Saturday, June 2, 2012

கேவலமான உண்மைகள்

கேவலமான உண்மைகள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

உயிர்

உயிர் மிச்சம் வைத்துவிட்டுப்போகும்
உன் நினைவுகளை!
இதோ இதே பூமியில்!!
அவற்றினை பத்திரமாய் பார்த்துக்கொள்ள
உன்னால் முடியுமா?
ஒருவேளை முடியாதென்றால்!
தொட்டு விட்டுப்போ என் சவத்தை!!
உன் விரல்களைப்பற்றிப் படர்ந்து
உன் உயிரில் ஒட்டி உறையும் அதுவெல்லாம்!!

இதய நோய் தீர்க்கும் நெல்லிக்கனி!

சிறியதாக இருந்தாலும் இதயத்துக்கு நன்மை பயக்கக்கூடியது நெல்லிக்கனி. அதியமான் இதை உணர்ந்தே நீண்டநாள் வாழத் தனக்கு அற்புதமான நெல்லிக்கனி கிடைத்தும், பெருந்தன்மையோடு அதை அவ்வைப் பிராட்டிக்கு அளித்து அவரை உண்ணச் செய்தான். இதயத்துக்கு இனிய அமுதமாக விளங்கும் நெல்லிக்கனியைப் பற்றி பல உண்மைகள் மறைந்துள்ளன.
நெல்லிக்கனியை இந்தியில் `ஆம்லா' என்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் `எம்பிலிகா அபிசினாலிஸ்'.
முதிர்ந்த நெல்லிக்கனி பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் பளபளப்போடு ஆறு அழகிய துண்டுகள் அடங்கிய உருண்டைக் கனியாகக் காட்சியளிக்கும். சற்றுத் துவர்ப்பாக இருந்தாலும் இதன் சதைப்பற்றைச் சுவைத்துச் சாப்பிட்டதும் ஒரு குவளை தண்ணீர் அருந்தினால் இதன் இன்சுவையை உணரலாம்.
இதயக் கோளாறு உள்ளவர்கள் அலோபதி இதயநோய் நிபுணர்கள் கூறும் அறிவுரைகளைக் கவனிக்க வேண்டும். நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் கூறும் உண்மைகள் நமக்கு வியப்பை அளிக்கும்.
நெல்லிக்கனிச் சாற்றில் `வைட்டமின் சி' சத்து அதிகம். அதாவது, ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 20 மடங்கு. ஒரு சிறு நெல்லிக்கனியை உண்பது இரண்டு ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதற்குச் சமம். தொற்றுநோய் தடுப்புச் சக்தியைப் பெற நெல்லிக்கனிச் சாற்றைப் பருகலாம். கொழுப்புப் பொருளைக் கரைக்கும் தனித்தன்மையும் இதற்கு உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்தம் சீராகப் பாய்வதைத் தடுக்கும் கொழுப்புப் பொருளை நெல்லிக்கனிச் சாறு கரைத்துவிடுவதால் இதயத்துக்குப் பலம் சேர்ப்பதாக இது அமைகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்தும் அருங்கனியான நெல்லி, ஆறாத ரணத்தை ஆற்றுவதுடன், எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத்தையும் குணப்படுத்தும்.
தாய்ப்பால் சுரக்க நெல்லிக்கனி வகை செய்கிறது. அதன் அமிலச்சத்து மலச்சிக்கலை நீக்கும். `ஹெமரேஜ்' என்ற ரத்தப் போக்குக்கும், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற கனி இது.
ரத்த சோகை, மஞ்சள் காமாலை, உணவில் வெறுப்பு நிலை, தீராத இருமல் ஆகியவற்றுக்கு நெல்லிக்கனி விடை கொடுக்கும்.
திரிபலா சூரணத்துக்கு நெல்லிக்கனியை அவசியம் உபயோகிக்க வேண்டும். கல்லீரலைப் பலப்படுத்திச் சரிவர இயங்கச் செய்யும் சக்தி பெற்றது நெல்லி.
ஆசியாவில் அதிகம் விளையும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.
இளநரையைக் குணப்படுத்தும் அற்புத சக்தி நெல்லிக்கனிக்கு இருக்கிறது. கூந்தல் தைலம், ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. அச்சுத் துறைக்கான மை வகைகள் தயாரிக்கவும், `ஹேர் டை' தயாரிக்கவும் நெல்லி ஏற்றது.
மருத்துவர்கள் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பொடி செய்து உண்ணச் சொல்கிறார்கள்.
நெல்லியின் கனியும், கொட்டையும் பயன்படுவதோடு, பட்டையையும், இலையையும் தோலைப் பதனிடும் தொழிற்சாலைகளும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
நெல்லிக்கனியை இந்து மதத்தினர் மிகவும் போற்றுகிறார்கள். நெல்லி மரத்தை வழிபடுவதும் உண்டு. அக்சய நவமி அன்று வன போஜனம் செய்பவர்கள் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கூட்டமாக உணவு உண்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதற்கும் மேலாக, முதல்நாள் உண்ணா நோன்பு இருந்தவர்கள், மறுநாள் விரதம் முடித்து உணவு உண்ணத் தொடங்கும்போது முதலாவதாக நெல்லிக்கனியையோ அல்லது உலர்ந்த நெல்லிக்கனியையோ அரைத்து மோரில் சேர்த்துப் பருகிய பின்பே சாப்பிடத் தொடங்குகிறார்கள். நெல்லிக்கனி உடல் ஆரோக்கியம் தரும் ஊறுகாயாகவும், உலர்த்தி வைத்தும் பயன்படுத்த ஏற்றது.

Friday, June 1, 2012

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்




விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும். இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய தட்டு அல்லது பாத்திரத்தில் கொஞ்சம் மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும்.
* மஞ்சள் ஒட்டுப்பொறி: மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப்பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெய் தடவவேண்டும்.
* பறவை தாங்கி (பறவை ஆசனம்): நீளமான காய்ந்த குச்சிகளைக் கொண்டு "டி' வடிவ பறவை தாங்கிகளை (ஒரு ஏக்கருக்கு 15-20) வயலில் வைக்க வேண்டும். இவற்றில் பறவைகள், ஆந்தைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். இவற்றில் உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்கள் மற்றும் எலிகளை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.
* கையால் சேகரித்து அழித்தல்: சாகுபடி பரப்பரளவு குறைவாக இருக்கும்பொழுது இந்த முறையைப் பயன்படுத்தலாம். பாலிதீன் பைகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் வயல்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் முட்டைக்குவியல்களைச் சேகரித்து மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்ட இந்தப் பைகளில் போட்டு அழிக்கலாம். பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்பொழுதே இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்

இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்...!

இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்...!


Uses of Calumba wood in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil மரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.
வேறு பெயர்கள்: காலேயகம், தாறுவி
வகைகள்: தாளுகரித்ரா, கர்ப்பூரகரித்தா
ஆங்கிலத்தில்: Coscinium Fenestratum
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்...
மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.
மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.
மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.

நீரிழிவுக்கு கறிவேப்பிலை!

நீரிழிவுக்கு கறிவேப்பிலை!


Curry Leaves for Diabetes - Food Habits and Nutrition Guide in Tamil உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை.
 
 கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணசக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப்பிலைøயில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களைக் கொண்டது.
சிறு வயதில் ஏற்படும் இளநரையை மாற்ற கறிவேப்பிலையை சமைக்காமல் சாப்பிடலாம். பார்வைக் கோளாறுகள் நீக்கி கண்கள் பிரகாசமாகும். முக வசீகரம் தரக்கூடிய தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடியது. முடி உதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 21 நாட்கள் காலை மாலை இருவேளை சாப்பிட நீரிழிவு குறையும். மூல நோய், வெண்குஷ்டம், தோல் வியாதிகள் நீங்க கறிவேப்பிலை ஒரு முத்தான சஞ்சீவிக் கீரையாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும் உன்னதமான
கீரையாகும்.
தயாரிக்கும் முறை: ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு அல்லது பேரீட்சை ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காபி, டீக்கு பதிலாக அருந்த மிகவும் ஏற்ற பானம்.
சர்க்கரையை நாம் சேர்த்துக் கொள்வதால் நமது உடலிலுள்ள வைட்டமின் சத்துக்களை அது உறிஞ்சிவிடுகிறது. அதனை ஈடுசெய்ய மேற்கூறிய கறிவேப்பிலை நீர் சாப்பிடலாம். நமது அழகான முடியையும் கண்களையும் பேணிக்காக்கும் அற்புதமான கீரை கறிவேப்பிலையே.