Tuesday, February 28, 2012

கம்மங்கதிர்களை சேமித்து பாதுக்காகும் முறை!

கம்மங்கதிர்களை சேமித்து பாதுக்காகும் முறை!

முதலில் 8-10 அடி ஆழம் பள்ளம் தோன்றி அதில் கம்மங்கதிர்களை 1/2 அடி உயரத்திற்கு பரப்பவேண்டும்.   சேமிக்க வேண்டிய தாணியத்தை இதன்மேல் 1/2 அடி உயரத்திற்கு பரப்பி மீண்டும் கம்மங்கதிர்களை பரப்பவேண்டும்.  இவ்வாறு பல அடுக்குகளாக கம்மங்கதிர் மற்றும் தானியத்தை குழியில் நிரப்பி இறுதியில் ஒரு அடி உயரத்திற்கு கம்மகதிர்களை பரப்ப வேண்டும்.  பின்பு களிமண் மற்றும் பசுஞ்சாண கலவையால் குழியை மூடிவிட வேண்டும்.  இம்முறையில் தானியங்கள் ஒரு வருட காலத்திற்கு பூச்சித்தாக்குதல் இன்றி சேமிக்கப்படுகிறது. இம்முறை 50 வருடங்களுக்கு மேலாக பின்பற்றப்படுகிறது.

பயிர் பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய சில முக்கிய நுட்பங்கள்…

பயிர் பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய சில முக்கிய நுட்பங்கள்…

நாம் எந்த பணி செய்தாலும் அதில் ஒரு தொழில் நுட்பம் உண்டு.  அந்த நுட்பத்தை அறிந்து செயல்படும் ஒவ்வொருவருக்கும் வெற்றி கிட்டுவது நிச்சயம்.  வேளாண்மையில் பயிர் பாதுகாப்பில் பூச்சி, நோய் மற்றும் பயிரின் எதிரிகள் ஆகியவற்றிலிருந்து பயிரை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று. பயிர் பாதுகாப்பு என்றவுடன் தவறான எண்ணம் இன்னும் பரவி நிற்கிறது.  பயிர்ப் பாதுகாப்பில் ரகங்களின் தேர்வு, பட்டம் எல்லா விவசாயிகளுகும் ஒன்றாக செயல்படுதுதல்.  உரநிர்வாகம், நீர் நிர்வாகம் பூச்சிகள் கண்காணிப்பு, பொருளாதார சேதநிலை இந்த அம்சங்கள் அனைத்தும் மிக, மிக முக்கியமானவை.  பயிர்பாதுகாப்பில் சுற்றுப்புற சூழ்நிலை கெடாமல், பொருட் செலவு அதிகமில்லாமல் இருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
பூச்சிகள் கண்காணிப்பு: சில ஆணடுகளுகு முன் வேளாண்மையில் உரமிடுதல், களையெடுத்தல் போன்ற பணிகளைப் போலவே ஒருசில குறிப்பிட்ட தினங்கள் இந்த மருந்தை இந்த அளவில் தெளியுங்கள் என்று சொல்லி வந்தோம்.  அந்த நிலை மாறி தற்போது தேவைப்படும் போது குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட மருந்ததை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.  அந்த தேவைப்படும் நேரம் வந்துவிட்டதா என்பதை அறியத்தான் பூச்சிகளின் கண்காணிப்பு அவசியம்.  இதற்கு விளகுப்பொறி, பூச்சிகளின் இன கவர்ச்சிப்பொறி போன்ற சாதனங்கள் கைகொடுக்கின்றன.  நாம் தினமும் வயலைச் சுற்றி பார்வையிடுவது மட்டுமல்லாமல் வாரம் ஒரு வயலில் இறங்கி நான்கு மூலைகளிலும், நடுவிலுமாக விளக்குப்பொறி ஆகியவற்றில் தென்படும் பூச்சிகள் உள்ளனவா என கவனமாகப் பார்க்க வேண்டும்.
தெரிந்து கொள்ளவேண்டும்: ஒரு விவசாயி எந்தப்பயிரை வழக்கமாகப் பயிரிடுகின்றாரோ அந்தப் பயிரில் எந்தவகைப் பூச்சிகளெலாம் வரும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்தப் பூச்சிகள் எந்த வகையில் பயிரை சேதப்படுத்தும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.  அப்போது தான் அதற்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள முடியும்.  உதாரணமாக இலையைத் தாக்கும் பூச்சிகள், குருந்தை தாக்கும் வகை, வேரைத்தாக்கும் பூச்சிகள் செடித்தண்டின் அடிப்பகுதியைத் தாக்கும் பூச்சியினம்.  மற்றும் சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் போன்றவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.  பூச்சிகள் தாக்கும் தன்மைக்குத்க்க அதன் பொருளாதார சேதநிலை என்னவென்பதை அறிய வேண்டும்.  அதாவது அப்பூச்சியின் எண்ணிக்கை அல்லது தாக்கிய சேத அறிகுறி எந்த அளவு இருந்தால் பயிருக்கு அதிக நேரம் உண்டாகும்.  என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.  ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொருவகை பூச்சிக்கும் வெவ்வேறு பொருளாதார சேதநிலைகள் உள்ளன.
தவிர்க்க வேண்டும்: இப்போது பூச்சிகள் பொருளாதார சேதநிலைக்கு  மேல் உள்ளன என்பததை நிச்சயித்தவுடன் மருந்தடிக்கும் பணியில் ஈடுப்படப்போகின்றீர்களா?  அங்குதான் சற்று கவனம் தேவை.  வேளாண்மை ஆராய்ச்சியில் ஒவ்வொரு பூச்சிக்கும் எல்லாவிதமான மருந்துகளையும் பயன்படுத்த அதில் சிறந்த பாதுகாப்பு தரும் பூச்சிகொல்லிகளைத்தான் சிபாரிசு செய்யப்படுகின்றது.  ஒரு சில பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கணக்கற்ற அளவில் பெருக செய்து விடும்.  எனவே சிபாரிசு செய்யப்பட்ட பூச்சிகொல்லியைத்தான் பயன்படுத்தவேண்டும்.  மற்றவைகளை அவசியம் தவிர்க்கவேண்டும்.
கைத்தெளிப்பான் சிறந்தது: அடுத்ததாக தேர்வு செய்ய வேண்டியது எத்தகைய தெளிப்பான், மருந்தின் அளவு, தண்ணிர் அளவு எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும் என்பனவையாகும்.  விதைத் தெளிப்பானைவிட கைத்தெளிப்பான் சாலச்சிறந்தது.  குறுகிய காலத்தின் அதிக பரப்பளவு மருந்தடிக்க முடியாமல் போகும் என்று விசைத்தெளிபானை பயன்படுத்தக்கூடாது.  அதிக பரப்பளவு மருந்து தெளிக்க வேண்டி வந்தால் அதிக எண்ணிக்கையில் தெளிப்பானையும் ஆட்களையும் பயன்படுத்த வேண்டும்.  ஏனெனில் ஆகும் செலவு ஒன்றே.
மாலை நேரம் சிறந்தது: மாலை நேரம் தான் மருந்து தெளிப்பதற்கு மிகவும் சிறந்த நேரமாகும்.  அதாவது மாலை 3 மணிக்கு மேல், காலை நேரமாக இருந்தால் 9 மணிக்குள்ளாக முடித்துக்கொள்ள வேண்டும்.  எனினும் மாலை நேரமே சிறந்தது.  காரணம் இரவு பூராவும் மருந்தின் வேகம் வயலில் இருக்கும்.  அது மறுநாள் காலை சூரிய வெப்பம் ஏறும் வரையில் தொடரும்.  காலை வேளையில் 9 மணிக்கு மேலாக காற்று வீசத்தொடங்கிவிடும்.  மருந்து நாம் எண்ணிய இடத்தில் விழாது காற்று வேகத்தில் போய்விடும் மற்றும் அதிக வெப்பத்தால் மருந்து சீக்கிரமாக ஆவியாகி பயன்தராமல் போய்விடும்.  மருந்து அடிக்கும் நாளில் மாலை அல்லது இரவு மழைவரும் அறிகுறிகள் இருந்தால் அன்றைய தினம் மருந்து அடிக்கக்கூடாது.  மருந்தடிக்க வயல்களிலிருந்து இரண்டொரு நாளைக்கு தண்ணீர் வடிகட்டாமல் இருப்பது நலம்.
சரியான அளவில்: மருந்தின் அளவு தண்ணீரின் அளவு இவைகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் என்றால் 200 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக வேண்டும்.  மருந்தின் அளவை குறைத்தால் அதில் இரண்டு நஷ்டங்கள் உள்ளன.  ஒன்று பூச்சிகள் சரியான அளவில் சாகாது.  இரண்டாவது பூச்சிகள் அந்த மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு.  மருந்தை அதிகமாக்கினால் பணச்செலவு அதிகமாவதுடன் சில நேரங்களில் செடிகளுக்குத் தீமை பயக்க நேரிடும்.  எனவே சிபாரிசு செய்யப்பட்ட அளவு கூடவோ அல்லது குறையவோ கூடாது.  ஒரு சில பயிர்களுக்கு உதாரணமாக கரும்பு, பருத்தி போன்ற பயிர்களிலே அல்லது பொதுவாக எந்தப் பயிரானாலும் ஒரு முறைக்கு மறுமுறை மருந்தடிக்கும் நிலைமை வந்தால் சிபாரிசு செய்யப்பட்ட மற்ற மருந்துகளை மாற்றி பயன்படுத்த வேண்டும்.
மருந்தை அளக்க சரியான துல்லியமான அளவு குப்பிகளை வாங்கி வைத்துகொள்ள வேண்டும்.  மருந்தை தெளிப்பானில் ஊற்றிக் கலக்குவதை விடவெளியில் ஒரு வாளியிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ கலந்து பின் தெளிப்பானில் ஊற்றுவது சிறந்த முறையாகும்.  மருந்தை வடிகட்டி ஊற்றுவது மிக முக்கியம்.  சரியாக வேலை செய்யாத, ஒழுகும் தெளிப்பான்களையும் சரியாக முறயில் விசிறி அடிக்காத தெளிப்பான் முனை உள்ள தெளிப்பான் களையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
தெளிக்கும் முறையில் கவனம்: பூச்சியின் தாக்குதல் தன்மைக்கு தக்கவாறு தெளிப்பானின் முனையை செடியின் எந்தப்பகுதியிலும் தெளிக்க வேண்டுமோ அதை தெரிந்து மருந்து தெளிப்பவர் அதன் பிரகாரம் செயல்பட வேண்டும்.  மருந்தடிப்பவர் இந்த  முறையில் இருந்து தவறும்போதெல்லாம்  வரப்பில்  நிற்கும் கண்காணிப்பாளர்  அவரை சரியான முறையில்  செயல்பட வைக்கவேண்டும்.  இலைகளைத்தாக்கும் (சுரண்டும்  அல்லது சுருட்டும்) பூச்சிகளாக இருந்தால் செடி முழுவதும்  நனையும் படி மருந்தை தெளிக்கவேண்டும்.  தெளிப்பானின் முனையை இரண்டு பக்கமும் திருப்பி அடித்து பிறகு செடியின் மேல் பிடிக்கவேண்டும் எக்காரணத்தை கொண்டும்  பயிர் மட்டத்திற்கு அதிக உயரத்தில் தெளிப்பானின் நுனியை பிடிக்க கூடாது.  பயிரின் அடியில் தாக்கும்,  புகையான், குருத்துப்பூச்சி மற்றும் கரும்பு நாவாப்பூச்சி இவைக்ளுக்கு பயிரின் அடிப்பாகத்தில் தான் அதிக கவனத்தோடு தெளிப்பானின் முனையை திருப்பவேண்டும்.  கதிர்நாவாய்ப்பூச்சி, நாற்றங்காலில் உள்ள இலைப்பேன் இவைகளுக்கு பயிரின், மேல்மட்டத்தில், மட்டுமே மருந்து தெளித்தால் போதுமானது.

மண்ணின் வளம்

மண்ணின் வளம்

மண்ணில் வளம், வரவரக் குறைந்து கொண்டே வருகிறது.  அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் ?
சூழ்நிலை மண்டலத்தில் (Eco system) மண் என்பது ஒரு முக்கிய உயிரற்ற காரணியாகும்.  மண்ணிலுள்ள கனிம உப்புகளும் கரிமப் பொருள்களும் சூழ் மண்டலத்தின் தயாரிப்பாளர்களான தாவர வளர்ச்சிக்கும் பெரிதும் அவசியம். மேலும் மண் சூழ் இயலில் பல்வேறு பாக்டீரியா, பூஞ்சாணங்கள், புரோட்டாசோவாக்கள் ஆகியன சிதைப்பனவாகவும் (decomposer)  மாற்றுவனவாகவும் (transformer) உல்ளன.  மொத்தத்தில் மண் ஒரு இயற்கைப் பரிசுப் பொருளாகும்.
மண்ணின் வளம் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது என்பது வருந்தத்தக்க உண்மை.   மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு அல்லது திரும்பப் பெறுவதற்குப் பின்வருவனவற்றைக் கையாளலாம்.
  • பசுந்தாள் உரமிடுதல், பயிறுவகை தாவரங்களைப் பயிரிடுதல், இயற்கை உரங்களை அதிகமாக இடுதல், மல்ச் இடுதல் ( மண்ணின் ஈரத் தன்மையைக் காப்பதற்காக அதன்மேல் விரிக்கப்படும் போர்வை போன்ற ஒரு விரிப்புக்கு மல்ச் என்று பெயர்.
  • செயற்கை வேதி உரங்களால் நிலத்திற்கு அதிகமாகப் பாதிப்புகள் உண்டு.  அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.  சர்க்கரை ஆலைக்கழிவு ‘பிரஸ்மட்’ உபயோகிக்கலாம்.
  • பாரம்பரிய வேளாண் முறைப்படி இடைப் பயிரிடுதல், பல்வகைப் பயிர்களை விளைவித்தல் ஆகியன நிலத்தின் தரத்தை உயர்த்துவதுடன், வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிலைநிறுத்த உதவும்.
  • மேய்ச்சல் நிலத்தில் முறையற்ற மேய்ச்சலை தடுக்க வேண்டும்.
  • உயிரி உரங்களை, மண்புழு உரங்களை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.
  • பொதுவாக உரங்களையும் உயிரிச் சத்துக்களையும் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
  • சரியான இடைவெளிவிட்டு மண் ஆய்வு செய்து தரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
  • ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பினை இட்டு களர் அமில நிலங்களை முறையே சீர்திருத்தலாம்.

கோடை உழவு பயனுள்ள தகவல்கள்!

கோடை உழவு பயனுள்ள தகவல்கள்!

ம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்யவேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிர்சாகுபடி நடைமுறையில்  உள்ளது.  முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.  இடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது.  அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்காலாக செய்யவேண்டும்.
கோடை உழவின் அவசியம்:
1.தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்.
2.அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.
3.மேல்மண் இறுக்கமாக காணப்படும்.  இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளி ஏறும்.
4.நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள் சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
5.முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.
கோடை உழவு செய்தல்:
1.பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம்
3.நிலச்சரிவில் குறுக்கா, மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவும்.
4.2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும்.
கோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்:
1.மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திரன் அதிகமாகிறது.
2.மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.
3.முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
4.சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.

மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்

ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

பொது அறிவு

  1. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
  1. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடைஜூன் 5
  1. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
  1. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
  1. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
  1. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
  1. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
  1. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
  1. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
  1. யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
  1. உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
  1. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
  1. கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
  1. இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
  1. வறுமை ஒழிப்பிற்கான .நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
  1. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
  1. உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
  1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
  1. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
  1. லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.
  1. மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
  1. சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
  1. மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
  1. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
  1. உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
  1. நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
  1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
  1. ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
  1. மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
  1. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
  1. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
  1. ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
  1. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
  1. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை :  35 மைல்
  1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடைடேக்கோ மீட்டர் 
  1. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை :  70% 
  1. 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடைவேர்கள்
  1. பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
  1. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
  1. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும்

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.


இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

நம்மில்ல் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால் அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.