Tuesday, February 25, 2014

மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்

மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்
நீலிப்பெக்) மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பொறி வண்டுகள் உள்ளன.
கிரிப்டோலெமஸ் ஒருவகை, ஸ்கிம்னஸ் என இரண்டுவகை பொறி வண்டுகள் உள்ளன கிரிப்டோலெமஸ் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 250 வண்டுகள் வரை விடனும் அவற்றை பிரித்து முதலில் 125 வண்டுகள் ஒரு செடிக்கு 2-3 வண்டுகள் மாலை வேளையில் விடவேண்டும் 
ஸ்கிம்னஸ் பொறிவண்டு என்றால் 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடனும் இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை தெளித்து கட்டுப்படுத்தலாம் 
அல்லது இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி, அசிப்பேட் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடித்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.














Tuesday, February 18, 2014

Boysenberries

Boysenberries
Never heard of them ? Well I hadn't until recently. Not something we have in Thailand, but pity as they look delicious and very healthy it seems.

A boysenberry is a cross between a European Raspberry, a Common Blackberry, an American Dewberry and a Loganberry. Its exact origins are not fully known but it seems to have be an American berry which appeared in California the 1920's.



Saturday, February 8, 2014

சம்பங்கி

இரகங்கள் :

ஓரடுக்கு : மெக்ஸிகன் சிங்கிள், ‚ங்கார், ப்ரஜ்வார்

இரண்டடுக்கு : பியர்ல்டபுள், சுவாளினி, வைபவ்



மண் மற்றும் தட்பவெப்பநிலை : சுமார் 6.5 முதல் 7.5 கார அமில நிலையுடன் நன்கு வடிகால் வசதியுடைய மண்ணில் நன்கு வளரும்.

இனவிருத்தி மற்றும் நடவு : ஜுன் - ஜுலை மாதங்களில் 25 முதல் 30 கிராம் எடையுள்ள கரணைகளை 45 x 20 செ.மீ இடைவெளியில் 25 செ.மீ ஆழத்தில் எக்டருக்கு 1,12,000 கரணைகள் தேவைப்படும். கரணைகளை அறுவடை செய்து 30 நாட்கள் வைத்திருத்தபின்பே பயன்படுத்தவேண்டும். நடவுக்கு முன் 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம் / லிட்டர்) மூழ்கச்செய்த பின்பு கரணைகளை நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :

தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:200:200 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் இடவேண்டும். (இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி) நிலையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உர அளவு.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் கார்போஃப்யூரான் குறணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.
பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள் சிறந்த மேலாண்மை முறைகளைக் கையாண்டால் மேலும் ஒரு வருடத்திற்குப் பராமரிக்கலாம்.

அறுவடை : கரணைகள் முளைத்த பின்பு 80 முதல் 95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்கள் நாள்தோறும் அறுவடை செய்யப்படவேண்டும்.

மகசூல் : 14 முதல் 15 டன் மலர்கள் / எக்டர் , 8 முதல் 10 கிலோ கான்கிரீட் / எக்டர்

தேனீ வளர்ப்பு

•           தேனீ வளர்ப்பு



•           விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை,கையாளலாம்
•           தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
•           தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால்,தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.
•           தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்
•         தேனீ வளர்ப்பின்  சிறப்பம்சங்கள்
•           தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமேதேவைப்படும்
•           தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது
•           பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது
•           தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்
•           தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது
•           உற்பத்தி முறை
•           தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்
•         தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்
•           கூடு
•           இது, ஒரு சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது.
•           தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது.
•           புகைப்பான்
•            இது தேனீ வளர்ப்பில்,  இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும்.
•            இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம்.
•            இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.
•           துணி
•           கத்தி
•           இறக்கை
•           தேனீக்களின் வகைகள்
•           இந்தியாவில்
        மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா)
   
        இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலணிக்கு 50-80கிலோ தேன் கிடைக்கும்.
•         சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா)  
·         இவை ஓரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள்
•         இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா)
·         இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை.
·         ஒரு வருடத்தில், தலா ஒரு காலணியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும்.
•         கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்):
•           இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது.
•           மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள்.
•           இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும்.
•         தேன்கூடுகளை நிறுவும் முறை
•           தேன் வளர்க்கும் இடமானது,
•           நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும்,
•           மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.
•           சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு
•           எறும்பு ஏருவதை தடுக்க வேண்டும்
•           வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை அமைக்க வேண்டும்.
•           தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள்,
•           ஏனைய விலங்குகள் ,
•           பரபரப்பான வீதிகள் மற்றும்
•           தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.
•         தேனீ காலனிகளை அமைக்கும் முறை
·         தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.
·          இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.
·          முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
•           அதிக நெரிசலை தவிர்க்கவும்
·         சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.
•           காலனி நிர்வாகம்
•           தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.
•           பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
•            வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு,
•            ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை,
•            ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க   தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
•           தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும்.
•           மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.
•           மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.
•           மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
•         தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
•           தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
•            ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
·         ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
·          எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம்.
•         தேன்நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
·         இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்து இருக்க வேண்டும்
·          
·         தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடேயே தகுந்த இடைவெளி அளிக்க வேண்டும்
·         இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாரு செய்ய வேண்டும்,
·          
·         தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளை இடவும்
•            காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்து செல்ல வேண்டும்.
•             எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்ட அறைகள்,இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியே எடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
•           எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டு இருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்
•           தேன் அறுவடை
•           எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாரோ, அந்த பகுதிகளுக்கு புகையை அடித்து,தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும்
·         பொதுவாக,  இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர்/நவம்பர் மற்றும்பிப்ரவரி - ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம்
•           அறுவடைக்கு தயரான கூடுகள், வெளிர் நிறத்தில் தேன் நிரப்பப்பட்டு இருக்கும்.பாதிக்கும் மேல் அரைகள் மெழுகினால் மூடப்பட்டு இருக்கும்

நெல் சாகுபடி- ஊட்டச்சத்து மேலாண்மையில் புதிய உத்திகள்

நெல் சாகுபடி- ஊட்டச்சத்து மேலாண்மையில் புதிய உத்திகள்:

தழைச்சத்து பயிர்களுக்கு அளிக்கும் போது வீணாகாமல் தடுக்கவும் நெற்பயிரின் இலைகளின் தழைச்சத்தின் அளவைக் கண்காணித்து அதனை துல்லியமாக பச்சையத்தை அளிக்கும் கருவி (குளேரோபில் மீட்டர்) மூலம் தெரிந்து தேவைப்பட்டால் மட்டுமே மேலுரமிட பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கருவி விலை அதிகம் என்பதாலும் எல்லா உழவர்களாலும் வாங்க இயலாது என்பதாலும், பச்சை வண்ண அட்டையைக் குறைந்த (ரூ.40) விலையில் தயார் செய்துள்ளனர். மிகவும் வெளிறிய நிறத்தையும் (எண்.1) மிகவும் அடர்ந்த பச்சை நிற பட்டையையும் (எண்.6) நீக்கி விட்டு 4 நிறப்பட்டைகளைக் கொண்ட இலை வண்ண அட்டையை உருவாக்கி உழவர்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியது, த.வே.ப.கழகம் பட்டை எண்.4ஐ உழவர்கள் தழைச்சத்து இடும் தேவையைத் தீர்மானித்து பயன்படுத்தலாம். அட்டையில் வெளறியபச்சை (எண்.2) நிறத்திலிருந்து கரும் பச்சை (எண்.5) நிறம் வரையிலான நான்கு விதமான பச்சை வண்ணப்பட்டைகள் உள்ளன.
இந்த அட்டையைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டு அளவு 4க்கு கீழ் இருந்தால் குறுவைப் பயிருக்கு ஒவ்வொருமுறையும் எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்தும், சம்பா, தாளடி பயிருக்கு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து நட்ட 14ஆம் நாளிலிருந்து பூக்கும் தருணம் வரை இட வேண்டும். இந்த முறையில் எக்டருக்கு 20 முதல் 40 கிலோ வரை தழைச்சத்து சேர்க்கப்படுவதால் உழவருக்கு ரூ.235 - 470 உரை உரச்செலவு குறையும். இது மட்டுமல்லாமல் தழைச்சத்து தேவைக்கேற்ப இடுவதால் இச்சத்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு பூச்சிநோய் தாக்குதலின் அளவுக் குறையும்.

மண் ஆய்வு மேற்கொள்ளாத நிலத்திற்கு உர மேலாண்மை: நடவு வயல் மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற உர அளவை இட வேண்டும். நீண்ட கால சம்பா, மத்திய கால ரகங்களுக்கு எக்டருக்கு 150 கிலோ தழை, 50 கிலோ மணி, 50 கிலோ சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இதைத்தவிர எக்டருக்கு 500 கிலோ ஜிப்சம், 25 கிலோ துத்தநாக சல்பேட்டும் இடவேண்டும். இவை சுண்ணாம்பு கந்தகம், துத்தநாக சத்தை அளிக்கிறது. நடவு செய்யும் முன் எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை 50 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண் டும். மேலும் நடவு செய்த 7-10 நாட்களில் எக்டருக்கு 10 கிலோ நீலப்பச்சைப்பாசி, 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நானோ தொழில்நுட்பம்: அணுத்துகள்களை மாற்றங்களுக்கு உட்படுத்தி, அவற்றினை மிகச் சிறியவையாக மாற்றுவதால், அவற்றின் வீரியத்தை அதிகப்படுத்தி, அந்த தருணத்தை நமக்கு தேவையான தசைகளில் பயன்படுத்திக் கொள்ளுதலே நானோ துகள் தொழில்நுட்பம்.
தற்போதுள்ள துல்லிய விவசாயப் பண்ணைத்திட்டத்திலும் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அதிகமாக இடப்படும் இடுப்பொருட்களின் அளவினைக் குறைத்து, ஏற்கனவே கிடைப்பதை விட, அதிக அளவு மகசூலை எடுப்பதே தற்போதைய நானோவின் அடிப்படை கொள்கை. பூச்சி மருந்துகளிலும், களைக்கொல்லிகளிலும் நானோ தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
100-250 nm அளவுகளில், அதாவது நானோ அளவுகளில் நிறைய நிறுவனங்கள் மருந்துகளைக் கண்டறிய ஆரம்பித்துள்ளன. இவை தற்போதுள்ள துகள்களை விட, நீரில் எளிதில் கரையும் தன்மையுடையவனாய் உள்ளன.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக உள்ள சின்ஜெண்டா "Primo MAXX' எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கியில் நானோ எமலி'சனை பயன்படுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தினால், பயிர் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சியினால் ஏற்படும் சோர்வினை தவிர்த்து பயிர் செழுமையாக வளரும் என்கின்றனர்.
சின்ஜெண்டா தருவது இன்னொரு நானோ கேப்ஸ்யூல் வடிவில் உள்ள கராத்தே கீ Zeon இதுவும் உக் (யூரோப்பியன் யூனியன்)வில் தான் விநியோகப்படுத்தி, நெல், பருத்தி,சோயாவில் பூச்சிகளுக்கு எதி ராகச்செயலாற்ற கராத்தே ஜியான் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நானோ தொழில்நுட்பத்தில் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கிறது. இலையில் பச்சயம் அதிகரிக்கிறது. இதன் விளைவால் ஒளிச்சேர்க்கை அதிகமாவதால் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள் அதிகரிக்கிறது. 



மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Prof. P.Rajasekaran, Chairman, Managing Director, Innovative Nano Bio Techformulation, Old No. 34/1, New No. 73/1, 7th Avenue, Ashok Nagar, Chennai 600 083.செல்: 93809 54559.
டாக்டர். கு.சௌந்தரபாண்டியன்

கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!

கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட,
இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். இதுப்போன்று வேறு: ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!! சரி, இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம். சருமத்தின் கருமையை போக்கும் வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.முதுமை தோற்றத்தைத் தடுக்கும் தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம். பருக்கள் பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும். நகப் பராமரிப்பு நகங்கள் அடிக்கடி உடைகிறதா? அப்படியானால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும். அருமையான சன் ஸ்க்ரீன் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும். பொலிவான சருமம் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யுங்கள். உதடு வறட்சியை தடுக்கும் கற்றாழையின் அழகு நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம். அழகாக கண்கள் கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.