விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Tuesday, June 5, 2012
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

சொர்க்க மரம்
சொர்க்க மரம்

இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும்.
வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6
வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான
காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில்
கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்)
மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல்
மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி
காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2
மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு,
மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும்.
அசெய்டுனோ,
சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர
அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள
உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர்
பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். கால்நடைகள்,
ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு
தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996).
பயன்கள்:
சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில்
50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல்
எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது. 1950ம் வருடம் முதல் எல்சால்வடோர்
மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக
மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில்
தயாரிக்கப்படுகின்றது. தொழிற்சாலைகளிலும், தரமான சோப்புகள், உயவுப்
பொருள்கள், சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில்
இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. (ஷ்யாம்சுந்தர் ஜோஷி மற்றும்
சாந்தா ஹையர்மத், 2000). எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக
சதவிகிதம் புரதச்சத்து (64%) இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள்
நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்துகின்றது.
காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60
சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து
உள்ளதாலும் பழச்சாறு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும்
பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலை குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு
என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில்
‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும்
அலேரியா போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
சத்தம் எழுவது எப்படி?
சத்தம் எழுவது எப்படி?
இரைச்சல் 130 `டெசிபலை' எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக்கொண்டு விடுவோம்.
டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிடப் பயன்படும் ஓர் அலகு. ஒலி அலைகளின் பலத்தைக் குறிப்பது அது.
காற்றில் இருக்கும் லட்சக்கணக்கான மாலிக்யூல்கள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்வதால் சப்தம் எழுகிறது.
டெலிபோனை
கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாமëபெல்லை பெருமைப்படுத்துவதற்காக
விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தைதான் டெசிபல் என்பது. ஒலி அலைகளில்
கிரஹாம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் டெலிபோனை கண்டுபிடிக்கக் காரணமானது.
நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?
மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சத்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.
சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.
தொலைக்காட்சிப்
பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சத்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50
டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு
16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் `புரொப்பெல்லர்கள்' ஏற்படுத்தும்
ஓசை, 120 டெசிபல்கள்.
பேப்பர் கப்(PAPER CUP) பயன்படுத்தாதீர்கள் .
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...!
பேப்பர் கப்(PAPER CUP) பயன்படுத்தாதீர்கள் .
நண்பர் கரீம் கனி அவர்களின் முகப்பில் கண்ட தகவல் இது: ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்

'எலுமிச்சை - முட்டைக் கரைசல் பற்றி கேள்விப் பட்டேன். அதைத் தயாரிப்பது எப்படி? எந்தப் பயிர்களுக்கு இதைத் தெளிக்கலாம்?''

கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி பணிக்கம்பட்டி, கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''பயிர்களில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டால், வெளுத்து இருக்கும். அந்த மாதிரியான சமயத்தில், எலுமிச்சை- முட்டைக்கரைசலை பத்து லிட்டர் நீருக்கு 200 மில்லி என்கிற அளவில் கலந்து பயன்படுத்தலாம். சத்துக்குறைபாடு இல்லாத சமயங்களாக இருந்தாலும், வளர்ச்சி ஊக்கியாக அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பெரிய அளவு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொள்ளவும் (உலோக வாளி பயன்படுத்தக் கூடாது). அதில் 10 முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைக்க வேண்டும். அவை மூழ்கும் அளவு எலுமிச்சைச் சாறைப் பிழிந்து காற்றுப் புகாமல் இறுக்கி மூட வேண்டும். கோழி, வாத்து போன்ற பறவைகளின் முட்டைகளைப் பயன்படுத்தலாம். குஞ்சு பொரிக்காத கூமுட்டைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், முட்டை ஓடு உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும்.
இப்படியே 10 நாட்கள் வைத்திருந்தால், எலுமிச்சைச் சாறின் வீரியத்தில் முட்டை ஓடுகள் கரைந்துவிடும். முட்டையை அழுத்தினால், ரப்பர் பந்தை அழுத்துவது போல் இருக்கும். இந்த முட்டைகளை மட்டும் எடுத்து, கையால் பிசைந்தோ அல்லது மிக்சி மூலமாகவோ கூழாக அரைக்க வேண்டும். ஏற்கெனவே, முட்டையை ஊற வைத்த எலுமிச்சைக் கரைசலில் கால் கிலோ வெல்லம் அல்லது மொலாசஸ் (கரும்பு கழிவு) சேர்த்து, அரைத்த முட்டைக் கூழையும் ஊற்றி, காற்றுப் புகாமல் மூடி வைத்தால், 20 நாட்களில் எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாராகி விடும். இதை பாட்டில்களில் அடைத்து மூன்று மாத காலம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். இதிலிருந்து வாயு வெளியேறும் என்பதால், மூடியில் சிறிய துளையிட்டு வைக்க வேண்டும்.''

Saturday, June 2, 2012
பான் கார்ட்
நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN).
ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய
சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.
பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?
ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.

எப்படி இதைப் பெறுவது?
வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.
இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்
அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

Subscribe to:
Posts (Atom)