Wednesday, February 8, 2012

மூலிகையின் பெயர் -: முறிகூடி.

மூலிகையின் பெயர் -: முறிகூடி.

தாவரப்பெயர் -: HEMIGRAPHIS COLORATA.

தாவரக்குடும்பம் :- ACANTHACEAE.
பயன் தரும் பாகங்கள் -: சமூலம்.

மருத்துவப் பயன்கள் -: முறிகூடி என்றால் புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்கள் இந்த மூலிகையால் உடனே குணமடைவதால் காரணப்பெயராக அமைந்துள்ளது. இதன் இலைகள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இந்தச் செடியின் கத்தரிப்பூ நிறத்தில் பழபழப்பாக இருப்பதால் அழகுச் செடியாக தொட்டிகளிலும், தோட்டத்தில் பார்டர் போன்றும் வளர்ப்பார்கள். தொங்கும் தொட்டிகழிலும் வளர்க்கப்படுகிறது. இதன் சூப் உடல் எடையைக் குறைக்கிறது. இது இரத்த சோகையையும் உணவுக் குழலில் ஏற்படும் புண்களையும் ஆற்ற வல்லது.
முறிகூடியன் இலையை அரைத்து புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு வைத்துக் கட்டினால் குணமடையும்.

இதன் இலைகள் கெட்டியாக இருப்பதால் தண்ணீருக்கு அடியில் வைத்திருந்தால் 3 மாதம் கூட வாடாமல் இருக்கும். இதனால் இதை மீன் வளர்க்கும் தொட்டிகளில் சில காலம் வைப்பார்கள். மீன்கள் இதை உணவாக அருந்தாது.

மகாராஸ்டிராவில் ஜோன் டி ஈபன் என்ற டாக்டர் இதன் இலையிலிருந்து சூப் தயார் செய்து அறிந்தினால் உடல் எடை குறைவதாகக் கண்டறிந்துள்ளார். இது இயற்கை வைத்தியம் என்பதால் பக்க விழைவுகள் இல்லை என்றும் இதன் சூப் ஒரு வாரத்தில் 2 கிலோ எடையைக் குறைக்கும் என்கிறார்.

வளரியல்பு -: முறிகூடி ஒரு சிறிய மூலிகைச் செடி. இது சுமார் 12-30 செ.மீ. வரை வளரக்கூடிய செடி. இதன் தாயகம் இந்தோநேசியாவில் ஜாவாவில் தோன்றியது. பின் வட கிழக்கு ஆசியாவில் பரவிற்று. இது செழிப்பான காடுகளில் வளர்வது. இதன் இலைகள் சுமார் 6 – 10 செ.மீ. நீளமாகவும், இருதய வடிவத்திலும், இலை ஓரங்கள் வெட்டுப் பல் போன்று, எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மேலே கத்தரிப்பூ கலராகவும் அடிபாகம் சிகப்புக் கலந்த கரு நீலமாகவும் இருக்கும். பூ சிறிதாக வெண்மை நிறமாக இருக்கும். சுமார் 3 செ.மீ. அளவில் இருக்கும். சிறிய பழம் விட்டு அதில் சிறு சிறு விதைகள் அதிகமாக இருக்கும். ஆனால் இன விருத்தி இதன் தண்டு கட்டிங் மூலம் தான் அதிகமாகச் செய்வர்கள்.

No comments: