Tuesday, August 21, 2012

தாலி கட்டுவது ஏன்?

தாலி கட்டுவது ஏன்?
-------------------------------
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். வ
ிரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னடக்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை,உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற போன்பது குணங்களும் ஒரு ப்[எண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

தேனீக்கள் பற்றிய தகவல் !!!

தேனீக்கள் பற்றிய தகவல் !!!

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண
்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இராணித் தேனீ

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.

அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ஆண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன
இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

தேனின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது

உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்

உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.

வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.

தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!

புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!


OK

இந்த புகைப்பழக்கம் இருக்கிறதே அதுவும் ஒரு வகையில் கழுதை மாதிரிதான்! புகைபிடித்து போதை ஏறும்போது `அட நல்லா யிருக்கே' என்று தொடர்ந்தால் புற்றுநோயில் கொண்டு சேர்த்துவிடும். `ஐயய்யோ, புகைபிடித்தால் புற்றுநோய் வருமா?' என்று புகைபழக்கத்தை விட்டாலும் சில பின் விளைவுகள் வந்து சேரும். ஆக மொத்தத்தில், முன் னாடியும் போக முடியாது பின்னாடியும் வர முடியாது.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முயன்ற ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள். ஆனால் இந்த முறைகள் மூலமாக உடலுக்குள் செல்லும் நிக்கோடின் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம் என்பதால் மிக சமீபத்தில் நிக்கோடின் வாக்சின் (தடுப்பூசி) கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக, நிக்கோடின் தடுப்பூசியும் பெரிதாக பலனளிக்கவில்லை. ஆக, நிக்கோடின் விஷயத்தில் இந்த இரண்டுமே சாத்தியப்படவில்லை. சரி, நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் பலன் இருக்கிறதா பார்ப்போம் என்றும் பரிசோதித்தார்கள். இப்படி செலுத்தப் படும் ஆன்டிபாடிகள் நீண்ட நேரம் திடமாக இல்லாமல் போகவே, இந்த சிகிச்சை முறை மிகவும் காஸ்ட்லியாக மாறி பலனளிக்காமல் போனது.
இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறிய புகைப்பழக்க பாதிப்புகளுக்கான மருத்துவ முயற்சிகளை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வந்துவிட்டது ஜீன் தெரபி.
நிக்கோடின் ஆன்டிபாடிகள் உடலுக்குள் நீண்ட நேரம் இருந்து தொடர்ச்சியாக நிக்கோடினை அழித்துக்கொண்டிருக்க வேண்டுமானால், உடலுக்குள் ஆன்டிபாடி உற்பத்தியும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும். இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, உடலுக்குள் நிக்கோடின் ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும் ஒரு மரபணுவை பொருத்துவது சிறந்த வழி என்று முடிவு செய்தார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர் ரொனால்டு கிரிஸ்டல்.
இதற்காக நிக்கோடினுக்கு எதிரான மிகவும் வலிமையான ஒரு ஆன்டிபாடியையும், அதனை உற்பத்தி செய்யும் மரபணுவையும் ஒரு எலியில் இருந்து கண்டெடுத்தனர். பின்னர் அந்த மரபணுவை ஜீன் தெரபிக்கு பயன்படும் கேரியர் எனும் அடினோ அசோசியேட்டட் வைரஸுக்குள் பொருத்தினர். அதன் பிறகு அந்த வைரஸ், நிக்கோடின் போதைக்கு அடிமையான ஒரு எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட வைரஸ் அதன் கல்லீரலுக்குள் பொருந்திய பின்னர் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடி கல்லீரலில் உற்பத்தி ஆனது. பின்னர் இந்த ஆன்டிபாடிகள் ரத்த ஓட்டத்துக்குள் கலந்தன. இந்நிலையில் இரண்டு சிகரெட்டுக்குள் இருக்கும் அளவு நிக்கோடின், வைரஸ் புகுத்தப்பட்ட எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. எலியின் உடலுக்குள் உற்பத்தியான நிக் கோடின் ஆன்டிபாடிகள் சுமார் 83 சதவீதம் நிக்கோடினை அழித்தது தெரியவந்தது. முக்கியமாக, இந்த நிக்கோடின் மூளைக்குச் செல்வதற்கு முன்பு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நிக்கோடின் போதைக்கு அடிமையான எலிகள் மந்தமாக இருக்கும். ஆனால் ஜீன் தெரபி செய்யப்பட்ட பின் நிக்கோடின் கொடுக்கப்பட்ட எலிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. மேலும், இந்த எலிகளின் இதய துடிப்பும் மிகவும் சீராக இருந்தது. ஜீன் தெரபிக்கு பிந்தைய சுமார் 18 வாரங்கள் கழித்த பிறகும், எலிகளின் கல்லீரல்கள் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, நிகோடின் போதைக்கு எதிரான ஜீன் தெரபி செய்துகொண்டால், நிக்கோடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட காலத்துக்கு உடலுக்குள் நீடிக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி, இந்த ஜீன் தெரபி மூலம் மனித குலத்துக்கு உடனடி பலன் எதுவும் இருக்கிறதா?
தற்போது எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் முன்னர், குரங்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும், ஜீன் தெரபியில் பயன்படுத்தப்படும் அடினோ அசோசியேட்டட் வைரஸ்கள் எய்ட்ஸ் மற்றும் இறுதி நிலை புற்று நோய் ஆகிய நோய்களுக்கான ஜீன் தெரபியில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது அதிகமான பலன்கள் கிடைத்துள்ளன என்றாலும் நிக்கோடின் போதைக் கான இந்த ஜீன் தெரபியை மனிதர் கள் மீது பரிசோதிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
அதனால் ஆபத்தான ஜீன் தெரபியை கொண்டு நிக்கோடின் போதை அல்லது புகைப்பழக்கத்துக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, புகைப்பழக்கத்தை துறக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது என்கிறார் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆய்வாளரான தாமஸ் கோஸ்டன்.

முனைவர் பத்மஹரி

`டிசைனர்' தக்காளி ரெடி!

`டிசைனர்' தக்காளி ரெடி!



Tomato
`வாரக் கணக்கில் வைத்திருந்தாலும் அழுகிப்போகாத, காய்ந்து சுருங்கிப்போகாத, பார்ப்பதற்கு அழகான, சுவை மிகுந்த பழங்களும், காய்கறிகளும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்' என்று நம்மில் பலரும் கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் யதார்த்தத்தில் கடைகளில் கிடைக்கும் பழங்களும் காய் கறிகளும் பரவாயில்லை ரகம்தான்.
உதாரணமாக, தக்காளியை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் தக்காளிகள் காய் பருவத்திலிருந்து பழமாக மாறும்போது சமமாக முற்றுவது இல்லை. அதனால் ஒரு தக்காளி பழத்தில் அங்கங்கு திட்டு திட்டாக பச்சை நிறம் மீதமிருக்கும். அதாவது ஒரு பழத்தில் சில பகுதிகள் காயாகவே இருக்கும்.
தக்காளிகளில் உள்ள இந்த பிரச்சினை கடந்த 1920 களில் ஒரு முடிவுக்கு வந்தது. சமமாக முற்றி பழம் முழுவதும் சிவப்பாக, ஒரே வண்ணமாக இருக்கும் ஒரு வித்தியாசமான, ஆனால் இயற்கையான தக்காளி ரகத்தை வியாபாரிகள் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்த ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
இந்த தக்காளி ரகம் சமமாக முற்றி ஒரே வண்ணத்தில் இருப்பதற்கு, இதில் உள்ள ஒரு மரபணு மாற்றம் (மியூட்டேஷன்) தான் காரணம் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணமான மரபணு `சமமாக முற்றும்' மரபணு என்று அழைக்கப்பட்டது.
சமமாக முற்றி, பழம் முழுவதும் சிவப்பாக, அழகாக இருக்கும் இந்த தக்காளியில் ஒரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நன்றாக முற்றி, சிவப்பாக, அழகாக இருந்தாலும் இந்த தக்காளி ரகம் ஏனோ சுவையாக இருப்பதில்லை. இந்த பிரச்சினைக்கான காரணத்தையும், தீர்வையும் கண்டறிய முற்பட்டார்கள் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள்.
`பொசிஷனல் குளோனிங்' என்னும் பிரத்தியேகமான மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `சமமாக முற்றும்' மரபணு இந்த தக்காளியின் மரபணுக் கோப்பில் உள்ள 10-வது குரோமோசோமில் இருப்பதை கண்டறிந்தார் முனைவர் பட்ட மாணவர் குவாங் கையென். அதன்பிறகு தக்காளியின் உணவு உற்பத்தியை கட்டுப் படுத்தும் புரதத்துக்கு காரணமான மரபணுவையும் கண்டுபிடித்தது இந்த ஆய்வுக்குழு.
பொதுவாக, ஒரு தாவரத்தின் உணவு உற்பத்தி அல்லது ஒளிச் சேர்க்கை முழுவதையும் அதன் இலைகளே கவனித்துக்கொள்கின்றன. ஆனால் தக்காளியை பொறுத்தவரை, அதன் உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வளரும் தக்காளி பழத்தி லிருந்து கிடைக்கிறது. இதனால் தக்காளி பழத்தில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உற்பத்தி ஆகின்றன.
ஆனால், சமமாக முற்றும் மரபணுவில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக தக்காளியில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுகிறது. அதனால் தான், சமமாக முற்றும் மரபணுவில் மாற்றம் உள்ள தக்காளி ரகத்தில் குறைவான அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உள்ளன என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் ஜியோவானோனி.
சமமாக முற்றும் மரபணு மாற்றம் உள்ள தக்காளி ரகத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் சுவையான மற்றும் ஊட்டச் சத்து நிறைந்த தக்காளிகளை வியாபாரிகள் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, தக்காளியின் சிவப்பழகில் மயங்கி அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் பெரிதாக பயனடைவது இல்லை. மிகவும் பயனுள்ள இந்த அறிவியல் உண்மையை தக்காளி தொடர்பான இந்த புதிய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல நன்மைகள் உண்டு என்கிறார் கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண பழங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் வியாபாரிகள், முற்றிய தக்காளி பழம் வரும்வரை தாவரங்களை வளரவிட்டு பின்னர் அவற்றை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தக்காளி செடிகள் முளை பருவத்தில் இருக்கும்போதே அவற்றில் சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கிறதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து மரபணு மாற்றமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்துவிடலாம்.
மற்றொருபுறம், `தக்காளியின் சிவப்பழகைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவற்றில் அதிக சுவையும், ஊட்டச் சத்துகளும் இருந்தால் போதும்' (அதாவது சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கக் கூடாது) என்று விரும்புபவர்கள், சமமாக முற்றும் மரபணு மாற்றம் இல்லாத தக்காளி பயிர்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம்.
அடடா இதுவல்லவோ தொழில்நுட்பம், இனி தக்காளிகளில் நாம் எந்த தரத்தை விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம். புதுயுக டிசைனர் தக்காளி ரெடி, பயிர் செய்து பயனடைய நீங்க ரெடியா என்கிறார்கள் தாவரவியலாளர்கள்.

செவ்வாய்க் கிரகத்தில் நிறைய தண்ணீர்?

செவ்வாய்க் கிரகத்தில் நிறைய தண்ணீர்?




planet
செவ்வாய்க் கிரகத்தில் பூமி அளவுக்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியின் உட்புறப் பகுதியைப் போல செவ்வாய்க் கிரகத்திலும் பெரும் தேக்கங்களாய் தண்ணீர் காணப்படலாம் என்கிறார்கள்.
செவ்வாயில், புறக்கணிக்கத்தக்க மிகச் சிறிய அளவிலேயே தண்ணீர் காணப்படக்கூடும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்து வாஷிங்டனின் கார்னகி நிறுவன ஆய்வாளர் எரிக் ஹாரி கூறுகையில், “செவ்வாயின் உள்பகுதி மிகவும் காய்ந்து போயிருக்கும் என்று முந்தைய ஆய்வுகளில் எப்படி முடிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைய ஆய்வு முடிவு அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்புக்குத் தண்ணீரைக் கொண்டு வந்ததில் அக்கிரகத்தின் எரிமலைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம்” என்கிறார்.

2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?

2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?



வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத ஆண்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்துக்கும், புகையில்லாத போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர் என மருத்துவ ஆய்வு கூறுகிறது.
புகை பிடிப்பது, தன்மை தாமே அழித்து கொள்வதற்கு சமமாகும். நாட்டில் தற்போது புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதே நிலை நீடிக்குமானால் 2030ம் ஆண்டில் சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் புற்று நோய் அதிகமாக தாக்கி வருகிறது. புகைப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பேருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறதென்றும் மருத்துவ ஆய்வு கூறியுள்ளது.
உலகில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும்,  இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாவம், ஈமு கோழிகள்!

பாவம், ஈமு கோழிகள்!



சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஓர் அறிவிப்பு செய்தார்: "ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக நாசிக் வட்டாரத்தில் சுமார் 2,000 விவசாயிகள், ரூ.200 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாக வந்த புகார்களை விசாரிக்க சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்பதுதான் அது.
இதேபோன்று சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது படத்தைப் பயன்படுத்தியதாக, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஈமு கோழி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாக அந்த நபர் மன்னிப்புக் கோரிய செய்தியும் வெளியாகியது.
இந்த இரண்டு சம்பவங்களையும் பத்திரிகைகள் மூலம் அறியவந்தவர்களுக்கு, இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அதிக அறிவும் ஆழ்ந்த அனுபவமும் தேவையில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில், பணம்படைத்த படித்தவர்களும் படிக்காத விவசாயிகளும் பல கோடி ரூபாயை ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் இழந்து நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, ""……..மூடர் "விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா விதிவசம்தான். அறிவில்லாதவனுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி”, என்கிற பாரதியாரின் வசனக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
தற்போது பெருந்துறை சுசி ஈமு கோழிப்பண்ணை விவகாரத்தில் மட்டும் 12,000 பேர் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து புகார் மனுக்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் ரூ.1.5 லட்சம் முதல், ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்தவர்களுக்கு ஈமு கோழிகள் தரப்படும். அதை வளர்த்துக் கொடுக்க வேண்டும். இதற்காக மாதம்தோறும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத் தொகை, போனஸ் என்றெல்லாம் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தொகையைச் சொல்லி, மக்களைக் கவர்ந்துள்ளன. இப்போது ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்கின்றபோது முதலீட்டைத் திரும்பக் கேட்கின்றனர் பணம் கொடுத்தவர்கள். ஆனால், முதலீடு வாங்கியவர்களையும் காணோம், முதலீடாகப் பெற்ற தொகை எங்கே போனது என்பதும் தெரியவில்லை. பாவம்,
ஈமு கோழிகள் தீனி போடக்கூட ஆள் இல்லாத நிலையில் தவிக்கின்றன. ஆனால் கால்நடைத்துறை சொல்கிறது, அவை 20 நாள்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழும் என்று!
இதேபோன்று மக்கள் ஏமாந்துபோன சூழ்நிலை, அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. உறுதி அளித்தபடியே அதிக வட்டியை தொடக்கத்தில் இந்நிறுவனங்கள் கொடுத்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு முழுவதையும் இழக்க நேரிட்டது. இந்த நிறுவனங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை. மக்கள் கொடுத்த பணத்தை அப்படியே அவர்களுக்கு வட்டிக்காகத் திருப்பிவிட்டன. கடைசியில் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டன.
ஈமு கோழி வளர்ப்பில், முதலீட்டுக்கு இணையான ஈமு கோழிகள் முதலீட்டாளர் வசம் இருந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஈமு கோழிக்கான சந்தை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஈமு கோழிக்கறி உண்பாரும் யாரும் கிடையாது.
ஈமு கோழியை உயிருடன் ஏற்றுமதி செய்வதோ அல்லது வெட்டுவதோ கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தபோது, ஈமு கோழி வளர்ப்பு வெளிநாடுகளில் நடைபெறத் தொடங்கியது. அமெரிக்காவிலும்கூட இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஈமு கோழியை வளர்த்து அதன் இறைச்சியில் கிடைக்கும் பணத்தைவிட, மாட்டிறைச்சி மூலம் அதிக வருவாய் கிடைப்பதை நடைமுறையில் உணர்ந்த அமெரிக்கர்கள் இத்திட்டத்தைக் கைவிடத் தொடங்கினர். கடைசியாக இந்தியாவில் இந்தத் திட்டத்தை இறக்குமதி செய்தார்கள்.
ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், முதலீடு செய்தவர்களின் அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.
"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்’ என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.
தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.
வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது’ என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை!