Wednesday, August 8, 2012

பயறு வகை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்

பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும், அதை கட்டப்படுத்தும் என்.பி வைரஸூம்.
விவசாயிகள் பயிரிடும் பயறு வகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட சில வைரஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் உயிர்ரக மருந்துகளைக் கொண்டு இவ் வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மாநில விவசாயிகள் நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இப் பயிர்களில் பச்சை புழு சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பச்சைப் புழுக்களை வைரஸ் உயிரிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம். இப் பூச்சிகளை அழிக்க என்.பி.வைரஸ் என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.
பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும் அதை கட்டப்படுத்தும் என்பி வைரஸ்
பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும் அதை கட்டப்படுத்தும் என்பி வைரஸ்
பச்சைப் புழு:
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் இயற்கையாக வளரும் தாவர இனங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த பச்சைப் புழு பல பயிர் உண்ணும் பூச்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பச்சைப் புழுக்கள் தமது ஒரு மாத கால வாழ்க்கை சுழற்சியில் 30-45 நாள்கள் வயதுடைய பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றனர். சேதப்படுத்தப்படும் பயிர்களில் பச்சைப் புழுக்களின் அந்துப்பூச்சிகள் (தாய்ப் பூச்சிகள்) நடமாட்டம் பரவலாக இருக்கும்.
இந்த அந்துப் பூச்சிகள் இலைகளின் மீது முட்டைகள் இடுகின்றன. மூன்று அல்லது நான்கு நாள்களில் முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பயிர்களின் மொட்டு, காய், விதை, மற்றும் மலர் ஆகிய பாகங்களில் தலையை உட்செலுத்தி எஞ்சிய பாகங்களை வெளியே வைத்து தாக்குலை ஏற்படுத்துகின்றன. இளம் புழுவானது ஒரு நாளைக்கு 30-40 பயிர் பாகங்களை அழிக்கும் தன்மை உள்ளது. பச்சைப் புழுவானது சில சமயங்களில் பழுப்பு கலந்த பச்சை நிறத்திலும் 35 மி.மீ. நீளமுடையதாகவும் இருக்கும்.
இது தனது புழுப் பருவத்தை 18-25 நாள்களில் நான்கு நிலைகளை கடந்து முடிக்கிறது. பருமனான அந்துப் பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருப்பதோடு அதன் முன் இறக்கையில் சாம்பல் நிற அலை போன்ற கோடுகளுடன் நடுவில் சிறுநீரக விதை போன்ற கருப்பு புள்ளி இருக்கும்.
என்.பி.வைரஸ் உயிரி:
என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக் கொல்லிகள், கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் நுண்கிருமிகளால் ஆன நன்மை செய்யும் உயிரினக் கட்டுப்பாடு காரணியாகும், வைரியான் என்ற உட்கருவைக் கொண்ட இந்த வைரஸ் கிருமிகள் முறையற்ற வடிவமைப்பில் அறுகோண செல்களால் ஆனது.
இவ் வைரஸ் கிருமிகள் பச்சைப் புழுக்களை மட்டுமே கொல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களில் தெளித்தவுடன் புழுக்கள் பயிர்களின் பாகங்களை உண்ணும் போது வைரஸ் கிருமிகள் புழுக்களின் வயிறு, குடல் பகுதிகளுக்கு செல்கின்றன. அங்கு அவை அதிகமாக உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. வைரஸ் தெளித்த 5-7 நாள்களில், வைரஸ் துகள்கள் புழுக்களின் அடிபாகத்தில் நோயை உண்டாக்கும்.
பின்னர் புழுக்கள் பயிர்களில் தலைகீழாக தொங்கி இறந்துவிடும். வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட புழுவின் அடிப்பாகத்தில் ஊதாநிற வண்ணம் காணப்படும். இந்த என்.பி.வைரஸ் எனும் புதிய உயிரினக் கட்டுப்பாடு காரணி புதுச்சேரி குரும்பாப்பட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் திரவ வடிவில் பிளாஸ்டிக் குடுவைகளில் 100 மிலி மற்றும் 250 மிலி அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உபயோகிக்கும் முறை:
என்.பி.வைரஸ் கரைசலை ஒரு ஏக்கருக்கு 250 மிலி என்ற அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் 5 சதவீத வெல்லச் சர்க்கரை, 5 சதவீத கிரானைட் பாலிஷ் கழிவு, ஒட்டுத் திரவமான டீபால் (அல்லது) ரானிபால் 100 மிலி, ராபின் நீலம் 100 மிலி மற்றும் போரிக் அமிலம் (அல்லது) டானிக் அமிலம் 25 மிலி சேர்த்து இளம் புழுக்களின் தாக்குதல் தோன்றியவுடன் இலைகள், தண்டுகள், காய்கள், கதிர்கள் முழுவதும் நனையும்படி மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இதை மாலைப் பொழுதில் மட்டுமே தெளிக்க வேண்டும். பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும். நல்லத் தண்ணீரை தெளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உப்பு நீர், கலங்கல் நீர், நுரைப்பு நீர் ஆகியவற்றை தெளிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. இளம் புழுக்கள் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். வைரஸ் கரைசலை எக்காரணம் கொண்டும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுடனும், வேப்ப எண்ணெய்யுடனும் கலக்கக்கூடாது.
வைரஸ் கரைசலைப் பயிர்களின் மீது தெளித்தவுடன் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
இந்த வைரஸ் உயிர் ரக மருந்தை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். செலவும் குறைவாகும். இதனால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.
மேலும் இந்தப் பூச்சிகள் பயறு வகைகள் மட்டுமின்றி தக்காளி, வெண்டை, பச்சைமிளகாய், பூசணி, கனகாம்பரம் மற்றும் கேந்தி போன்றவற்றிலும் தாக்கும். அதற்கும் இந்த என்.பி. வைரஸ் உயர்ரக மருந்து கரைசலை உபயோக்கிகலாம் என்றார்.
தினமணி செய்தி
ஆர்.ஜெயபிரகாஷ்
புதுச்சேரி வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும், கட்டுப்படுத்தலும்…

நாட்டுக் கோழிகளை அதிகளவில் தாக்கக் கூடிய நோய்கள் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் இந்தக் கோழிகளை குறைந்த அளவே நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், ஒட்டுண்ணி நோய்கள், பற்றாக்குறை நோய்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி
வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைக் கழிச்சல் நோய், கோடை மற்றும் குளிர் காலப் பருவ மாற்றத்தின் போது தாக்கக்கூடியதாகும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், சளி, காற்று மூலமாகவும், பண்ணையாள்கள், தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுக்கூடியது. இதைக் கொக்கு நோய் என்றும் கூறுவார்கள்.
நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம், தண்ணீர் எடுக்காது. வெள்ளை மற்றும் பச்சையாகக் கழியும். எச்சமிடும் போது ஒரு காலை மட்டும் தூக்கிக் கொள்ளும். ஓர் இறகு மட்டும் செயலிழந்து தொங்கும். தலையை முறுக்கிக் கொண்டு விரைவில் இறந்து விடும்.
பண்ணையில் ஒரு கோழியை நோய்க் கிருமி தாக்கினால் ஏறத்தாழ எல்லாக் கோழிகளும் இறக்கக் கூடும். எனவே, வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
அம்மை நோய்:
கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த கொப்பளங்களாகி உடைந்து விடும்.
இந்தச் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும், சோர்ந்து அசைவற்ற நிலையில் இருக்கும். உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். பண்ணைகளில் 20-30 சதம் வரை இறப்பு ஏற்படக்கூடும்.
கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய இந்த நோய், அம்மையின் காய்ந்த உதிர்ந்த பொடுகுகள், கொசுக்களின் வழியாகப் பரவுகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கத் தடுப்பூசி போடுவது அவசியம்.
ரத்தக் கழிச்சல்:
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து வைக்கும்போது ரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின் குடல் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் ரத்தக் கசிவு காணப்படும். இதைத் தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.
ஒட்டுண்ணி நோய்கள்:
ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன.
உருண்டை, நாடாப் புழுக்கள் கோழிகளைத் தாக்கி உணவு செரிமானக் கோளாறு, கழிச்சலை உண்டாக்குவதோடு இறப்புகளையும் ஏற்படுத்தும்.
இதனால், ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும் குடல்புழு நீக்கம் செய்வது அவசியம்.
புற ஒட்டுண்ணி நோய் என்பது பேன், உண்ணி, நுண் உண்ணி மற்றும் தொள்ளுப் பூச்சிகளால் ஏற்படுகின்றன.
இந்த ஒட்டுண்ணிகள் கோழிகளைக் கடித்து அரிப்பை உண்டாக்கி ரத்ததை உறிஞ்சுவதால் உடல் எடையும் முட்டை உற்பத்தியும் குறைந்து விடும்.
பற்றாக்குறை நோய்கள்:
தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல் ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.
வெயில் காலங்களிலும், கூண்டு முறை கோழி வளர்ப்பிலும் அதிகமாகக் காணப்படும் தோல் முட்டையிடுதல் நோயைத் தவிர்க்கத் தீவனத்தில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துகள் மற்றும் கிளிஞ்சல் தூளை அதிகப்படியாகக் கலந்து கொடுக்க வேண்டும்.
கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளின் கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமலும், உண்ண முடியாமலும் இறப்பதே கால் வாதமாகும். இந்த நோய் தாக்கிய கோழிகளைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து ஆழ் கூளத்தில் சில நாள்கள் விட வேண்டும்.
குடிநீரிலும், தீவனத்திலும் கால்சியம் அதிகமுள்ள சத்து மருந்துகளை சில நாள்கள் கொடுக்க வேண்டும். வைட்டமின் பி12 உயிர்ச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்க்கலாம்.
தீவனத்தில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்களும், காற்றோட்ட வசதி, இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், புற ஒட்டுண்ணிகள் இருந்தாலும் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளக்கூடும்.
இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பை தடுக்க முடியும் என்றனர்.
தினமணி செய்தி
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத் துறைத் தலைவர் என்.நர்மதா மற்றும் அலுவலர்கள்

நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

புதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர்.
அதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
 நெல் குருத்துப் புழு:
நாற்று நட்ட 20-30 நாள்கள் வயதுடைய நெல் வயலில் குருத்துப் புழுக்கள் அதிகம் காணப்படும். இதன் தாய்ப் பூச்சிகள் நடமாட்டமும் பரவலாக இருக்கும். ÷இவ் வகையான தாய் அந்துப் பூச்சிகள் இலைகளில் குவியல் குவியலாக முட்டைகளை இடுகின்றன. முட்டை குவியலிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் நெற்பயிரின் நடுக்குருத்தைத் துளையிட்டு உட்புகுந்து செல்கின்றன.
அவை மெதுவான தண்டுப் பகுதிகளைத் தின்று நடுக்குருத்தை செயலிழக்க செய்து விடுகின்றன. இந்த தாக்குதலுக்கு உள்ளான நடுக்குருத்துகள் காய்ந்து வெள்ளை சோகையாக மாறிவிடுகின்றன. கதிர் பிடிக்கும் பருவத்தில் கதிர்களை தாங்கி நிற்கும் தண்டுகளையும் இப்புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் நெற்கதிர்கள் நெல் மணிகளாக மாற இயலாமல் சாவிக் கதிர்களாக அல்லது வெள்ளைக் கதிர்களாக மாறிவிடுகின்றன.
 டிரைக்கோகிராமா:
இந்த டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணிகள் குளவி இனத்தைச் சார்ந்தவை. இவை எறும்பைவிட சிறியதாக இருக்கும். இக் குளவிகள் சேதம் விளைவிக்கும் குருத்துப் புழுவை முட்டை பருவத்திலேயே அழித்துவிடும்.
குறிப்பாக நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் புழுவின் தாய்ப்பூச்சிகள் இடும் முட்டைகளை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் குளவிகள் தேடிச் சென்று, அம் முட்டைகளுக்குள் தனது முட்டையை உட்செலுத்தி விடுகின்றன. இதனால் குருத்துப் புழுக்களின் முட்டை கருக்கள் அழிக்கப்டுகின்றன.
அதே நேரத்தில் அப் புழுக்களின் முட்டைகளில் ஒட்டுண்ணிகளின் சந்ததிகள் வளரும். அந்த ஒட்டுண்ணிகள் முட்டைகளை துளையிட்டு வெளிவந்து அக் கால கட்டத்தில் காணப்படும் மேற்கூறிய புழுக்களின் முட்டைகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.
இம் முறையை கையாண்டால் குறிப்பிட்ட அளவு ஒட்டுண்ணிகள் எப்போதும் வயிலில் காணப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற வீரிய ஒட்டுண்ணிகளின் முட்டைகள் டிரைக்கோ அட்டைகளில் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 உபயோகிக்கும் முறை மற்றும் அளவு:
இந்த டிரைக்கோ ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 அட்டைகளை (72,000 ஒட்டுண்ணிகள்) நாற்று நட்ட 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் இலையின் கீழ்ப்பரப்பில் கட்டி உபயோகிக்க வேண்டும்.
இந்த ஒட்டுண்ணி அட்டையை 6 பாகங்களாக பிரித்துக் கொண்டு அவற்றை காகித டம்பளரினுள் தலைகீழாக வைத்து நூல் கட்டி பயிரில் பயன்படுத்தலாம்.
அவ்வாறு செய்யும்போது இந்த அட்டைகளிலிருந்து ஒட்டுண்ணிக் குளவிகள் 3-7 நாள்களுக்குள் வெளிவந்து குருத்துப் புழு முட்டைகளை அழிக்கும்.
டிரைக்கோ அட்டைகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுண்ணிகள் நிறைந்த பகுதியை அழுத்திப் பிடிக்காமல் வெற்றிடப் பகுதியை மட்டுமே கையால் பிடிக்க வேண்டும். மேலும் இந்த அட்டைகளை காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே கட்ட வேண்டும்.
டிரைக்கோ அட்டைகளை வயலில் கட்டியப் பின் 7-10 நாள்களுக்கு ரசாயனப் பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது. பூச்சி மருந்து தெளித்திருந்தால் 7-10 நாள்களுக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும்.
 நன்மைகள்:
இதைப் பயன்படுத்துவதால் பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவே ஆகும். உபயோகிக்கும் முறைகள் எளிதானது. சுற்றுப்புற சூழ்நிலைகளை மாசுப்படுத்தாது. பூச்சிகளைத் தவிர இதர உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றார்.
தினமணி செய்தி
புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் நி.விஜயகுமார்

Tuesday, August 7, 2012

காக்க… காக்க… கிட்னி காக்க!

காக்க… காக்க… கிட்னி காக்க!

நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ""நம் வாழ்க்கை முறைகளால், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை, வெகுவாக பாதிக்கிறது, ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி என்ற நோய். உலகில், ஜப்பானுக்கு அடுத்த படியாக, நம் நாட்டிலும், சீனாவிலும், இந்நோயால் அவதிப்படுவோர் ஏராளம்,'' என்ற அதிர்ச்சி தகவலை தருகிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைமை நிபுணர், டாக்டர் கே. சம்பத் குமார்.
இத்துறையில், 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர், தென் மாவட்டங்களில் மக்களை பாதித்திருக்கும் சிறுநீரக நோய்கள் பற்றி ஆய்வு செய்தவர். வெளிநாட்டில் பல்வேறு கருத்தரங்குகளில், சிறுநீரக நோய்கள் தொடர்பாக, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவர். இளைஞர்களை தாக்குகிறது டாக்டர் சம்பத் குமார் கூறியதாவது: சிறுநீரக நோய்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், புதுப் புது ஆராய்ச்சிகள் காரணமாக, நோய்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன. நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் (ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி) பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் பள்ளிகளில், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றம்: இந்நோயின் ஆரம்ப அறிகுறியாக, ரத்தத்தில் அலர்ஜி உருவாகி, சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். இந்த நோய் தாக்கிய பத்தாண்டுகளில், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்படும். சிறுநீரைச் சோதனை செய்வதன் மூலம், இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மாத்திரைகள் மூலம் குணமாக்க முடியும். இந்த நோய்க்கான காரணம், முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நம் வாழ்க்கை முறைகள் காரணம். உணவில் உப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் பருமனை குறைப்பது போன்றவை பயன்தரும். இளைய தலைமுறையினர், மைதா உணவினை தவிர்ப்பது அவசியம். இதில், கணையத்தைத் தாக்கும், மூலப்பொருள் உள்ளது. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, யூரிக் அமிலம் உருவாகி, சிறுநீரக கல் ஏற்படும். சிறுநீரக கல் பெரிதானால், அது இரண்டு கிட்னியையும் அடைத்து விடும். வயிற்றில் வலி, ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அளவை, ஆண்டிற்கு ஒரு முறை, தரமான ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை, சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியம். முப்பது வயதிற்குள், ரத்த அழுத்த நோய் இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏதும் உள்ளதா என, பரிசோதிப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ள, 100 பேரில், 40 பேருக்கு பத்தாண்டுகளில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு டாக்டர் சம்பத் குமார் கூறினார்.

Neem Health Benefits

Neem Health Benefits

Neem is a magical tree and especially the neem leaves that are used for its medicinal properties. Neem oil that is extracted from neem seed cannot be consumed because of associated disadvantages but neem leaves can be taken internally. But do not consume these if you are pregnant or trying to conceive.

:- Neem leaves in the form of paste can be directly applied to skin.
You can use the neem leaves for bathing in water. This cures the skin related problems.

:- Neem leaves are very good in treating chickenpox.
:- If you are diabetic and will consume neem leaves empty stomach in the morning then surely you can cure your diabetes.

:- An inflammation can be subsided with neem leaf paste.

:- These are greaturinary tract infections.

so given to purify blood.

:- If you suffer from excessive hunger then eat the fine paste neem leaves with brown rice. This is has curative properties.

:- To cure any kind of skin infection mix turmeric with neem leaves paste and apply it on your body for at least three months.

:- If you have pimples on your face then apply the neem leaf decoction. Even this can be used to treat minor wounds as this reduces the chance of getting further infection. You can also cure dandruff and hair loss with this.

:- It cures urinary tract infections.

:- Neem oil is extensively used in hair fall and early graying of hairs with very satisfying results. It also find its application in dandruff and in lice growth.

:- It has given very good results in diseases like gonorrhea and syphilis

Monday, August 6, 2012

ஸ்டெம் செல்லில் இருந்து உருவான `துடிக்கும்’ இதய தசைகள்!

ஸ்டெம் செல்லில் இருந்து உருவான `துடிக்கும்’ இதய தசைகள்!

Graphic illustration of a human heart

 

Graphic illustration of a human heart

ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்' அல்லது `அமுதசுரபி' என்றே சொல்லலாம்.
ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றன புதிய வகையான ஸ்டெம் செல் தொழில் நுட்பங்கள்.
உடலின் எல்லா வகையான உயிரணுக்களாகவும் மாறும் அசாத்திய திறன் கொண்ட ஸ்டெம் செல்கள் மூலம், இதுவரையில் புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட தீராத நோய்களுக்கான தீர்வுகள் ஒவ்வொன்றாக வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த வரிசையில், ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள இதய தசைகள்தான் அட்டகாசமான புது வரவு.
வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கும் ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை சுட்டிக்காட்டும் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகள்.
ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இதய தசைகளின் இந்த துடிக்கும் வேகம், இதற்கு முந்தைய ஸ்டெம் செல் ஆய்வுகளில் அறிவிக்கப்பட்ட அளவுகளை விட சுமார் 10 மடங்கு என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஸ்டெம் செல் ஆய்வு, இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனை பாதிக்கும் குறைபாடான `அரித்மியா' நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 25 லட்சம் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் மிக்சிகன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.
மேலும், தோல் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு, ஒரு குழுவாக இயங்கும் தன்மையுள்ள இதய தசை உயிரணுக்களை ஒரு புதிய உயிர்ப்பொறியியல் யுக்தி மூலம் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதே இந்த ஆய்வின் இலக்காகும்.
தூண்டப்பட்ட ஸ்டெம் செல்களை பயன்படுத்தி, இதய தசை உயிரணுக்களை உற்பத்தி செய்ய முயன்ற இதுவரையிலான பல ஆய்வுகள், தனி உயிரணுக்களின் இயங்கு திறனை பரிசோதனை செய்வதிலேயே கவனம் செலுத்தின.
ஆனால், `ஒன்றாக சேர்ந்து துடிக்கும் தன்மையுள்ள பல உயிரணுக்கள் கொண்ட ஒரு திசு போன்ற உயிரணு அமைப்புகளை உருவாக்குவதே, ஸ்டெம் செல்களை பயன்படுத்தி இதய மறுவளர்ச்சியை தூண்டும் சிகிச்சைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்கிறார் இந்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டாட் ஜெ.ஹெரான்.
இதய நோயாளிகளின் இருட்டடிக்கப்பட்ட எதிர் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கும் இந்த ஸ்டெம் செல் ஆய்வில், மேலதிக ஆய்வுகள் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு சிக்கலும் எஞ்சியிருக்கிறது.
உயிர்ப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இதய தசை உயிரணுக்கள் முந்தைய ஆய்வு முயற்சிகளில் உருவாக்கப்பட்ட உயிரணுக்களை விட 10 மடங்கு வேகமாக இயங்கினாலும், ஒரு ஆரோக்கியமான மனிதருடைய துடிக்கும் இதயத்தை விட குறைவான வேகத்திலேயே துடிக்கிறது என்பதுதான் அந்த சிக்கல்.
ஆக, இந்த இதய தசை உயிரணுக்களை இதய மறுவளர்ச்சி சிகிச்சைகளுக்காக உடனே பயன் படுத்த முடியாது. ஆனாலும் இதனால் எதிர்காலத்தில் நிறைந்த பலன் உண்டு.
அது எப்படி என்கிறீர்களா?
மனித இதயத் துடிப்பின் வேகத்தை விட குறைவான வேகத்தில் துடிக்கும் இந்த இதய உயிரணுக்கள், அதிர்ஷ்டவசமாக எலிகளின் இதய துடிப்பின் வேகத்துடன் ஒத்துப் போகின்றன. அதனால், இதுவரையில் எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மனித நோய்கள் தொடர்பான ஆய்வுகளை, இனி ஸ்டெம் செல்லில் இருந்து பிறந்த இதய தசைகளைக் கொண்டு மேற்கொள்ளலாம்.
இதன்மூலம், இதய ஆய்வுகளின் முடிவுகளை, இனி சிகிச்சைகளை வடிவமைப்பதற்கும், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பத்மஹரி

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!


உலகின் மிக நீளமான தொங்கு பாலம், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சிசோய் என்ற இடத்தில், போக்குவரத்துக்காக சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு மலைத் தொடர்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், தரையிலிருந்து, 1,102 அடி உயரமுடையது. இதன் நீளம், 3,858 அடி. கடந்த 2007ல், இந்த பாலம் அமைக்கும் பணி துவங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.
மலைத் தொடர்களில் சாலை வழிப் பயணம் என்பது, மிகவும் சிரமமானதாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் இருப்பதால், அதை எளிதாக்கும் வகையில், இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு, தனித் தனி வழித் தடங்கள் உள்ளன. நான்கு வழிச் சாலை வசதியுடையதாக இந்த பாலம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், இந்த பாலத்தில் காரில் பயணிக்க முடியும். பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனியாக நடைபாதையும் உள்ளது. பாலம் முழுவதும், 1,888 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் மின் ஒளியில், இரவில் இந்த பாலத்தை பார்ப்பது, உலக அதிசயத்தை பார்ப்பது போன்ற பிரமிப்பை தரும்.