Friday, December 27, 2013

ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:



ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது" .ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது" .

Natural MOSQUITO Killers

ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION

ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION

Varun, an IT professional , was finding himself with an upset stomach every night. While normal medical checks revealed nothing wrong in him, deeper probes revealed the reason – his stomach was collecting significant amounts of wax. And doctors identified the villian – the ordinary disposable paper cups he used for drinking his tea at his office pantry.

Disposable paper cups have become quite popular in office pantries due to the convenience it offers. What many overlook is the fact that these paper cups are coated with a tiny layer of wax, which is essential to prevent water from seeping into the paper. When very hot liquids are pour over this cup, the paper cups wax may disintegrate and a little may come off, which will promptly be sent along with the drink into our stomachs! While our body can discard minor amounts, over the long-term, it does become a problem.
So what can be done about it? You can try to bring your own glass cups. Glass is one of the least reactive materials in the world (remember acids are stored in glass vessels, blood samples are collected in glass plates – these are for a good reason). But glass does have the problem of breaking easily, so it requires good care. Ceramic cups are probably the best bet. Of course, you can also use your ordinary stainless steel glass, but never use plastic ones – they are harmful, and its dangers are even worse than wax !



Share if you care . .



Wednesday, December 18, 2013

நோபல் பரிசு – 2013

1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 
ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும். 
ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும். 
நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும் வழங்கப்படலாம் என்பது பொதுவிதி! ஒருவருக்கு மேல் வழங்கப்படும்போது, தேர்வுக் குழு நிர்ணயிக்கும் விகிதப்படிப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். 
மருத்துவம்: அமெரிக்காவின் "யேல்’ பல்கலைக்கழக "ஜேம்ஸ் ஈ ரோத்மன்’ (62 வயது), ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழக "தர்மஸ் சி சுடோஃப்’ ஆகிய மூவருக்கும்
வழங்கப்படுகின்றன. மனித உடலினுள் நடைபெறும் ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் முக்கிய கெமிகல்களின் இடமாற்றம், அதாவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வெசில்ஸ் எனப்படும் நுண்ணிய குமிழிகளின் தடை பற்றிய மூவரின் தனித்தனியான ஆய்வுகளுக்காகப் பரிசுத்தொகை 1.2 மில்லியன் டாலர் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
அந்தப் போக்குவரத்து முறை, மூன்று பொருட்களையும் சரியான இடத்துக்கு, சரியான நேரத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கிறது எனக் கண்ட அவர்கள், அது பாதிக்கப்படும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைவு போன்றவை ஏற்படும் என்பது மூவரின் ஆராய்ச்சி முடிவாகும். 
"செல்களுக்கு உள்ளேயும் வெளியில் பிற செல்களுக்கு இடையேயுமான அந்தப் போக்குவரத்து இல்லாமல் அல்லது தடைப்பட்டுப் போனால் தாறுமாறாக பாதிப்புகளை அடையும் செல்களால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிடும் பரிசுத் தேர்வுக்குழு, "அந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்க மூவரின் ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும் என்பதால் பரிசு அளிக்கப்படுவதாக’ குறிப்பிட்டுள்ளது. 
இயற்பியல்: ஸ்காட்லாந்தின் 84 வயது "பீட்டர் ஹிக்ஸ்’ மற்றும் மெல்ஜியத்தின் 80 வயது ஃப்ரான்கோய்ஸ் எங்வெர்ட் ஆகிய இருவருக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற திடப் பொருள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படைச் சக்தியாக விளங்குவது இப்பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள அணுவைவிடச் சிறிய நுண்ணிய பார்டிகிள் எனப்படும் துகள்களே ஆகும் என்ற கண்பிடிப்பிற்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை சமமாகப் பங்கிட்டு அளிக்கப்படும். அத்துகள்கள் "ஹிக்ஸ்’ என்ற அந்த இருவரில் ஒருவர் பெயரால் "ஹிக்ஸ் போசோம்’ எனப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் சகலத்துக்கும் மூலசக்தியாக அத்துகள் விளங்குவதால் அதைக் கடவுள் துகள் என்கின்றனர் சமீபத்தில் நடத்தப்பட்ட லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர் எனப்பட்ட செயற்கை பிக்பங்க் மோதலுக்குப் பிறகு 2012 ஜூலை 4ல் தான் இக்கொள்கை வெளியிடப்பட்டது. எனினும் அவ்விருவரும் 1964 முதலே இது பற்றி ஆய்வு செய்து வந்துள்ளனர். 
என்றாலும் "போசோம்’ அணுக்கள் கண்டுபிடிப்பின் பெருமை ஒரு இந்தியரையே சாரும். 1920லேயே அதுப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்புப் பெற்றிருந்த சந்யேந்திரநாத் போஸ்தான் அதனைக் கண்டுபிடித்தவர். அதனாலேயே பால்டிரக் என்ற இயற்பியலாளர் அதற்க அவர் பெயரையே அதாவது போசோன் என்று பெயரிட்டார். அதையொட்டிய ஆய்வுக்கே இவ்வாண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. என்றபோதிலும் அப்போது சத்தியேந்திர நாத் போஸ் நோபல் பரிசினைப் பெறவில்லை. அதன்பிறகு ஹிக்ஸ் போசேன் போன்று நிறையவகை துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். 
வேதியியல்: வேதியியல் பரிசினை மூவர் பெறுகின்றனர். அவர்கள் ஆஸ்திரிய-அமெரிக்கர் மார்டின் கர்ப்பளஸ், அமெரிக்க இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் குடியுரிமை பெற்ற மிகெய்ல் லீவிட் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கர் அரீஹ் வார்ஷல் ஆகியோராவர். இவர்களின் கண்டுபிடிப்பு வேதியியல் சோதனைகளை சைபர் ஸ்பேசுக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகாதமிச் செயலாளர் ஸ்டாஃபன் நார்மார்க். சிக்கலான மூலப்பொருளைத் தூண்டக்கூடிய கணினி மென்பொருள் மாதிரியை உருவாக்கியதற்காக இப்பரிசு! இனி விஞ்ஞானிகள் சோதனைக் குழாய்க்குப் பதிலாகக் கணினியைப் பயன்படுத்தலாம். ரசாயன மாற்றங்கள் நிகழும் விதத்தைக் கணினி மூலம் அறியலாம். இனி வேதியியலாளர்கள் பிளாஸ்டிக் உருண்டைகள் மற்றும் குச்சிகளுக்குப் பதிலாக கணினியில் அதைச் செய்துவிட முடியும். புதிய மருந்துகள் தயாரிக்கவும். சூரிய செல்கள் உருவாக்கவும் இவர்கள் கண்டுபிடித்த ஆய்வறிவு பெரிதும் பயன்படும். புரொட்டின் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் உருவாக்கிய வழிமுறை புரிய வைக்கிறது என்கிறார் வார்ஷல். மனித உடலின் சரியான அமைப்பைக் காணவும், அது செயல்பட வேண்டியதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை அறியவும் இக்கணினி முறை உதவும். 
பொருளாதாரம்: பொருளாதாரப் பரிசு மூன்று பேர் பெறுகின்றனர். அவர்கள் ஏல், பல்கலையின் ராபர்ட் ஷில்லர், சிகாகோ பல்கலையின் யூகின் ஃபாமா, மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் ஆகியோர் ஆவர். சொத்தின் மதிப்பை நீண்டகால அடிப்படையில் கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அவர்களது ஆய்வுக்குத்தான் இந்தப் பரிசு. அதைத் தினம் அல்லது வாரங்களுக்குள் கணிக்க முடியாது. மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என்ற நீண்டகால அளவில் ஆராய்வது அதிகப் பலனைத் தரும் என்கின்றனர். மேலும், திரும்பக் கிடைப்பதில், சிக்கலில்லாத நிலையில் முதலீடு செய்வது சிறந்தது என்ற அவர்களின் ஆய்வு, விரும்பும்போது திரும்பக் கிடைப்பதை வலியுறுத்துகிறது. தவறான விலை நிர்ணயம் மற்றும் முதலீடு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம் எனும் அவர்கள், அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுச் சந்தை மதிப்பின் வீழ்ச்சி எவ்வாறு அந்த நாட்டுப் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது என்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். எனவே, கடந்துவிட்ட பல தவறுகளையும், சரியற்ற நிதி நிலையையும், சமீபத்திய பொருளாதார நெருக்கடி வெளிப்படத்துகிறதல்லவா? அதை எப்படி சரிசெய்வது என்பது ஷில்லரின் ஆய்வு! 
குறுகிய கால முன் கணிப்பு கடினமானது என்பதை ஆய்வு செய்த ஃபாமா புதிய தகவல் மற்றும் வழிமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். மூன்றாமவரான ஹேன்சன் புள்ளிவிவர முறை ஒன்றை வகுத்தார். அது சொத்தின் மதிப்பைக் கணக்கிடப் பெரிதும் பயன் படக்கூடியதாகும் என்பது அவரது கணிப்பாகும். 
கொள்கை மற்றும் செயலளவில் சொத்து மதிப்பு நிர்ணயத்துக்கு மூவரின் ஆய்வுகளும் பயன் அளிக்கக்கூடியவை என்பதால் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
இலக்கியம்: இலக்கிய பரிசை கனடாவின் 82 வயது ஆலிஸ் மன்றோ அந்நாட்டின் முதல் இலக்கியப் பரிசாளர் மற்றும் பெண் பரிசாளராகிறார். இவர் ஆரம்பம் முதல் 13வது நோபல் பெண்மணி. வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அவரத தலை சிறந்த சிறுகதைகளுக்காக இப்பரிசு! அவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். நியூ யார்கர்ஸ் இதழில் எழுதத் தொடங்கிய இவரது சிறுகதைகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒரு குடியானவத் தந்தைக்கும் ஆசிரியத்தாய்க்கும் மகளாகப் பிறந்த ஆலிஸ், சிறந்த மாணவிக்கான படிப்புதவித்தொகை பெற்று, ஒன்டாரியோ பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் தொழிலுக்கான முக்கியப் பாடத்துடன் பட்டம் பெற்றார். தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் மன்றோ என்ற சக மாணவனைத் திருமணம் செய்து கொண்டார். 
நல்ல தாயாகி, எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். நாளடைவில் அவரது புகழ் பரவியது. புத்தகவிற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் அவருக்கு இரண்டாவது கணவனை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அச்சமயத்தில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு "டான்ஸ் ஆஃப் தஹேப்பி ஷேட்ஸ்’ வெளிவந்து, பிற்பாடு 1969ல் கவர்னர்ஸ் பரிசைப் பெற்றது. இப்போது இவரது சிறுகதைகளின் எழுத்துத்திறனைப் பாராட்டி, இந்த நோபல் அவரைத் தேடி வந்துள்ளது. 
உலக அமைதிக்கான பரிசு: அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக இந்த உலகிலிருந்து அழித்து, உலக அமைத்திக்காகப் பாடுபடவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் அவையின் தீவிர முயற்சியால் 1997ல் அமைக்கப்பட்டு அரும்பணியாற்றிவரும் ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ் என்ற பொதுநலத் தொண்டமைப்புக்கு வழங்கப்படுகிறது. தலைமையகம் "தி ஹேக்’ நகரில் உள்ளது. தற்போது 189 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டது. 
சிரியாவில் குவிந்து கிடக்கும் ரசாயன ஆயுதங்களை ஆபத்தான போர்க்களம் என்ற அச்சம் சிறிதுமின்றி கண்டு அழிக்க முயலும் அந்த அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்களின் மன உறுதியைப் பாராட்டியும், அவர்கள் முயன்றுவரும் ரசாயன ஆயுத ஒழிப்புப் பணி மற்றும் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
இதுபற்றிக் கூறும் தேர்வுக் குழு குறிப்பிட்ட கால எல்லையாகிய 2012 ஏப்ரல் கடந்துவிட்ட போதிலும் அமெரிக்கா, ருஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்னும் கூட அதன்படி நடந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 
மேலும் ஆயுதமற்ற உலகம் என்ற ஆல்ஃரெட் நோபலின் குறிக்கோளை எட்ட இந்த ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்கு வழங்கப்படும் அமைதிபரிசு முதல் முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 
அதன் பொது இயக்குனர் இது ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்குக் கிடைத்துள்ள மாபெரும் கௌரவம் மற்றும் பணிக்கான அங்கீகாரம் ஆகும் என்கிறார்

பாட்டி வைத்தியம்:-

பாட்டி வைத்தியம்:-

* உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 

* வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 

* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
* மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

* இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. 
கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான்பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றனர். 
அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது. 
கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர்.
இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். 
கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன. 
"வாங்க் பூமிங்’ என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், த்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகயை வளர்க்கிறார். அவர், 2010 ஆம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார். 
இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார். அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது. 
இதற்கு முதலீடும் மிகக் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம். 
பெரிய அளவுலாபம்: பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளைத்தான் வளர்க்கின்றனர். இவை நீளமாக, பெரிதாகக் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு. 
இவற்றைக் கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பண்ணøயில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. 
ஒருமுறை கோடிக்கணக்கான கரப்பான்கள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரிய வந்தது. 
இந்தப் பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, தொலைவில் வைக்கின்றனர். 
இப்போது சீன டி.வி.களில், கரப்பான பண்ணை வளர்ப்பு முறை பற்றி விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன. 
பூச்சிகளும், புரதச்சத்தும்: பசி, வறுமையை எளிதாக ஒழிக்க ஐ.நா சபை பல ஆண்டுகளாகவே பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது. 
பூச்சிளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவற்றை வளர்ப்பது சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கினங்களின் கழிவுகளில் உண்டாகும். மீத்தேன் வாயு, பூமியை வெப்பமாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர். 
பலன்கள்: சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான்பூச்சியை வைத்துப் பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அணு கதிர்வீச்சைக் கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான்பூச்சி. இவை மூலம் – எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 
"லீ ஷீவான்’ என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாகக் கூறுகிறார். மேலும், முகம் பளபளப்பாக இவற்றை அரைத்து முகத்தில் கூட பூசலாம் என்கிறார்.

Monday, December 16, 2013

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!



மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..


ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு

முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,

முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .

புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்

இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .