Saturday, March 24, 2012

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர்.  அது தவறான எண்ணம்.  இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.
இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.
மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம்.  இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள்.  கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள்.  குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.
குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது.  இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை.  இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும்.  இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.
இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil    - Kungumapoo
English    - Saffron
Sanskrit    - Kumkuma
Malayalam    - Kugamapoo
Telugu    - Kumkumapoova
Hindi    - Kesar
குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்
பொருள் - நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.
மருத்துவப் பயன்கள்
காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.  தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும்.  சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.
ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும்.  மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.
கண் பார்வையை தெளிவாக்கும்.  40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும்.  கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.
அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

கண்களை அழகாக்கும் கலர் லென்ஸ்

னித உடலில் கவர்ச்சி பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவை. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள்.
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பார்வை குறைபாட்டை கண்டறிந்து கண்ணாடி கள் அணிந்தனர். பின்பு கான்டாக்ட் லென்சுகள் அணிந்தனர். இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள் லேசர் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடைக்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை பொருத்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொடங்கிவிட்டன.
அது தொடர்பான கேள்விகளும் - பதில்களும்:
கான்டாக்ட் லென்ஸ் என்றால் என்ன?
பார்வை குறைபாட்டிற்காக கண் ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண் ணின் மேல்புறத்தில் பொருத்தப் படும் ஒரு மெல்லிய சாதனம் `கான்டாக்ட் லென்ஸ்' எனப்படுகி றது. இந்த கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர் களை' பயன்படுத்தி தயாரிக்கப்படு கிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும்.
கண்ணாடிக்கும்- கான்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?
கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற்காக அதை அணிந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கண்ணாடி அணிவதால் சிலரது வெளித் தோற்றத்திலும், அழகிலும் மாற்றம் ஏற்படும். கண்ணாடி அணிவதை சிலர் அசவுகரியமாக வும் கருதுவார்கள். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பும் உருவாகலாம். சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு.
கான்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை மற்றவர்களால் எளிதாக கண்டறிய முடியாது. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கண்ணாடி அணியவேண்டியதில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம். ஒருவர், மிக அதிகமான `பவர்' கொண்ட கண்ணாடி அணியும்போது கண்ணாடி மிக தடினமாக வும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை துல்லியமாகும்.
கான்டாக்ட் லென்சில் எத்தனை வகைகள் உள்ளன?
கான்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக்காக நாம் உபயோகப்படுத்தலாம். பார்வைக் காக பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை Rigid, semi soft, softஎனப்படும். ஒவ்வொரு வகை கான்டாக்ட் லென்சும், வெவ்வேறு வகை பாலிமரில் தயாரிக்கப்படுகிறது.
காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் என்பது என்ன?
கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.
கான்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்கலாம்?
பொதுவாக கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்கலாம். தற்போதைய புதிய வரவான `Extended wear’' என்ற கான்டாக்ட் லென்சை 14 முதல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத்திக்கொள்ளலாம். தற்போது தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய `Daily disposable' லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கானவைகளும், ஒரு மாதம் மட்டும் பயன்படுத்தக்கூடியவைகளும் உள்ளன.
கான்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பது எப்படி?
கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண்டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்துகொண்டு கண்களை கசக்கக்கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிது.
கான்டாக்ட் லென்ஸ்களால் பக்கவிளைவுகள்?
அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக்கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை.
கான்டாக்ட் லென்ஸ் எந்த வயதில் இருந்து அணியலாம்?
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.
லேசர் சிகிச்சையால் என்ன பலன்?
18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கண்ணில் பவர் (கண்ணாடியின் அளவுகோல்) மாறுவதில்லை. எனவே 18 வயதுக்கு மேல் `லேசிக்' செய்து கொண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாக சரி செய்ய இயலும். லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்' பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய்யும்.
தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (Intra lasik) முறை உள்ளது. இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாக செய்யப் படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிற வர்கள் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்திலும் பணிபுரியலாம். இந்தியா விலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
விளக்கம்: டாக்டர். அருள்மொழி வர்மன்
(கண் சிகிச்சை நிபுணர்), சென்னை-40.

This site is very informative, so please save it. You do not know when it will come handy



This site is very informative, so please save it.  You do not know when it will come handy

Which ever diseases you click-on it gives you a video explanation !!!! 

JUST CLICK ON A SPECIFIC AILMENT

NOTE: These tutorials require a special Flash plug-in, version 6 or above... If you do not have Flash, you will be prompted to obtain a free download of the software before you start the tutorial.
 
·  Diseases and Conditions
o COPD <http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/copd/htm/index.htm(Chronic Obstructive Pulmonary Disease)
o Gastroesophageal Reflux Disease <http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/gerd/htm/index.htm>(GERD)
o Tests and Diagnostic Procedures
Surgery and Treatment Procedures
·  Cholecystectomy - Open Laparoscopic <http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/cholecystectomyopenandlaparoscopic/htm/index.htm(Gallbladder Removal Surgery)
·  Prevention and Wellness