Monday, October 6, 2014

2014 Harvest Photos

Sunday, September 14, 2014

நல்ல புகைப்படம்

உங்களுக்கு தெரியுமா ?

உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்

‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?

‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.

‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.

‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.

‪#‎PIZZA‬ பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
+++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன்

~~~~~~~~~~~~~~~

Monday, August 25, 2014

ஒட்டு கத்தரி தொழில்நுட்பம் :ஒட்டுக்கத்தரி என்பதுகத்தரியின் இனச்செடியான சுண்டைக்காய் செடியை வேர்ச் செடியாகவும், நமக்கு தேவையான கத்தரி இனத்தை தேர்வு செய்து அதிலிருந்து இளம்தளிர் தண்டினை எடுத்து ஒட்டுச்செடியாகவும் வைத்து இணைப்பதே ஒட்டுக்கத்தரி என்பதாகும். சுண்டைக்காய் செடி அதிக ஆண்டுகள் வளரும் தன்மையைக் கொண்டது. பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்குதலையும் தாங்கி வளரும் தன்மை உடையது. இளம்தளிர் ஒட்டுக்கன்றுகளை அதிகஅளவு விளைச்சலை தரவல்ல செடிகளின் இரகங்களின் விதைகளை விதைத்து அதிலிருந்து இளம்தளிர் குச்சி தேர்வு செய்யப்படுகிறது.வேர்ச்செடி தயாரிப்பு :சுண்டைக்காய் விதைகளை 4 சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு மேட்டுப்பாத்திகளில் விதைக்க வேண்டும். சுண்டைக்காய் விதையை விதைத்த நார்களிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைத்த 25 நாட்களுக்கு இது ஒட்டுக்கட்டுவதற்கு ஏற்ற தடிமனுடன் இருக்கும்.ஒட்டுக்கட்டுதல்:வேர்க்குச்சியும், இளம்தளிர் குச்சிகளும் நான்கு இலைகள் விட்ட நிலையில் வேர்ச்செடியின் மேல் பகுதியை 10 செ.மீ. உயரத்தில் கூர்மையான சுத்தமான கத்தியைக் கொண்டு நீக்கி விட்டு, நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமனுடன் இளந்தளிர் குச்சியின் வேரை நீக்கி விட்டு தண்டின் இலைகளை இரு நுனியிலைகள் மட்டும் விட்டு விட்டு இதர இலைகளை நீக்கி விட வேண்டும். பின் "ஏ' வடிவத்தில் இருபுறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுபட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக் இணைப்பான் கொண்டு இணைக்க வேண்டும். அல்லது ஒரு செ.மீ. அகலமான சிறு பாலிதீன் தாளைக் கொண்டு இறுக்கமாகச் சுற்றி கட்டி விட வேண்டும். பின்னர் ஒட்டுக் கட்டிய செடிகளை ஒரு சிறு பாலிதீன் உறையை கொண்டு நுனியை மூடி நிழல்வலைக் கூடத்தினுள் சுமார் 70-80 சதவிகிதம் ஈரப்பதம் இருக்குமாறு எட்டு நாட்கள் வைக்க வேண்டும். பிறகு உறையை எடுத்து விட்டு 10-15 நாட்கள் நிழல்வலைக்குடிலில் வைக்க வேண்டும். ஒட்டு இணைத்த பிறகு 10 நாட்கள் வெளிசூழலில் வைத்து ஒட்டு செடிகளை நடவு வயலில் நடலாம்.நடவு செய்யப்படும் நிலத்தை 4-5 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரமிட்டு நன்கு கலக்க வேண்டும். ஒட்டுகத்தரி செடிக்கு 200 கிலோ தழைச்சத்து, 200 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும். இதில் 50 சதவிகித தழைச்சத்தான 100 கிலோவையும், மணிச்சத்து, சாம்பல் சத்து முழுவதையும் அடி உரமாக இட வேண்டும். மேலும் நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நுண்ணுயிரியை எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லதுடிரோகோடோமோ விதையை எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.நடவு :தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கனஅடி அளவுள்ள சிறு குழிகளை எடுக்க வேண்டும். நன்கு ஒட்டு பிடித்த ஒட்டு கத்தரிகளை இக்குழிகளில் வரிசையாக நட வேண்டும். ஒட்டுச்செடிகளை ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடலாம்.நீர்ப்பாசனம் :ஒட்டுச்செடியை நடவு செய்த உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 7 - 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும்.மேலுரமிடுதல்: நட்ட ஒரு மாதம் கழித்து மீதமுள்ள தழைச்சத்தான 100 கிலோவை விட்டு மண்ணை அணைக்க வேண்டும்.தாங்கு குச்சி :தோட்டத்தில் நட்ட பிறகு தாங்கு குச்சியை கொண்டு முட்டு கொடுக்க வேண்டும்.போத்து செடி எடுத்தல்: ஒட்டுக் கட்டிய தலைச்செடியில் ஒட்டுப்பகுதியின் கீழே உள்ள சுண்டைக்காய் செடியிலிருந்து போத்துகள் முளைத்து வரும் அவற்றை ஒவ்வொரு 10 நாட்கள் இடைவெளியில் நீக்க வேண்டும்.அறுவடை: நடவு செய்த 35 -40 நாட்களில் முதல் அறுவடை ஆரம் பிக்கும். காய்களை 3-4 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்களில் கிடைக்கும்.(தகவல் - முனைவர்கள் தி.சரஸ்வதி, வே.அ.சத்தியமூர்த்தி, சி.தங்கமலை, த.சுமதி, அ.மகாலிங்கம், காய்கறி பயிர் கள் துறை, தோட்டங்கலை கல்லூரி, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர் -641 008. போன்: 661 1374, 661 1283).-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன