கிய பரிசை கனடாவின் 82 வயது ஆலிஸ் மன்றோ அந்நாட்டின் முதல் இலக்கியப் பரிசாளர் மற்றும் பெண் பரிசாளராகிறார். இவர் ஆரம்பம் முதல் 13வது நோபல் பெண்மணி. வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அவரத தலை சிறந்த சிறுகதைகளுக்காக இப்பரிசு! அவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். நியூ யார்கர்ஸ் இதழில் எழுதத் தொடங்கிய இவரது சிறுகதைகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒரு குடியானவத் தந்தைக்கும் ஆசிரியத்தாய்க்கும் மகளாகப் பிறந்த ஆலிஸ், சிறந்த மாணவிக்கான படிப்புதவித்தொகை பெற்று, ஒன்டாரியோ பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் தொழிலுக்கான முக்கியப் பாடத்துடன் பட்டம் பெற்றார். தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் மன்றோ என்ற சக மாணவனைத் திருமணம் செய்து கொண்டார். 
நல்ல தாயாகி, எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். நாளடைவில் அவரது புகழ் பரவியது. புத்தகவிற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் அவருக்கு இரண்டாவது கணவனை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அச்சமயத்தில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு "டான்ஸ் ஆஃப் தஹேப்பி ஷேட்ஸ்’ வெளிவந்து, பிற்பாடு 1969ல் கவர்னர்ஸ் பரிசைப் பெற்றது. இப்போது இவரது சிறுகதைகளின் எழுத்துத்திறனைப் பாராட்டி, இந்த நோபல் அவரைத் தேடி வந்துள்ளது. 
உலக அமைதிக்கான பரிசு: அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக இந்த உலகிலிருந்து அழித்து, உலக அமைத்திக்காகப் பாடுபடவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் அவையின் தீவிர முயற்சியால் 1997ல் அமைக்கப்பட்டு அரும்பணியாற்றிவரும் ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ் என்ற பொதுநலத் தொண்டமைப்புக்கு வழங்கப்படுகிறது. தலைமையகம் "தி ஹேக்’ நகரில் உள்ளது. தற்போது 189 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டது. 
சிரியாவில் குவிந்து கிடக்கும் ரசாயன ஆயுதங்களை ஆபத்தான போர்க்களம் என்ற அச்சம் சிறிதுமின்றி கண்டு அழிக்க முயலும் அந்த அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்களின் மன உறுதியைப் பாராட்டியும், அவர்கள் முயன்றுவரும் ரசாயன ஆயுத ஒழிப்புப் பணி மற்றும் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
இதுபற்றிக் கூறும் தேர்வுக் குழு குறிப்பிட்ட கால எல்லையாகிய 2012 ஏப்ரல் கடந்துவிட்ட போதிலும் அமெரிக்கா, ருஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்னும் கூட அதன்படி நடந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 
மேலும் ஆயுதமற்ற உலகம் என்ற ஆல்ஃரெட் நோபலின் குறிக்கோளை எட்ட இந்த ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்கு வழங்கப்படும் அமைதிபரிசு முதல் முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 
அதன் பொது இயக்குனர் இது ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்குக் கிடைத்துள்ள மாபெரும் கௌரவம் மற்றும் பணிக்கான அங்கீகாரம் ஆகும் என்கிறார்

பாட்டி வைத்தியம்:-

பாட்டி வைத்தியம்:-

* உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 

* வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 

* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
* மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

* இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. 
கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான்பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றனர். 
அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது. 
கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர்.
இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். 
கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன. 
"வாங்க் பூமிங்’ என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், த்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகயை வளர்க்கிறார். அவர், 2010 ஆம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார். 
இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார். அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது. 
இதற்கு முதலீடும் மிகக் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம். 
பெரிய அளவுலாபம்: பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளைத்தான் வளர்க்கின்றனர். இவை நீளமாக, பெரிதாகக் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு. 
இவற்றைக் கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பண்ணøயில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. 
ஒருமுறை கோடிக்கணக்கான கரப்பான்கள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரிய வந்தது. 
இந்தப் பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, தொலைவில் வைக்கின்றனர். 
இப்போது சீன டி.வி.களில், கரப்பான பண்ணை வளர்ப்பு முறை பற்றி விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன. 
பூச்சிகளும், புரதச்சத்தும்: பசி, வறுமையை எளிதாக ஒழிக்க ஐ.நா சபை பல ஆண்டுகளாகவே பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது. 
பூச்சிளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவற்றை வளர்ப்பது சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கினங்களின் கழிவுகளில் உண்டாகும். மீத்தேன் வாயு, பூமியை வெப்பமாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர். 
பலன்கள்: சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான்பூச்சியை வைத்துப் பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அணு கதிர்வீச்சைக் கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான்பூச்சி. இவை மூலம் – எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 
"லீ ஷீவான்’ என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாகக் கூறுகிறார். மேலும், முகம் பளபளப்பாக இவற்றை அரைத்து முகத்தில் கூட பூசலாம் என்கிறார்.

Monday, December 16, 2013

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!



மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..


ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு

முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,

முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .

புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்

இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .

Friday, November 8, 2013

கோள்கள், நட்சத்திரங்கள் ஏன் கோள வடிவிலேயே உள்ளன?

பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன. கோள்களும் நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள். இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது. அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள்
எப்போதும் சமநிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது. வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு. எனவே, பெரும் கோள்களும் நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோள வடிவத்திலேயே உள்ளன. நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.

Wednesday, November 6, 2013

பக்கவாத நோய்: அலட்சியம் காட்டினால் ஆபத்து

1. பக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன? மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.
2. பக்கவாதத்தில் வகைகள் உண்டா? 
தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம்
. ரத்தக் கசிவால் தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.
3. தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது? 
தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ வருவது. இதனால், திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக்கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பும் பெரிதாக இருக்கும்.
4. பாதிப்புக்கான காரணங்கள் என்ன? 
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், புகைத்தல், புகையிலை பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.
5. நோயின் அறிகுறிகள் என்ன? 
வாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல், ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல், ஒரு பக்கம் பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றுதல், தடுமாற்றம், உடலின் ஒரு பக்கம் மரத்துப் போதல், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதே பொரை ஏறுதல். திடீர் மறதி, குழப்பமான மன நிலை போன்றவை அறிகுறிகள்.
6. எந்த வயதில் பாதிக்கும்? 
உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. முதியோரை மட்டுமல்ல, இளைஞர்கள், குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது.
7. அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? 
அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால் பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைக்கவோ, முற்றிலும் குணப்படுத்தவோ முடியும்.
8. தாமதமாக வந்தால் முடியாதா? 
மூன்று மணி நேரத்திற்குள் வருவோருக்கு உரிய ஆய்வுகள் செய்து, இந்த மருந்தைச் செலுத்தி, நோய் தாக்குதலைத் தடுக்கலாம். அதற்குப்பின் வந்தால், மருந்தைப் போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை பொன்னான நேரம் என்கிறோம்.
9. எல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா? 
பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது. சிலர் விவரம் தெரியாமல், டாக்டர்களிடம் தொந்தரவு செய்கின்றனர்.
10. பக்கவாதம் வராமல் தடுக்க என்ன வழி? 
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகிவிடுவோம். அந்த நிலை வராமல் காப்பது அவரவர் கையில்தான் உள்ளது. 
டாக்டர் கே.பானு 
பேராசிரியர், மூளை நரம்பியல் துறை, 
சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.

Click Here நன்றி-தினமலர்

Wednesday, October 30, 2013

Useful Websites

 Useful Websites
http://agmarknet.nic.in
Agriculture Marketing Information System Network of the Directorate of Marketing & Inspection, Ministry of Agriculture, linking all important APMCs in India.
http://maratavahini.kar.nic.in/
Online Agricultural Price Information System of State Agricultural Marketing Board, Karnataka
http://www. agricoop. nic.in
Ministry of Agricultural Cooperation
http://www.commerce.nic.in
Ministry of Commerce
http://dare.nic.in/
Department of Agricultural Research and Education (DARE) / Krishi Anusandhanaur Shiksha Vibhag
http://mofpi.nic.in/
Department of Food Processing Industries / Khadya Prasanskaran Udyog 
http://ncdc.nic.in/
National Cooperative Development Corporation
http://nbpgr.delhi.nic.in/
National Bureau of Plant Genetic Resources (NBPGR) 
http://cpcri.nic.in/
Central Plantation Crops Research Institute (CPCRI)
http://ciae.nic.in/
Central Institute of Agricultural Engineering (CIAE)
http://dopr.gov.in/
National Research Centre for Oil Palm (NRCOP)
http://www.kar.nic.in/cashew/
National Research Centre for Cashew (NRCC)
http://nrcog.mah.nic.in/
National Research Centre for Onion and Garlic (NRCOG)
http://www.coconutboard.nic.in/
Coconut Development Board
http://tea.nic.in/
Tea Board 
http://indiacoffee.org/
Coffee Board
http://coirboard.gov.in/
Coir Board
http://www.rubberboard.com
Rubber Board
http://www.indiantobacco.com/
Tobacco Board
http://www.indianspices.com/
Spices Board 
http://nhb.gov.in/
National Horticulture  Board
http://www.nirjaft.res.in/
National Institute of Research on Jute and Allied Fibre Technology (NIRJAFT)
http://www.icar.org.in/
Indian Council of Agricultural Research, New Delhi
http://www.ciba.res.in/
Central Institute of Brackish water Aquaculture (CIBA) 
http://www.apeda.gov.in/apedawebsite/index.asp
Agriculture and Processed Food Development Authority
http://www.nafed-india.com
National Agricultural Cooperative Marketing Federation of India Ltd
http://www.nmce.com
National Multicommodity Exchange of India
http://www.barcodeindia.com/
Site for Bar Coding in India
http://www.ficci.com/
FICCI
http://www.ciionline.org
Confederation of Indian Industry
http://www.epbupindia.com/
Launched Export Consultancy Govt. of U.P 
http://www.ccsniam.gov.in/
National Institute Of Agricultural Marketing, Jaipur.
http://www.ksamb.gov.in/
Karnataka State Agricultural Marketing Board
http://www.msamb.com/
Information on Maharashtra state agricultural marketing board
http://www.oddanchatrammarket.com
Oddanchatram market
http://www.fao.org/
Food & Agricultural Organisation (FAO)
http://www.usda.gov/
United States Development of Organisation
http://www.apaari.org/
Asia Pacific Association of Agricultural Research Institutes (APAARI)
http://www.cgiar.org/
Consultative Group on International Agricultural Research (CGIAR)
http://www.isnar.cgiar.org/
International Service for National Agricultural Research (ISNAR)
http://irri.org/
International Rice Research Institute (IRRI)
http://www.ciat.cgiar.org/
Centro International de Agricultural Tropical (CIAT)
http://www.cifor.cgiar.org/
Center for International Forestry Research (CIFOR)
http://www.cipotato.org/
International Potato Center (CIP)
http://www.icarda.cgiar.org/Facelift.htm
International Center for Agricultural Research in Dry Areas (ICARDA)
http://www.ciesin.org/IC/icraf/ICRAF.html
International Center for Research in Agroforestry (ICRAF)
http://www.ifpri.org/
International Food Policy Research Institute (IFPRI)
http://www.iita.org/
International Institute of Tropical Agriculture (IITA)
http://www.ilri.org/
International Livestock Research Institute (ILRI)
http://www.cimmyt.org/
International Maize & Wheat Improvement Center (CIMMYT)
http://www.icrisat.org/
International Crop Research Institute for The Semi Arid Tropics (ICRISAT)
http://www.iwmi.org/
International Water Management Institute (IWMI)
http://bananas.bioversityinternational.org/
International Network for Improvement of Banana & Plantain (INIBAP)
http://www.agricultureinformation.com/
Agriculture Information
http://www.intracen.org/
International Trade Centre
http://www.fintrac.com/
Agribusiness Site 
http://www.fruitnet.com/
Information On Fresh Produce Industry
http://www.fruitonline.com/
International Fruit Business
http://www.flowerweb.nl/
Netherlands Flower Site
http://www.fda.gov/
U.S. Food & Drug Administration
http://www.freshinfo.com/
Fresh Produce Journal 

Tuesday, October 22, 2013

பச்சைப் பட்டாணி

பச்சைப் பட்டாணி 

சத்துக்கள் 

காய்கறிகளில் ஊட்டச் சத்து மிக்கது பச்சைப்பட்டாணி தான். பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோப்ளோவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி', நார்சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.


பலன்கள்

இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. உயர் இரத்த அழுத்தம் குறையும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

செரிமான உறுப்புகள் நன்றாகும்.

உடல் வலிமை கூடும்.

கண்பார்வைத் திறன் மேம்படும்.

மனநோய் குணமடையும்

இளமைத் தோற்றதோற்றம் தரும். ஆரோக்கியமாய் வாழலாம்.

ஒரு எளிமையான ரெசிபி - பச்சைப் பட்டாணி சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கார்ன் ப்ளோர் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப‌


பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும். கொஞ்சம் பச்சைப் பட்டாணியை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை ஒரு சிறிய கரண்டியால் நன்றாக‌ மசித்துக் கொள்ளவும். கார்ன் ப்ளோருடன் கலந்து நன்றாக‌ கொதிக்க விட வேண்டும். அதன்பின் தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் தூவி, வெண்ணெயையும் கலந்து இறுதியில் மிளகுத்தூள் தூவவும். சுவையான‌ பச்சைப் பட்டாணி சூப் ரெடி.

Monday, October 21, 2013

பாட்டி வைத்தியம்




* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

Monday, October 14, 2013

Android சாதனம் பயன்படுத்தக்கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள்

Android சாதனம் பயன்படுத்தக்கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள்.

1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#*

2. IMEI Number – *#06#

3. Enter Service Menu On NewerPhones – *#0*#

4. Detailed Camera Information –*#*#34971539#*#*

5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#*

6. Wireless LAN Test –*#*#232339#*#*

7. Enable Test Mode for Service –*#*#197328640#*#*

8. Back-light Test – *#*#0842#*#*

9. Test the Touchscreen –*#*#2664#*#*

10. Vibration Test – *#*#0842#*#*

11. FTA Software Version –*#*#1111#*#*

12. Complete Software andHardware Info – *#12580*369#

13. Diagnostic Configuration –*#9090#

14. USB Logging Control –*#872564#

15. System Dump Mode – *#9900#

16. HSDPA/HSUPA Control Menu –*#301279#

17. View Phone Lock Status –*#7465625#

18. Reset the Data Partition toFactory State – *#*#7780#*#*

உங்கள் Android சாதனத்தை புதியது போல் பராமரிக்கும் அருமையான ஒரு Android Application

Tuesday, September 24, 2013

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

Normal headache, cough vantale costs to wipe your wallet. What to do if   you have diabetes, do not worry about that.
சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என  கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை  நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள்  இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை  நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.
இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள்.  ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள்  குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக்  முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு  பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக்  கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ்  தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

by சி. ஜெயபாரதன்
Earth's core dynamics
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அண்டவெளிக் களிமண்ணில்
ஆப்பமாய்ச் சுடப் பட்டுக்
குண்டான சட்டி ! காலக் குயவன்
முடுக்கிய பம்பரக் கோளம் !
உடுக்கடிக்கும் மேளம் !
சுற்றும் உட்கரு ஒருபுறம்  !
சுழலும் திரவ வெளிக்கரு எதிர்ப்புறம் !
காந்த சக்தியில் இயங்கும்
பூமி மின் ஜனனியா ? மோட்டாரா ?
அடித்தளத் தட்டுக்கள் மோதி
துடிப்புகள் உண்டாக்கும் !
எரிமலை வெடித்துப் பீரிட்டெழும் !
கடற்தட்டு துடித்து  எழும்
சுனாமி !
புவித் தட்டுகள் குதிரை ஏறினால்
பூகம்பம் !
குடற் தட்டுகள் நெளிந்தால்
நில நடுக்கம் !
சூழ்வெளி மாசடையும் !  பூமியின்
ஆழ்ந்த உட்கருக் குழம்பில்
ஆறாத கனல் சுழற்சி !
++++++++++++
உட்புறக் கரு, வெளிப்புறக் கரு இவற்றிடையே இருக்கும் பிணைப்பு  நேர்ச் சுற்று, அதற்குச் சமமான எதிர்ச் சுற்று நியதில் [Equal and Opposite Action] விளக்கப்படுகிறது.   பூகாந்தத் தளம் உட்புறக் கருவை கிழக்கு நோக்கிப், பூமியை விட வேகமாகச் சுழலச் செய்கிறது.    அதே சமயத்தில் உட்புறக் கரு வெளிப்புறக் கருவை எதிர்த் திசையில் மேற்கு நோக்கி உந்த வைக்கிறது.
டாக்டர் ஃபிளிப் லிவர்மோர் [University of Leeds, U.K.]
பூமியின் உட்கரு ஒரே சமயத்தில் உருகியும், உறைந்தும் வருகிறது.   அதற்குக் காரணம் அதைச் சுற்றியுள்ள மேலடுக்குப் பாறைத் தோலின் வெப்பச் சுழற்சி இயக்கமே [Circulation of Heat in the Overlying Rocky Mantle].   இந்தக் கண்டுபிடிப்பு எப்படி உட்கரு [Inner Core] உருவானது, எப்படி வெளிக்கரு [Outer Core] ஒரு "பூகோள ஜனனியாக" [Geodynamo] இயங்குகிறது என்று அறிந்து கொள்ள உதவுகின்றது.
பூகாந்த தளத்தின் காந்தப் புலம் தோன்ற மூலக் காரணமானது எது என்பது இன்னும்  மர்மப் புதிராகவே உள்ளது.  பூமியின் உட்கரு மாதிரியைத் தோண்டிக் கொண்டுவர முடியாது.   பூமி மேற்தள அளவீடுகளும், கணனிப் போலி மாடல்களும் மட்டுமே உட்கருவில் என்ன நிகழ்கிறது என்று ஓரளவு கூற முடியும்.
டாக்டர் ஜான் மௌன்ட் [University of Leeds, United Kingdom]
நாங்கள் புனைந்த போலி மாடல், இதுவரை விஞ்ஞானிகளைக் குழப்பிய சில அளவீடுகளுக்கு ஓர் எளிய விளக்கம் தருகிறது.   அதாவது பூமியின் முழு இயக்கங்களும் அடித்தட்டு நகர்ச்சிக்கு [Plate Tectonics] ஏதோ சில முறைகளில் பிணைக்கப்பட்டுள்ளது.   இந்தப் பிணைப்பு பூமியின் மேற்தள நிகழ்ச்சிகளில் தென்படாது.  எங்கள் கணனி மாடல் மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், எப்படி உட்கரு உருவானது, எவ்விதம் உட்கரு பூதளக் காந்தத்தை உண்டாக்குகிறது என்று அறிய ஒருபடி முன்னேற்ற விளக்கம் கிடைக்கும்.
டாக்டர் ஜான் மௌன்ட் [University of Leeds, United Kingdom]
பூமியின் உட்கரு சில பகுதிகளில் உருகுமேயானால், உட்கரு - வெளிக்கரு எல்லையில் நேரும் கொந்தளிப்பு முன்பு நினைத்ததை விட மிகச் சிக்கலாய் இருக்கும்.
டாக்டர் வினோத்  ஶ்ரீனிவாசன் [Indian Institute of Technology] 
Fig 4 Core & Plate Tectonics
பூமியின் இயக்கம் அடித்தட்டு நகர்ச்சியுடன் [Plate Tectonics] பிணைக்கப்பட்டுள்ளது.
பூமியின் மையத்தில் இருக்கும் திடவ இரும்புக் கரு சுமார் சந்திரனின் விட்ட அளவை  ஒத்தது.   அதைச் சுற்றிலும் இரும்புக் கலவையான, திரவ வெளிக்கரு சூழ்ந்துள்ளது.   அந்த திரவ வெளிக்கருவின்  வெப்பச் சுழற்சி உந்தலே [Convection -Driven Movement] பூகோள காந்த தளத்தை [Geomagnetic Field] உண்டாக்குகிறது.   பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 300 ஆண்டுகளாக, பூமியின் உட்கரு சுழற்சித் திசை பற்றி நிலவிய ஓர் பழைய புதிரை விடுவித்துள்ளனர்.   அதாவது திடவ இரும்பாலான உட்கரு கிழக்கு நோக்கி [Eastward Direction] மற்ற பகுதிகளை விட வெகு வேகமாகச் சுற்றுகிறது.   அதே சமயத்தில் திரவ இரும்புக் குழம்புள்ள வெளிக்கரு, குன்றிய வேகத்தி மேற்கு நோக்கிச் [Westward Direction] சுற்றுகிறது.
புகபெற்ற ஹாலி வால்மீன் நகர்ச்சியை விளக்கிய எட்மன்ட் ஹாலி [Edmond Halley] 1692 ஆண்டில் முதன்முதல் மேற்குத் திசைநோக்கிச் சுற்றும்  நகர்ச்சியே பூமியின் பூகாந்த தளத்தை உண்டாக்குவது என்று காட்டினார்.   இப்போது முதன்முதலாக விஞ்ஞானிகள் உட்கருச் சுழற்சி, வெளிக்கரு நகர்ச்சியுடன் பிணைக்கப் பட்டுள்ளது என்று அறிந்துள்ளார்.   அந்த நடத்தைக்குக் காரணம் அது பூமியின் பூகாந்த தளத்துக்கு ஏதுவாக உள்ளதால்.   இப்புதிய கண்டுபிடிப்புகள் பிட்டன் தேசீய விஞ்ஞானப் பேரவை [National Academy of Sciences]  இதழில் வெளியிடப்படும்.
நிலநடுக்கக் கண்காணிப்பு நிபுணர்கள் கடந்த சில பத்தாண்டுகளாக, பூமியின் உட்கருவை நுழைந்து செல்லும் பூகம்ப நிகழ்ச்சிகளை அளந்து, உட்கருவின் சுழற்சித் திசை கிழக்கு நோக்கி உள்ளதென்று தெளிவாய்க் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.' வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822) உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.
ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)
அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த "ஈர்ப்புத் திரட்சி முறையில்" (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !
ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944)
அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?
ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண்தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக்கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.
பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு
விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவாகவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.
Differential Rotation of core
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன்களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக் கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.
பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப்படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் "மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி" (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தியானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.
பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !
பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.
1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப்படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !
2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.
3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite - Mineral Rock) நிரம்பியுள்ளது.
4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth's Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.
5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !
ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !
பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !
பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !
சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும் நிலவும்
பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான "உயிர்ச்சாதகக் கோளத்தில்" (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !
பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)
பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும்.பூமியின் பூத காந்த மண்டலம் !
சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் "வான் ஆலன் இரட்டை வளையங் களால்" (Van Allen Belts - Two Bands) தடுக்கப் படுகின்றன.
பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea)
ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் "பாங்கியா பூதக்கண்டம்" (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !
[தொடரும்]
+++++++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science - Webster's New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic - Frontiers of Scince - The Family of the Sun (1982)
14 National Geographic - Living with a Stormy Star - The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 Structure & Composition of Earth's Atmosphere (http//:ess.geology.ufl.edu/)
21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)
22 http://www.dailygalaxy.com/my_weblog/2011/05/dynamics-of-earths-core-linked-to-movement-of-tectonic-plates.html [May 19, 2011]
23  http://en.wikipedia.org/wiki/Inner_core  [September 16, 2013]
24 http://en.wikipedia.org/wiki/Inner_core  [September 19, 2013]