Saturday, September 21, 2013

Useful Images



சமவெளிப் பகுதிலும் மிளகு சாகுபடி செய்யலாம்!

சமவெளிப் பகுதிலும் மிளகு சாகுபடி செய்யலாம்!

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் அனுபவங்கள் 
(தமிழக விவசாயி உலகம் மாத இதழுக்காக நான் எழுதியது)


பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் மிளகை சமவெளிப் பகுதியில் தென்னைக்கு ஊடு பயிராக சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்!

மிளகு வாசனை பொருட்களில் ஒன்று. இது குறைந்த அளவு தண்ணீரில் மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இதுவரை மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்துவந்த மிளகு பயிர் சில வருடங்களாக சமவெளி பகுதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு முதல் தரமான மிளகு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அப்படி மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்தான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு.இராஜகண்ணு அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு-பட்டிபுஞ்சையை சேர்ந்தவர் இராஜகண்ணு ஆசிரியர் (ஒய்வு ) அவரது தோட்டத்தில் தென்னைக்கு ஊடுபயிராக மிளகு வரப்பு ஓரங்களில் பலவிதமான மரங்கள் என்று பசுமை போர்த்தி உள்ளது அவரது  தோட்டம் , 25 வயதுடைய செஞ்சந்தனம், சந்தனவேங்கை போன்ற மரங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

ஆசிரியரிடம் மிளகு  சாகுபடி பாடம் கேட்போமா  

நான் விவசாய குடும்பத்தசார்ந்தவன் எங்க பாட்டன் பூட்டன் காலம் தொட்டே விவசாயம் தான் எங்க குழதொளில், நான் படிசிட்டு வாத்தியார் வேலை பார்த்தாலும்  விவசாயத்தையும் பார்த்துகிட்டேன், என்மகனும் பட்டய படிப்பு முடிசிட்டு  விவசாயம் பண்ண உதவியா இருக்கார், இப்போ ஓய்வு பெற்றபின் முழு நேரமும் விவசம் செய்றேன் எங்களுக்கு மொத்தம் 15 ஏக்கர் நிலமிருக்கு  10 ஏக்கர்ல தென்னை இருக்கு  5 ஏக்கர்ல நிலத்துல நெல் உளுந்து நிலக்கடலைன்னு பயிர் செய்வேன், தென்னைக்கு வரப்பு பயிரா மரங்களை 25 வருசதுக்கு முன்னாடி நட்டேன், 1998-ல தென்னைக்கு ஊடுபயிரா 1 ஏக்கர்ல மிளகு போட்டேன் நல்லமகசூல் கிடைச்சுது அதிலிருந்து இன்றுவரை மிளகு சாகுபடி பன்றேன், இப்போ மொத்தம் 3 ஏக்கர்ல மிளகு இருக்கு என்றவர் சாகுபடி நுட்பங்களை விளக்கினார்.

மிளகு செடி நட்டு இரண்டம் வருடத்திலேயே சிலசெடிகள் மகசூல் கொடுத்தாலும் மூன்றம் ஆண்டில்தான் முழுமையான மகசூல் கிடைக்கும். மிளகு செடியை எல்லோரும் தென்னை மரத்தில்தான் படரவிடுவார்கள் நானும் ஆரம்பத்தில் அப்படிதான் செய்தேன் சரியான மகசூல் இல்லை,  தென்னை 25* 25 அடி இடைவெளில் இருக்கு அதனால இரண்டு மரங்களுக்கு நடுவே 7அடிக்கு 7அடி இடைவெளி விட்டு கிலுவை, வாதநாராயணன், நஞ்சுமுருங்கை போ ன்ற குருவகை மரங்களை நட்டேன் 8அடி உயரத்தில் மரங்களை வெட்டிவிடுவேன் அதில் மிளகு செடியை படரவிட்டுளேன் நன்றாக காய்கிறது மிளகு பறிப்பதும் சுலபம்.

என்கதோட்டதுல கரிமுண்டா(நாட்டுரகம்), பன்னியூர் 1,  பன்னியூர் 2,பன்னியூர் 3 போன்ற ராகங்கள் இருக்கு பஞ்சகவியம் கொடுக்குறதால மிளகும் நல்ல திரட்சியா  இருக்கு , மிளகு சாகுபடில முதல் மகசூலா 60 கிலோ கிடசுது அதைவித்த காசுல ஞாபகதார்தம 12கிரம் மோதிரம் வாங்கி போட்டிருக்கேன். ஆரம்பத்துல வச்சமிளகு 1 ஏக்கர்  செடியில இருந்து சென்ற வருடம் அதிகபட்சம 400 கிலோ கிடசுது. வர்ரவருமானதுல 4 ஒரு பங்கு செலவு போனாலும் மிதமெல்லாம் லாபம்தான் மிளகு, கிலுவை, நஞ்சுமுருங்கை இலைசருகு கொட்டி மக்குரதால தென்னையும் நல்ல காய்கிறது என்று பாடத்தைமுடித்தார்.  

செஞ்சந்தனம் சந்தனவேங்கை மரங்களை விக்குரதுலத்தான் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, செஞ்சந்தனம் மரத்துக்கு வனத்துறையில் மரம் வெட்டுவதற்கான அனுமதி(கட்டிங் ஆடர்) வாங்க முடியல வர்ரவியாபரிங்க எல்லாம் கட்டிங் ஆடர் வாங்கித்தாங்க வாங்கிறோம்முனு சொல்றாங்க ஒருவருடம மரத்தவிக்க போராடிகிட்டு இருக்கேன் முடியல என்று விடைபெரும்போடு கூறினார். 

இராஜகண்ணு ஆசிரியர்
9443005676

Monday, September 16, 2013

நவீன சோலார் தொழில்நுட்பங்கள் தெளிவான விளக்கங்கள்

நவீன சோலார் தொழில்நுட்பங்கள் தெளிவான விளக்கங்கள்


               வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, தற்போது நடைமுறையில் உலக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.  அதன்பின் அவை காலியாகிவிடும்.  என்றைக்குமே காலியாகாத வற்றாத சக்தியை தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இன்றைக்கு உள்ளது.  அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் சற்றே பிரபலமடைந்து வருகிறது.  எனவேதான் சூரிய ஆற்றலைப் பற்றிய அடிப்படை தொழில் நுட்பங்களை விளக்கி, அதை எவ்வாறெல்லாம் நம் பொருளாதார சக்திக்கு உட்பட்டு பயன்படுத்த முடியும் என்பதை சற்று ஆழமான தொழில் நுட்ப விளக்கங்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கவே இந்த முக்கியமான கட்டுரையை எழுதுகிறேன்,  இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னை தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளுமாறு உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எதற்க்காக சூரிய சக்தி ?


             முதல் விசயம் இது என்றைக்குமே தீர்ந்து போகாது.  நிரந்தர ஆற்றல் மூலமாக நம்பிக்கையுடன் கையாள முடியும்.  ஒரு முறை அமைப்பதற்கு மட்டுமே செலவாகுமேயன்றி உற்பத்தி செலவு சிறிதும் இல்லை. இலவசமாகவே வெப்பமாகவோ. மின்சாரமாகவோ எடுத்துக் கொள்ள முடியும்.  எந்தவித கழிவுகளையும் உருவாக்காத பசுமை ஆற்றல்.  எனவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது,  இதையெல்லாம் விட முக்கியமான விசயம் சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 வருடங்களுக்கும் மேல். எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் போது உலகின் அடுத்த மிக முக்கியமான ஆற்றல் மூலம் சூரியன்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  சிலருக்கு வரும் முக்கியமான சந்தேகம் பகலில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கிறது,  இரவில் என்ன செய்வதுடூ  கவலையே வேண்டாம்,  சூரிய ஆற்றலை வேறு ஆற்றலாக மாற்றி சேமித்து வைக்க முடியும்,  வேண்டும்போது மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும், சூரிய ஆற்றலை சேமிக்க ஹைட்ரஜன் செல் (Hydrogen Cell Technologies) தொழில் நுட்பம் வரும் காலங்களில் பெரும் பங்காற்றப் போகிறது,  இதைப் பற்றி பின்னர் விவரிக்கிறேன். அதே நேரம் பெருமளவில் கிடைக்கும் சூரிய சக்தியை நிலை ஆற்றலாக (Kinetic Energy) சேமித்து பின் பயன்படுத்த முடியும்.  புரியும்படி சொல்வதானால் பகலில் உற்பத்தியாகும் மின்சக்தியை வைத்து பம்புகளை இயக்கி உயரமான இடங்களுக்கு நீரை மேலேற்றி சேமித்து இரவில் அதே நீரை கீழிறக்கி டர்பன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,  எனவேதான் எந்த சூழ்நிலையிலும் சூரிய ஆற்றலை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும், 
சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை இரண்டு வழிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தலாம், ஒன்று மின் ஆற்றலாக மாற்றி இயந்திரங்கள மற்றும் மின் விளக்குகளை இயக்குவது,  இரண்டாவது வெப்ப ஆற்றலாக ஹீட்டர். குக்கர் முதலிய உபகரணங்களில் நீரை சூடாக்கி உணவை வேகவைக்க பயன்படுத்துவது,  இதில் மின் ஆற்றலாக மாற்றுவதே மிகச் சிறந்த வழி,  இதுதான் வரும் காலங்களில் மிகப்பிரபலமடையும் என்பதை உறுதியாக கூறுகிறேன்,  இதற்குத்தான் சூரிய சக்தி தகடுகள் பொரிதும் உதவுகின்றன,

சூரியசக்தி தகடுகள் (Solar Photovoltaic Cells)


                  இவை சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக் கூடியவை.  ஜெர்மன் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின் ஒளிமின் விளைவு (Photo electric effect) கூற்றுப்படி வெற்றிடத்திலுள்ள தூய்மையான உலோக பரப்பின் மீது ஒளிக்கற்றை விழும்போது அதன் புறப் பரப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் உமிழப்படும் என்று கண்டுபிடித்தார்.  இதுவே சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அடிப்படை விதி, அதன்படியே இந்த சூரிய ஒளி தகடுகள் செயல்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது,  இதிலும் சில உயர் தொழில் நுட்பங்கள் தற்போது புகுத்தப்பட்டு பல வகைகளில் சூரிய ஒளி தகடுகள் தயாரிக்கப்படுகின்றன, அவை மோனோ கிரிஸ்டலின். பாலி கிரிஸ்டலின் மற்றும் சென்ற வருடம் 2012-ல் பிரபலமான   CIGS என்று சொல்லப்படுகின்ற உயர் தொழில்நுட்ப தகடுகள் மிகவும்  முக்கியமானவை.


மொனோ க்ரிஸ்டலின் தகடுகள் (Mono Crystalline Panels)

                       சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆரம்ப காலங்களில் மிக பிரபலமானதும். ஓரளவு இயக்குதிறன் கொண்டதும். ஓரளவு எளிய உற்பத்தி முறையாலும் இந்த வகையான சோலார் பேனல்கள் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின, செமி கண்டக்டர் (Semi Conductor Ex-Silicon)  என்று சொல்லப்படும் சிலிகனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.  உருவாக்கப்படும் பேனலில் உள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொருத்து அதன் திறன் மற்றும் வோல்டேஜ்  தீர்மானிக்கப்படுகிறது. இவை நேர் (DC) மின்சாரத்தை மட்டுமே வழங்குபவை.

பாலி க்ரிஸ்டலின் தகடுகள் ( Poly Crystalline Panels) 


         இதுதான் இன்று எல்லா இடங்களிலும் பெரும்பாலும்  பயன்படுத்தப்படுகின்ற சோலார்      பேனல்கள்.இதுவும் சிலிகனை அடிப்படையாகக் கொண்டுதான்   தயாரிக்கப்படுகிறது.  இவை 3 வாட் முதல் இன்று 245 வாட் வரை ஒரே பேனல்களாக தயாரிக்கப்படுகிறது.  இதை ஒரு கிரிட்(GRIT) கொண்டு இணைத்து மிக அதிக பட்ச மின் உற்பத்தியாக 600 மெகாவாட் வரை குஜராத்தில் சாதித்து காட்டி விட்டனர். எனவே சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் இத்தகைய சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.  இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் தைரியமாக முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய முடியும்.  இதை சரியான மின் பகிர்மான வசதிகளை அமைத்து அனைவருக்கும் விநியோகிக்கவும் முடியும்,  ஒவ்வொரு வீடுகளிலும் தேவைக்கேற்ப சூரிய மின்உற்பத்தி தகடுகளை நிறுவி அவரவர்களே உற்பத்தி செய்து கொண்டால் மின் ஆற்றல் தட்டுப்பாடு என்றுமே வராது.

CIGS சோலார் தகடுகள் ( CIGS Solar Panels)

                    சூரிய ஒளி மின் உற்பத்தியில் மிக முக்கியமான லேட்டஸ்ட் (2012) தகவல்  இந்த CIGS பேணல் கண்டுபிடிப்பே. இவை  சாதாரண பாலி கிரிஸ்டலின் தகடுகளை விட 17 % வரை அதிக மின் உற்பத்தியை அதே ஒளியில் தர கூடியது. எனவே காலை 7 மணியிலிருந்தே மின் உற்பத்தி தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து குறைந்த சூரிய ஒளி செறிவிலும் மின்சாரம் உற்பத்தி ஆவது இதன் சிறப்பு. இவை காப்பர், இன்டியம், கேலிய்ம், (டை) செலனைடு தனிமங்களை கொண்டு தகுந்த உற்பத்தி முறைகளால் உருவாக்கபடுகிறது. இவை பாலி கிறிஸ்டலின் பேனல்களை விட 20% விலை அதிகம் என்றாலும் 25 வருடம் மின் உற்பத்தி திறனில் வெற்றிகரமான பேனலாக இருக்க போகிறது. இன்றைய நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த திறனுள்ள, அதாவது  60 வாட் முதல் 1000 வாட் வரை இந்த வகை  பேனல்களே மிகவும் சிறந்தவை என்பது எனது கருத்து.  இதை தயாரிப்பது சற்று சிரமமான விஷயம். ஏனென்றால் இதிலுள்ள அணைத்து தனிமங்களும் அதிக கடின தன்மை கொண்டவை. இதிலுள்ள செலினியம் வெளிச்சத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் குறைந்த ஒளியிலும் சிறப்பாக செயல்படுகிறது. 

என்னுடைய சொந்த கருத்துப்படி ஒரே இடத்தில பெரிய அளவில் சூரிய ஒளி மின் ஆற்றலை உற்பத்தி செய்து தூரங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி பயன்படுத்துவதை விட. எங்கெல்லாம் மின்சாரம் தேவையோ அங்கேயே உற்பத்தி செய்து கொள்வது தேவை இல்லாத மின் விரயத்தை தவிர்பதோடு உற்பத்தி செலவும் பல மடங்கு குறைகிறது. எனவே வீடுகள், அலுவலகங்களுக்கு, தேவையான மின் ஆற்றலை அங்கேயே உற்பத்தி செய்து கொள்வதே,மின்சார விரயமாவதை தவிர்க்க, ஒரே வழி. இந்தியா போன்ற வெப்ப மண்டல ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். 


வீட்டு உபயோகத்திற்கான  சோலார் அமைப்புகள் 

(HOUSE HOLD SOLAR SYSTEMS) 


             இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்திருப்பது மின்சார பற்றாக்குறை,  என்னதான் பெரிய பெரிய மின் உற்பத்தி திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொறி் போன்ற கதையாகத்தான் இருக்கும்.  இதனை சமாளிக்க ஒவ்வொரு இந்தியனும் முழுக்க முழுக்க அரசையே மின்சாரத்திற்கு நம்பியிராமல் தனக்கு தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்யும் மனப்பக்குவத்தையும் அதற்கான தொழில் நுட்பத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அந்த வரிசையில் நிரந்தரமான மின் உற்பத்திக்கு பேருதவியாக இருக்கப் போவது சூரிய ஒளி மின்சாரமே என்று உறுதியாக கூறுவேன்.  தற்போதைய சூழ்நிலையில் அதை அமைப்பதற்கு சரியான வல்லுனர்கள் இல்லை.  அல்லது  இருக்கும் ஒரு சிலரோ யாருமே வாங்க முடியாத விலையைச் சொல்லி அனைவரையும் பயமுறுத்தி வருகின்றனர். உண்மையில் சூரிய ஒளி மின்சாதன அமைப்புகள் அனைவரும் வாங்கும் எளிய விலையில் என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக கூறுகிறேன்.  வெறும் 5 ஆயிரத்தில் தொடங்கி (10 Watt). 1.50,000- ரூபாய் (600 Watt) வரை அனைத்து தேவைகளுக்கும் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ள முடியும்.

                  அடுத்து மிக மிக முக்கியமான விசயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.  வீடுகளில் பயன்படுத்தப்படுவது மாறும் மின்சாரம் (Alternative Current), இதிலுள்ள மிக முக்கிய சிறப்பம்சம் இதை நீண்ட தூரங்களுக்கு எளிமையாக அனுப்ப முடியும்.  ஆனால் இதை உபயோகிப்பதில்  ஆற்றல் இழப்பு மிக அதிகம்.  ஆனால் இன்னொரு வகையான நேர்மின்சாரம் (Direct Current) நீண்ட தூரங்களுக்கு அனுப்ப முடியாவிட்டாலும் மிக குறைந்த ஆற்றலில் சக்தி விரயமின்றி வீட்டு உபயோக டிவி. கிரைண்டர். மின் விளக்ககள். கம்ப்யூட்டர் போன்றவற்றை மூன்று மடங்கு அதிக நேரம் இயக்க முடியும்.





                          அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிக குறைவே.  ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC  ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமேயன்றி ஏற்கனவே உங்களிடம் இருக்கும் AC மின்சாரத்தில் இயங்கும் விளக்குகள். மின் விசிறிகளை பயன்படுத்தினால் தேவையற்ற ஆற்றல் வீணடிக்கப்படுவதோடு. அதற்கான மின் உற்பத்தி சாதனங்களுக்கு அதிகமான முதலீடும் தேவைப்படும்.  வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள் பல மாடல்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, மிக உயர்ந்த தரத்தில் LED விளக்குகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் முழு உருவம் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. முக்கியமான விசயம் இவை அனைத்தும் என்னால் முழுமையாக தர சோதனை செய்யப்பட்டு முழு உத்திர-வாதத்துடன் நானே வெளியிட்டுள்ளேன்.   உதாரணமாக ஒர டேபின் பேன் AC மின்சாரத்தில் இயங்குவது 45 வாட் செலவழித்து வெளியிடும் காற்றை என்னுடைய DC 12 வாட் மின்விசிறி கொடுத்துவிடும்.  அதேபோல் சாதாரண 60 வாட் குண்டு பல்பின் வெளிச்சத்தை 5 வாட் LED பல்பு மிக எளிதாக கொடுத்துவிடும்.  ஒரே விசயம் தற்போது LED சாதனங்களின் விலை சற்று அதிகம்.  இதுவும் வரும் காலங்களில் குறைந்துவிட நிறைய சாத்தியங்கள் உள்ளன.  அடுத்த பதிவில் சூரிய ஆற்றல் சாதனங்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன். 

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி இருப்பதைக் காட்டியுள்ளது.

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி இருப்பதைக் காட்டியுள்ளது.


Thanks சி. ஜெயபாரதன்
Saturns massive storm
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html
[ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane  ]
சனிக்கோளின்  பூதப்புயலில் நீர்,
பனித்தூள்கள், அமோனியா
வாயுக்கள் வெளியேறும் !
தரைத்தளம் கீறி, துணைக்கோளில்
வரிப்புலி போல் வாய்பிளந்து
முறிவுக் குழிகளில்
பீறிட்டெழும்
வெந்நீர் ஊற்றுக்கள் !
முகில் மூட்ட வாயுக்கள் !
பனித்துளித் துகள்களும்
எரிமலை போல்
விண்வெளியில் வெடித்தெழும் !
புண்ணான பிளவுகள்
மூடும் மீண்டும் திறக்கும் !
எழுச்சியின் வேகம் தணியும் !
பிறகு விரைவாகும் !
பனித்தட்டுகள் உருகித்
தென் துருவத்தில்
திரவமானது எப்படி ?
நீர் ஊற்று வெளியேற
உந்துவிசை அளிப்பது எது ?
விந்தை யான நீர் எழுச்சி !
புரிந்தும் புரியாதப்
பிரபஞ்சப் புரட்சி !
++++++++++++++
Cassini Space Probe -1
சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் வெளியிட்டதில்லை.
லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]
"சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறிந்து,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டியுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்திலிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. "
லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]
Saturn's huge storms
2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானிகளுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக்கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது.
Cassini Image of Water
"(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை."
காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]
"என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது."
கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு
fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus
"சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!"
லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] "
சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி"
வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]
american-yellowstone-park-geysers
"இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது"
டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] "
பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு 'கால யந்திரம் ' [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!"
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]
சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி
2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் "வெந்நீர் ஊற்றுக்களைப்" (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக "வரிப்புலி" (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் "மின் அயானிக் துகள்கள்" (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.
fig-1a-geysers-in-saturns-moon-enceladus1சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் "ஈரோப்பா" ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !
fig-1g-saturns-moons
என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?
வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?
fig-3-cassini-space-probe-orbiting-saturn
பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள "உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி" (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது. fig-1c-how-the-geyser-does-functionதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்
என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு "இழுப்பு-விலக்கு" விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் "லோ" [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம். fig-2-hot-giant-geysers-in-enceladus-south-poleதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார். fig-4-hot-geysers-jump-upon-frictionசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல் 2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!
fig-3-water-springs
2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !


++++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.
1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science - Webster's New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic - Frontiers of Scince - The Family of the Sun (1982)
14 National Geographic - Living with a Stormy Star - The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html
(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
24. Saturn's Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
25. NASA's Report : Icy Particles Streaming form Saturn's Enceladus [Dec 6, 2005]
26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
28. Daily Galaxy - Geysers on Saturn's Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
29.  Saturn's Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
30. Astronomy Now Online - Cassini Reveals Enceladus' Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn's Moon Enceladus ? [Dec 19, 2008]
32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]
33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]
32 http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html [September 13, 2013]

மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை

கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக்கிழங்கு (கண்வள்ளிக்கிழங்கு - சன் டி.வி.) என்றெல்லாம் அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா (ஆங்கிலத்தில் மலபார் குளோரி லில்லி), ஒரு காலத்தில் மர்ம தேசப் பயிராகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப கால விலையேற்றத்தால் (2009 - ஒரு கிலோ ரூ.1600) தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் ஒரு மூலிகைப் பயிராகிவிட்டது.

இதில் வெகுஜன ஊடகங்களான தினசரி, வார, மாத ஏடுகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவை செய்தியை முந்தித்தரும் நோக்கத்தில், இதை வாங்கும் நிறுவனங்களுக்கே தெரியாத மருத்துவப் பயன்களையெல்லாம் பட்டியலிடுவது அனைவரையும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது.(வயிற்றுவலி, பூச்சி மருந்து, ஆண்மை பெருக்கி - ஆர்வக் கோளாறில் கிழங்கை புடுங்கி சாப்பிட்டராதீங்க வாலிப வயோதிகர்களே, அப்புறம் உங்கள ஆண்டவனாலும் காப்பத்த முடியாது, ஆமாம் கிழங்கு மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தது)

மாற்றுப்பயிர் தேடும் ஆர்வம் மிகுந்த விவசாயிகளுக்கு ஒரு சலனத்தை (சபலத்தை) இந்தப்பயிர் நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாது. இது போன்ற புதுப்பயிர்களை முயற்சி செய்யும் முன் அது பற்றிய சாகுபடித்தகவல், சந்தை நிலவரம், முதலீடு, எதிர்காலம் போன்றவற்றை நன்கு தெரிந்துகொண்டு அதன் பின் முயற்சிக்கலாம். எனவே கண்வலிக்கிழங்கு சாகுபடி பற்றி முடிந்தவரை முழுமையான தகவல்களை தந்துள்ளேன்.

தாவர பெயர் : குளோரியோசா சூப்பர்பா
குடும்பம் :லில்லியேசியே

பிற மொழி பெயர்கள்
ஆங்கிலம் :மலபார் குளோரி லில்லி
தெலுங்கு :அடவிநாபி
மலையாளம் :காந்தள்
கன்னடம் :கொலிகுட்டுமா
ஹிந்தி :கலிஹரி


சாகுபடிக்கு வந்த விதம்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சாகுபடியாகும் இடங்கள்

மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக கரூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது, ஏறக்குறைய 700௮00 டண் விதை உற்பத்தியாகிறது.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

இந்த பயிர் பொதுவாக வரண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான்.

வடிகால் வசதி இல்லாத நிலத்தில் பயிர்



வடிகால் வசதி உள்ள இடத்தில் பயிர்




சாகுபடிக்கு ஏற்ற மண்

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒடக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகியவை ஏற்றது. வடிகால் வசதியில்லாத தாழ்வான நிலங்கள், களிமண், சதுப்பு நிலம் போன்றவை ஆகாது. கடலை, குச்சிக்கிழங்கு, மஞ்சள், கோலியஸ் போன்றவை நன்கு விளையும் நிலமாக இருந்தால் போதும். அடியில் உள்ள இரண்டு இடங்களும் முந்தைய நாள் மழை பெய்த நிலம், வித்தியாசத்தை பாருங்கள்.

சாகுபடிக்கு ஏற்ற பருவம்

ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் விதைக்கிழங்கு நடவு செய்ய ஏற்ற காலம்,

விதைக்கிழங்கு சேகரம் செய்தல்

விதைக்கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தோ, காடுகளில் சேகரம் செய்தோ ஒலைக்குடிசை போன்ற வெப்பம் தாக்காத இடங்களில், தரையில் 5 - 10 செ.மீ. உயரத்திற்கு மணலைக் கொட்டி அதன் மீது சேகரம் செய்த கிழங்குகளை 15 - 20 செ.மீ. அகல வரப்புக்கள் போன்று 20 செ.மீ. உயரத்திற்கு மிகாமல் காற்றோட்டமாக வைக்கவும். பெவிஸ்டின் 5 கிராம் ஒரு கூடை மணலில் கலந்து தூவிவிடுவது நல்லது.


தவறான முறை



சரியான முறை




விதைக்கிழங்கைக் கையாளுதல்

கிழங்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக அட்டைப் பெட்டியில்தான் கொண்டு செல்லவேண்டும். அதிக பட்சமாக ஒரு பெட்டி 30௪0 கிலோவிற்கு மிகாமல் இருக்கவும். நடவிற்கு எடுத்து செல்லும் போது கூடை போன்றவற்றில் காகிதம் அல்லது வைக்கோல் வைத்து எடுத்து செல்லவும்.









தேவையான விதைக் கிழங்கு

சிறிய கிழங்காக இருந்தால் (40- 50 கிராம்) 500 கிலோ ஒரு ஏக்கருக்கும், பெரிய கிழங்காக இருந்தால் (100 - 120 கிராம்) 600 கிலோ ஒரு ஏக்கருக்கும் தேவைப்படும். கிழங்கு 40 கிராமுக்கு குறைவாக இருந்தால் முதல் வருடம் 100 கிலோவுக்கு குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும்.

உபயோகமற்ற கிழங்குகள்


பெரிய, சிறிய, நடுத்தர கிழங்குகள்



உழவு

குறைந்தது 2 - 3 உழவு அவசியம், அதில் ஒன்று 5 கலப்பை உழவு போடுவது நல்லது. மண் அமைப்பிற்கு ஏற்றவாறு உழவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். கடைசி உழவில் 2 - 3 டண் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

வரப்பு அமைத்தல்

6 அடி இடைவெளி விட்டு வரப்பு அமைக்கவும், வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கு நடவிற்கு குழி வரப்பும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பும் அமைக்கவும்.



நடவு செய்யும் பக்குவம்

முடிந்த வரை கிழங்கு முளைப்பு வந்த பின் நடவு செய்தால் 100 சதவீத முளைப்புத்திறன் இருக்கும், ஆனால் முளைப்பு வந்த கிழங்கைக் கவனாமாக கையாள வேண்டும், இல்லையென்றால் மிருதுவான முளைப்பு உடைந்து விடக்கூடும்.





நடவு செய்யும் முறை

வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கை வாய்க்காலிலும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பிலும் 5 - 10 செ.மீ. (மண் தன்மைக்கேற்ப) ஆழத்தில் கிழங்குகளை படுக்கை வசமாக 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக வைக்கவும். படத்தில் சற்று நெருக்கமாக இருக்கும், இந்த அளவிற்கு அடர்த்தி தேவையில்லை.

சொட்டு நீர் பாசனம்



வாய்க்கால் பாசனம்





நீர் பாசனம்

நடவு முடிந்ததும் உயிர் நீர் உடனடி அவசியம் இல்லை எனினும் இரண்டொரு நாட்களில் தண்ணீர் விடவேண்டும்.




முளைப்பு

சரியான பருவம் வந்தாலோ அல்லது பருவ மழை நன்கு பெய்தாலோ உடனடியாக முளைப்பு வந்துவிடும். மூங்கில் குருத்து போல் வேகமாக வளர ஆரம்பிக்கும், பருவ மழை சரியாக தொடர்ந்து பெய்தால் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.

Friday, September 13, 2013

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள்

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/

E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/ https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html

14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/

கணினி பயிற்சிகள் (Online) 1) அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
http://99likes.blogspot.com/

3) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/

பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php

6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி http://www.way2sms.com/

7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://www.youtube.com/
http://www.cooltamil.com/

இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/

10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/

வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் ! பயன்பெறுங்கள் !!